தெருவில் விளக்குமாறு
விற்றுக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணிடம் வீட்டில் பேசியபோது கிடைத்த சில
வியப்பூட்டும் தகவல்கள்
அந்தப்பெண் பொறியியல் பட்டயப்படிப்பு வெற்றிகரமாக முடித்து விட்டு
வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறார் .
ஆந்திரா கடப்பாவைச் சேர்ந்தவர் ஒரு குழுவாக கிளம்பி வந்து எங்கேயாவது
தங்கிக்கொண்டு சமைத்துச் சாப்பிடுவார்களாம்.
வேலை கிடைக்கும் வரை பொழுதை வீணடிக்காமல் விளக்குமாறு விற்கும்
அந்தப்பெண்ணுக்குத் திருமணமும் ஆகி விட்டதாம் . பையன் பட்டப்படிப்புப்
படித்துக்கொண்டிருகிறார்.
சற்று நேரத்தில் ஒரு இளைஞர் தெருவில் சோப்புத்தூள் விற்றுக்கொண்டு
வந்தார். அவர் சொன்ன தகவல் இன்னும் வியப்பையும் சற்று வேதனையையும் உண்டாக்கியது.
திருநெல்வேலியைச் சேர்ந்த அவர் வேளாண் பட்டதாரியாம். நான் பலமுறை திருப்பிககேட்டேன்
அப்படித்தான் .சொன்னார்.
சிதம்பரத்தில் மாதம் ஆறாயிரம்
ஊதியம், ஒரு சோப்புத்தூள் பாக்கெட் விற்றால் பத்து ரூபாய்.
சர்விஸ் கமிஷன் தேர்வுகள் எழுதினாயா என்று கேட்டேன். அப்படி ஓன்று
பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை என்று கூறி என்னை திகைக்க வைத்தார்.
இவைஎலாம் உழைப்பின்
மேன்மையா இல்லை படிப்பின் வீழ்ச்சியா ?!!!
No comments:
Post a Comment