மனப்பசி
மரகதப்பச்சை கொஞ்சி விளயாடும் தோட்டம் அதில் பூத்துக்குலுங்கும் வண்ண
வண்ண மலர்கள் . ஆங்காங்கே பறவைகள் .ஒலி . மரக்கிளையில் தொங்கும் ஊஞ்சல்கள் .சிறிய
தொட்டி ,அதில் அழகாகஅல்லி, தாமரை, மலர்கள்.
இந்த அழகிய தோட்டத்துக்குள் பொதிந்து வைத்தது போல் இன்னும் அழகான வீடு
–
கனவு இல்லம்
அறைகள், கூடங்கள் கதவுகள் , சன்னல்கள் எல்லாம் விசாலமான நீள அகல
உயரத்துடன் .
.பளீரென்ற சிகப்புத்தரை (ரெடாச்சைட்)
வாசலில் இரு பக்கமும் திண்ணைகள்
வீட்டின் நடுவில் முற்றம்
உள்ளே நுழையுமுன்னே அகமும் புறமும் மகிழ வரவேற்றார்கள் என் நண்பனும் அவன் துணைவியும்
அறுபது ஆண்டு நெருங்கிய நட்பு
. நீண்ட
இடைவெளிக்குப்பின் சந்திப்பு
திண்ணையில் வசதியாக சாய்ந்துகொண்டு பேசத்துவங்கினோம் .மணிக்கணக்கில்
பேசிக்கொண்டே இருந்தோம்
சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று சொல்ல நானும் சரி என்றேன்
சாப்பாடுக்கூடத்துக்குப் போனோம்,. ஒரு பெரிய மண் குவளை நிறைய பால்
கொடுத்தார்கள் . சற்று மாறுபட்ட சுவை நாவில் பட இது என்ன பால் என்றேன்
பருத்திப்பால்
என்றார்கள் .ஏலக்காய் , கருப்பட்டி எல்லாம் சேர்த்து சுவை, மணமாக இருந்தது
.வயிறு நிரம்பி விட்டது
.
ஆனா;ல் மனம் ?
இட்லி சட்னி சாம்பார் தோசை
இல்லாவிட்டாலும் ஒரு வடையாவது மனதுக்குத் தேவைப்பட்டது
அடுத்து ஒரு மண் கிண்ணத்தில் ப்ளம் கேக் நிறத்தில் வந்தது இதை சாதாரணமாக எண்ணிவிடாதே ; ஆர்கானிக் புண்ணாக்கு
என்றான் நண்பன் .
புண்ணாக்கில் என்ன ஆர்கானிக் இனார்காணிக் என்ற உரத்த சிந்தனை தோன்ற
அதை புரிந்து கொண்ட நண்பன்
செயற்கை உரம் போடாமல் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட எள்ளை இயற்கை
முறையில் பதப்படுத்தி மாட்டுச் செக்கில் அரைத்து எடுக்கப்பட்ட புண்ணாக்கு .
என்றான்
புண்ணாக்குக்கு இப்படி ஒரு வர்ணனை விளக்கமா ?
பருத்தி போல் புண்ணாக்கும் சுவையாகவே இருந்தது
.இருந்தாலும் !!!
இது போல் வாரத்தில் எத்தனை வேளை சாப்பிடுவீர்கள் என்று கேட்டேன்
வாரத்தில் ஒரு வேளை என்றான் சரி பரவாயில்லை மற்ற நாட்களில் இட்லி,
சோறு, சாம்பார் எல்லாம் இருக்கும் என்ற எண்ணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தான்
நண்பன்
மற்ற நாட்களில் பச்சைக் காய்கறிகள் , பழங்கள், முளை கட்டிய பயிறு கடலை
பொட்டுக்கடலை தேங்காய் என்று பெரிய பட்டியல் கொடுத்தான்
அடுப்புக்கு வேலையே இல்லையா என்று கேட்டேன் .எப்போதாவது திணை அரிசி
சோறு, அரை வேக்காட்டில் காய் கறிகள் சாப்பிடுவோம் என்றான்
ஒரு காஸ் சிலிண்டர் ஒரு வருஷம் வருமா என்று கேட்டேன் .அதெல்லாம்
கிடையாது .விறகு அடுப்பு சமையல்தான் என்றான்
ஆறேழு வருஷங்களாக இப்படித்தான் என்றான்
அவன் தோட்டத்துப் பக்கம் போனபோது அவன் துணைவியிடம்
உனக்கு இது பிடித்திருக்கா என்று கேட்டேன்
.
ஒரு நக்கலான புன்னகையுடன்
வாக்கப்பட்டாச்சு நாற்பது வருசத்துக்கு மேலே வாழ்ந்தாச்சு .இனி இதற்கெல்லாம் பயப்படவா
முடியும்
.திருமணம் போன்ற விழாக்களுக்குப் போகும்போதும் இங்கிருந்து இதைகொண்டு
போய் சாப்பிடுவதுதான் சகிக்க முடியவில்லை என்றார்
இதற்கிடையில் தோட்டத்தில் இருந்து வந்த நண்பன் மதியம்
சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்று சொன்னான்
.ஆர்கானிக் தவிடா என்று கேலியாக நான் கேட்க ஆமாம் இயற்கை
உரம்------------ என்று ஆரம்பிக்க
இல்லையப்பா நான் காலை ஏழு மணிக்கு வீட்டில் இருந்து
புறப்பட்டேன் .இப்போதே மணி பன்னிரண்டு .
இன்னும் அரை மணி கழித்து புறப்படுகிறேன் வீட்டில்
விருந்தாளி
என்று சொன்னேன் . இன்னும் வெகு நேரம் பேச விருப்பம்தான். ஆனால்
ஆறு . கிலோமீட்டர்
தொலைவில் இருக்கும் என் வீட்டில் துணைவி சமைக்கும்
நெய்சோறு குருமா மணம் மனதில்
தோன்றி காற்றில் மிதந்து வந்து சுவாசத்தில் கலந்து உமிழ் நீரை சுரக்க வைத்தது
மனதில் பசி
இயற்கை உணவு முறையெல்லாம்
எனக்குப் புதிதோ பிடிக்காததோ இல்லை நானும் அவ்வப்போது வாரம் ஒரு வேளை. மாதம் சில
நாட்கள் ஒரு மாற்றத்துக்காக இப்போதும் சாப்பிடுவது உண்டு .
வாரம் மூன்று வேளைக்கு மேல் போகக்கூடாது என்று நானே ஒரு வரைமுறை
வைத்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு மாறுதலுக்காக உணவு விடுதி சாப்பாடு சாப்பிடுவது போல்தான் இது .
நாள்தோறும்ஆண்டுக்கணக்காக இதே
உணவு என்பது எனக்கு உடன்பாடில்லாத ஒன்று.
உணவே மருந்து என்கிறார்கள்
விருந்தும் மருந்தும் மூன்று நாள்தானே
மனிதனின் பரிணாம வளர்ச்சி , நாகரீக வளர்ச்சியில் உதவிய மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஓன்று
நெருப்பு .
இதுதான் கற்கால மனிதனின் உணவில்
ஒரு பெரிய புரட்சியை, மாற்றத்தை உருவாக்கியது .இதை மறந்து மீண்டும் கற்காலம்
நோக்கி போகவேண்டுமா ?
நம் இட்லி வடை சோறு சாம்பார் சட்னி ரசம் மோர் இதில் என்ன குறை ?
பூமியில் உள்ள அனைத்தும் மனிதனுக்காகவே என்கிறான் இறைவன்
(புனித குர்ஆன்2:29)
தமக்கு மிகவும் பிடித்த தேனை
குடும்ப பிரச்சினை காரணமாக ஒதுக்கி வைத்த நபி (ஸல்) அவர்களை கடுமையாகக் கண்டிக்கிறான் இறைவன் (திருமறை வசனம் 66:1)
விலங்குகளின் பாலைப் பருகுங்கள் என்று பல இடங்களில் புனித மறை குர்ஆன்
சொல்கிறது
பால் ஒரு முழுமையான உணவு .பாலை மட்டுமே பருகி ஒரு மனிதன் நிறைவான
இல்லற வாழ்வு வாழ முடியும் என்கிறது ஆயுர்வேதம்
கன்றுக்குட்டிக்ககவே பால்
இந்தப்பாலைக் குடிப்பது தவறு என்று ஒரு கருத்து பரவலாக பேசப்படுகிறது
பின்பற்றப்படுகிறது
நல்ல பால் கிடைபதில்லை எனவே பாலை ஒதுக்குகிறோம் என்று வாதிடுகிராரகுள்
இட வசதி உள்ளவர்கள் நல்ல மாட்டை வளர்த்து நல்ல பாலை பருகி மற்றவர்களுக்கும்
விற்கலாமே
பொதுவாக சைவ உணவு அதிலும் இயற்கை உணவு உண்பவர்களுக்கு உடல்
நலம்குன்றுவதில்லை , முதுமை வருவதில்லை , மனம் அமைதியாக இருக்கும் . நல்ல ஞானம்
உண்டாகும் என்றொரு வாதம்
இயற்கை உணவு உண்பவர்கள் பலர் கண்ணாடி அணிகிறார்கள் . தலை நரை வழுக்கை
உண்டாகிறது
அன்னை தெரேசா அசைவ உணவு உண்டவர்
ஹிட்லர் சைவர்
வாரத்தில் 7X3 வேளையும்
அசைவ உணவு உண்டு நீண்ட காலம் நல்ல உடல் நலத்துடன் பலர் வாழ்வது கண்கூடு
அதெல்லாம் போகட்டும் .
நாம் என்ன ஆயிரம் ஆண்டுகளா இந்த பூமியில் வாழப்போகிறோம் !
இருக்கும் வரை
முடிந்த வரை
சுவையான உணவை சுவைத்து உண்டு
மகிழ்வுடன் குதூகலமாக இருக்கலாமே !!
வாழ்க்கை வாழ்வதற்கே !!!
இ(க)டைச் செருகல்
சில இளமை நினைவுகள்
என் இளமைக்காலத்தில் ஓரளவு இட வசதி உள்ள எல்லா வீடுகளிலும் பசு மாடு
வளர்ப்பார்கள்
மாட்டுக்கு உணவளிப்பது ஒரு தனிக்கலை பசும்புல் , வைக்கோல் இதுபோக சோறு
வடித்த கஞ்சியில் பருத்திகொட்டை பிண்ணாக்கு தவிடு எல்லாவற்றையும் ஊற வைத்து சரியான
அளவில் உப்புப் போட்டு கலந்து வைக்க
வேண்டும் . கொஞ்சம் பக்குவம் தவறினாலும் மாடு குடிக்காது
இன்னொரு இளமை இனிமை நினைவு .
வீட்டுக்குப் பக்கத்தில் நல்லெண்ணெய் செக்கு இருக்கும்.. எள்ளின்
கசப்பை மாற்ற எள்ளோடு கருப்பட்டி சேர்த்து அரைப்பார்கள் .ஓரணா கொடுத்தல் கைநிறைய
அந்த எள்ளு, கருப்பட்டி எண்ணெய் கலவை கிடைக்கும் மிகச் சுவையாக இருக்கும்
பருத்திப்பால் தெருவில் விற்கும் மிகச் சுவையான ஓன்று என் துணைவி
சொல்லிக் கேட்டதுண்டு .
இவையெல்லாம் முழு உணவாக அமையும் என்று நினைத்தது இல்லை
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்
sherfuddinp.blogspot.com
b w (FB
FBT FBS) 15122019 sun
.
No comments:
Post a Comment