சின்னச்சிதறல்கள்
2.திலாப்பியா
ஆங்கில இலக்கியம் முதுநிலை பட்டதாரிப் பெண்ணிடம் மீன் வாங்கியது பற்றி போன பகுதியில்
குறிப்பிட்டிருந்தேன்
அவரிடம்
வாங்கிய மீனின் பெயர் திலாப்பியா என்பதாகும் .சிலேபிக்கெண்டை என்று
பேச்சு வழக்கில் சொல்லப்படும் இந்த மீனுக்கு ,திலேப்பியா என்றும் பெயர் உண்டு
மிகவும் சுவையான இந்த மீனின் விலையும் மிகக்குறைவு
இருந்தாலும் எங்கள் வீட்டிலும் என் துணைவி வீட்டிலும் இதை வாங்கிய நினைவு இல்லை
மிக எளிதாகப் பல்கிப்பெருகி மற்ற மீன்களை
அழித்துவிடும் குணமுடைய இந்த மீனின் தாயகம் ஆப்ரிகா
கிறித்தவ மதத்தில் நபி இயேசுபிரான் இரண்டு
மீன்களை பதினைந்தாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்ததாக ஒரு நம்பிக்கை உண்டு . அந்த
மீன் இதுதான் என்கிறரர்கள்
நிறைய முள் இருக்கும் இந்த மீன் ஆறுகளில் வாழும்
. நீர் எவ்வளவு மாசு பட்டிருந்தாலும் , எந்த உணவையும் உண்டு பிழைத்துக் கொள்ளுமாம்
எளிய மக்களுக்கும் ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும்
என்ற நல்ல நோக்கத்தில் காமராசர் ஆட்சியில்
இந்த மீன் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
இப்படியெல்லாம் மக்களைப்பற்றி சிந்திக்கும் அரசு,
தலைவர்கள் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் இருந்தது கனவல்ல உண்மை
மீண்டும் அடுத்த பகுதியில் இறைவன் நாடினால்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
BFBW31012020fri
No comments:
Post a Comment