நிறைவுப்பகுதி
இசுலாமிய இறைவணக்கம்
தொழுகை செயல் முறை விளக்கம்
சென்ற இரு பகுதிகளில் தொழுகை அழைப்பு, உடல்
சுத்தி செயல் முறை விளக்கங்கள் பார்த்தோம்
இப்போது தொழுகை செயல் முறை விளக்கம்
இத்துடன் இந்தத்தொடர் நிறைவு பெறுகிறது ..
மிகப்பெரிய தலைப்பை மிகச் சுருக்கமாக எழுதி
அதையும் மிக மிக சிறிய பகுதிகளாகப் பிரித்து நாற்பத்திஒரு வாரங்கள் தொடர்ந்து
வெளியிட்டேன்
மொத்தத்தில் நாற்பத்தியொரு பேராவது
படித்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே .
இன்னும் பல மடங்கு பல பல மடங்கு விரிவாக
எழுதலாம் . படிக்கத்தான் யாரும் இல்லை
சில வாரங்கள் முன்பு வலைநூளிலும் முகநூளிலும்
வெளியிடுவதில் எதிர்பாராத தடைகள் வந்தன
இதில் வெறுப்புப் பேச்சு (hate speech ) இருக்கிறது .
இதை வெளியிட்டால் கிளர்ச்சி (resentment) உண்டாகலாம்
என்றெல்லாம் வெளியிட மறுப்பு வந்தது .
எனவே சற்று மாற்றி வெளியிட்டேன்
தடைகளை மீறி தொடர்ந்து வெளியிட்டு நிறைவு செய்ய
அருளிய ஏக இறைவனுக்கு நன்றி
iஇ(க)டைச்செருகல்
இந்தத்தொடரை வெளியிட்டதில் நான் கற்ற பாடங்கள்
கதைதான் மக்களை எளிதாகச் சென்றடைகிறது
அதுவும் குடும்பம் பற்றிய கதை என்றால் உற்றார் உறவினருக்கு
மிகவும் பிடிக்கிறது
அதை விட எளிதாக எல்லோரையும் சென்றடைவது படங்களும்
காணொளிக் காட்சிகளும்தான்
ஏற்கனவே நான் படித்தும் பட்டும் அறிந்த இந்த உண்மைகள்
மீண்டும் உறுதிப்படுத்தப்படுகின்றன
இறைவன் நாடினால்
வேறொரு பகுதியில்
சந்திப்போம்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot .com
No comments:
Post a Comment