“என்ன ஐஸ் கிரீமெல்லாம்
சாப்பிடுகிறீர்களா “
இப்படி உரிமையோடு கண்டிப்பது யார்
என்று சற்று எரிச்சலோடு திரும்பிப்பார்த்தேன்.
தூரத்து உறவினரும் நண்பருமான அவரிடம் “ வழக்கமாக இரண்டு சாப்பிடுவேன் . இன்று
உங்களுக்காக மூன்று சாப்பிடுகிறேன் “ என்று நான் சொன்னதை அவர் சுவைக்கவில்லை.
அண்மையில் ஒரு திருமணத்தில் நிகழ்ந்தது இது
உணவில் எது நல்லது எது கெட்டது என்று மருத்துவர்கள்,
உணவு மருத்துவர்கள் கூறுவது, ஊடகங்களில் வெளியாவது எல்லாம் போதாது என்று இப்போது
சமையல் கலைஞர்களும் கலோரி,, உணவினால் தீரும் நோய்கள் பற்றியும்
பேசுகிறார்கள் இதற்கெல்லாம் மேல் மேலே சொன்னது போல் அன்புத்தொல்லைகள் வேறு.
இவை அனைத்தையும் இந்தக்காதில் வாங்கி
அந்தக்காதில் விட்டு விடவேண்டும். இல்லாவிட்டால் எதுவுமே சாப்பிட முடியாது .
காபி குடிப்பது மிகவும் தீங்கானது
என்பார் ஒருவர். காபி இதயத்துக்கு நல்லது என்பார் இன்னொருவர்.
முட்டையைப்பற்றித்தான் எத்தனை
கருத்துப் பதிவுகள் ; நாட்டுக்கோழி முட்டைதான் நல்லது . வாரத்துக்கு நாலுக்கு மேல்
கூடாது ..முட்டை மிகவும் கெடுதலானது,பச்சை முட்டைதான் சத்து; அரைவேக்காடுதான்
நல்லது ; வெள்ளைகரு மட்டும் சாப்பிடலாம்
முழுதாகச் சாப்பிட்டால்தான் நல்லது
பாலைப்பருகுங்கள் என்கிறது திருமறை .
பாலை மட்டும் பருகி ஒருவன் முழு நல வாழ்வு வாழமுடியும் என்கிறது பண்டை இந்திய
மருத்துவம். பால் கன்றுக்கு மட்டுமே உரியது அதை மனிதர்கள் பருககககூடாது என்று ஒரு
கருத்து இப்போது உலா வருகிறது
இப்படி காய்கறி , கறி,, பழங்கள் கோழி ,அரிசி எல்லாம் பற்றி தலை சுற்ற
வைக்கும்படியான கருத்துக்கள்
தண்ணீரையாவது விட்டு வைத்தார்களா?
காலையில் வெறும் வயிற்றில் (பல் விளக்காமல் ) இரண்டு சொம்பு தண்ணீர் குடித்தால்
எல்லா வியாதிகளும் பறந்து விடும், சாப்பிட்டவுடன், சாப்பிடுமுன்,, இடையில் தண்ணீர் குடிக்காதீர்கள் . பின் எப்போதுதான்
குடிப்பது ?
தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்க
வேண்டும் – இதுதான் எனக்குத்தெரிந்த ஒரே விதி.
நல்ல வேளை ! தண்ணீரில் இருக்கும்
ஹைட்ரஜன் வாயு எளிதில் தீப்பிடிக்கக்கூடியது ; ஆக்சிஜன் வாயு தீயை நன்கு
எரியச்செய்யும்அதனால் தண்ணீர் குடிக்காதீர்கள். உங்களுக்காவே நாங்கள்
தீப்பிடிக்காத தண்ணீர் உற்பத்தி செய்கிறோம். அதையே குடித்து நலமாக இருங்கள் என்று
எந்த நிறுவனமும் , அறிஞரும் இதுவரை
சொல்லவில்லை
சாப்பாடு முழுக்க முழுக்க நமது சொந்த
விருப்பு, தேவைக்குட்படது இதில் அளவு, கலோரி எல்லாம் பார்க்ககூடாது .எனக்குப்
பிடித்ததை நான் சாப்பிடுவேன்,இது ஒன்றுதான் எல்லைக்கோடு .எனக்கு எது ஒத்து வராது என்பதை தெரிந்து நானே ஒதுக்கி விடுவேன் . என்
அளவு எனக்குத்தெரியும்
பொதுவாக நிறைவாகச் சாப்பிடுபவர்கள் நல்ல உடல் நலத்துடன் திடமாக் இருக்கிறார்கள் தினமும் பாலைக்குடிப்பவர்களும், முட்டை
சாப்பிடுவர்களும் அசைவம் சாப்பிடுபவர்களும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். .
எதையோ நினைத்து எதையோ எழுதிக்
கொண்டிருக்கிறேன்,. மருத்துவம் பற்றி எழுத நினைத்து, உணவே மருந்து என்ற கருத்து
மனதில் தோன்ற, உணவு பற்றி என் கருத்தை எழுதி விட்டேன்.
அகு பஞ்சர், யோகா, வர்மா,
பஞ்சகர்மா(ஆயுர் வேதத்தின் ஒரு கிளை) படிக்கையில் துணைப்பாடமாக,சித்தா, இயற்கை
மருத்துவம், மூலிகை பற்றி ஓரளவு படித்திருக்கிறேன்.
இவற்றில் எது நல்லது என்ற வினாவுக்கு
எல்லாமே நல்லதுதான் என்பதுதான் விடை.
ஆனால் எது தேவை என்றால் பெரும்பாலும்
எதுவுமே தேவை இல்லை என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து . மனித
உடல் இறைவன் கொடுத்த,ஒரு அறிவியல் அற்புதம் தன்னைத்தானே சரி செய்து
கொள்ளும் சக்தி அதற்கு நிறையவே இருக்கிறது அதை நாம் கெடுக்காமல் இருந்தால் அதுவே
மிகச்சிறந்த வைத்தியம் .
நான் கேள்விப்பட்ட ஒரு தகவலை உங்களோடு
பகிர்ந்து கொள்கிறேன்.
ஜனாப் உமர் பாரூக்- கம்பத்தைச் சேர்ந்த
புகழ் பெற்ற அக்குபஞ்சர் நிபுணர். பல நூல்கள எழுதியவர், அவர் மகிழுந்தில்
போய்க்கொண்டிருக்கையில் ஒரு பெரிய விபத்துக்குள்ளாகி வண்டி அப்பளம் போல் நொறுங்கி
அவருக்கும் பலத்த அடி, எலும்பு முறிவு.
அவர் எந்த மருத்துவ மனைக்கும்
போகவில்லை . வீட்டுக்குப்போய் வெள்ளைத்துணியை உடம்பில் சுற்றிக்கொண்டு படுத்து
விட்டார் .அக்கம்பக்கம் உள்ளவர்கள், உறவினர்கள் எல்லாம் இனிமேல் தேறாது என்பது
போல் வந்து பார்த்துப்போனார்கள்
சில மாதங்களில் முழு உடல் நலம் பெற்று
இப்போதும் இறைவனாருளால் நலமாக இருக்கிறார்,
அடுத்து என் சொந்தக்கதை .சில
ஆண்டுகளுக்கு முன் இடது கண்ணில் விரல் சற்று ஆழமாகப்பட்டு கண் பிதுங்கி வெளியே
பாதி வந்து விட்டது .எந்த மருத்துவரிடமும் போகவில்லை . சற்று அச்சமாகத்தான்
இருந்தது .இறைவனருளால் நாளடைவில் குணமாகி விட்டது
எனக்கும் காய்ச்சல் , அசதி, இருமல்
நெஞ்சு வலி எல்லாம் வரும். வந்தவழியே
போயும் விடும்
இப்படியே நீங்களும் செய்யுங்கள் என்று
நான் சொல்லவில்லை நான் சொல்வது வெறும் ஏட்டுக்கல்வி அறிவல்ல என்பதை வலியுறுத்தத்தான் இந்த எடுத்துக்காட்டுக்கள்
ஊடகங்களில் இப்போது நிறைய
மருத்துவக்குறிப்புகள் சொல்கிறார்கள்- மூலிகை மருத்துவம், நாட்டு மருத்துவம்,
பாட்டி வைத்தியம் என்று பலப்பல.
இவற்றைப் பார்க்கலாம், குறிப்பு
எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் பயன்படுத்துமுன் ஒரு நல்ல மருத்துவர் அல்லது
வயதில் முதிர்ந்த நாட்டுப்புற மக்களிடம் கேட்டுத் தெளிந்து கொள்ளுங்கள்
மேலோட்டமாக பார்த்தால் எல்லாம்
எளிதாகத்தெரியும் ;ஆனால் ஒவ்வொன்றிலும் சில நுட்பமான செய்திகள் இருக்கும் ஒரு
சிலவற்றைப்பர்ப்போம்
கடுக்காய் – இளமை மூலிகை ,காயகல்பம்,என்று
பல பெயர்களில் அறியப்படும் மிகச்சிறந்த ஒரு மருந்துப்பொருள் .
இதில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு
மேல்தோலை மட்டும்தான் மருந்தாகப் பயன்படுத்த வேண்டும.என்பது பலரும் அறியாத ஒரு
செய்தி .
கடுக்காய்க்கொட்டை நஞ்சு என்று
சொல்வார்கள்
நாற்பது வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்
கடுக்காயைத் தவிர்க்க வேண்டும்..
அது போல் கழற்சிக்காய் – ஒரு நல்ல
மருந்துப்பொருள்- இது மேல்பூச்சு மருந்து
என்றால் காயின் வெளிப்பகுதி பயன்படும்.
அதுவே உள்ளே சாப்பிட, தோலை நீக்கி, கொட்டையைப் பயன் படுத்த வேண்டும்
அடுத்து தாமிரப். (காப்பர்)
பாத்திரங்கள் பயன்பாடு உலகில் உள்ள அததனை நோய்களுக்கும் மருந்து போல் பேசப்படும்
.இளவயதினர் தாமிரப்பாத்திரங்களைத தவிர்ப்பது
நல்லது .
துறவிகளின் கமண்டலங்கள்
தாமிரத்தில்தான் இருக்கும்
பச்சைத் தேநீர், வாழைத்தண்டு,
அருகம்புல் சாறு இவற்றையும் அளவாகவே உட்கொள்ளவேண்டும்
எதைத்தவிர்ப்பது எதை உட்கொள்ளுவது
என்பதை அறிய ஒரு எளிய வழி இருக்கிறது அதுதான் நம் முன்னோர்கள் வழி. அவர்கள்
அனைவருக்கும் இறைவன் கொடுத்த வரமாக நிறைய மருத்துவ , அறிவியல் அறிவு இருந்தது,
அவர்கள் நம்மை விட நன்றாக உண்டு நன்றாக வாழ்ந்தது மறுக்க முடியாத உண்மை. உணவில் மட்டுமல்ல வாழ்க்கையின் பல நடப்புகளில்
அவர்களை நாம் துணிந்து பின்பற்றலாம்.
கல்வி
பற்றி ஒரு சில செய்திகளை சொல்லி இப்பகுதியையும் இத்தொடரையும் நிறைவு செய்கிறேன்
இப்போது நான் படிப்பது இசுலாம் பற்றிய மூன்றாண்டு இளங்கலை வகுப்பு . (B A Islamic Studies , Tamil Nadu open University). ஒரு பெரிய போராட்டமே நடத்திச் சேர்ந்தேன்,சுருக்கமாகச் சொன்னால்
பல்கலைக்கழகம் சொல்லும் கட்டணம் முதலாண்டு மூன்று ஆண்டுக்கும் சேர்த்து ரூ.
ஐயாயிரத்துக்குள் .ஆனால் கல்வி மையத்தில்
வாய் மொழியாக சொன்னது ஆண்டுக்கு 11500/ வீதம் மூன்றாண்டுக்கு முப்பத்தி
ஐயாயிரத்துக்குப் பக்கம் . பல்கலைக்கழகத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள
நாள்கணக்கில் முயற்சி செய்து இசுலாமியப்படிப்பு என்று சொன்னால் உடனே கல்வி மையத்தைக் கேளுங்கள் என்று சொல்லி தொடர்பைத் துண்டித்து விடுவார்கள்...கல்வி மையத்தில்
கேட்டால் இது கொள்கை முடிவு (???!!!)கட்டணம் குறையாது என்று சொல்லி விடுவார்கள் .
ஒரு நீண்ட கடிதம் எழுதி பல்கலைக்கழகத்
துணை வேந்தருக்கும், பதிவாளருக்கும் அனுப்பினேன். அதற்குப்பிறகு கல்வி மையத்தில் இருந்து தொலைபேசியில் என்னைத் தொடர்பு
கொண்டு பல்கலைக்கழகம் விதித்த கட்டணம் , அதோடு புத்தகங்களுக்கு ஒரு சிறிய தொகை
செலுத்தினால் போதும் என்று சொன்னார்கள் .
இதெல்லாம் சரியாகி எனக்கு புத்தகங்கள்
வந்தது சென்ற ஆண்டு டிசம்பர் இறுதியில் .. மே அல்லது ஜூனில் தேர்வுகள் இருக்கும் அரப மொழி ஆங்கில மொழி , ஆங்கில வழியில் (English Medium) , இசுலாமிய வரலாறு , இசுலாமியக் கோட்பாடுகள், இசுலாமிய சட்ட
திட்டங்கள் என ஐந்து பாடங்கள் .இது வரை படித்த படிப்புகளில் இதுதான் சிரமமாகத் தெரிகிறது அரபு மொழிப்பாடம் ஒரு சிரமம் என்றால்
பாடத்திட்டம் , புத்தகங்கள் , தேர்வு வினாத்தாள்கள் இவற்றிற்கிடையே ஒருங்கிணைப்பு
இல்லாதது மிகப்பெரிய சிரமமாகத் தெரிகிறது .இறைவன் அருளால் படித்து வெற்றி பெறலாம்
என்ற நம்பிக்கை இருக்கிறது
.இதற்குப்பிறகு உளவியல் முதுநிலை, அகுபஞ்சர் முது நிலை , இசுலாமியக்கல்வி முது
நிலை அதற்கெல்லாம் பிறகு யோகா ஆய்வுப்படிப்பு எல்லாம் படிக்க ஆசை.(பேராசை?)
இதற்கிடையில் அகுபஞ்சர் வைத்தியத்தை நல்ல
முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் மிகப்பேராசை போல் தெரிகிறதா?
எனக்குப்பிடித்த ஒரு சீனப்பழமொழி “
ஆயிரம் ஆண்டு வாழத்திட்டமிடு ஆனால் நாளையே விட்டுச்செல்லத் தயாராயிரு.”
இத்துடன் இப்பகுதியையும் இந்தத் தொடரையும்
இத்துடன் நிறைவு செய்கிறேன்.
நிறைவுரை
முந்தைய தொடரின்( வா. ப. வங்கி அனுபவங்கள்) பல பகுதிகள்
பற்றி பலரும் சிறப்பான கருத்துக்களும்
பாராட்டுக்களும் தெரிவித்தது மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது . அதையெல்லாம் தாண்டி
எனக்கு மிகவும் மன நிறைவைக்
கொடுத்தது அறக்கட்டளை நிறுவ ஒரு தூண்டு கோலாக அந்தத் தொடர் இருந்ததுதான்.
அது போல் .இந்தத்தொடரின் மூலம் ஒரு
சிலருக்கு( சுராஜ், சாகுல்) மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணம், அவா ஏற்பட்டது எனக்கு
ஒரு பெருமையாக இருக்கிறது. . கல்விக்கு வயதும் கிடையாது எல்லையும் கிடையாது..
அவர்கள் எண்ணங்கள், ஆசைகள் நிறைவேற இறைவன் அருள் புரிவான்
சைனாவுக்குபோயாவது
கல்வியைக்கற்றுக்கொள் என்பது நபிமொழி. திருமறையின் துவக்கமே படிப்புப் பற்றித்தான்
.
நம் அனைவருக்கும் கல்வியும் மன மகிழ்ச்சியும் உடல் நலமும் நிறை செல்வமும் வாரி வழங்க எல்லாம் வல்ல ஏக இறைவனிடம்
இறைஞ்சுவோம்.
ஒரு வேண்டுகோள் மருத்துவம் பற்றிய
செய்திகளை ஊடகங்களில் பரப்பும்முன் அதன் நம்பகத்தன்மையை ஒரு முறைக்குபலமுறை சரி
பார்த்துக்கொள்ளவும்
இன்னொரு வேண்டுகோள் இளைய தலைமுறைக்கு
குறிப்பாக பதின்பருவத்துச் சிறுமிகளுக்கு :
உடலை மெலிய வைக்கிறேன் என்று
சாப்பாட்டைக் குறைக்காதீர்கள் ..இந்த வயதில் மூன்று வேளை உணவு மிக மிக அவசியம்
உணவினால் மட்டும்தான் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். உடல் நலம் மன
நலம் இரண்டும் ஒருங்கினைந்தவை .
உடல் மெலிய இயற்கை வழிகள்தான் நல்லது .
இத்தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது . இறைவன் நாடினால் நான் தேர்வெல்லாம் எழுதியபின் சந்திப்போம்
சென்ற பகுதி பற்றி
கருத்துக்களும் பாராட்டுக்களும்
தெரிவித்த நூரககா, சோதியக்கா, சுராஜ், பாப்டி, நஸ் ரீன் ,ரவிராஜ் அனைவருக்கும்
நன்றி
Noor
28 03017
அருமையான இனிமையான
மலர்களின் சுகந்தமணம் வீசும் மலரும் நினைவுகள். கொடுக்காப்புளி மரத்தில் ஏறி பறித்துச் சாப்பிடுவோமே. பயங்கர
இனிப்பாக இருக்ககும்.
ஐம்பது அறுபது ஆண்டுகள் நம் வயதைக் குறைத்து இளமையை நோக்கி அழைத்துச்
செல்லும் அழகிய காலரதம்.
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித்திரிந்த பறவைக மே
பழகிக் களித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம் என்று பாடி ஆடத்
தோன்றுகிறது.
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்து
வாழ்க்கைக்கும் நம் அறிந்திராத ம்ம் வாழ்ந்த
பொற்காலம்
[09:27, 3/28/2017] noor 2: வாழ்க்கைத்துன்பம்
[09:29, 3/28/2017] noor 2: அறிந்திடாமல் வாழ்ந்த பொற்காலம்
தம்பி, ஒன்றை மறந்து விட்டாயே. ஷாஹுல் என்னும் பெருமகனார் பிறந்தது
காரைக்குடியில் தானே.!!!
( சென்ற தொடரின் காரைக்குடி
பகுதியில் கொடுக்காப்புளி ,கொய்யாமரம் ,சாகுல் பிறந்தது , பசுமை நிறைந்த நினைவுகள்
எல்லாம் எழுதி விட்டேன் )
Nasreen 28 03 17
Voice msg.
சூப்பர் மாமா. ரொம்ப நல்லா இருந்தது.,
திரும்ப காரைக்குடிக்கு, கடலூர்ல உங்க வீட்டு பங்க்ஷன் எல்லாம் போய்ட்டு வந்தது
மாதிரி ஒரு பீலிங்..நீங்க மதுரைக்கு வந்தது எல்லாமே நல்லா இருந்தது..நீங்க
வந்துட்டு வீட்டுக்குத்தான் வரமட்டேட்டீங்க..வெரி நைஸ்.
CB rtd
Raviraj 28 03 17
Clap
Suraj 29 03 17
அண்ணனிற்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
வெளியூர் திருமணங்கள் வரவேற்புகள்
இவற்றில் கலந்து கொண்ட தொகுப்பு மிகஅருமை.
படிக்கப்படிக்க மகிழ்ச்சியாக
இருக்கிறது.
காரைக்குடி சிறு பிள்ளை நினைவுகள்
எத்தனை முறை எழுதினாலும்,படித்தாலும் கணிணி யுகம் ஒரே ஒரு நாள்
அந்த வாழ்க்கையை திருப்பித் தருமா என்று முட்டாள் தனமாக நினைக்க வைக்திறது.
ஜோதி எழுதியிருக்கும் மலரும்
நினைவுகளும் மி க அருமை.
நம்முடன் படித்தவர்கள்,பணிபுரிந்தவர்களை நீண்ட ஆண்டுகளுக்குப்பின் சந்திக்கும்பொழுது இளமை
திரும்பி இனம் புரியாத மகிழ்ச்சி எற்படும் உங்களுக்கு ம்,தற்பொழுது சஹாவிற்கும் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது.
தொடர்ந்து எழுதவும்.
படிக்க வேண்டும் என்ற எனது ஆசை சாத்தியப்படும்
என்று தோன்றவில்லை.
நூருக்கும்,சாகுலுக்கும் மறுபடியும் என்ன ஆயிற்று?☪😊😊🚙🚗🌹
(மனது வைத்து முயன்றால் இறைவன் அருளால் எண்ணங்கள் நிறைவேறும்.
நூரக்ககா சாகுலுக்கு என்ன ஆயிற்றோ தெரியாது
– நாம் தலையிட்டால் நம் தலை சுற்றிக்
குப்புற விழுந்து நமக்கு மூளை குழம்பி
விடும்)
பாப்டி
தொலைபேசியில்
நன்றாக இருந்தது .மகா பாரதம் , தொடரி
புரியவில்லை.
(பயணித்துப்பார்த்தால் தெரியும்)
[00:47, 3/29/2017] Jothy Liakath:
தம்பி , அஸ்ஸலாமு
அலைக்கும். உன் சென்ற பகுதிக்கு நான் விமர்எழுதவில்லை. ஏதோ மனக் குழப்பத்தில்
இருந்து விட்டேன். அமிழ், என்ற தொடரில் சென்னை தவிர்த்து வெளியூர்
திருமணங்கள் பற்றி நீ எழுதியது அருமை. நானும் சில நிகழ்நகளைப் பகிர்ந்து
கொள்கிறேன்.
முதலில் உன் மகன்
பைசல் திருமணத்திலிரந்து ஆரம்பிப்போம். நல்ல பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்த
சாப்பாட்டுடன் பயணம் மேற்கொண்டது அருமை. நாங்கள் அனேகமாக வழியில் நின்றே பஸ்
ஏறிவிடுவோம். அங்கு பெண் வீட்டை அடைந்ததும் விழுந்து விழுந்து உபசரித்தார்கள்.
ஹோட்டல் ரூம்நன்றாக இருந்தது. தி ருமணம் முடிந்து ஊருக்குப் புறப்படப் போகும்
சமயத்தில் ஜெமிலாக் குப்பிக்கு மிக வும் முடியாமல் போனது. அப்போது புதுமணப்பெண்
ஜீனத் (பானு ) குப்பிக்கு கவனித்து பணிவிடை செய்த விதம், எல்லோருக்குமே
அப்பெண்ணின் மேல் நல்ல பிப்பிராயம் பதிந்து விட்டது.
அடுத்ததாக நூர்
பேத்தி அனீஷா திருமண வரவேற்பு ராஜபாளையத்தில் .நீ குறிப்பிட்டுள்ளது போல் அந்த
ஹோட்டல் அனுபவமும் மறக்க முடியாதது. காலையில் அனைவரம் கூடி அரட்டை அடித்துக்
கொண்டு டிபன் சாப்பிட்டது மிக இனிமையான அனுபவம். சமீபத்தில் கூட அந்த ஹோட்டலில் ° மறுநாள் காலைவரை
தங்க அனுமதி இ ருந்ததை இழந்து விட்டோம் என்று யார் கூட வோ பேசிக்
கொண்டிருந்தோம்..
[00:47, 3/29/2017] Jothy
Liakath: அந்த ஹோட்டலின்
வரவேற்பு ஹாலில் அமர்ந்து பேசிக் கொன்டி ருந்த போது மிகவும் எளிமையாக ஒரு பெண் மணி
அமர்ந்திருந்தார். பேச்சுக் கொடுத்த போது அவரின் மகன் கள்தான் அதற்கு அதிபதி யென்
றும், ஏcதா காரணத்திற்காக
பேரன் , பேத்திகளோடு
அங்கு தங்கியிரப்ப தாக வும் சொல்ல ரொம்ப ஆச்சர்யமாயி ருந்தது. பிற கு ஒரு நாள்
நூர் வீட்டில் 'நிC லாவும் நானும்
தங்கி முஸ்தபா அண்ணிற்கு வருஷப் பாத்தியா ஓதி விட்டுப் புறப்பட் டோம். நூர், நூர் மக்கள்
அனைவரும், நூர்
சம்பந்திகள் என்று எல் லோர ரு ட னும் ஒன்றாக இருந்து CUசிக் கொண்டிருந்தது
ரொம்ப ஜாலியாக இருந்தது. அடுத்ததாக, ஷாஜித் , அஷ்ரப் திருமணமும், தஞ்சாவூர், மதுரையில் நடந்தது. )நூர் முடுக்கி, முடுக்கி நன்றாக
கவனிக்க வைத்தது.சென்னையில் வரவேற்பு
விஜயராணி மகா லில் மிகச் சிரப் பாக நடந்தது. முஸ்தபா அண்ணனும், இதயத்துல்லாஅத்
தாயும் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் வரC வற்பு நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டார்கள்.
அழகான தம்பதிகளாக முத்தக்காவும், சச்சாவும் கலந்து கொண்(டடார்கள்(
அடுத்த தாக
சமீபத்தில் கலந்து கொண்ட கம்பத்தில் நடைபெற்ற ரோஸ் C பரன் திருமணம். திருவில் வரவேற்பு என்பதால் நான்
வலியக் கலந்து கொண்டேன். பக்காப்பிளானான திர மணம், ரயிலில் கொடுத்த புளி சோறு, தயிர் சோறுடன் ரோஸ்
கொண்டு வந்த கறிப் பொறியல் சூப்பர். நல்ல உப சரிப்பு .திருவில் வர வேர்ப்பு.ெ
ட்டிடத்தில் தங்கினோம். கட்டிடம் பற்றி நான் எழுதியது மிகுந்த வரவேற்பு பெற்றது -
அடுத்து காரைக்குடி
திருமணம். பெண் வீட்டார்)நன்கு கவனித்தார்கள்.அர்ஷத், நூராCஜாடி கண் பட்டு
விடும் அழ கு.பானு, சாலி
கான் நல்ல ஏற்பாடு செய்தி ருந்தார்கள்.
கடைசியாக ஷா குல்
(கொழுந்தன்) திருமணம் பற்றி சொல்லி முடித்து விடுகிறேன். பாத்துக் குப்பி மகள்
நஸ்ரீனுடன் நடந்தது. நல்ல உபசரிப்பு, நல்ல சாப்பாடு.
எல்லாவற்றிர் கும் மேல் அருமையான , உயர்வான பெண்.) நீ கூட அந்த த்தி ருமணத்திற்கு
வந்திருந்தாய்.ஜெமிலாக் குப்பி, சச்சா, சரி வன்னெல்லாம் கலந்து கொன்டார்கள். நூர்
(அஜ்மீர்) கலந்து கொண்டது.. மெகரியும்
கலந்து கொண்டது. இத்துடன் முடிந்துக் கொள்கி றேன்.
[20:03, 4/1/2017] Jothy Liakath:
அஸ்ஸலாமு அலைக்கும். தம்பி .... நம்
குடும்பங்களில் நடந்த வெளியூர்,திர மண, வரவேற்பு நிகழ்ச்சி பற்றிய உன் தொகுப்பிற்கு பின், 'ஜென்னத் திருமணம் பற்ற நினைவில் உள்ளதை எழுதும் படி சு ராஜ் சொன்னது.
நினைவில் இருப்பதுடன் வேறு சில திர மணங்கள் பற்றியும் தெர்ந்த வரை எழுது கிறேன்.
ஜென்னத் திருமணத்திற்கு காரைக்குடியிலி
ருந்து உறவினர் களை அழைத்துச் செல்ல அத்தா ஒரு பஸ் தான் ஏற்பாடு செய்திருந்தது.
ஆனால் நிறய சொந்தக்காரர்கள் கோபித்துக் கொண்டதால் மற்றொரு பஸ்ஸும் ஏற்பாடு
செய்தது.
முதல் பஸ்காரர் களுக்கு விழுப்புரம்
வாசவி வி காரில் லன்ச் ஏற்பாடு செய்தி ருந்தது. அடுத்த பஸ்காரர் களுக்கு அம்மா
தன்னந்தனியாக தயிர் ே சாறும், மாங்காய்த் ெ தாக்கும் செய்தி ருந்தது.
( எப்படித் தான் மகராசி செய்ததோ?) அந்த சாப்பாடு அவ்வளவு ருசிசியாக
இருந்ததாக சாப்பிட்ட அனைவரும் கூறினார்கள். அப்போது பெரியத்தா வீட்டுடன் அத்தா, அம்மா பேசாமலிரந்தார்
கள். ஆனால் திமண நாளுக்கு முதல் நாள் அத்தா திரு. போய்கையோடு அழைத்து வந்து
விட்டது.
ஷாகுல் பிறந்த விடா தலால் முத்து வரவி
.ல்லை. அத்தா, மும்தாஜ், ெ மகராஜ், எனக்கு மூவரக்கும் ஒரே துணியில்
வெவ்வேறு கலர்களில் அழகான பாவாடை, தாவணி எடுத்தது. சுராஜூக்கு அதே
துணியில் கவுன் என்று நினைக்கிறேன்.
இரவு ஏழு மணிவாக்கில் ஒர் மண்டபத்தில்
இறங்கினோம். இரவு எக்கச்சக்க சாப்பாடு போட்டார்கள். டேபில் சேரில் அமர்ந்து ப ந்தி
சாப்பிட்டதில் நம் ஊர் மக்களுக்கு ஏக சந்தோஷம். காலை டிபனும் அதே போல் எக்கசக்கம்.
மதிய சாப்பாடு நாம் கேள் விப்பட்டே இல்லாத வகையில் 24 நாலு வகை என்று இலை நிறையப் C பாட்டு அமர்க்களப்படுத்தி விட்டார்கள்.திருமணம் காலையில் முடிந்து
விட்டது. முத்தலிப் அண்ணன் தங்கை நூரம் மாவிற்கும் அப்போதுதான் திரு மணம்
முடிந்தது.டிஷ்யூ எனும் தொள்ளாயிரம் ரூபாய் சேலை பெரிய விஷயமாகப் பேசப்பட்டது.
முத்தலிப் அன்னன் தங்கை ஐ சாம்மாவும் (அப்போது நிறை மாத கர்ப்பம்), வாவாவும் தான் ( பழைய நடிகர் ரங்கா ராவ் போலவே யிரப் பார்) விழுந்து,
விழுந்து கவனித்தார்கள்.. எஸ்.ஐ. குடும்பத்தோடு
நம் வீட்டிற்கு உள்ள உறவு இந்தத் திருமணம் மூலம் புதுப்பிக்கப்பாடது அத்தம்மா' வின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அத்தா, அம்மா இரவில் உடனே போய் அழைக்க . அவர்
கள் அனைவரும் காலையில் திமணத்தில் கலந்து கொண்டார்கள்.)
பிறகு திர மணத்தின் கிளைமாக்ஸ்
சாயந்தரம் தான் ஆரம்பித்தது.. மணமக்களைப் பார்க்க வந்த, சாவித்திரி , சரோஜாதேவி என்று எம் .ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர் என்று பெரிய பெரிய நடிகர்
நடிகை களுடன் சின்ன நடிகர் களும் வர ஆரம்பிக்கள் ,திமு, திமுவென நம் ஜனங்களெல்லாம்( இங்கு )வந்து
விட்டார்கள். (நானும் தான். அப்போ வெல்லாம் நான் பெரிய சினிமா பைத்தியம்) இப்படி சிறப்பாக திருமணம் முடிந்து பஸ் ஏறி ஊர் வந்து
சேர்த்தோம். சென்னத் சின்ன பொம்மை C பாலமுழித்துக்
கொன்டிருந்தது.' ஊர்வரும் வழியில் ஏதோ ஓர் டேம்
பார்த்தோம். உண்மையிலேயே ஓர் தேவ லோகத் திருமணம் போல் நம் ஊர்மக் களுக்கு பேசப்
பேச பிரமிப்பு குறையாத கனவுலகத்தி 3 மணமாகத்தான் அமைந்தது.
நூர்திருமணத்தில் கலந்து கொல்லவில்லைவென்று அத்தா அம்மா த னியாக அழைத்துச்
சென்றார்கள் . இவ்வளவு பிரமாண்டமாக, உரே வியந்து மூக்கில்
விரல் வைக்கும் அளவிற்கு அந்தக் காலத்தில் மெகா திருமணம் நடந்தது
[20:03, 4/1/2017] Jothy LiakathL )திருமணத் திற்கு முன்பாக ஒ ரு முறை மாப்பிள்ளை வீடு பார்க்கமுத்து,
கரீம் அண்ணன், எல்லோருடனும் சென்றோம். ரா.வே.(கரீம் அண்ணனின் நண்பர்) என்ற
எழுத்தாளர் வீட்டிற்கு முதலில் சென்றோம். பிறகு டைரக்டர் ஸ்ரீதர் ஆபிசிற்கு கரீம்
அண்ணன் அழைத்துச் சென்றது. உண்மையிC வC ய இது தான் தேவலோகம் என்று எனக் குப் பட்டது.பிறகு ஜென்னத் வீட்
டிற்குச் சென்றால் அங்கு அசர வைக்கும் சாப்பாடுகள், தின்பண்கள் வைத்துக் கொணCL இருந்தார்கள்.
விழுந்து விழுந்து உபசரித்தார்கள். மம்மு (சின்னப் பையன் ) மாடிக் குக் கூட்டிப்
போய் கலர், கலரான சம்க்கிகள்
கொடுத்தார்.ஸ்கூலுக்கு அதைக் கொண்டு போனால் எனக்கு ஏக உபசாரம் (இப்போது தான் எல்லாமே
எக்கச்சக்கமாகக் கிடைக்கிறது.) அப்போது சென்னையில் நடைபெற்ற எக்சிப் பிஷன்,
பீச் என்று எல்லா இடமும் சுற்றி வந்தோம். அங்கு
அவ்வள பலகாரங்கள் இ ருக்க நாம் வாங்கிப் போன இனிப்புகள் வேண்டுமென்று ஒரே அடம்
பிடித்து ஷஹா வாங்கிக் கொண்டு தான் விட்டான். இப்படி இன்னமும் எழுதிக் கொண்டே
போகலாம். ().
[20:04, 4/1/2017] Jothy Liakath: அடுத்த தாக உன் திருமணம் வழக்கம் போல் திருப்பத்தூர் திருமணம் C
பால் அமைந்த து. ).திருமணம் முடிந்து
வீட்டிற்கு வந்த வுடன் உன் கொலீ க்ஸ் களுக்கு சிறப்பாக ஒரு விருந்து வைத்தோம்.மும்
தாஜ் ஒரு மாங்காய் பச்சடி செய்தது. எல்லோ ரூம் அதை மிக விரும்பி சாப்பிட்டார்கள்.
அடுத்தாக ெ மகராஜ்திர மணமும் திரவில்
தான் வழக்கம் போல் நடந்தது. பத்து நாட்களுக்கு முன்பே திர.வில் வீடு பிடித்து
தங்கியிருந்தோம். அடுத்ததாக கதீஜா திருமண வரவேற்பு கோவையில் நடைபெற்றது.பெரிய,
புதுமண்டபம். மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்தி
ருந்தார்கள். எல்லோரும் பெரிய சூப்பர் மார்க்கெட் சென்று நிறைய பொருள்கள்
வாங்கினோம். ஊர் திரும்பும்போது ஷாகுல் அண்ணன் (லத்தீ பாவின் கணவர்) எல்லோருக்கம்
நிறய இனிப்புகள் வாங்கிக் கொடுத்தா ர்.ரயிலில் வசந்தா எல்லோரையும் பார்த்து,
பார்த்து கவனித்தது.
[20:04, 4/1/2017] Jothy Liakath: அடுத்ததாக மெகராஜ் மகள்கள் யாஸ்மீன், ந ஸிரீன்திருமணம், வரGவற்பு மதுரையில் நடந்தது. சரியாக ஞாபகம் இல்லா விட்டாலும், சகர் பான் அக்கா ரொம்பப் பிரியமாக உபசரித்த துஞாபகமிருக்கிறது.
நசிரீன் திருமணத்தில் நம் சகோதர சசோதரி கள் அனைவரும் கலந்து கொண்டோம். ஊருக்கு
ரொம்பத் தள்ளி ெ மகராஜ் ஓர் இடம் பார்த்து வைத்திருந்தது. முத்தக்கா உட்பட
எல்லோரும் அங்கு போய் இரவு தங்கிவிட்டு, காலையல் காபி
குடித்து குளிய லெல்லாம் அங் கேoய முடித்து விட்டு வந்தோம் என
நினைக்கிறேன். வரவேற்பும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
[20:04, 4/1/2017] Jothy Liakath: அடுத்ததாக திருவில் நடைபெற்ற அஜ்மீர், நூர் திருமணம். பத்து நாட் களுக்கு முன் குப்பி நான் , எல்லோரும் திருC பாய் விட்டோம். அங்கு பெரியம்மா ஒரு
வீடு ஏற்பாடு செய்திருந்தது. ஜெமீலா என்ற ஒரு பெண்மணி ரொம்ப உதவியாகவிருந்தது.
அங்கு போய் நூரைப் பெண் பார்க்க போனபோது தானே காபி யெல்லாம் போட்டுவிட்டு வந்து
உட்கார்ந்தது.திருமணசேலை ரொம்ப காஸ்ட்லியாக எடுக்க வேண்டுமென்று (நூர் அக்கா (கேட்டது
...)அம்மா தி ருநெல்வேலியிலிர்ந்து செல்லம்மாளை உதவிக்கு அனுப்பி வைத்தது.திருமணம்
இரவில் நடந்தது. மாலையில் மாப்பிள்ளை வீட்டிற்கு நிறைய சாப்பாடு கொடுத்தனுப்பினார்கள்.
இரவு கல்யான சாப்பாடு சாப்பிடும் போது மழை கொட்டித்தீர்த்தது ). குப்பியும்,
ஆசப்பும் ஊரிவேC ய தங்கிவிட்டார்கள். நான், அஜ்மீர்,
நூர், கலிபுல்லா,
ஷா குல், இதயத்துல்லா மட்டும் சென்னை திரம் பினோம். வந்தவுடனே வீட்1ல்ட் பொல் Cய நூர் வீட்டுட்' .
[20:04, 4/1/2017] Jothy Liakath: காலை யில் சென்னை வந்து சேர்ந்தோம். வந்த வுடனேயே நூர் வீட்டுப் பொ
ருப்பை ஏற்றுக் கொண்டது.கலி பில்லா , ஷாகுல், இதயத்துல்லா மேல் ரொம்பப் பாசம் காட்டியது. நைஸ் C கர்லா கத்தா னிருந்தது. அல்லா அதற்கும் நல்லபாக்கியம் கொடுக்கவில்லை..)திருமணத்திற்கு
அழைக்கச் சென்ற போது கூட முடியாமல் இருந்த
வாவா இப்று வைப்பற்றி விசாரித்தார். அந்த அன்பு
ஜென்னத் வீட்டிற்கு மட்டுமே உரித்தானது.)அஜ்மீர் திர மணத்திற்கு முன்பு பிரான்மலை
சென்றோம். அங்கு அங்குள்ளவர்கள் சோற்றை மலைC பால் குவித்து வைத்துக் கொண்டு சாப்பிட்ட விதம். அதிசியம். இத்துடன்
இதை முடித்துக் ெ காள்கிறேன்.
(நீண்ட பங்களிப்புக்கு நன்றி. இதைத்தான்
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். உடன்பிறப்புகள் தங்கள் நினைவலைகளை கட்செவியில் வெளியிடுவதோடு
வலைநூலிலும் பதிவு செய்தால் இளையதலைமுறை பின்பு எப்போதாவது படித்துச் சுவைக்கலாம்
.
எனது முந்திய தொடரின் காரைக்குடி
பகுதியில் ஜென்னத் அக்கா திருமணம், மும்தாஜ் அக்கா திருமணம், தொண்டி சென்றது
எல்லாம் என் நினைவில் இருந்தவற்றை வெளியிட்டிருக்கிறேன், உடன் பிறப்புகள் திருமணம்
எல்லாம் அந்தந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன் ..பைசல் திருமணம் பற்றியும்
எழுதியிருக்கிறேன்
கூடிய மட்டும் எதிர்மறை செய்திகளையும்
பிரச்சனைகளையும் தவிர்த்து விடுவேன். உங்கள் பதிவிலும் சில சிறிய மாற்றங்கள்
செய்துள்ளேன்)
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் ; -
நான் எழுதுவது என் வாழ்க்கை வரலாறோ, ஒரு வரலாற்றுத்தொடரோ இல்லை. இதற்காகவே நான்
கால வரிசைப்படி எழுதுவதையும் காலம் (ஆண்டு, மாதம்) குறிப்பிடுவதையும் தவிர்த்து
விடுகிறேன்,
மகிழ்வான சுவையான நிகழ்வுகளைப்
பகிர்ந்து காலச்சக்கரத்தை பின்னால் சுழற்றி குதூகலத்தையும் உற்சாகத்தையும் உணர
வைப்பதே என் நோக்கம் . அதில் ஓரளவு வெற்றியும் கண்டதாக எண்ணுகிறேன்,.
மேலும் எனது இப்போதைய தொடர் பணி
ஓய்வுக்குப்பின் நடந்த நிகழ்வுகள் பற்றியது )
இ(க)டைச்செருகல்
பொதுவாக நான் மருத்துவ குறிப்புகள
எதுவும் வெளியிடுவதில்லை. இருந்தாலும் மிக நம்பத்தகுந்த ஒரு குறிப்பைத் தருகிறேன்
(சொன்னவர் மரு. சந்திரசேகர், எனது இனிய
நண்பர், வர்மா முதுநிலைப்படிப்புத் தோழர், பரம்பரை சித்த மருத்துவர். சித்த
மருத்துவம் முறையாகப்படித்து பட்டம் பெற்றவர், மாவட்ட சித்த மருத்துவ அதிகாரியாகப்
பணியாற்றி ஓய்வு பெற்றவர் . எனவே துணிந்து வெளியிடுகிறேன் )
குதிரைக்கு உணவாகப் பயன்படும் கொள்ளு
மிகச்சிறந்த ஊட்டச்சத்து மருந்தாகும்.
பெண்களுக்கு நாற்பது வாயதுக்குமேல்
சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாட்டால் முதுகு வலி, இடுப்பு வலி வரும் .
இதைச் சரி செய்ய வல்லது கொள்ளு.
தேவையற்ற கொழுப்பைக்கரைத்து,உடலின்
சக்தி குறையாமல் மெலிய வைத்து வனப்பாக்கும்.
இதயத்தாக்குதல் வராமல் தடுக்கும்.
சளியை நீக்கி விடும்.
சத்தான உணவுப்பொருட்கள் எல்லாம் உடல்
சூட்டை அதிகரித்து வயிற்று வலி வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ( எடுத்துக்காட்டு
முருங்கைக்கீரை)
இதைத்தவிர்க்க உரிய முறையில் பக்குவம்
செய்யவேண்டும். கொள்ளை நீரில் ஊறவைத்து, பின் நீர் ஊற்றிகொத்திக்க வைத்து அந்த
கொதி நீரில் சின்ன வெங்காயம், பூண்டு நல்லெண்ணெய் புளி சேர்த்து ரசம் வைத்து
சோறில் நிறைய ஊற்றிக்கரைத்துக் குடிக்கவேண்டும்.
உங்கள் கருத்துக்களை எதிர்
நோக்குகிறேன்
வலை நூலில் படிக்க
கூகிள்
தேடலில்
sherfuddinp.blogspt.com
No comments:
Post a Comment