8.மங்கை, மன்னன் .மயக்கம்
நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் .தான் தனது எனும் செறுக்கு
அறுத்தல் பற்றி உரையாடினோம் .. அவர் கூறினார் “ஜகத்குரு என்று அழைக்கப்படுபவர் சொன்னார்: - ஜகத்துக்கு
நான் குருவல்ல.ஜகம்தான் எனக்கு குரு .இந்தக்கருத்தில்தான் இப்பெயரை நான்
ஏற்றிருக்கிறேன் .ஜகத்துக்கெல்லாம் குருவாகும் நிலை அடியேன் எய்துதல் இயலாது “
தனது என்ற செறுக்கறுத்த அவர் கூறியது கேட்டதும் எனக்கு ஜகத்தில் ஒரு
அடிமைப்பெண் ஒரு பாதுஷாவிற்கு குருவானது நினைவிற்கு வந்தது
இப்ராஹீம் இப்னு அத்ஹும் என்பவர் ஒரு பாதுஷா .அவர் படுக்கை சுகத்தில்
அதிக நாட்டம் கொண்டவர். மெதுவான படுக்கையை சுத்தமாக விரித்து அதன் மீது நறுமண
மலர்களைப் பரப்பி வைக்க வேண்டியது அடிமையான ஒரு இளம்பெண்ணின் வேலை
அழகாக விரித்து கம்மென்று நறுமணம் வீசும் அம்மலர்ப் படுக்கை
எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று சற்று படுத்துப்பார்த்தாள்
அப்பாவை
கட்டாந்தரையின் மேல் ஈச்சம் பாய் விரித்துப் படுத்துப்பழகிய அவளுக்கு
சொர்க்கலோகமாய்த் தெரிந்தது அப்படுக்கை . கண்களை இமைகள் தானே தழுவிக்கொள்ள
அயர்ந்து உறங்கி விட்டாள்
பாதுஷா பட்டத்து மகிஷியுடன் படுக்கை அறைக்கு வந்தார் .மங்கை ஆழ்ந்து
உறங்குகிறாள் தூக்கத்தில் கலைந்த ஆடைகள் அவள் இளமை அழகை வெளிச்சம் போட்டுக்
காட்டின
பேகம் சாஹிபா பாதுஷாவை தீயென நோக்கினாள்,பாதுஷா பூவையை நோக்கினார் .
கைகளைத் தட்டினார் கனவுலகில் இருந்த பூவை எழவில்லை சாட்டையை எடுத்து சொடுக்கினார்
துயில் கொண்ட தோகை மீது.
துவண்டு எழுந்து. வாய் புதைத்து குழைந்து நின்றாள் கோமளாங்கி .சவுக்கடிகள்
மேலும் மேலும் விழுந்தன .மௌனம் கலைந்தது..மழையாய்ச் சொரிந்த கண்ணீர் மன்னன்
காலடியை நனைத்தது .
பேசினாள் பொற்பாவை “அரசே நான் கண்ணீர் வடிப்பது உங்கள் சாட்டை
அடிக்காக அல்ல. என் சிந்தனை எங்கெங்கோ செல்கிறது “என்றாள்
“கூறு பெண்ணே கூறு “ என்றார் பாதுஷா
“ எதோ சிறிது நேரம் மலர்ப்படுக்கையில் படுத்தேன் . இக்குற்றத்திற்கு
இறைவன் எனக்களித்த தண்டனை இத்தனை சாட்டியடிகள்.. ஆனால் ,----ஆனால் ----“
“ஏன் தயக்கம் கூறு பெண்ணே “ என்றார் பாதுஷா
“தாங்கள் எத்தனை ஆண்டுகள் இதில் படுத்து வருகிறீர்கள் ---------“
பாதுஷாவின் விழிகளில் கண்ணீர் மல்கியது
“ ஆம் எத்தகைய தண்டனையை இறைவன் அளிப்பானோ ; என்னை மன்னித்து விடு
பெண்ணே. நீதான் எனக்கு ஞானகுரு ,இன்றே
அரசைத் துறந்தேன் “ என வெளியேறி சிறந்த ஆத்மா ஞானியாகத் திகழ்ந்தார்
ஜெகத்தில் ஒரு அடிமைப்பெண்ணை குருவாகக்கொண்டு ஜெகத்குரு ஆனார்
எழுத்தாக்கம்
ஹாஜி கா. பீர் முகமது பி .எஸ்சி,
நகராட்சி ஆணையர் ஒய்வு
என்னுரை
மலர்ப்படுக்கையும் மயங்கிய மங்கையும்
என்ற தலைப்பை மாற்றி உள்ளேயும் பொருள் மாறாமல் சில சிறிய மாற்றங்கள்
செய்திருக்கிறேன்.
கம்பராமாயணக் கட்டுரைகள்
என்பது நூலின் தலைப்பு .அதில்
உள்ள பதினேழு கட்டுரைகளில் பல மற்ற தலைப்பில் உள்ள கட்டுரைகளும்
இருக்கின்றன .
இதுவரை மொத்தம் ஏழு கட்டுரைகளை வெளியிட்டுருக்கிறேன்
இறைவன் நாடினால் மற்றவையும் விரைவில் வரும்
sherfuddinp.blogspot.com.
B F FT W 07102019 mon
.
No comments:
Post a Comment