வெளியிலிருந்து வீடு திரும்பிய பெருமானார் (ஸல்) அவர்கள் அருமை மகள்
பாத்திமா (ரலி ) விடம் எங்கே என் பேரன்களைக் காணோம் என்று கேட்டார்கள் .
“என் துணைவர் அலி (ரலி) அவர்கள் வெளியூர் சென்று சில நாட்களாகி விட்டன
. என் மக்களின் பசியைத் தீர்க்க பணமும் இல்லை உணவுப்பண்டங்களும் தீர்ந்து விட்டன.
பசியில் அழுதவண்ணம் அவர்கள் வெளியே போய்விட்டார்கள் “ என்று கலங்கிய கண்களுடன்
பாத்திமா ரலி} பதிலுரைத்தார்கள்.
மனம் பதைபதைத்த பெருமானார் (ஸல்) அவர்கள் பேரன்களைத் தேடிப்
போனார்கள்.. வழியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் “இந்தப்பக்கம் இரண்டு சிறுவர்கள்
போனதைப்பார்தீர்களா?” என்று வினைவ அவர் “ என்ன வயதிருக்கும் ?” என்று கேட்டார்.
“நான்கைந்து வயதுச் சிறுவர்கள் “ என்று பெருமானார் (ஸல்) அவர்கள்
பதிலுரைக்க
“ ஆம் இரண்டு சிறுவர்கள் அழுது கொண்டே வந்தார்கள் . பசியினால் அழுவதை
அறிந்த நான்- சற்றுப்பொறுங்கள் நான் ஆட்டில் பால் கறந்து உங்களுக்குத் தருகிறேன் -என்று
சொல்ல அவர்கள் அமர்ந்தார்கள். நான் பால் கறந்து குவளைகளில் ஊற்றி அவர்களுக்குக்
கொடுத்தேன்,
குவளையில் வாய் வைக்குமுன் ஒரு சிறுவன் -இந்த ஆடுகள் உங்களுக்குச்
சொந்தமானதா -என்று கேட்டான். -முதலில் பாலைப்பருகி உங்கள் பசியைத்
தணித்துக்கொள்ளுங்கள் ; மற்றதை பிறகு பேசிக்கொள்ளலாம்- என்று சொல்லிப்பார்த்தென்.
ஆனால் அந்தச்சிறுவன் பிடிவாதமாகப் பாலைக்குடிக்க மறுத்து -இது உங்கள்
ஆடுகளா என்பதைத் தெளிவு படுத்துங்கள்- என்றான்,.
-இல்லையப்பா நான் இந்த ஆடுகளின் உரிமையாளன் அல்ல. வேறொருவருடைய ஆடுகளை
நான் மேய்துதத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன்,.
உடனே சிறுவர்கள் இருவரும் எழுந்து- உங்களுக்கு உரிமை இல்லாத பாலை
நீங்கள் எங்களுக்கு கொடுப்பதும் தவறு நாங்கள் அதைப் பருகுவதும் தவறு- என்று சொல்லி
விட்டுப்போய்விட்டார்கள் “
என்று சொல்லி அவர்கள் அவர்கள் சென்ற வழியைக் காண்பித்தார். .
அந்த வழியே சென்ற பெருமானர்ர் (ஸல்) அவர்கள் பேரன்கள் ஹசன் ஹுசைன்
இருவரும் ஒரு ஈச்ச மரத்தடியில் படுத்து உறங்குவதைகண்டு .வாரி அணைத்துத்துத் தோளில்
சுமந்து வீடு வந்து சேர்ந்தார். .
பாத்திமா (ரலி)யிடம் .
“ அருமை மகளே என்ன ஒரு ஒழுக்கத்துடன், கட்டுப்பாட்டுடன் உன் பிள்ளைகளை
வளர்த்திருக்கிறாய் என்று நினைக்க நினைக்க என் உள்ளம் பெருமிதம் கொண்டு
பூரிப்படைகிறது .
இந்த ஒன்றுக்காகவே சுவர்க்க வாசிகளின் தலைமைப்தவியை உமக்கு இறைவன்
நல்குவான், உம தொழுகை, வணக்கம் எல்லாம் இதற்குப் பின்தான் “
என்று சொல்லி வாழ்த்தினார் .
பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவிற்குப்பின் அவர்கள் வீடு கூட ஒரே அருமை மகள் பாத்திமா (ரலி) க்கு
கொடுக்கப்படவில்லை என்பது வரலாற்று உண்மை
No comments:
Post a Comment