இதமான கோடை.நடுக்கும் குளிர்காலம்.இதுதான்
அன்றைய கோவை. நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதியான ஆர் எஸ் புரத்தில் மைதானத்தை
ஒட்டி அத்தாவுக்கு நகராட்சிக் குடியிருப்பு.வீட்டின் பின் தெருவில் பெண்கள் உயர்
நிலைப் பள்ளி.மைதானத்தை தா.ண்டினால்
ஆண்கள் உயர்நிலைப் பள்ளி.
பெண்கள் பள்ளியில் அக்காக்கள் மெகராஜ், ஜோதி
படித்தார்கள். ஆண்கள் பள்ளியில் நான் ஏழு /எட்டாம் வகுப்புப் படித்த நினைவு.. தம்பி சகாவும் தங்கை சுராஜும் ஆரம்பப்பள்ளியில்
படித்தார்கள்.
காரைக்குடியில் இருந்து கோவைக்கு மாறுதல்
காரைக்குடியில் கோடை மிதமான கோடை மட்டுமே பார்த்திருந்த எங்களுக்கு கோவையின் தட்ப
வெட்ப நிலையும் பருவ மாறுதல்களும் புதுமையாகத் தெரிந்தன. குளிர் காலம் முடியும்
நேரத்தில் செடிகள் புதிய இலைகளும் மொட்டுக்களும் விடுவது நல்ல வசந்தத்தை
நினைவூட்டும்..தேங்காய் எண்ணெய் உறையும் அளவுக்கு குளிர் காலம் அதுவும் தலை முடி
நன்கு வளர எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெயில் கஷ்மீர் குசும் சேர்த்து
வைத்திருப்பார்கள் ‘அந்த இளஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் உறைவது மிகவும் அழகாக
இருக்கும்
காரைக்குடியில் நகராட்சி ஆணையராக இருந்த
அத்தாவுக்கு கோவை பெரிய ஊர் என்பதால் அங்கு ஆணையரின் நேர் முக உதவியாளாராக பணி
மாறுதல் ...இது போன்ற பதவி,,பணி மாற்றங்களில் ஊதியத்தில் பெரிய மாற்றம் இருக்காது.
ஊதியம் அதிகமாகக்கூட இருக்கலாம். ஆனால் ஒரு அலுவலகத்தில் முதலாம் இடத்தில இருந்து
இன்னொரு பெரிய அலுவலகத்தில் இரண்டாம் இடத்தில் பணி புரிவது மனதளவில் ஒரு பெரிய சுமையாக இருக்கும்.
இதே கோவையில் பிற்காலத்தில் நான் வங்கியில் இரண்டாம் நிலை மேலாளராகப்
பணியாற்றியபோது இதை, இந்த வேறு பாட்டை , மனச்சுமையை நன்கு உணர முடிந்ததுகாரைக்குடியில் இருந்து
கோவைக்கு மாறுதல் காரைக்குடியில் கோடை மிதமான
கோடை மட்டுமே பார்த்திருந்த எங்களுக்கு
கோவையின் தட்ப வெட்ப நிலையும் பருவ மாறுதல்களும் புதுமையாகத் தெரிந்தன. குளிர்
காலம் முடியும் நேரத்தில் செடிகள் புதிய இலைகளும் மொட்டுக்களும் விடுவது நல்ல
வசந்தத்தை நினைவூட்டும்..தேங்காய் எண்ணெய் உறையும் அளவுக்கு குளிர் காலம் அதுவும்
தலை முடி நன்கு வளர எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெயில் கஷ்மீர் குசும் சேர்த்து
வைத்திருப்பார்கள் ‘அந்த இளஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் உறைவது மிகவும் அழகாக
இருக்கும்
காரைக்குடியில் நகராட்சி ஆணையராக இருந்த
அத்தாவுக்கு கோவை பெரிய ஊர் என்பதால் அங்கு ஆணையரின் நேர் முக உதவியாளாராக பணி
மாறுதல் ...இது போன்ற பதவி,,பணி மாற்றங்களில் ஊதியத்தில் பெரிய மாற்றம் இருக்காது.
ஊதியம் அதிகமாகக்கூட இருக்கலாம். ஆனால் ஒரு அலுவலகத்தில் முதலாம் இடத்தில இருந்து
இன்னொரு பெரிய அலுவலகத்தில் இரண்டாம் இடத்தில் பணி புரிவது மனதளவில் ஒரு பெரிய சுமையாக இருக்கும்.
இதே கோவையில் பிற்காலத்தில் நான் வங்கியில் இரண்டாம் நிலை மேலாளராகப்
பணியாற்றியபோது இதை, இந்த வேறு பாட்டை , மனச்சுமையை நன்கு உணர முடிந்தது.
கோவைக்கு வருமுன் அக்காக்கள் முத்து
,ஜென்னத்,மும்தாஜூக்குத் திருமணம் ஆகி விட்டது.
கோவையில் இருக்கும்போது அக்கா மெஹராஜுக்குத்
திருமணம் நடந்தது. திருமணப் பேச்சுக்களுக்காக பீ.மூ.மாமாவும் சுல்தான் மாமாவும்
எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். சுல்தான் மாமாவோடு நான் விடுமுறையைக் கழிக்க
திருநெல்வேலி சென்றேன்.. அங்கு விடுமுறை முழுதும் தங்கியிருந்து விட்டு மாமாவோடு
சேர்ந்து மெஹராஜ் அக்கா திருமணத்துக்கு
திருப்பத்தூர் வந்து விட்டேன்,
திருநெல்வேலியில் தங்கியிருந்த நாட்களில் மாமா ,
மாமி (சையது பாத்து அக்கா,),மாமா மக்கள் மைதீன் ரஷீதா எல்லோரும் அன்பைப் பொழிந்து
உபசரித்தார்கள். மாமா வீட்டுக்கு எதிரில் பள்ளிவாசல். அங்கு காலையில் ஒதப் போவேன்.
மாமா வேலை பார்த்த ஈனா கடைக்கு நானும் போவேன்..நகரின் முக்கியப் பகுதியான ரத
வீதியில் உள்ள அந்தக் கடையில் பொழுது நன்றாகக் கழியும்..அடிக்கடி மாமாவோடு
திரைப்படங்களுக்கும் செல்வேன்.
மெஹராஜ்அக்கா திருமணம் முடிந்த கையோடு அத்தாவுக்கு திருநெல்வேலிக்கே
ஆணையராக மாறுதலும் வந்து விட்டது..
அக்காமாரின் துணைவர்கள் –கரீம் அண்ணன்,
முத்தலீப் அண்ணன் ரஹீம் அண்ணன் மூவரும் என்னிடம் மிக அன்புடன் பழகுவார்கள்..சகா
சின்னப் பையன். எனவே நான்தான் அவர்களுக்கு வேண்டிய சேவைகளைச் செய்வேன்.
அவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொண்டேன்.(எங்கள் குடும்பத்தில் தடை செய்யப்பட்ட பல
சொற்களில் மச்சான் என்பதும் ஒன்று..எனவே மைத்துனர்களை அண்ணன் என்றே விளிப்போம்)
கரீம் முத்தலீப் அண்ணன்களுக்கு இலக்கியம் கலை
ஆர்வம் அதிகம்.ஆங்கில நூல்கள் குறிப்பாக துப்பறியும் புதினங்கள்—பெரி மேசன்-.நூல்களைப்
படிக்கத்தூண்டுதல் எனக்கு கரீம் அண்ணன்
மூலம் ஏற்பட்டது. பிறகு ஜேம்ஸ்பாண்ட்,ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், ஹெரால்ட்
ராபின்ஸ்,அலிஸ்டர் மக்லின் போன்ற பல எழுத்தாளர்களின் நூல்களையும் ஏர்போர்ட், மணி
சேஞ்சர்ஸ் ஹாஸ்பிடல்என்று பல நூல்களையும் படித்தேன்.
முத்தலீப் அண்ணன் ஒரு நல்ல கலைஞர், வாழ்வின்
ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவிப்பவர்.சுகவாசி. அத்தா, முத்தலிப் அண்ணன்
ஜென்னத்அக்கா ,தம்பி சகாவுடன் காரில் ஊட்டி போய் வந்தோம். அத்தா ரம்சான் நோன்பில்
இருந்ததாய் நினைவு..ஊட்டி ஏரியில் படகில் போகும்போது அண்ணன் படகோட்டியிடம்
துடுப்பைக் கொடுங்கள் நான் ஓட்டிப் பார்க்கிறேன் என்று கேட்க அவர் நீங்கள்
நினைப்பது போல் படகோட்டுவது எளிதல்ல என்று பணிவாக மறுத்து விட்டார். அண்ணன் கொண்டு
வந்த தலையில் தேய்க்கும் எண்ணெயின் ரோஜா மணம் இன்றும் பரவசமூட்டுகிறது
ரகீம் அண்ணன் ஒரு கலைக்களஞ்சியம்.அரசியல்.
பொருளாதாரம் குரான் ஹதீஸ் என்று எல்லாவற்றிலும் ஆழ்ந்த அறிவு.நல்ல்ல்ல
நினைவுத்திறன் ..மைத்துனர்களில் அவர் மட்டும்தான் முது நிலைப் பட்டதாரி. எனக்குத்
தெரியாத என் உறவினாகள் பற்றி அவர் முழு விபரமும் விரல் நுனியில் வைத்திருப்பார்-
அவர்கள் பிறந்த தேதி உட்பட. சற்று முரட்டுத்தனாமாகத் தோன்றினாலும் எனக்கு அவரை
மிகவும் பிடிக்கும்
தொடர்ந்து மூன்று அக்காக்கள் திருமணம், நூரக்கா
வெளியூரில் கல்லுரிப்படிப்பு இதற்கிடையில் மெகராஜ் அக்காவின் திருமணப்பேச்சு-அத்தாவைத்
தவிர வேறு யாரும் இப்படி ஒரு சூழ்நிலையை மனதிடத்துடன் எதிர்கொண்டிருப்பார்களா
என்பது ஒரு மிகப்பெரிய வினா.
வீட்டுக்கு எதிரில் உள்ள திடலில் ஒரு
பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்த மூதறிஞர் ராஜாஜியை நேரில் பார்த்தேன். முதுமையால்
நடக்க முடியாத . அவரை நாற்காலியோடு சேர்த்துத் தூக்கி மேடையில் வைத்தார்கள்..கோவை
நகராட்சியில் ஒரு விழாவுக்காக வந்த (உதவி) குதியரசுத்தலைவர் டாகடர் சார்வப்பள்ளி
ராதாகிருஷ்ணன் அவர்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
அலுவலக சைக்கிள் ஓன்று வீட்டில் இருந்தது. அதில்
நகரின் பல இடங்களுக்கும் சென்று வருவேன், அந்த வயதில் ,அப்போதிருந்த குறைந்த
போக்கு வரத்து நெரிசலில் தூரம் ஒரு பொருட்டாகவே தெரியாது..நூல் நிலையத்துக்கு
அடிக்கடி போவேன். விவசாயக் கல்லூரி அருகில் நூல் நிலையம் இருந்ததாய் நினைவு.
வீட்டைச் சுற்றி பெரிய தோட்டம் அதில் வான்கோழி
(சேவல் ஒன்று கோழி ஒன்று ) வளர்த்தோம். வேலியோரத்தில் நிறைய முட்டைகள் இட்டு
குஞ்சுகளும் பிறந்தன . ஆனால் ஓரிரு தினங்களில எல்லாக்குஞ்சுகளும் செல் பிடித்து
பரிதாபமாக இறந்து விட்டன
வீட்டுக்கு அருகில் மிகப்பெரிய அதி நவீன பால் பண்ணை
இருந்தது. அங்கு போய் அவ்வப்போது வீட்டுக்கு ஐஸ் கிரீம வாங்கி வருவேன். தெருவில்
ஸ்டேட் ஐஸ் என்று தள்ளு வண்டியில் விற்பார்கள் ஒரு அணாவில்(ஆறு பைசா ) இருந்து ஒரு
ரூபாய் வரை பல வகையான ஐஸ்கள் கிடைக்கும்
வீட்டின் முன் gate ஐ
இரவில் யார் பூட்டுவது என்பதில் எனக்கும் தங்கை சுராசுக்கும் எனக்கும் அடிக்கடி
சண்டை வரும்.
அத்தாவோடு வெள்ளிகிழமை கூட்டுதொழுகை(ஜும்மா)க்குப்
போகத் துவங்கியது கோவையில்தான்,
வீட்டிற்கு எதிர்த்தாற்போல் மைதானம் தாண்டி ஒரு
சிறப்பு உறைவிடப்பள்ளி (பார்வை அற்றவற்கு என நினைவு இருந்தது. தீப ஒளித்திருநாள்
இரவில் அந்தப்பள்ளியின் பெரிய மதில்ச்சுவர் முழுதும் அழகாக அகல் விளக்குகளை எரிய
விட்டது கண்கொள்ளாக் காட்சியாய் நினைவில் நிறைந்து. நிற்கிறது.
தொ;ழில் மேதை ஜி டி நாயுடுவின் அற்புதக்
கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் பொருட்காட்சி கோவையில் இருந்தது..
விருந்தினர்களை அங்கே அழைத்துச் செல்வோம்.பலமுறை முகம் மழிக்கக்கூடிய பிளேடு, ,தானியங்கி
புகைப்படக்கருவி, திறவுகோல்.இருந்தும் திறக்க முடியாத பேழை மூடியில் இருந்து
எடுத்து விட்டால் கைசூட்டில் விரிவடைந்து மூடிக்குள் நுழையாத உலோக உருளை எனப் பல
வியப்பூட்டும் பொருட்களைப் பார்க்கலாம். பெற்றோரைப்பற்றி சில விசித்திரமான
வாசகங்களும் ஆங்காங்கே காணலாம்.
கோவையில் பேருந்து சேவையை அறிமுகப்படுதியவர்
நாயடுதான்,.தன இல்லத்திருமண விருந்தில் இலையில் ஒரு துண்டு பப்பாளிப்பழம் மட்டும் முழு உணவாக் வைத்து
அசத்திய அதிசய மனிதர் அவர்.
அத்தாவின் நெருங்கிய நண்பர்கள் சிலர் பற்றி
குறிப்புகளோடு இந்தப் பகுதியை முடிக்க எண்ணுகிறேன், வேளாண் கல்லூரியில்
பேராசிரியராக இருந்த ஜனாப் வரிசை அஹமது அத்தாவின் மிக நெருங்கிய நண்பர்களில்
ஒருவர்..ஆராய்ச்சிப் படிப்புக்காக நீண்ட
விடுமுறையில் இருந்த அவர் ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தபோதும் பின்னர் படிப்பு
முடிந்து பதவியில் அமர்ந்து கல்லூரி வளாகத்தில் மிகப் பெரிய அரசு இல்லத்தில்
குடியேறிய பின்பும் எங்கள் குடும்பமும் அவர் குடும்பமும் அடிக்கடி சந்தித்துக்
கொள்ளும். அவர் மகன் என் வயதுடையவர் என நினைக்கிறேன். (ஐம்பது ஆண்டு இடைவெளிக்குப்
பிறகு ஜனாப் வரிசை அகமதின் வாரிசிற்கும் எங்கள் அக்கா பேத்திக்கும் திருமணப்
பேச்சு வார்த்தை நடந்தது.அது நிறைவுறவில்லை))
அடுத்தது ஜனாப் ஆதம் ஷா ஆசிரியர் பணிபுரிந்த
அவர் அத்தாவுக்கு
உறு துணையாய் இருந்தார்.
மூன்றாவது ஒரு நீதி அரசர் பெயர் நினைவில்லை.. அவரின் விசாலமான அரசு இல்லத்திற்கும் ஆடுதுறையில்
உள்ள அவர் சொந்த வீட்டிற்கும் சென்று வந்ததுண்டு..அவரது அரசு இல்லத்திற்கு எங்கள்
அக்கா மகன் ஒரு முறை எங்களுடன்
வந்திருந்தார்.பள்ளிக்குச் செல்லா இளஞ்சிறுவனாய் இருந்த அவர் அங்கு எல்லோருக்கும்
கொடுத்த பானம் சிவப்பு நிறமாகவும் அவருக்குக் கொடுத்தது மட்டும் நீர் நிறமாகவும்
இருந்ததனால் ஐயமுற்று பானத்தில் விரலை விட்டு நாக்கில் வைத்து சோதித்தது ஒரு நகைச்சவை
நினவு..
சென்ற பகுதியைப்பற்றி கருத்துக்கள் கூறிய இதயத்துல்லாவுக்கும்
அக்காமார் ஜோதி மெகராஜுக்கும் மகள் பாப்டிக்கும் நன்றி. தங்கை சுராஜ் போந்தாக்கோழி
என்றால் என்ன என்று பலருக்கும் தெரியாது என்றார். நானும் கோழி படம் இணய தளத்தில்
தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
அந்தப்பகுதியில் நான் கேட்ட இரு சிறிய
வினாக்களுக்கு விடை :
வாட்சப் தமிழில் கட்செவி அஞ்சல் (முனைவர்
ஞானசம்பந்தம் தினமணியில் எழதியது..)
மெய்ப்புல அறைகூவலர் சென்னை விமான நிலையத்தில் உடல் ஊனமுற்றோருக்காண
கழிப்பறையில் கண்ட அறிவிப்பு. Physically challenged என்பதன் நேரடி மொழி பெயர்ப்பு.(பெயர்த்து உடைத்தது போல் உள்ளது)
இந்தப்பகுதியிலும் ஒரு சிறிய வினா –ஐயம் , மரம்
செடி கொடி எதுவுமில்லாத பாலைவன நாடுகளில்
வசிக்கும் லட்சக் கணக்கான மக்களுக்கு ஆக்சிஜன் போதுமான அளவுக்கு எப்படிக்
கிடைக்கிறது ? இதற்கு விடை எனக்கும் தெரியாது. தெரிந்த அறிஞர் பெருமக்கள் விடை அளிக்கவும்
பயணம் தொடரும்
No comments:
Post a Comment