Thursday, 7 November 2024

திருமறை குரான் :5:87 08112024 வெள்ளி

 




திருமறை குரான்

:5:87
08112024 வெள்ளி
“நபிக்கையாளர்களே!! ஏக இறைவனாகிய அல்லாஹ் உங்களுக்க ஆகுமாக்கி)யுள்ள, (ஹலாலான)பரிசுத்தமான பொருட்களை (ஹராமானவையாக) விலக்கப்பட்டவையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்;. நிச்சயமாக இறைவன் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.”
திருமறையின் எந்தபகுதியில் வரும் வசனம் இது ?
விடை
: சூரா எண்:5 சூரத்துல் மாயிதா (உணவு)(அளவு மரவை)
வசனம்:-87
சரியான விடை
எழுதி வாழ்த்து பாராட்டுப்பெறுவோர்
சகோ
ஹசன் அலி ---முதல் சரியான விடை
பீர் ராஜா
ஷிரீன் fபாருக்
ஷர்மதா&
சிராஜூதீன்
விளக்கம்
தேவையற்ற உணவுக்கட்டுப்பாடு, உடலை வருத்திக்கொள்ளுதல்
துறவறம் போன்றவற்றிற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது
நபித் தோழர்கள் சிலர தொடர்ந்து இரவு முழுவதும் நின்று வணங்குவது
பகலில் நோன்பு வைப்பது என்று வீட்டை,குடும்பத்தை மறந்து திரிந்தார்கள்
அசைவ உணவைத் தவிர்த்தார்கள்
இது பிற மதத் துறவிகள் பலரின் பழக்கத்தைப் பின்பற்றுவதாக இருந்தது
குடும்பத்தை மறப்பது ஒரு வகையான வரம்பு மீறல்
குடும்பத்தினரின் உரிமையைப் பறிப்பது என இறைவன் சுட்டிக்காட்டுகிறான்
:தொடர்ந்து மூன்று இரவுகள் முழுதும் நீங்கள் தொழுதால் நாலாவது இரவு உங்கள் துணைவிக்கு உரியது என்பது நபி மொழி
(எனக்கு ஏனோ single child parents நினைவில் வருகிறார்கள்
இதுவும் single childகுழந்தையின் உரிமையைப் பறிக்கும் வரம்பு மீறலோ
எனத் தோன்றுகிறது )
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
08112024 வெள்ளி
5 ஜமாதுல் அவ்வல் (5) 1446
சர்புதீன் பீ

No comments:

Post a Comment