முன் குறிப்பு
குழுவில் சேருவது பற்றி இன்னும் சிந்தித்திக்கொண்டே இருக்கிறேன்.
இப்போதைக்கு கருத்துகளை குழுக்களுக்கு அனுப்புவதோடு என் கட்செவிக்கும் அனுப்பும்படி
கேட்டுக்கொள்கிறேன் –81242 45405 Sherfuddin .P--
௦௦௦௦
“Less corrupt”
வங்கி ஊழியர்கள் பற்றி ஒரு
தொலைக்காட்சிப் பேச்சு நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டசொல் இது
. குறைந்த தொகை கையூட்டாக வாங்குவார்கள் என்று பொருளல்ல இந்தச்
சொல்லுக்கு ..வாங்குபவர்களின் விழுக்காடு மற்ற பல துறைகளோடு ஒப்பிட்டால் குறைவு
என்பதே உண்மை
வங்கி ஊழியர்கள் , குறிப்பாக கிளை மேலாளர்கள் சமுதாயத்தில் மதிப்புக்கும்
மரியாதைக்கும் உரியவர்களாகத்தான் இருக்கிறார்கள்
என்பது ஒரு பொதுக் கருத்து. அது உண்மையும் கூட. . .
கிளை மேலாளருக்கு இருக்கும் பண பலம் (Money Power )- கடன் வழங்கும் அதிகாரம் மிக
அதிகம். வட்ட அலுவலகத்திலும் தலைமை அலுவலகத்திலும் உள்ள உயர் அதிகாரிகளுக்கு கிளை
மேலாளரை விட பன்மடங்கு அதிகமான கடன் வழங்கும் அதிகாரம் இருந்தாலும் கிளை மேலாளரின் பரிந்துரை இல்லாமல் அவர்கள் கடன்
வழங்க முடியாது என்பது ஒரு பொதுவான நடைமுறை
எனவே கிளை மேலாளருக்கு நிலை
தவறும் வாய்ப்புகளும் மிக மிக அதிகம்
நிலையில் திரியாது இருந்தால் மலை போல் உயரா விட்டாலும் மடு அளவுக்கு
தாழாமல் இருக்கலாம் .
இனி கதைக்கு வருவோம்.
சரவணகுமார் (சுருக்கமா சரவணன் ) வெளி
மாநிலத்தில் உள்ள அந்தக்கிளைக்கு மேலாளராக வந்து சில நாட்களே ஆகின்றன, ,இன்னும்
முழுதாகப் பொறுப்பு எடுத்து முடிக்கவில்லை.
சரவணன் இங்கு வருவதற்கு முன்பே கிளையின் மேலாளர் , மூத்த அலுவலர்கள்
எல்லாம் பதவி உயர்வு பெற்று வேறு வேறு கிளைகளுக்கு மாறிப்போய்விட்டார்கள் .
ஏதேனும் ஐயம் வந்தால் விளக்கம் கேட்கக்கூட ஆளில்லை .
இது போன்ற மாறுபட்ட சூழ்நிலைகள் வங்கி ஊழியர்களுக்கு அதிலும்
மேலாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல .
உனக்கு போகும் இடத்தின் மொழி தெரியுமா அந்த சூழ்நிலை உனக்கு ஒத்து
வருமா இதைப்பற்றியெல்லாம் வங்கி நிர்வாகம் அக்கறை கொள்ளாது .
நீச்சல் தெரியுமா என்று கேட்க மாட்டார்கள் .கடலில் தூக்கிப்போட்டு
விடுவோம் நீந்திக் கரை சேருவது உன் திறமை
. இதுதான் வங்கியின் கொள்கை .இதனால் வங்கிக்குப் பெரிய இழப்பு ஒன்றும் வரவில்லை
பெரும்பான்மையாக .எந்த அலுவலரும் அச்சம் தயக்கம் கொண்டு வேலையை விட்டு ஓடவும்
இல்லை
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மலர்ப்படுக்கையாகத்தோன்றும் வங்கி
மேலாளர் பணி அப்படி ஒன்றும் மென்மையானது அல்ல.
தன நீண்டகால பணியில் இதையெல்லாம் நன்கு அறிந்த சரவணன்.தன் பணியை
செவ்வனே துவங்கி விட்டார் .கோப்புகள், கடன் ஆவணங்கள் எல்லாவற்றையும் குறிப்பிட்ட
நாட்களுக்குள் சரி பார்த்து .பெரிய அளவில் தவறுகள் குறைகள் இருந்தால்
மேலிடத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படிச்செய்யத் தவறினால் அந்தத்
தவறுகளுக்கு அவரே முழுப்பொறுப்பாகி
விடுவார் .
ஐந்து நிமிடத்தில் மதிய உணவை முடித்து விட்டு வந்து தொடர்ந்து
கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது உள்ளே வந்த ஒருவர் தன் பெயர் கார்மேகம் ,
இந்தக்கிளையின் முந்தைய மேலாளர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
கோப்பை மூடி விட்டு அவருடன் உரையாடிக்கொண்டிருந்தார் சரவணன். அப்போது
ஒரு இளைஞர் வேகமாக உள்ளே வந்தார். வந்த வேகத்தில் கார்மேகத்தைப்பார்த்து வசை
பாடத்துவங்கினார். .சட்டயைப்பிடித்து இழுக்காத குறை .
சரவணனுக்கு ஒரே திகைப்பு. இப்படி ஒரு நிலையில் எந்த ஒரு வங்கி மேலாளரையும் அவர் பார்த்ததே இல்லை.. சட்டென்று
சுதாரித்துக்கொண்டு அந்த இளைஞரைப் பார்த்து இப்படியெல்லாம் ஒருமேலாளரிடம்
பேசக்கூடாது என்று சொல்லிப்பார்த்தார் .. அதற்கு அவர் சார் உங்களுக்குத் தெரியாது
இவரைப்பற்றி. எனக்கும் இவருக்குமிடையில் பல பிரச்சனைகள் இருக்கிறது என்றார்.
உங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை வெளியில் போய் பேசிக்கொள்ளுங்கள். இது
என் அறை. என்னைப்பார்க்க வந்தவரிடம் இப்படியெல்லாம் பேசுவதை நான் அனுமதிக்க
முடியாது .தேவைஎன்றால் நான் காவல்துறையை அழைக்கத் தயங்க மாட்டேன் என்று சரவணன்
உறுதியாகச் சொன்னதும் அந்த இளைஞர் எதோ முனகிக்கொண்டே வெளியே போய்விட்டார்.
இதற்குள் வங்கி வாயிலில் ஒரு சிறிய கூட்டம் கூடி விட்டது , வங்கிக்கு
அடுத்து உள்ள ஒரு வணிகர் வந்து
கார்மேகத்திடம் ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று உரக்கப்பேசினார்.,
சரவணன் அவரைப்பார்த்து இங்கு என்ன பிரச்சனை என்று உங்களுக்குத் தெரியுமா
என்று கேட்டார். அதெல்லாம் எனக்குத்தெரியாது. கூட்டம் கூடியதால் ஏதாவது பிரச்சனயாகத்தான்
இருக்கும் என்றுஎன் பங்குக்கு உள்ளே
வந்தேன் என்றார் அந்த வணிகர்.
அந்த வணிகருக்கு வங்கிக்கு மின்னாக்கி (ஜெனேரட்டர்) இயக்கும் ஒப்பந்தம் கிடைக்காததால் கார்மேகம் மேல் உள்ள
கடுப்பை இப்படி தீர்த்துக்கொண்டார் என பின்னால் தெரிய வந்தது .
அடுத்து இன்னொருவர் உள்ளே நுழைந்து ஒரு விசாரணை நடத்த வந்திருக்கிறேன்
என்றார். .என் அறைக்குள் என் அனுமதியில்லாமல் நுழைந்தது தவறு வெளியே போங்கள் என்று
சரவணன் சொல்ல , நான் காட்சி ஊடகத்தின்.குற்றவியல் செய்தியாளர் (Crime reporter). என்னையா
வெளியே போகச் சொல்கிறீர்கள் என்று அச்சுறுத்தினார். இங்கு குற்றம் ஏதும்
நடக்கவில்லை எனவே உங்களுக்கு இங்கே வேலையில்லை என்று ஒரு வழியாக அவரையும் வெளியே
அனுப்பினார் சரவணன்
நான் இங்கிருந்தால் உங்கள் வேலை கெட்டுவிடும் .நான் புறப்படுகிறேன்
என்று கிளம்பினார் கார்மேகம். பத்திரமாகப்போங்கள் என்று சொல்லி ஒரு ஊழியரையும்
துணைக்கு அனுப்பிவைத்தார் சரவணன் ..
கார்மேகம் போனபின் அவரைப்பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைத்
தெரிவித்தனர். அவரால் பயன் பெற்றவர்கள் நல்ல விதமாகவும் மற்றவர்கள் மாறுபட்டும்
பேசுவார்கள். இது உலக நடப்பு .
.கிளை மேலாளருக்கு மாறுதல் என்றால் மிகப்பெரும்பாலான, நெருக்கமாகப்
பழகிய நல்ல வாடிக்கையாளர்கள் கூட எந்த
ஊருக்கு மாறுதல் என்று கேட்க
மாட்டார்கள்.. அடுத்து வருவது யார், அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்துவிடுங்கள்
என்றுதான் சொல்வார்கள் . உண்மையான நட்போடு பழகுபவர்கள் மிகக்குறைவே
இந்தகிளையில் நடந்த இன்னொரு சிறிய நிகழ்வைச் சொல்லி இந்தபகுதியை
நிறைவு செய்ய எண்ணுகிறேன்.
பெரியசாமி – கிளையில் உள்ள பல எழுத்தர்களில் ஒருவர். சிறிய உருவம்,
அமைதியான பேச்சு. செயல்கள் சற்று அதிகமாகவே மாறுபாடாக இருக்கும் .அவர்மேல்
குற்றப்பத்திரிகை, விசாரணை எல்லாம் உண்டு.,
பல தவறுகளில் ஒரு தவறுக்காக
நீதி மன்ற ஆணைப்படி பல மாத ஊதியம் வழங்கப்படாமல் பிடித்து வைக்கப்பட்டிருந்தது .
அந்த வழக்கு முடிந்து ஊதியத்தைக் கொடுக்க நீதிமன்றம் அனுமதியளித்து சில காலமாகியும்
வங்கி வட்ட அலுவலகம் அதற்கான அனுமதியை வழங்காததால் பெரியசாமிக்கு அதைக் கொடுக்க
முடியாத நிலை .
வட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரவணன் பேசியபோது பெரியசாமி
போன்றவர்களுக்கு பரிவு காட்ட வேண்டிதில்லை என்பது போல் பதில் வந்தது. இது பரிவு
பற்றிய பிரச்சினை இல்லை சட்டம் பற்றியது என்று சரவணன் சொல்ல அவ்வளவு அக்கரை
இருந்தால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று ஒரு பதில்
வங்கியின் சட்ட ஆலோசகரிடம் கலந்து, அவரிடம் எழுத்து மூலமாக கருத்து
வாங்கிகொண்டு பெரியசாமிக்கு தொகை கொடுக்கப்பட்டது
குற்றம் செய்தவர் தண்டனைக்குரியவர் என்பதில் யாருக்கும் மாறுபட்ட
கருத்து இல்லை . ஆனால் அவருக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பலன்களை வழங்குவதில்
ஏனோ வங்கியில் ஒரு தயக்கம் ,சுணக்கம் .I am the boss என்கிற
மன நிலை
இது போல் இன்னொரு நிகழ்வு பற்றி வேறு பகுதியில் சொல்கிறேன்
பெரியசாமி சில காலம் கழித்து வங்கியை விட்டே நீக்கப்பட்டார் என்று கேள்விப்பட்டேன்
௦௦௦௦ ௦௦௦௦ ௦௦௦௦௦
பி கு
தொடரந்து சில பகுதிகள் வங்கி பற்றி எழுத இருப்பதால் வங்கியின் அமைப்பு
பற்றியும் ஊழியர் அமைப்பு பற்றியும் ஒரு சுருக்கமான விளக்கம்
வங்கி அமைப்பு (நான் ஓய்வு பெறும்போது)
கிளைகள்(Branches)
---வட்ட அலுவலகங்கள் (Circle offices)--- தலைமை
அலுவலகம் (Head Office)
ஊழியர் அமைப்பு
கடை நிலை ஊழியர்கள்(Sub Staff), எழுத்தர்கள்( clerks) இந்த இரண்டு பிரிவினரும் உழைக்கும் வர்க்கம் (working class ) எனக்குறிப்பிடப்படுவர்
மற்றவர்கள் எல்லாம் உழைக்காத வர்க்கம் என்று பொருளல்ல .இவர்களுக்கு
தொழிற்சங்க உரிமைகள், குறிப்பிட்ட வேலை நேரம் எல்லாம் உண்டு.
இதற்கு மேல் படியில் உள்ளவர்கள் உழைக்காதவர்கள் அல்ல .நேரம் காலம்
பார்க்காமல் 24x7 உழைக்க வேண்டியவர்கள்
அலுவலர்,(officer)-- மேலாளர்(manager) ---முதுநிலை
மேலாளர்(senior manager
) SM --முதன்மை (கோட்ட) மேலாளர் chief /Divisional Manager CM/DM --,உதவிப்பொது
மேலாளர்(Assistant
General Manager )AGM , --துணைப்பொது மேலாளர் (Deputy General Manager )Dy.G.M, ---பொது மேலாளர்(General
Manager) GM
இதற்கும் மேலாக
செயல் இயக்குனர் Executive Director ED , --
தலைவர் & நிர்வாக இயக்குனர் Chairman & Managing Director CMD
இவை இரண்டும் மைய அரசு நியமனப்பதவிகள்
Chairman –
CMD சர்வ
அதிகாரம் படைத்தவர். ஒரு வங்கிக்கு ஒருவர்தான் இருப்பார் அவருக்குக்கீழ் ஒன்றிரண்டு
EDs
அதற்கடுத்து வட்ட அலுவலத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள Dy.G.M/ G.M
இது ஒரு அதிகாரக்குவியல் மையம்.
இதற்கு அடுத்த அதிகார மையம் கிளையின் பொறுப்பு மேலாளர்தான் (Branch in Charge).
கிளையின் அளவைப்பொறுத்து அவர் officer, manager senior manager ,chief manager AGM or Dy G M ஆக
இருக்கலாம் .முன்பே குறிப்பிட்டது போல் கிளையின் பரிந்துரை இல்லாமல் வட்ட அலுவலகமோ
தலைமை அலுவலகமோ பொதுவாக கடன் வழங்குவதில்லை
--------------
சென்ற
பகுதி
பற்றி கருத்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து தொடர்ந்து எழுத
ஊக்குவித்த அஜுமல், ரவிராஜ்,ராஜா சுப்பிரமணியன், ஐ எஸ் பீர் முகம்மது பீர் முகமது (பீயண்ணா) நெய்வேலி ராஜா,தல்லத், சித்திகா காதர்,
சாகுல், பாப்டி, அமீதா,,அக்காமார் மெஹராஜ் , ஜோதி ,நூர்அனைவருக்கும் நன்றி
.
Ajmal
Nice to read
a real life story told in a very interesting style 👍
Raviraj
HR people
are always like that..
After their
tenure also behaving like that one...
Don't have
real and affectionate friends in the service
Raja Subramanian
Interesting.
All the best.
[11:19,
7/7/2017] ISPeer mohamed:
Your writings about your career incidents are
superb Masha Allah. Please continue
Peer Mohamed Peeyannaa
: மரியாதைக்குரிய
சச்சா அவர்களுக்கு
உண்மை சம்பவங்களை
சுவாரஸ்யமாக தருவதற்கு ரொம்பத் திறமையும் பயிற்சியும் வேண்டும்.
சுஜாதாவின்
நளினமும் ராஜேஷ் குமாரின் விறுவிறுப்பும் ஒருங்கே பயணித்ததுதான் இந்த அறிந்த அனுபவ
சம்பவத்தின் சிறப்பம்சம்.
Neyveli Raja
'கடவுளின்
கணக்கு'
- தலைப்பு
கன கச்சிதம்! யோசனையே வேண்டாம்..அப்படியே தொடரலாம்! அருமையான ஆரம்பம்!!
வாழ்த்துக்கள் மாமா!
Thallath
: Arumaiyana
Nadai Matram devai illai
Sithiga kathar
: All along
I have been handling financial transaction in S.B. account and CC account
&operating lockers but was surprised to read your text highlighting issues
I never knew, keep it up👍
Meharaj
: வெல்கம் ஷர்புதீன்!
: ஷர்புதீன் திரும்ப வந்தது, வாட்ஸ் அப்
உற்சாகமாக உள்ளது.
: ஷர்புதீன் வங்கி ஊழியர்கள் பற்றிய அனுபவங்களையும்
நமக்குச் சலிப்பு
ஏற்படாமல் கதை போல் எழுதிய விதம், நடை எல்லாம் மிக அற்புதம்.
தொடரட்டும்.
மிகவும்
சந்தோஷமாயிருக்கிறது.
Shahul
: மாமா வின் எழுத்துக்கள் இனிமை.Not permitted to
retire இது
ஒரு கொடு மையான சொல் அரசு ஊழியர்கள் அகராதியில். பணி ஒய்வு தேதி அன்று இதை Serve செய் வார்கள் , இதை தடை கோரி
வழக்கு தாக்கல் செய்து உள்ளேன். இது அரசு ஊழியர் கள் திர்ப்பாயம் என்ற
நீதிமன்றத்தில் Practice செய்ய ஆரம்பித்த
போது தெரிந்து கொண்ட சமாச் சாரங்கள். Inspetor of police, EXecutive Engr. ,
Sub- Registrar போன்ற
உயர் பதவி வகிப்பவர் கள் இந்த உத்தரவு வழ ங்கப்பட்டவுடன் மிகவும் வேதனை
அடைவர்
Jothy liakath
பெரிய அதிகாரிகள்
சிறிய அதிகாரிகளை பயமுறுத்தி , காலில் போட்டு மிதித்து கேவலப்படுத்தும்
சீரியல்கள் பார்க்கும் போது, இது அதிகப்படியான செயற்கை தனம் என்று தோன்றுவது
மிகையல்ல, நடப்பதுதான்
என்பது உன் எழுத்தைப் பார்த்த பின் தெரிகிறது. நடை முன்பு போல் இலகுவாக இல்லாமல்
கொஞ்சம் கடின மோ என்று தோன்றுகிறது. புரியாத அலுவலக வார்த் தைகளால் கூட அப்படித்
தோன்றலாம். எப்படியோ உன் எழுத்து மறுபடியும் வரப் போவது மகிழ்ச்சி யே |
Noor
[20:11, 7/10/2017] : மறுபடியும் வாட்ஸ் அப்புக்கு ஒரு interesting topic கிடைத்துள்ளது.
[20:22,
7/10/2017] : "சிறிய தவறுகள்
பெரிய இழப்பு" இது முற்றிலும் உண்மை. சிரீன் அத்தா விற்கும் இது நடந்தது.
ஆனால் அது தவறு அல்ல. அவருடைய நேர்மை promotionக்குத் தடைக்கல்லாகிவிட்டது.ன. ஒரு தவறான
செயலுக்கு மேலதிகாரிகளுடன் ஒத்து வராததால் officer post கிடைக்கவில்லை.
ஆனால் முஸ்தபா வா
அவர் மிகவும் நேர்மையானவராயிற்றே என்ற
பெயர் மட்டும் இன்னும் நான் சந்திக்கும் பழைய ஊழியர்களிடம்் நிலைத்து
இருக்கிறது.
[20:26, 7/10/2017]2: இதுதான் உண்மையான வெற்றி.
அமீதாவும் பாப்டியும் .பாராட்டுத்
தெரிவித்தர்கள்
oooooo
தொடரின் இப்பகுதி சற்று வறட்சியாகவும்
சலிப்புத்தட்டுவதாகவும் இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. அதை மாற்ற ஒரு
வசந்தமான வங்கிக்கு சிறிதும் தொடர்பில்லாத
இ(க)டைச்செருகல்
வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் சில
நாட்களுக்கு முன்பு பறந்ததைப்பார்த்து மனதில் மகிழ்ச்சியும் அதை மீறி வியப்பும்
தோன்றியது
இந்த வெய்யிலும் அனல் காற்றும்
வண்ணத்துப்பூச்சிகளை ஒன்றும் செய்யாதா என்ற வியப்பு .என்பிலதனை வெயில் போல என்று ஐயன்
சொன்னதும் மாறி விட்டதோ என்றொரு ஐயம்
ஐயம் தெளிய வைப்பது போல் அன்று மாலையே ஒரு
மழை பெய்து சட்டென்று வானிலை மாறி வசந்தம் வந்தது போல் ஒரு தோற்றம்
பருவ மாற்றத்தை தெரிவிக்க ரமணன்
போன்றவர்கள் தேவையில்லை எங்களுக்கு .
நாங்கள் வந்தாலே கோடை வசந்தமாக மாறும்
என்று பட்டாம்பூச்சிகள் சொல்வது போல் இருந்தது
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
.
No comments:
Post a Comment