சின்னச் சிதறல்கள்
.
சின்னச் சிதறல்கள்
.
பறக்கும் பட்டங்கள்
மீனு வேணுமாமா
புதிதாக ஒரு குரல் தெருவில் கேட்க எட்டிப் பார்த்தார் என் துணைவி
எங்கள் வீடு இருப்பது அண்மையில் உருவாகிய நகர் என்பதால் காய்கறி, கீரை
மீனெல்லாம் தெருவில் அதிகம் விற்பது இல்லை
இப்போதுதான் ஒரு சிலர் மீன் விற்க வருகிறார்கள் எங்கள் வீட்டில்
பெரும்பாலும் அவர்களிடம் வாங்குவதில்லை
மேலும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற
நாட்களில் சைவம்தான்
ஆனால் குரல் போல் மீனும் புத்தம்புதிதாக
உயிருடன் இருந்தது
கூடுதலாக அந்தப்பெண் தானே மீனை ஆய்ந்து அரிந்து சுத்தம்
செய்து தருவதாய்ச் சொன்னது வாங்கத் தூண்டியது
சிறிய பேரம் பேசி விலையும் படிந்து வர
அந்தப்பெண் மீனை சுத்தம் செய்யத்துவங்கினார்
சுத்தம் செய்தார் செய்தார் வெகு நேரம்
செய்து கொண்டே இருந்தார் .வீட்டில் செய்வது போல் மிக நேர்த்தியாக சுத்தம் செய்தார்
பேச்சுக் கொடுத்த என் துணைவி அவரிடம்
குடும்பம் பற்றி விசாரித்தார் .சின்னப் பெண் போல் இருந்த அவர் திருமணமாகி ஒரு
குழந்தை இருப்பதாய்ச் சொன்னது சற்று வியப்பளித்தது
அடுத்து படிப்பு பற்றி கேட்க மிக இயல்பாக
எம் ஏ இங்கிலிஷ்
என்றது
கொஞ்சம் அதிர வைத்தது
அவர் துணைவர் எம் எஸ்ஸீ ஜூவலாஜி யாம்
அவரும் சரியான வேலை கிடைக்காமல் மீன்
விற்பனை செய்கிறாராம்
அந்தப்பெண்ணின் உடன் பிறப்புகள் இருவரும் முதுநிலைப் பட்டதாரிகளாம்.
இவ்வளவுக்கும் அவர்கள் பெற்றோருக்கு பெரிய
படிப்பெல்லாம் கிடையாது
பொறியியல் படித்த பெண் தெருவில்
விளக்குமாறு விற்பது பற்றி முன்பு எழுதியிருந்தேன்
இப்போது மீன் விற்கும் முதுநிலைப் பட்டதாரி
நாளை முனைவர் என்ன விற்பாரோ தெரியவில்லை
இது உழைப்பீன் பெருமையா
அல்லது ஒரு வகையான அறியாமை , முயற்சி
இன்மையா ?
முன்பு விவசாயப் பட்டதாரி ஒருவர்
சோப்புத்தூள் விற்க வந்தார் . அவரிடம் அரசு தேர்வாணையத் தேர்வுகள் எழுதுவீர்களா
என்று கேட்டேன் , அப்படி என்றால் என்ன என்று கேட்டார்
வாங்கிய மீன் பற்றி சில சுவைச் செய்திகள்
அடுத்த பகுதியில் இறைவன் நாடினால்
வலைநூல் முகவரி
sherfuddinp .blogspot.com
B FB W 24012020FRII ``
No comments:
Post a Comment