Thursday, 25 May 2017

மனம்




அறுபது வயது வந்து விட்டால்  அடங்கும் என்றார்கள்
ஆன்மீகத்தில் இறங்கினால் அடங்கும் என்றார்கள்
இறைவழிபாட்டில் ஈடுபட்டால் அடங்கும் என்றார்கள்
ஈகையில் மனதைச் செலுத்தினால் அடங்கும் என்றார்கள்
உடல் தளர்ந்தால்  அடங்கும் என்றார்கள்
ஊண் குறைத்தால் அடங்கும் என்றார்கள்
எல்லாம் செய்து பார்த்து விட்டேன்
ஏனோ  மனம் கட்டுக்கடங்காமல்  அலைந்து கொண்டே திரிகிறது

No comments:

Post a Comment