கதை நேரம் 17
தலைமுறை இடைவெளி
பொதுவாக தனது அடுத்தடுத்த
தலைமுறையில் நான்காவது வரை பார்த்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அதற்கடுத்த
தலைமுறையை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது மிக மிக அரிது
என்பார்கள் . என் சுற்றம் நட்பு வட்டத்தில் நான் அறிந்த அளவில் இது போல் ஐந்தாம் தலைமுறையைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை
பத்து தலைமுறை இடைவெளியில் இருவர் சந்திக்கின்றனர். சந்திப்பு என்றால்
வெறும் சந்திப்பல்ல . மூத்தவர் இளையவருக்கு ஞானம், அறிவு.,கல்வியை
கற்றுக்கொடுக்கிறார் ஒன்றல்ல இரண்டல்ல ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் . அதுவும் மனிதன்
படைக்கப்பட்ட நாளில் இருந்து ஏக இறைவன் பற்றிய அறிவு அனைத்தையும் கற்பிக்கிறார்
கற்றவர் யார், கற்பித்தவர் யார் ?
நபி இப்ராஹீம்.அவர்கள் பற்றி நம் அனைவருக்கும் நிறையவே தெரியும்
.இறைவனே நட்பு கொள்ள விரும்பிய மாமனிதர் ,முதிய வயதில் இறைவனின் அருட்கொடையாக கிடைத்த மகனை இறைவனின் கட்டளைக்குக்கீழ்ப்படிந்து பலிகொடுக்கத்
தயங்காதவர் , தீக்குண்டத்தில் தூக்கி எறியப்பட்டும் ,தீக்குண்டத்தை
பூக்குண்டமாக்கி இறைவனால் காப்பாற்றப் பட்டவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம்
இது வரை நபி இப்ராஹீம் அவர்கள் பற்றி நான் அறிந்திராத பல செய்திகளை
அண்மையில் படித்தேன்
அவற்றை மிகச் சுருக்கமாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .இது முழு
வரலாறு அல்ல. வரலாறைப் படிக்கத்த்தூண்டும் சிறு குறிப்புகளின் தொகுப்பு
பெயர் இப்ராஹீம், ஆப்ரஹாம் , ஆப்ராம்
தந்தை தெராஹ்(Terah)
– இப்ராஹீம் நபி பிறக்கும்போது தந்தைக்கு வயது எழுபது
மன்னன் நிம்ரோதிடம் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் .மன்னர் வழியில்
இவரும் சிலை வணக்கத்தில் தீவிரமாக இருந்தார் ஞாயிறு (சூரியன் ) இவர்களின் தலைமைக் கடவுள்
தாயார் அமத்லாஹ் (Amathlaah)
இரண்டு சகோதரர்கள் – நஹர்(Nahor) ஹரன் (Haran)
இதில் ஹரன் என்பவர் லூத் நபி அவர்களின் தந்தை .அந்தக் கால கட்டத்தில்
இப்ராஹீம் நபி அவர்களின் மேல் நம்பிக்கை கொண்ட ஒரே ஒருவர் லூத் நபி அவர்கள் (திருமறை 29:26)
துணைவியார் பெயர் யிஸ்காஹ் என்ற சாரை என்ற சாராஹ் (Yiskah/Sarai/ Sarah).இவர்
ஹரனின் மகளாவார் .இந்த வகையில் லூத் நபி அவர்கள் இப்ராகிம் அவர்களுக்கு மைத்துனர
முறை ஆகிறார்
பிறப்பிட்ம் – மெசொபோடமியாவில் உள்ள எவர் ஹா நஹார் /(குத்தா)
Ever-haaNahar
(cutha) in Mesopotamia
பிறப்பிலேயே மரணத்தைச் எட்டிப்பார்த்தவர் இப்ராகிம் அவர்கள் ..இவர் பிறந்த
அன்றே மன்னன் நிம்ரோதின் ஆருடக்காரர்கள் இந்தக் குழந்தையால் மன்னர் ஆட்சிக்கு
ஆபத்து என்று கணித்துக் கூறினர்
உடனே நிம்ரோத் இப்ராஹிமின் தந்தையிடம் குழந்தையைக் கொல்வதற்காக அரண்மனைக்குக்
கொண்டு வர ஆணையிட்டான்
இதிலிருந்து இப்ராஹீம் எப்படித் தப்பித்தார்கள், பத்துத் தலைமுறைக்கு
முந்திய நூஹ் நபி அவர்களை எப்போது எப்படி சந்தித்தார்கள் என்பது பற்றி அடுத்த
பகுதியில் பார்ப்போம்
Source
1. Towards
understanding Quran
V 21: 71 Explanatory Note 63
2. Abraham’s
Early Life By Nissan Mindel
என் குறிப்பு
மிக எளிதாக ஒரு கதையை
ஏழு எட்டுப்பக்கம் எழுதி விடலாம் ,ஆனால் புனிதர்களின் வரலாறு இரண்டு பக்கம் எழுதவே
சற்று சிரமமாகத்தான் இருக்கிறது இதே போல்தான் படிப்பவர்களுக்கும் இருக்கும்
என்பதால் இரண்டு பக்கத்தோடு நிறுத்தி விட்டேன் .இறைவன் நாடினால் தொடர்ந்து
எழுதுவேன்
sherfuddinp.blogspt.com
B F W 30102019 Wed
இந்தக்கதையை முகநூலில் தடை செய்து விட்டார்கள்
ஏனென்று புரியவில்லை