தமிழ் (மொழி) அறிவோம் மறிதல்
26052024 ஞாயிறு
நான்கெழுத்தில் ஒரு சொல்
பொருளோ பேச்சு வழக்கிலும் இலக்கியப் பயன்பாட்டிலும் பத்துக்கு மேல்
கிளர்தல் துள்ளுதல்
நிலைகுலைதல் கீழ் மேலாகுதல்
சொல்லின் முதல் , எழுத்து ம –மெல்லினம்
நான்காவது எழுத்து ல் – இடையினம்
இரண்டும் மூன்றும் வல்லினம்
முதல் இரண்டு எழுத்துக்கள் போராட்டத்தின் பகுதி
அந்தச் சொல் என்ன?
விடை
மறிதல்
சரியான விடை எழுதிய ஒரே ஒருவர்
சகோ கணேச சுப்ரமணியம்
வாழ்த்துகள் ,பாராட்டுகள்
சகோ வகாப் அனுப்பிய விடை ---------குறிப்புகளோடு பொருந்தவில்லை
இருந்தாலும் ஆர்வம், முயற்சிக்கு பாராட்டு
விளக்கம்
• மறிதல், பெயர்ச்சொல்.
1. கீழ்மேலாதல்
(எ. கா.) மலைபுசையானை மறிந்து (பு. வெ. 7, 9)
2. மீளுதல் (திவா.)
(எ. கா.) மறிதிரை (கலித். 121)
3. முதுகிடுதல்
(எ. கா.) மைந்தர் மறிய மறங்கடந்து (பு. வெ. 6, 14)
4. விழுதல்
(எ. கா.) நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ (சீவக. 2201)
5. சாய்தல்
(எ. கா.) எரிமறிந்தன்ன நாவின் (சிறுபாண். 196)
6. கிளர்தல்
(எ. கா.) மறிகடல் போன்று (திவ். இயற். திருவிருத். 57)
7. முறுக்குண்ணுதல்
(எ. கா.) திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித்.
8. பலகாலுந்திரிதல்
(எ. கா.) நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும் (கலித். 46)
9. தடைப்படுதல்
10. நிலைகுலைதல்.
(எ. கா.) ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய (கல்லா. கணபதி. வாழ்.)
11. அறுபடுதல்
(எ. கா.) உன்காது மறியும் (திவ். பெரியாழ். 2, 3, 6, அரும்.)
12. சாதல்
(எ. கா.) மறிந்த மகன் றனைச்சுட (அரிச். பு. மயான. 38)
13. துள்ளுதல்(பேச்சு வழக்கு)
(தமிழ் விக்சனரி)
இறைவன் நாடினால் விடை நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௮௦௫௨௦௨௪
26052024 ஞாயிறு
சர்fபுதீன் பீ
No comments:
Post a Comment