Thursday, 10 May 2018

Islam and Yoga 41



 (Concluding Part)


Islamic Prayer
Prayer Demonstration

Subsequent to Prayer Call and ablution, let us see method of Islamic prayer  


Two very big and broad subjects – Islam and Yoga have been compressed and presented in a simple language that too in very small parts for 41 weeks.

I doubt whether at least the article would have been read by 41 people in total

But I have a satisfaction of having done a job by HIS GRACE

In the last few weeks I experienced some difficulties as FB and Blog refused to publish with the reason
Contains Hate speech
May cause resentment
So I had to rewrite the parts to overcome the difficulties.

I can go on writing about Islam and yoga for years together
Bu  I have learnt and experienced again :

1. Anyone’s’  first choice is story
2. Stories of family incidents are very popular with relatives
3. Photos and videos attract everyone easily
With this I conclude

 Islam and Yoga

Blog address
sherfuddinp.blospot.com

Monday, 7 May 2018

இசுலாமும் யோகக்கலையும் 41



நிறைவுப்பகுதி

இசுலாமிய இறைவணக்கம்

தொழுகை செயல் முறை விளக்கம்
சென்ற இரு பகுதிகளில் தொழுகை அழைப்பு, உடல் சுத்தி செயல் முறை விளக்கங்கள் பார்த்தோம்
இப்போது தொழுகை செயல் முறை விளக்கம்

இத்துடன் இந்தத்தொடர் நிறைவு பெறுகிறது ..
மிகப்பெரிய தலைப்பை மிகச் சுருக்கமாக எழுதி அதையும் மிக மிக சிறிய பகுதிகளாகப் பிரித்து நாற்பத்திஒரு வாரங்கள் தொடர்ந்து வெளியிட்டேன்
மொத்தத்தில் நாற்பத்தியொரு பேராவது படித்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே .
இன்னும் பல மடங்கு பல பல மடங்கு விரிவாக எழுதலாம் . படிக்கத்தான் யாரும் இல்லை
சில வாரங்கள் முன்பு வலைநூளிலும் முகநூளிலும் வெளியிடுவதில் எதிர்பாராத தடைகள் வந்தன
இதில் வெறுப்புப் பேச்சு (hate speech ) இருக்கிறது .
இதை வெளியிட்டால் கிளர்ச்சி (resentment)  உண்டாகலாம்
என்றெல்லாம் வெளியிட மறுப்பு வந்தது .
எனவே சற்று மாற்றி வெளியிட்டேன்
தடைகளை மீறி தொடர்ந்து வெளியிட்டு நிறைவு செய்ய அருளிய ஏக இறைவனுக்கு நன்றி
iஇ(க)டைச்செருகல்
இந்தத்தொடரை வெளியிட்டதில் நான் கற்ற பாடங்கள்
கதைதான் மக்களை எளிதாகச் சென்றடைகிறது
அதுவும் குடும்பம் பற்றிய கதை என்றால் உற்றார் உறவினருக்கு மிகவும் பிடிக்கிறது
அதை விட எளிதாக எல்லோரையும் சென்றடைவது படங்களும் காணொளிக் காட்சிகளும்தான்
ஏற்கனவே நான் படித்தும் பட்டும் அறிந்த இந்த உண்மைகள் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றன

இறைவன் நாடினால்  
வேறொரு பகுதியில்
சந்திப்போம்

வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot .com

Saturday, 5 May 2018

வண்ணச்சிதறல் 18 முத்துக்கு முத்தாக்




முத்துக்கு முத்தாக


முத்தூர் என்ற சிற்றூரில் கேள்விப்பட்ட ஒரு உண்மை நிகழ்வு
அப்பாவுக்கும் ஒரே மகனுக்கும் சொத்துப் பிரச்சனை .கேட்டுகேட்டுப்பார்த்த மகன்பொறுமை இழந்து அப்பாவுக்கு மது ஊற்றிக்கொடுத்து ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று தலையில் கல்லைப்போட்டு மாய்த்து விடுகிறார்.
 சற்று தொலைவு போனதும் அவருக்கு ஒரு ஐயம்
.செய்வதை முழுமையாக செய்து விட்டோமா என்று.
 .எனவே திரும்பி வந்து மறுபடியும் கல்லை நன்றாகப்போட்டு – உறுதி செய்து கொள்கிறார்.
என்ன மனம் பதைபதைக்கிறதா ?
எனக்கும் அப்படித்தான் இருந்தது அப்போது .
ஆனால் மேற்கொண்டு கண்ட , கேட்ட நிகழ்வுகள் இதெல்லாம் மிக மிக இயல்பான ஓன்று என்று எண்ண வைக்கின்றன
சொத்து, பணம் காசு இதற்கெல்லாம் ஆசைப்படுவது மனித இயல்பு. இதில் தவறு ஏதும் இல்லை . சொத்து, பணம் நகை  வரும் வழி நேர்மையான ஒன்றாக இருக்க வேண்டும் என்பது எனது ஆழமான கருத்து
தொடரிப்பயணம் ஒன்றில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். கல்வித்துறையில் அரசு நிறுவனம் ஒன்றில் மிக உயர்ந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார். .மெத்தப் படித்தவர்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு பத்து லட்சம் பணம் கொடுத்து இந்த வேலையை வாங்கினேன் என்று பெருமையாகச் சொன்னார் .
இப்படிப் பணம்கொடுத்து வாங்குவது தவறு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா என்று கேட்டேன்.
இதில் என்ன சார் தப்பு, எல்லோரும்தானே செய்கிறார்கள். நான் பணியாற்றும் நிறுவனத்தில் பெரும்பாலானவர்கள் இப்படிதான் சேர்ந்திருக்கின்றனர் என்று வாதிட்டார்
சிறிது நேரம் நான் அவரிடம் பேசியபிறகுதான் ஆம் சார் நீங்கள் சொல்வது சரிதான் .நான் செய்தது தவறு என்பது இப்போது எனக்குப்புரிகிறது .ஆனால் அப்போது எனக்கு யாரும் இது தவறு என்று சுட்டிக்காட்டவில்லை
“.பத்து லட்சம் பணம் கொடுக்கிறோம்,மாதம் இருபதாயிரம் சம்பளம் வருகிறது மாதம் இரண்டு விழுக்காடு (%) வட்டிக்கணக்காகிறது. எனவே இது நல்ல வேலைதான் 
இப்படித்தான் எனக்கு சொல்லித்தரப்பட்டது . அப்போது அவ்வளவுதான் எங்கள் குடும்பத்தினருக்கு சிந்தனை இருந்தது .பணம் மட்டுமே  வாழ்க்கை என்றுதான் எங்களுக்கு பாடம்.
 பள்ளியிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் நல்ல பணிக்கு தகுதி பெறலாம் ,நிறைய பொருள் ஈட்டலாம் என்றுதான் கற்றுத்தருகிரார்கள் .
நீதி நேர்மையின் மதிப்பை அவர்களும் எடுத்துச் சொல்லவில்லை விளைவு யாரிடமாவது பத்து நிமிடம்  பேசினால் கூட அதில் எனக்கு என்ன ஆதாயம் என்றுதான் சிந்தனை செல்கிறது
நான் செய்யும் பணியில் பெரிய வேலைச்சுமை எதுவும் இல்லை .ஒரு மதிப்புக்காத்தான் இந்த வேலை . அதுவும் சொந்த ஊரிலேயே .எனவே எளிதாக பல தொழில்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பொருளீட்ட முடிகிறது
உங்களிடம் பேசியபின்புதான் பணம்  என்பது வாழ்க்கை அல்ல . அது வாழ ஒரு சிறிய கருவியே என்பது புரிகிறது
என் சிந்தனைகளை மாற்றி அமைக்க முயற்சிப்பேன் .என் ஒரே மகனுக்கும் வாழ்க்கை என்ன என்பதை சொல்லித்தருவேன் என்றார்
இது தொடரி நட்புத்தான் பயணம் நிறைவடையும்போது நட்பும் அங்கே விடை பெறுகிறது
அவர் சொன்னதுபோல் எனக்கு யாரும் நேர்மை நீதி பற்றி எடுத்துச் சொல்லவில்லை என்பது நம்மில் பலருக்கும் ஏன் பெரும்பாலானவர்களுக்குப் பொருந்தாது
நம் முன்னோர்கள் நல்ல அறிஞர்கள் நீதி நேர்மையை நிலை நாட்டுவதில் உறுதியாக இருந்தவர்கள்
நான் ஏற்கனவே எங்கள் அத்தாவின் அத்தா பற்றிய ஒரு நிகழ்வை பதிவு செய்திருக்கிறேன் .முனுசு அம்பலார் என்ற பெருமை மிகு பட்டம் எங்கள் பரம்பரைக்கு உண்டு ..ஊரில் வரும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் முன்சீப் பணி.
அந்தப்பணியில் எங்கள் ஐயா நீதி இருக்கையில் அமர்ந்திருக்கிறார் அப்போது அவர் மேல் குற்றம் சுமத்தி வழக்கொன்று வர ,அவர் உடனே இருக்கையை விட்டு இறங்கி வேறொருவரை அங்கே அமர வைத்து தன் மேல் குற்றம் இல்லை என்று ஐயமற உறுதியான பின்பே அந்த இருக்கையில் மீண்டும்  அமர்கிறார்  
இது எங்கள் அத்தா சொல்லி நான் கேள்விப்பட்டது .
இன்னொரு நிகழ்வு நான் நேரில் கண்டது
கரீம் அண்ணன்  இளவயதில் மறைவு. அதற்கு முன் இன்னார் நமக்கு பத்து லட்சத்துக்கு மேல் தர வேண்டியிருக்கிறது என்று அக்காவிடம்  சொல்லியிருந்தார். அக்கா அவரிடம் கேட்கநான் தரவேண்டியது மிகச் சிறிய தொகையே என்று வாதிட அக்கா உடனே அதையும் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டது
அவ்வளவு பெரிய தொகையை விட்டுக்கொடுத்த எங்கள் அக்கா இறைவன் அருளால் இன்றும் மிக  நல்ல நிலையில்தான் இருக்கிறது.
பணம் கொடுக்க மறுத்தவர் ஒன்றும் ஓகோவென்று கோட்டை கட்டி வாழ்ந்து விடவில்லை
இவ்வளவு பட்டறிவு இருக்கிறது நமக்கு
.இதற்கெல்லாம் மேல் வழிகாட்ட மறையும் வள்ளல் நபி சொல்லும் இருந்தும் விழிகளை ,செவிகளை மூடிக்கொண்டு மணலுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு அமைதி காத்தால் எல்லா பிரச்சனைகளும் தன்னால் தீர்ந்து விடும் என்று எண்ணுவது சரியா .!
நாற்பது ஆண்டு வங்கிப்பணியில் பதினெட்டு ஆண்டுகள் கிளை மேலாளர் பதவி .சற்று மனசாட்சியை ஒதுக்கி வைத்திருந்தால் முறையற்ற பொருள் ஈட்டுவது மிக எளிது . அப்படி ஒரு எண்ணமே வராமல் காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி
ஒரு மாதத்திற்கு முப்பத்தைந்து லிட்டர் வண்டிக்கு எரிபொருள் ()பெட்ரோல்) பயன்படுத்த கிளை மேலாளருக்கு அனுமதி உண்டு. மிகப்பெரும்பாலோனோர் அதை முழுதாக வாங்கிக்கொள்வார்கள். எனக்கும் எல்லோரும் சொல்வார்கள் இதை ஏன் விட்டுக்கொடுக்கிறீர்கள் முழுதாக வாங்கிகொள்ளுங்கள் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று. ஆனால் நான் பயன்படுத்திய அளவு எரிபொருளுக்கு மட்டுமே பணம் வாங்குவதில் பணி நிறைவு வரை உறுதியாக இருந்தேன்
மருத்துவ மனையில் தங்கி வைத்தியம் பார்த்ததாக வங்கியிலிருந்து பணம் வாங்கியதே இல்லை
மிக நெருக்கடியாக எனக்கு  பணம் தேவைபட்ட நிலையில் என் வங்கி நண்பர் ஒரு எளிதான(??) ஒரு வழி சொன்னார்.உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதற்கேற்றாற்போல் பல பெயர்களில் கடன் கொடுத்து அந்தத் தொகையை எடுத்து செலவழியுங்கள் . கிளை மேலாளராக இருக்கும் நீங்கள் இதை மிக எளிதாக செய்து உங்கள் நெருக்கடியை தீர்க்கலாம் என்றார் இப்படியெலாம் செய்யாமலிருக்க மன உறுதியை அளித்த இறைவனுக்கு மீண்டும் நன்றி
அத்தாவின் மதுரை இடத்தையும் , ,
வாடகை உட்பட , திருப்பத்தூர் வீட்டையும்  தம்பி சகாவும் நானும் எப்படி முறையாகப் பங்கிட்டுக் கொடுத்தோம் என்பது எல்லோருக்கும் தெரியும்
எதற்கு இந்த தம்பட்டம் இப்போது என்கிறீர்களா ?
நல்லதை எடுத்துச் சொல்ல உனக்கு என்ன(டா) தகுதி இருக்கிறது என்ற கேள்வி நிச்சயம் வயது வித்தியாசத்தம் பாராமல்  எழுப்பப்படும் அதற்குதான் இந்த தன்னிலை விளக்கம்
மீண்டும் சொல்கிறேன், வலியுறுத்திச் சொல்கிறேன் சொத்து சுகத்துக்கு ஆசைப்படுவது மனித இயல்பு அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அது நமக்கு முறையாக வந்ததாக இருக்க வேண்டும் அது மிக மிக அவசியம் .பிறர் சொத்துக்கு பணத்துக்கு ஆசைப்படுவதும் அதை தன் உடமையாக்க நினைப்பதும் மிகப்பெரிய தவறு, குற்றம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே
மனித வாழ்க்கை பெரும்பாலும் எழுபது எண்பது ஆண்டுகள்தான் நம்மில் பலர் அரை நூற்றாண்டைக் கடந்தவர்கள் .மிச்சமிருப்பது சில பத்தாண்டுகள்தான் அதை மகிழ்ச்சியாக , சுமுகமாக நிம்மதியாகக் கழிக்கலாமே
ஆண்டுகள் செல்லச்செல்ல சொத்தின் மதிப்பு கூடி பல கோடியாகலாம். அதே போல் நம் வயதும் கூடிகொண்டே போகும் என்பதை மறந்து விடுகிறோம் ...இலவுகாத்த கிளியாகிவிடக்கூடாது
சொத்து என்று சொன்னாலே சிலருக்கு வாயடைத்துப்போகிறது சிலருக்கு குருதி கொதித்து குரல் உயர்ந்து மூச்சுத்திணறி மயக்கமடையும் நிலை   
சொத்தின் மதிப்பு லட்சங்களாக இருந்தாலும் கோடிகளாக இருந்தாலும் நிலை ஒன்றுதான் படித்தவர்கள், மார்க்க அறிஞர்கள் , சட்டம் தெரிந்தவர்கள், சட்டப் பாதுகாவலர்கள் ,ஆண்கள் பெண்கள் என எல்லோரையும் ஆசை ,பேராசை ஆட்டிப்படைக்கிறது
இம்மையில் நம் மனதின் குரலை அடக்கி ஒடுக்கி ஒதுக்கி விடலாம் அத்ற்குப்பின் ?
அது பற்றியும் சிந்தனை, கவலை இல்லை என்றால்  பூதம் காத்தது போல் சொத்தை கட்டிக்காக்காமல் இன்பமாக மகிழ்ச்சியாக இம்மையையாவது  அனுபவியுங்கள்
ஹராம் ,ஷிர்க் போன்ற உரத்து ஒலிக்கும் சொற்கள் பற்றி எனக்குப் பெரிய தெளிவு இன்னும் கிடைக்கவில்லை .ஆனால் பிறரை ஏமாற்றுவது வஞ்சிப்பது இதெல்லாம் குற்றங்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை
வஞ்சிக்கப்படும் மனிதனின் வேண்டுதல்களை இறைவன் ஏற்றுக்கொள்வான்
நாம் அதற்கு ஆளாகத்தான் வேண்டுமா?

எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் சிறப்பான வாழ்கையைக் கொடுக்க இறைஞ்சி இப்பகுதியை நிறைவு செய்கிறேன் .
மூளைக்கு வேலை .
வரும் ஆனால் வந்து சேராது
அது என்ன ?
இதுதான் சென்ற வாரப்புதிர் .
மிக எளிதான ஓன்று ஆனால யாரும் விடை சொல்லவில்லை
நாளை என்பதே விடை
பின் குறிப்பு
விரைவில் நோன்பு துவங்க உள்ளது .மேலும் எனக்கு சில சொந்த வேலைகள் இருக்கின்றன .
எனவே சில வாரங்களுக்கு(ஜூன் மூன்றாம் வாரம் வரை) வண்ணம் சிதறாது 
அந்த இடை வெளியை நிறைவு செய்ய சொந்த வீடு, சிவன் அல்ல சிவான் போன்ற பழைய பதிவுகளை மீண்டும் முகநூலில் மட்டும் வெளியிட எண்ணுகிறேன்
ஏற்கனவே கட்செவியிலும் வலைநூலிலும் வெளிவந்ததுதான் எனவே மீண்டும் அவற்றில் வெளியிடவில்லை
கட்செவியில் வேண்டும் என்று யாரவது விரும்பினால் அவர்களுக்கு அனுப்பிவைப்பேன்
இ(க)டைச்செருகல்
சென்ற பகுதியில் வெளியான திருப்பத்தூர் சீதளி வடகரை காணொளி மிகப்பலரின் மனதைக்கவர்ந்து உலக அளவில் பரவி விட்டது
இந்த காணொளியை படம் பிடித்தது .
ரசூலா  மகன்  சாதிக் சுலைமான் 
அவருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் 
இறைவன் நாடினால்
மீண்டும்
சி(ச)ந்திப்போம்

வலைநூல்முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com


.



                                                                                                                                                 

Friday, 4 May 2018

Islam and Yoga 40



Islamic Prayer
Cleansing Process-Ablution
In the preceding part we saw and heard call for prayer- Adhan .
Now let us see demonstration of Wudu, the cleansing process, a prerequisite for Islamic Prayer

Demonstration of Islamic  Prayer
Next week Next Part
Share if you like

Tuesday, 1 May 2018

இசுலாமும் யோகக்கலையும் 40



இசுலாமிய இறைவணக்கம்

உடல் சுத்தி (ஒழு )

சென்ற பகுதியில் தொழுகைக்கான அழைப்பு பற்றி காணொளியுடன் பார்த்தோம்.
இந்த்யப்பகுதியில் தொழுகைக்கு முன் செய்யவேண்டிய கட்ட்யாக்கடமையான உடல் சுத்தியின் செயல் விளக்கம் பார்ப்போம்
தொழுகை செயல்முறை
அடுத்த வாரம்
அடுத்த பகுதியில் ..
பிடித்தால் பகிரவும்