திரு மறை குரான்
.முகமது நபி (ஸல் )அவர்கள் பற்றி முந்திய நபிமார்கள் அனைவருக்கும் இறைவன் அறிவித்து அவர்கள் கூட்டத்தினர் முகமது நபி ( ஸல்) அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க உறுதி மொழி வாங்கியிருக்கிறான் (
என இறைவன் சொல்லும் குரான் வசனம் எது ?
விடை :
சூரா 3 ஆலு இம்ரான் (இம்ரானின் வாரிசுகள்)
வசனம் 81
3:81. இன்னும், (நினைவுகூருங்கள்;) நபிமார்களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன்; பின்னர், உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் தூதர் வருவார்; நீங்கள் அவர்மீது திடமாக நம்பிக்கை கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக!" (எனக் கூறினான்): "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்கிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
நெய்வேலி ராஜா – முதல் சரியான விடை
ஹசன் அலி &
சிராஜுதீன்
முயற்சித்த சகோ ஷர் ம தாவுக்கு நன்றி
விளக்கம்
ஆதம் (அலை) முதல் ஈஸா (அலை) வரையிலான அனைத்து இறைத்தூதர்களிடமிருந்தும் அல்லாஹ் ஒரு உறுதிமொழியை பெற்றதாக கூறுகிறான். அல்லாஹ் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் வழங்கி, அவர்கள் பெறத்தகுதியான உயர்ந்த நிலைகளை அடைந்த பிறகு, அவர்களுக்குப் பின்னர் ஒரு தூதர் வந்தால், அவரை நம்பி ஆதரிப்பதாக உறுதிமொழி அளித்தனர். அல்லாஹ் இறைத்தூதர்களுக்கு அறிவையும் இறைத்தூதுத்துவத்தையும் வழங்கியிருந்தாலும், அவர்களுக்குப் பின்னர் வரும் இறைத்தூதரைப் பின்பற்றி ஆதரிப்பதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்ளக்கூடாது. இதனால்தான் அல்லாஹ் கூறுகிறான்:
இறைவன் நாடினால் நாளைதமிழில் சிந்திப்போம்
05 ஷவவால் (10) 1446
04 04 2025 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment