Saturday, 9 November 2024

தமிழ் (மொழி)அறிவோம் கோண் 10112024 ஞாயிறு

 






தமிழ் (மொழி)அறிவோம்

கோண்
10112024 ஞாயிறு
இரண்டு எழுத்தில் ஒரு சொல்
சிறிய சொல்லான இது மிக,மிக, மிகச் .....................சிறிய ஒன்றைக் குறிக்கிறது ---
பல கோடி பொருட்கலுக்கு ஒரு புள்ளி அளவு இடம் போதும் ---அவளவு சிறியது
முதல் எழுத்து வல்லின ஒகாரம் (நெடில்)
அடுத்தது மெல்லினம்
என்ன அந்தச் சொல்?
விடை
கோண்=அணுவை (Atom) நூறாகப் பிரித்தால் வரும் மிகமிகச் சிறிய பகுதி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப்பெறுவோர்
சகோ
கத்தீபு மாமூனா லெப்பை
முதல் சரியான விடை
கணேச சுப்ரமணியன்
விளக்கம்
முதலில் சகோ குணசேகரனுக்கு நன்றி
ரசிகமணி TKC யின் உரையை CBROA குழுவில் வெளியிட்டு
இந்தப்புதிய சொல்லை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு
மிக வியப்பான செய்தி –
தமிழுக்கு இந்த புதிய சொல்லை
அதுவும் அணு பற்றிய அறிவியல் சொல்லை அறிமுகம் செய்தது
கவிசக்ரவர்த்தி கம்பன்
‘ நீ சொல்லும் கடவுள் எங்கே இருக்கிறான்?'
என்று இரணியன் கேட்டதற்கு, பிரகலாதன் சொன்ன பதில் இது என்பதாக கம்பன் காட்டுவார் :
பாடல் :
சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சத கூறிட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந்நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை
காணுதி விரைவின்' என்றான்; 'நன்று' எனக் கனகன்
சொன்னான்.
அணுவினைச் சத கூறிட்ட
கோணினும் உளன்; சதம் =நூறு
மேலும் கம்பன் அணு ஆயுதத்தையும் அதன் விளைவையும் பற்றி பேசுகிறான்.
போர்க்களத்தில் இந்திரஜித் மடிந்து கிடக்கிறான். இதைக்கண்டு அவன் தாயார் மண்டோதரி கதறி அழுகிறாள்... அப்படி அழும்போது அவள் கூறுகிறாள்
“உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்து போலும் ...!”
'எங்கோ தூண்டிவிட ஒரு அணு வந்து வெடித்து நாசம் விளைவித்தது ...!'
என புலம்புகிறாள்
இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்
TKC யின் நீண்ட உரையை பின்பொருநாள் விளக்கமாகப் பார்ப்போம்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௧௦௧௧௨௦௨௪
10112024 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment