தமிழ் (மொழி) அறிவோம்
சோலையை குறிக்கும் ஒரு நான்கெழுத்துச் சொல்
முதல் எழுத்து த
இரண்டாவது மெல்லினம்
மூன்றவது வல்லினம்
நான்காவது இடையினம்
முதல் இரண்டு எழுத்துக்கள் வெப்பமாற்ற நிலையிக் குறிக்கும்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி –முதல் சரியான விடை
சோமசேகர்
ஷர்மதா
கணேசசுப்ரமனியன்
கீதா
குமாரசாமி
மெஹராஜ்
பிராங்க்ளின் செல்வகுமார்
தல்லத் &
செல்வகுமார்
தண்டலை=
சோலை
பூந்தோட்டம், பூங்கா
ஒரு சிவதலம்.
இயற்கை எழிலை ,பெண்களின் அழகை வர்ணிப்பது என்றால் கற்பனை கொடி கட்டிப்பறக்கும் புலவர்களுக்கும் .கவிஞர்களுக்கும்
சொற்களும் உவமைகளும் வெள்ளம் போல் பாய்ந்து வரும்
அதிலும் கவிச் சக்ரவர்த்தி என்றால் கேட்கவே வேண்டாம்
தண்டலை மயில்கள் ஆட
என ஒரு பாடலில் கம்பன் மருத நிலத்தின் இயற்கை அழகை வர்ணிக்கிறான்
தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, - மருதம் வீற்றிருக்கும் மாதோ
இந்தப் பாடலிலே, மருத நிலத்திலே உள்ள
சோலையை நாட்டிய மேடையாகவும்,
மயில்களை நடன மாதர்களாகவும்,
குளங்களில் உண்டாகும் அலைகளைத் திரைச்சீலையாகவும்,
தாமரை மலர்களை விளக்குகளாகவும்,
மேகக் கூட்டங்களை மத்தளங்களாகவும்,
வண்டுகளின் ரீங்காரத்தை மகர யாழின் இசையாகவும்,
குவளை மலர்களை இக்காட்சிகளை யெல்லாம் கண்டுகளிக்கின்ற பார்வையாளர்களாகவும்
சித்தரித்து மருத நிலத்தின் சிறப்பைக் கம்பன் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றான்.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில்சிந்திப்போம்
௦௩௧௧௨௦௨௪
03112024 ஞாயிறு
சர்புதீன் பீ