Friday 20 May 2016

இசுலாமும் யோகக்கலையும்
இசுலாமிய இறைவணக்கம் –         யோகாசனங்கள் ஒரு ஒப்பு நோக்கு

பகுதி 3(நிறைவுப் பகுதி)

சென்ற பகுதியில் யோகாவின் பெரிய சிறிய பிரிவுகளுக்கும் இசுலாமிய நெறிகளுக்கும் உள்ள ஒப்பிடுகை பற்றிப் பார்த்தோம்..இந்தப்பகுத்யில் அதன் தொடர்ச்சியும், பின் யோகாசனங்களுக்கும் இசுலாமிய இறைவணக்கத்திற்கும் உள்ள ஒற்றுமை பற்றியும் பார்ப்போம்

ஈசுவர பிரநிதகன் –எப்போதும் இறை நினைப்பில் இருத்தல்.
இறைவனின் நினைப்பில் வாழாதவர்கள் இறந்தவர்களுக்கு சமம் என்பது நபி மொழி/
“என்னை நினைப்பவர்களை நான் நினைக்கிறேன் “ என்று இறைவன் திருமறையில் கூறுகிறான் .மேலும்”காலையிலும் மாலையிலும் இறைவனை நினைவு கூர்வீராக! உம மனதிற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மேலும் மெதுவான குரலிலும் “ என்று இறைவன் சொல்கிறான்,
ஒரு நல்ல முசுலிம் வாழ்வின் எந்தத் தருணத்திலும் இறைவன் நினைப்பை விட்டு அகல்வதில்லை காலை எழுந்தவுடன்,, காலைகட்ன்களை முடிக்கு முன் உடல் சுத்தி செய்யும்போது . உண்ணும்போது பருகும்போது எந்த ஒரு செயலையும் தொடங்குமுன் ,அந்த செயல் முடிந்தவுடன் பயணிக்கும்போது பயணம் முடிந்தவுடன் வீட்டுக்குள் நுழையும்போது வெளியே செல்லும்போது இல்லறத்தில் ஈடு படுமுன் முடிந்தவுடன் அமரும்போது எழும்போது என்று ஒவ்வொரு வினாடியும் மனதாலும் நாவாலும் இறைவனைத் துதி செய்து நன்றி செலுத்தவேண்டும்.
திக்ரு எனப்படும் இறைதியானத்தில் ஈடுபடுபவர்கள் மணிக்கணக்கில் இறைவனை நாவாலும் மனதாலும் நினைவு கூர்ந்து அமர்ந்திருப்பார்..
இசுலாமிய இறைவணக்கம் படைத்தவனாகிய ஏக இறைவனுக்கும் படைப்பாகிய மனிதனுக்கும் இடையில் ஒரு நேரடி உரையாடலாக அமைகிறது..இறைவன் தன்னைப் பார்ப்பதாகவும் தான் இறைவனைப் பார்ப்பதாகவும் உணர்ந்த நிலையில்தான் இறைவணக்கம் முழுமை பெறுகிறது,
ஆசனங்கள். பிரணாயாமம் தாரணா  தியானம் இவை  ஒன்று சேர்ந்ததுதான் இசுலாமிய இறைவணக்கம்,.iஇதன் இறுதி நோக்கம் சமாதி  இது பற்றி   விரிவாகப்பார்ப்பதற்கு முன்
புலன்களைக்கட்டுப்படுதும் பயிற்சியான   பிரத்தியாகாரா பற்றி இசுலாத்தின் விளக்கத்தைப் பார்ப்போம்,.
இசுலாத்தின் கட்டாயக்கடமைகளாகிய தொழுகை. நோன்பு ,,சக்காத்து எனப்படும் கட்டாய தர்மம், புனித ஹஜ்ஜுப்பயணம் போன்றவை மிகச்சிறந்த புலனடக்கப்பயிற்சியாக அமைகின்றன.
தொழுகையில் கண்கள் காதுகள்  திறந்திருக்கும்.ஆனால் எதையும் பார்க்காமல் கேட்காமல் உருவமற்ற ஏக இறைவனை மட்டும் நினைந்து அவனைப் பார்ப்பதாகவும் அவனோடு உரையாடுவதாகவும் உணரும்போது தான் தொழுகை முழுமை அடைகிறது.
நோன்பு:- பசியிருக்கும், தாகமிருக்கும்; சுவையான உணவும் வகைவகையான பானங்களும் இருக்கும் ஆனால் நோன்புக்காலத்தில் சாப்பிடக்கூடாது, பானங்கள் என்ன தண்ணீர் கூடப் பருகக்கூடது.,வாய்ப்பிருந்தும் இல்லறத்தை அனுபவிக்க முடியாது..அதற்கெல்லாம் மேல் எண்ணங்களும் பேச்சுக்களும் தூய்மையாகவும் பொய்க் கலப்பில்லாமலும் இருக்க வேண்டும்.
சக்காத்து என்பது செலவுகள், கடன்கள் போக மிச்சமிருக்கும் செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை கட்டாயமாக தருமம் செய்தல். சொல்ல மிக எளிது. ஆனால் செயல்படுத்த அவ்வளவு எளிதல்ல. நான் உழைத்து சம்பாதித்ததை பிறருக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து இறையச்சத்துடன் சக்காத்துக்குள்ள முழுத்தொகையை தருமம் செய்ய மிக உறுதியான புலனடக்கம் தேவை/
புனித ஹஜ்ஜுப்பயணத்தின் பொது ஆண்கள் இஹ்ராம் எனும் ஒரு சிறப்பு உடை அணிகிறார்கள். கிட்டத்தட்ட சவத்திற்கு போடும் உடை போல் உள்ள; இந்த உடையை அணிந்தவுடன் ஆணவம், அகந்தை எல்லாம் அழிந்து மரணத்தை எதிர் நோக்கும ஒரு மன நிலை வந்து விடும் . இந்த உடையுடன் காலில் ரப்பர் செருப்பு அணிந்து ஒரு இறை அன்பைத்தேடி அலையும் யாசகன் தோற்றத்தில் பன்னாட்டு விமான சேவையில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.    II
     
இசுலாமிய இறைவணக்கம் –         யோகாசனங்கள் ஒரு ஒப்பு நோக்கு
இப்போது இந்த நூலின் தலைமைக் கருத்துக்கு வருவோம் . இசுலாத்தின் ஐந்து கடமைகளில் மற்ற நான்கிற்கும் இல்லாத சிறப்புகள் தொழுகை எனப்படும் இறை வணக்கத்திற்கு உண்டு
ஈமான் எனப்ப்படும் உறுதி வாழ்வில் ஒரு முறை மேற்கொண்டால் போதும்.
நோன்பு ஆண்டிற்கு ஒரு முறை முப்பது நாட்கள் மேற்கொள்ளப்படுவது.
சக்காத்து வசதி படைத்தவர்கள் நோன்பு மாதத்தில் கொடுப்பது.
புனித ஹஜ் பயணம் வசதி படைத்தவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மேற்கொண்டால் நிறைவு பெற்று விடுகிறது.
ஆனால் தொழுகை மட்டும் ஏழு வயது முதல் ஆயுள் உள்ளவறை தினமும் ஐந்து வேளை ஏழை பணக்காரர் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் கட்டாயக்கடமையாக்கப்பட்டுள்ளது..
தொழுகையின் சிறப்புக் கருதி ஏக இறைவன் முகமது நபி(சல) அவர்களை நேரில் அழைத்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
யோகாசனம, பிரணாயமம் தாரணா தியானம், சமாதி இவற்றை உள்ளடக்கியது தொழுகை என்று ஏற்கனவே பார்த்தோம்.
தனிமையில் கண்களை மூடி அமர்ந்து மூச்சைக் கட்டுப்படுத்தி மனதாலும் நாவாலும் இறைவன் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் திக்ரு எனப்படும் இசுலாமிய தியானம் பிராணயாம தாரண தியான நிலைகளை உள்ளடக்கி தன்னை அறிந்து இறைவனை அறியும் சமாதி நிலைக்கு மிகச் சிறப்பாக வழி வகுக்கிறது.. இதன் வழி வகைகள் பற்றியும் நெறி முறைகள் பற்றியும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மேலும் இந்த முறைக்கு கடும் பயிற்சி தேவை.. எனவே அது பற்றி இத்துடன் நிறுத்தி விட்டு எல்லோரும் எளிதில் கடைபிடிக்கக்கூடிய தொழுகை முறை பற்றிப் பார்ப்போம்,
தொழுவதற்கு உடல் சுத்தம் உடை சுத்தம் இடம் சுத்தம் அவசியம்.. உடலுறவு கொண்டவர்களும் மாத விலக்கனவர்களும் குளித்து சுத்தம் ஆன பிறகே தொழ முடியும்.
இது போக ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் உளு எனப்படும் உடல் சுத்தி செய்வது அவசியம்.. இந்த உளு உடல் நலத்திற்கு ஒரு அடிப்படைப் பயிற்சியாய் அமைகிறது..எனவே இது பற்றி சிறிது விரிவாகப் பார்ப்போம். இசுலாத்தில் பரிசுத்தம் எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.. மலசலம், சிறுநீர் கழித்தவர்கள் அந்த உறுப்புகளை முழுமையாக சுத்தம் செய்யாமல் தொழுக முடியாது..கழிவுகள ஏதேனும் உடலிலோ ஆடையிலோ சிறிதளவு பட்டிருந்தாலும் சுத்தம் செய்வது அவசியம்.,.
உளு செய்யும் முறை
இறைவனின் திருப்பெயரை நினைந்து ஆரம்பம் செய்து.முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் மணிக்கட்டு வரை விரல்களுக்கிடையில் தண்ணீர் படும்படி கழுவவேண்டும்(மூன்று முறை)
அடுத்து வலது கை நிறைய தண்ணீர் எடுத்து வாயில்விட்டு நன்றாகக் கொப்பளிக்க வேண்டும் (மூன்று முறை)
அடுத்து நாசிகளின் உள்ளே நீர் செலுத்தி, மூக்கு நுனியைக் கழுவ வேண்டும் (மூன்று. முறை)
முகத்தை வலது காது முதல் இடது காது வரை, நெற்றியிலிருந்து தொண்டை வரை நன்றாக  தாடியின்  முடியும் நனையுமாறு) மூன்று முறைகழுவவேண்டும்
முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரை நன்றாக மூண்று முறை கழுவ வேண்டும்.
கைகளை நனைத்து நெற்றியில் தொடங்கி பிடரி வரை தடவ வேண்டும்..
இரு காதுகளின் உள்புறமும் வெளிப்புறமும் காதுகளின் பின்புறமும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
இறுதியாக இரண்டு பாதங்களையும் கணுக்கால் வரை ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விரல் இடை வெளியும் நனையுமாறு கழுவ வேண்டும்.
உளுவின் பயன்கள்:
ஒரு சிறிய குளியல் போலிருக்கும் உளு பல நோய்களைத்தடுத்து உடல் நலத்தை காக்கிறது.
பொதுவாக காதின் பின்புறம் யாரும் சுத்தம் செய்வதில்லை. உளுவில் அது வலியுறுத்தப்படுகிறது.
கை கழுவது, வாய் கொப்பளிப்பது முகம் கழுவது போன்றவை ஒரு நாளில் ஐந்து முறை செய்யும்போது சர்க்கரை நோய் கூடக் கட்டுப்படுவதாகச சொல்லப்படுகிறது.
மூக்கு நுனியையும் நாசித் துவாரங்களையும் கழுவது பறவைக் காய்ச்சல் போன்ற கடும் தொற்று நோய்களைத் தடுக்கிறது..
கை கால் விரல்கள், காதுகள் தேய்த்துக்  கழுவப்பபடும்ப்போது நிறைய அகுபஞ்சர் புள்ளிகள் அழுத்தப்பட்டு நலம்காக்கிறது.
யோகாசனம் பிரணாயாமம் தாரணா, தியானம், சமாதி நிலைகளை உள்ளடக்கிய இசுலாமியத் தொழுகை பற்றி இனி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒரு நாளைக்கு ஐந்து வேலை தொழுகை நிறைவேற்றப்படுகிறது.. அவை பஜ்ர் (விடியல்), லொகர் (மதியம்), அசர் (மாலை) ,மக்ரிப் (அந்தி),இஷா (இரவு) என சூரிய உதயம் மறையும் நேரங்களுக்கேற்ப அமைகிறது. இது போக நிறைய சிறப்புத்தொழுகைகள் உண்டு
உலகெங்கும் தொழுகை அரபு மொழியில் மட்டுமே நடத்தப்படுகிறது. உலக முசுலிம்கள் அனைவரும் புனித நகரான மக்காவில் அமைந்துள்ள காபா எனும் ஏக இறைவனுக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயத்தின் திசையில் நின்று ஏக இறைவனை வழிபடுகிறார்கள் (இந்தியாவில் இது மேற்கு நோக்கி அமைந்துள்ளது)  இவை இரண்டும் நாடு என்ற நிலை கடந்து  உலகளாவிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்(universal Brotherhood) பறை சாற்றுகின்றன,.
சலாத் என்பது தொழுகையைக்குறிக்கும் அரபுச் சொல்லாகும்.. இந்தச்சொல்லுக்கு மூலப்பொருள் முதுகை வளைத்தல் என்பது.,இதுவே பாரசீக மொழியில் குனிவது என்ற பொருள்படும் நமாசு என்ற . தொழுகையைக்குறிக்கும் சொல்லாக உருமாறி வடமொழியில் நமசுதே  (நமஸ்தே) என்று மாறியதாகக் குறிப்பிடுகிறார் இந்திய இசுலாமிய அறிஞரான அசுரப் ப நிசாமி –நூல் இசுலாத்தின் யோகா()
யோகாசனத்தின் பல நிலைகளை நிற்கும் நிலை , தலைகீழ் நிலை , இருக்கும் நிலை, முதுகுத்தண்டை இழுத்தல்,, முதுகுத்தண்டை முறுக்குதல் என்ற அடிப்படையில் பகுக்கலாம்..
இந்த நிலைகளை எல்லாம் அடிப்படை நிலையில் எளிய சுருக்கமான முறையில் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் தொழுகை தன்னுள் கொண்டுள்ளது.
நிற்கும் நிலைதான் ஆசனங்களின் ஆரம்ப நிலையாகும். .தடாசனா எனப்படும் மலை ஆசனம் தொழுகையின் முதல் நிலையான நிற்கும் நிலையை ஒத்திருக்கிறது பாதங்கள் பூமியில் உறுதியாகப் பதிந்த நிலையில் தலை வானத்தை நோக்கிய நிலையில் அசையாமல் நிற்பது உடல் ,கால்கள் பாதம் முதுகுத்தண்டு அனைவற்றிற்கும் ஒரு நல்ல பயிற்சியாக அமைகிறது.
முதுகுத்தண்டை இழுத்தல்:.முதுகுத் தண்டு இளக்கமாக இருத்தல் உடல் நலத்துக்கும் இளமைக்கும் இன்றியமையாதது என்பது யோகிகளின் கருத்து// எனவே யோகாசனக்கலையில் முதுகை நன்றாக வளைத்து தலையை முட்டிகளுக்கு இடையில் கொண்டு வருவது ஒரு முக்கியப் பயிற்சியாக இருக்கிறது.. உடலின் எல்லா நரம்புகளும் முதுகுத்தண்டு வழியாகவே செல்கின்றன,
தொழுகையின் ஒரு நிலையான ருகுவில் இந்த நிலை மிக எளிதாக அடையப்பெருகிறது.. ருக்கு நிலையில் முதுகை வளைத்து கைகள் விரல்களை விரித்த நிலையில்  முழங்காலகளை இறுகப்பற்றி நிற்க வேண்டும்.. கைகள் கால்கள் வளையாமல் , முதுகு தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இது போல் ஒரு நாளை குறைந்தது பதினேழு முறை வளைக்கப்படுகிறது.. எனவே இது முதுகுத்தண்டுக்கு மிகச்சிறந்த எளிதான பயிற்சி ஆகிறது.
தலைகீழ் நிலைகள்  உடலெங்கும குருதியைப் பாய்ச்சும் வேலையை இதயம் மிக நளினமாகச் செய்கிறது. ஆனால் புவிஈர்-ப்பு விசையை எதிர்த்து தலைக்கு- மூளைக்கு – குருதி பாய்வதும் கால்களில் இருந்து இதயத்திற்கு குருதி பாய்வதும் இதயத்தின் வேலைப்பளுவை அதிகரிப்பதாக உள்ளது..இந்த வேலைப்பளுவைக் குறைக்க தலை கீழ் ஆசனங்கள் பெரிதும் உதவுகின்றன..
இதன் காரணமாகவே தலைகீழ் ஆசனங்களான சிரசாசனமும் சர்வாங்க ஆசனமும் ஆசனங்களின் தலைமை ஆசனங்களாகப் போற்றப்படுகின்றன.. இந்த இரு ஆசனங்களிலும் தலை இதயத்திற்கு கீழே கொண்டு செல்லப்படுகிறது..
 தொழுகையின் சுஜுத் என்னும் நிலையில்  இது மிக எளிதான முறையில் எல்லோரும் செய்யும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இது பற்றி இசுலமியாய அறிஞர் அசுரபு நிசாமி “ அர்த்த சிரசாசனத்தை ஒத்திருக்கும் இந்த (சுஜுத்) நிலையில் மூளைக்கும் உடலின் மேல் பகுதிக்கும் கண் காது மூக்கு நுரையீரலுக்கும் முழு அளவில் குருதி பாய்கிறது “ என்று குறிப்பிடுகிறார்,
சுஜுத் நிலையில் உள்ளனங்கைகள் தரையில் காதுகளுக்கு கீழ் அமைகின்றன...நெற்றி.,இரு உள்ளங்கைகள் ((விரிக்காத நிலையில் விரல்கள் நீட்டப்பட்டு) இரு முழங்கால்கள் ,இரு கால்களின் விரல்களின் அடிப்பகுதி ஆகியவை தரையைததொட வேண்டும். இது பாலாசனத்தை நினைவு படுத்துகிறது  ஒரு நாளில் குறைத்து முப்பத்தி நான்கு முறை சுஜுத் செய்யப்படுகிறது/
ருக்கு பதினேழு சுஜுத் முப்பத்திநான்கு என்பது ஒரு நாள் தொழுகையில் செய்யவேண்டிய மிகக் குறைந்த அளவாகும்.. வழக்கமாகத் தொழுபவர்கள் சாதாரணமாக ருக்கு நாற்பது முறையும் சுஜுத் எண்பது முறையும் செய்வார்கள் .இன்னும் சற்று அதிகமாகத் தொழுகையில் ஈடு படுபவர்கள் ஒரு நாளில் எழுபது முறைக்குமேல் ருக்குவும் அதற்கு இரட்டிப்பாக சுஜுதும் செய்வர். 
(சிரசாசனத்திலும் சர்வாங்க ஆசனத்திலும் வழக்கத்தை  ஏழு பங்கு குருதி அதிகமாக மூளைக்குப் பாய்கிறது; எனவே இவ்விரு ஆசனம்களும் எந்த வயதினருக்கும் ஏற்றது அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதாக அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள புகழ் பெற்ற இதய நோய் நிபுணர் சொன்னார். சுஜுது நிலையில் இவ்வளவு அதிகமான குருதி பாயாமல், தேவையான அளவே பாய்கிறது)
இருப்பு நிலை ஆசனங்கள்  யோகாசனத்தின் இறுதி இலக்கு எளிதாக அமர்ந்து தியானத்தில் ஈடு படுவதாகும். ஸ்திரம் சுகம் ஆசனம் என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்..எனவே தியானத்தில் அமரும் இருப்பு நிலை ஆசனங்கள் மிக முக்கியமானவையாகும்.. தியான நிலை ஆசனமான வச்சிராசனம் தொழுகையின் இருப்பு நிலையை மிகவும் ஒத்திருக்கிறது என்று சித்தானந்த சுவாமிகள் யோகா ஆசனா என்ற நூலில் கருது தெரிவித்து இருக்கிறார்கள். இதே கருத்தை நிசாமியும் தெரிவித்துள்ளார்., மேலும் கால்களை மடக்கி தரையில் நீண்ட நேரம் அமர்வதால் தொழுபவர்களுக்கு பத்மாசனம் மிக எளிதாக வரும்..
தொழுகையின் இருப்பு நிலையில் ஆட்காட்டி விரலை நீட்டுவது யோகா முத்திரையை ஒத்திருக்கிறது
முதுகுத்தண்டை முறுக்கும் ஆசனங்கள் யோகாசனங்கள் முடிந்து ஓய்வு நிலைக்குப்போகுமுன் முதுகுத்தண்டை இரு பக்கமும் வளைத்து சமநிலைப்படுத்தும் அர்த்த மட்சியேந்திர ஆசனம் செய்வது உண்டு. இதர் போல் தொழுகையின் இறுதியில் கழுத்தை இரு பக்கமும் திருப்பப்ட்டு சலாம் கொடுக்கப்படுகிறது. . அர்த்த மட்சியேந்திர ஆசனம் அளவுக்கு இல்லாவிட்டாலும் மிக எளிதான இந்த சலாம் கழுத்து இறுக்கத்தைப் போக்க பெரிதும் உதவுகிறது
இப்படி படிப்படியாக விவரிக்கப்பட்ட தொழுகை தொடர்ந்து ஒவ்வொரு நிலையாக மாறிச் செய்யும்போது அங்க அவயங்கள் அனைத்துக்கும் ஒரு நல்ல உடல் பயிற்சியாய் அமைகிறது.
முன்பே குறிப்பிட்டது போல் தொழுகையில் ஒரு மன உறுதிப்பாடோடு கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி செய்யும்போது தொழுகை ஒரு நல்ல மனப்பயிற்சி ஆகிறது.
தொழுகையில் ஓதப்படும் வேத வசனங்கள், ஏக இறைவனைப் பார்ப்பது போல் உணர்தல் இவை ஒரு சிறந்த ஆன்மீகப் பயிற்சியைக் கொடுக்கிறது .
பள்ளிவாசலில் போய்த் தொழுவது வலியுறுத்திதிச் சொல்லப்படுகிறது..பள்ளி வாசலில் தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கை கொடுத்து நலம் விசாரிப்பதுண்டு . இது மனித நேயச் செயலாகவும் நல்ல சமூக நலம்  பயப்பதாகவும் அமைந்துள்ளது.
தொழுகையில் ஓதப்படும் வேத வசனங்கள், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது ஏற்படும் இயல்பான சுவாச மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து தொழுகையை தியானத்துடனும் மூச்சுப்பயிற்சியிடனும் ஒப்பிட வைக்கிறது. .
மொத்தத்தில், தொழுகை முறை   முழுமையான ஒரு நலன்காக்கும் பயிற்சியாய் அமைகின்றனது  இதை முறைப்படி  கடைப்பிடித்தால் மனித வாழ்வில் நிம்மதியும் உடல் நலமும் மன நலமும் ஆன்மீக நலமும் சமூக நலமும் பெற்று இன்ப வாழ்வு வாழலாம்.
 
ஐ.நா. சபையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் நல வாழ்வு பற்றித் தரும் வறையரை:” சுகவீனமோ ஊனமோஇல்லாமல் இருப்பது மட்டும் நல வாழ்வு அல்ல;முழுமையான உடல் நலம், மன நலம் , சமூக நலம் ,ஆன்மீக நலம் ஒருங்கினைந்ததே முழுமை பெற்ற நல வாழ்வு “                
 .    .   ,
ஆசனங்களுக்கு ஒப்பான தொழுகை நிலைகள்
   http://www.alsunna.org/salat/PrayerBook01p25.gif1http://www.alsunna.org/salat/PrayerBook02p25.gif2http://www.alsunna.org/salat/PrayerBook03ap28.gif3          http://www.alsunna.org/salat/PrayerBook05ap29.gif  4                      5http://www.alsunna.org/salat/PrayerBook05bp30.gif
6http://www.alsunna.org/salat/PrayerBook05bp30.gif        7http://www.alsunna.org/salat/PrayerBook06p31.gif 8http://www.alsunna.org/salat/PrayerBook06ap31.gifhttp://www.alsunna.org/salat/PrayerBook07.gifhttp://www.alsunna.org/salat/PrayerBook08ap33.gifhttp://www.alsunna.org/salat/PrayerBook10ap35.gifhttp://www.alsunna.org/salat/PrayerBook10bp35.gif
                  9                                            10                                            11                                            12
முதல் இரண்டு படங்களும் தொழுகையின் ஆரம்ப நிலையாகும்.இவை ஆசனத்தின் நிற்கும் நிலையான தடாசனாவை ஒத்திருக்கின்றன                                                                                                     மூன்றாம் படம் ருக்கு நிலை முதுகுத்தண்டை இழுக்கும் ஆசனங்களை போலிருக்கிறது நான்கு ஐந்து ஆறாம் படங்கள் சஜ்தா நிலை அர்த்த சிரசானம் பாலாசனம் போல் அமைந்துள்ளது                                                                                                                                                                                         ஏழு எட்டு ஒன்பதாம் படங்கள் இருப்பு நிலை- வச்சிராசனம் போல் தோன்றுகிறது                       பத்தாம் படம் ஆள் காட்டி விரலை நீட்டுதல்-யோக முத்திரையை நினைவூட்டுகிறது
கடைசி இரண்டு படங்களும் தலையை வலது பக்கமும் பின் இடது பக்கமும் திருப்பி சலாம் கொடுக்கும் நிலை –முதுகுத் தண்டைமுறுக்கும் ஆசனங்களை (அர்த்த மட்சியேந்திர ஆசனம்) ஒத்து அமைந்துள்ளது

1தொழுகை நிலைகளுக்கு ஒப்பான யோகாசனங்கள்    
12                  345                                     6
7                                                                                                              8
1.தடாசனா ௨அர்த்த சிரசாசனா
3..பத்மாசனா 4.வச்சிராசனா
5..சிரசாசனா 6.சர்வாங்காசனா
7.பாலாசனா 8. அர்த்த மட்சியேந்திர ஆசனம்
தொழுகை நிலைகளும் யோகாசனங்களும்                          http://www.alsunna.org/salat/PrayerBook02p25.gif      நிற்கும் நிலை -தடாசனா                          http://www.alsunna.org/salat/PrayerBook05ap29.gif சுஜுது நிலை =அர்த்த சிரசாசனா ,பாலாசனhttp://www.alsunna.org/salat/PrayerBook06p31.gifஇருப்பு நிலை –வச்சிராசனா , பத்மாசனா





http://www.alsunna.org/salat/PrayerBook08ap33.gif   விரலை நீட்டுதல்\யோக முத்திரை


 http://www.alsunna.org/salat/PrayerBook10ap35.gifhttp://www.alsunna.org/salat/PrayerBook10bp35.gif             V     கழுத்தைத் திருப்புதல் அர்த்த மட்சியேந்திர ஆசனம்)
                                                        நிறைவுற்றது

பின் குறிப்பு
எல்லோரும் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மிகச் சுருக்கமாக எழுதி முடித்தேன், இன்னும் மிக விரிவாக எழுதலாம். ஆனால் யாரும் படிப்பார்களா என்பது பெரிய வினாவாக இருக்கிறது.
இறையருளால் விரைவில் வாழ்க்கைப்பயணத்தில் சந்திப்போம்

வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில் போய் (Google search)
Sherfuddinp.blogspot.com
என்று தட்டச்சுச் செய்யவும்

               


Monday 9 May 2016

இசுலாமும் யோகக்கலையும் இசுலாமிய இறைவணக்கம் – யோகாசனங்கள் ஒரு ஒப்பு நோக்கு பகுதி 2



சென்ற பகுதியில் யோகா, இசுலாம் பற்றிய தவறான புரிதல்கள்,அவற்றின் தெளிவுகள், யோகாவின் பெரிய,சிறிய பிரிவுகள்,இசுலாத்தின் அடிப்படை இவை பற்றிப் பார்த்தோம்/...
இனி
யோகாவும் இசுலாமும் – ஒரு ஒப்பிடுகை   
யோகக்கலையின் பிரிவுகளான யமம் நியமம் அவற்றின் உட்பிரிவுகள் இவற்றிற்கும் இசுலாமிய நெறிகளுக்கும் உள்ள சில ஒற்றுமைகளைப் பார்ப்போம்
மிகத்தெளிவாக ஒன்றை நான் வலியுறுத்திச்சொல்கிறேன் ஒன்றை உயர்த்தி மற்றதை தாழ்த்துவது என் நோக்கம் அல்ல.
பிறப்பாலும் வளர்ப்பாலும் வாழ்க்கை நெறியாலும் நான் ஒரு இசுலாமியன். எனக்குத்தெரிந்த மட்டில் இசுலாமியக் கோட்பாடுகள் அனைத்தையும் தவறாமல் கடைப்பிடித்து வருபவன்.
பணிமூப்பிற்குப் பிறகு யோகாவில் முதுநிலைபட்டம் பெற்றவன்.. அதற்கான ஆய்வுக்கட்டுரைக்கு நான் எடுத்த தலைப்பு இசுலாமும் யோகக்கலையும். அதற்காக வலை தளங்களிலும் நூல்களிலும் தகவல்களைத் தேடியபோது நான் கற்ற சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
முன்பே குறிப்பிட்டது போல் சமூக ஒழுக்கங்கள் பற்றி பேசும் யமம் ஐந்து பிரிவுகளைக்கொண்டது.
அவை அகிம்சை சத்யம் அட்டயா பிரமசசாரியம் அபாரிக்ரகம்
இவற்றிற்கும் இசுலாமுக்கும் உள்ள சில ஒருமைப்படுகளை சுருக்கமாகப் பார்ப்போம். 

அகிம்சை
அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றும் . உண்மையில் அமாவாசைக்கும் இசுலாதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு . இசுலாமிய நாள் மாதம் எல்லாம் நிலவின் தோற்றம் மறைவு வளர்பிறை தேய் பிறை இவற்றின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகின்றன. இப்படி அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல் இசுலாத்துக்கும் அகிம்சைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
நீதியின் அடிப்படையில் அன்றி உயிர்களைக் கொல்வதை இசுலாம் அனுமதிக்கவில்லை. தவறாக ஒருவர் கொல்லப்பட்டால் அவரின் வாரிசுகளுக்கு தவறு இழைத்தவரைக் கொல்லவோ அல்லது தகுந்த இழப்பீடு பெறவோ சட்டம் அனுமதிக்கிறது..
ஒரு பூனையை உணவின்றி சில நாட்கள் அடைத்து வைத்திருந்த பெண்ணுக்கு நரகம் கிடைக்கும் என்று நபிகள்(சல்) சபித்திருக்கிறார்கள்..
இசுலாமிய பயங்கரவாதம் என்பதே ஒரு முரண்தொகையாகும். உண்மையான இசுலாமுக்கும் பயங்கர வாதத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. பயங்கரவாதியாக இருப்பவர் உண்மையான முசுலிம் அல்ல,
சத்தியம் (வாய்மை)
வேடிக்கையாகவோ நகைச்சுவைக்காகவோ பொய் சொல்வதைக்கூட இசுலாம் அனுமதிக்கவில்லை.
“வாய்மையளார்களுக்கு வாய்மைகுறிய பரிசை ஏக இறைவன் வழங்குவான்” என்கிறது புனித குரான்
வணிகப்போருட்களில் உள்ள குறைகளை மறைக்காமல்  தெளிவு படுத்தி விற்பவரை இறைவன் ஆசிர்வதிக்கிறான் ;குறைகளை மறைத்து பொய் சொல்லி விற்பவரை இறைவன் சபிக்கிறான் என்பது நபி மொழி.  
அட்டாயா (களவு தவிர்த்தல் )  .
 களவு என்பதை  ஒரு சமுதாயச சீர்கேடாக இசுலாம் பாவிக்கிறது.. .தண்டிக்காமல் விட்டால் பரவி சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு தீய சக்தி களவு. அதனால்தான் களவுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்கள் தவறு செய்யப் பயப்படும் அளவுக்கு கடும் தண்டனையாக ஒரு அளவுக்கு கையை வெட்டுதல் என்று விதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏழை, பணம் படைத்தவர், வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.
களவில் ஈடுபட்டது என் அருமை மகள் என்றால் கூட அதே தண்டனைதான் என்று நபிகள் நாயகம்  (சல்) சொல்லியிருக்கிறார்கள்     
 பிரமசசாரியா- பால் உணர்சிகளை முறைப்படுத்துதல்
இல்லறத்தின் மாண்பு இசுலாத்தில் மிகவும் வலியுறுத்தப்படுகிறது. துறவறம் எனபது தவிர்க்கப்பட வேண்டிய  ஒன்று.. இல்லறம்தான் பால் உணர்வுகளுக்கு ஒரு முறையான வடிகாலாகாவும் வழி காட்டியாகவும் அமையும்.
“கற்பு நெறியில் வாழும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக இறைவன் பாவ மன்னிப்பையும் மகத்தான வெகுமதிகளையும் வழங்குவான் “ என்கிறது புனித குரான் .
சோரம் போகும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
இயற்கைக்கு மாறான இன்பம் நாடிய ஒரு சமுதாயமே அழிக்கப்பட்டதக் குரான் எச்சரிக்கை விடுக்கிறது.
அபாரிக்ரகம்- தான்,, தனது என்ற எண்ணங்களைத் தவிர்த்தல் ; பிறர் பொருளை விரும்பாமை..
சிலருக்கு செல்வம் அதிகமாக வழங்கப்ட்டிருப்பது அவர்கள் வறியவர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை இசுலாம் வலியுறுத்துகிறது.இதன்அடிப்படையில்தான் சக்காத்து என்ற கடமையாக்கப்பட்ட தருமம் விதிக்கப்பட்டுள்ளது ,
தேவைக்கு மேல் ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வம்   இருந்தால் சக்காத்து கொடுத்தே  நாற்பது ஆண்டுகளுக்குள்ளாக அந்த செல்வம் முழுமையாகக் கரைந்து விடும்..
நல்வழியில் தாரளமாக செலவு செய்பவர்களுக்கு இறைவன் நல்ல வெகுமதியை வழங்குவன் என்கிறது குரான்.
மேலும் இறைவனை நேசிக்கிறவர்கள் தங்கள் சுற்றத்தார்க்கும் அனாதைகளுக்கும் தேவை உள்ளவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கேட்பவர்களுக்கும் நல்ல முறையில் கொடுப்பார்கள் என்கிறது குரான்,.
மேலும் வட்டியைத் தடை செய்வதன் மூலம் அபாரிகிரகாவை இசுலாம் வலியுறுத்துகிறது  

தனி மனிதன் ஒழுக்கம் பற்றிப்பேசும் நியமாவின் ஐந்து  உட்பிரிவுகள்:
சௌச்சா   சந்தோசா  தபசு  சுவாத்யா ஈசுவர பிரநிதகன்

சௌச்சா   தனி மனித  சுத்தம் சுகாதாரம் பற்றிச் சொல்கிறது
இசுலாம் பற்றிய தவறான புரிதல்களில் ஒன்று இசுலாமியர்கள் தினமும் குளிக்க மாட்டார்கள். அவர்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வு குறைவு என்பது.
ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்மறையாக இசுலாம் என்றால் பரிசுத்தம். பரிசுத்தம் இல்லாத ஒருவன் முசுலீமாக இருக்க முடியாது.
இன்று உலகெங்கும் கைகழுவும் தினம் என்று பெரிதாகக் கொண்டாடப் படுகிறது.. சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் கை கழுவதை வலியுறுத்துகிறது இசுலாம்..
சிறுநீர் கழித்தால் உறுப்பை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்; பல்விலக்க வேண்டும்;உடலுறவு கொண்டால், பெண்களுக்கு விலக்கு வந்தால் குளிப்பது கட்டாயம்;அரை மயிரை அகற்றவேண்டும்; நகம் வெட்ட வேண்டும் என்று பல பல செய்திகளை வலியுறுத்திச் சொல்கிறது இசுலாம்,  .    
சுத்தம் இல்லாதவர்களை இறைவன் சபிக்கிறான் என்று சொல்லி சுத்தத்தின் மேன்மை வலியுறுத்தப்படுகிறது..
இறைவணக்கம் செய்யுமுன் உளு என்னும் அங்கசுத்தி செய்யப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு குளியல் போலிருக்கும்.இது பற்றி சிறிது விரிவாகப் பின்னால் பார்ப்போம்
சந்தோசா- இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ்வது – போதும் என்ற மனம்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்த பெருமான். ஆனால் ஆசைக்கு அளவே இல்லை; ஆசைகளைக் கட்டுபடுத்துவதும் எளிதல்ல.
முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆசைகளைக் கட்டுப்படுத்துவது எளிதாகி விடும்..அவர்களுக்கு மறுமையின் நல வாழ்வே நோக்கமாகிவிடும். அந்த நிலையில் இம்மையின் இல்லாமையோ வறுமையோ வசதிகுறைவுகளோ அவர்களைப் பெரிதாக பாதிக்காது.. இருப்பது போதும் என்ற மனப்பாங்கு வந்து விடும்.
இந்த நிலை வந்து விட்டால் அளப்பறிய நிம்மதி வந்து விடும்.. இது மென் மேலும் ஆன்மீக வெற்றிக்கு வழி கோலும்.. மன அழுத்தம் போன்ற நோய்கள் அண்டாது.
இப்படிப் பட்டவர்கள்தான் உண்மையான வெற்றியாளர்கள். இவர்களுக்கு மிகச்சிறப்பான மறுமை வாழ்வை இறைவன் அளிப்பான் என்கிறது குரான்.

தபசு பகட்டு, ஆடம்பரம் தவிர்த்த எளிய வாழ்க்கை முறை
வீண் செலவு செய்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள் என்கிறது குரான்.தவ வாழ்க்கையின் முதல் படி ஆடம்பரம் , வீண் செலவு பகட்டு இவற்றைத்தவிர்ப்பது..
எளிய வாழ்க்கை முறைக்கு மிகக் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர்கள் இறை தூதர் கண்மணி நபி பெருமான் (சல்). . இசுலாமியப் பேரரசு உலகின் பல பகுதிகளிலும் பரவி அதன் மாமன்னராய் விளங்கிய அவர்கள் வீட்டில் ஒரு நாள் தேவைக்கு மேல் உணவுப் பொருட்கள் கூட இருந்தது கிடையாது.. தொடர்ந்து பல நாட்கள் உணவின்றியும் இருந்திருக்கிறார்கள். அம்மாமன்னர், மாமனிதர் உயிர் பிரிந்தபோது அவர்கள் வீட்டில் இருந்தது சிறிதளவு கோதுமை ஓரிரண்டு ஆடைகள், ஒரு எளிய ஒலைபடுக்கை மட்டுமே. அவர்களுடைய இரும்பு கவச உடைஉணவு தானியம் வாங்கிய கடனுக்காக அடகு வைக்கப்பட்டிருந்தது.
அவர்களின் மிகப்பிரியமாண அன்பு மகள் பாத்திமா அவர்களுக்கு ஒரு சொந்த வீடு கூட இல்லை..
இவையெல்லாம் கடல்நீர்துளி போன்ற எடுதுக்காட்டுகள்தாம். நாயகங்கள், சகாபாக்கள் எனப்படும் நபித்தோழர்கள், நாயகங்களுக்குப் பின் இசுலாமியப் பேரரசை ஆண்ட கலிபாக்கள் இவர்களின் எளிய வாழ்க்கை முறை பற்றி தனி நூலே எழுதலாம்.  
சுவாத்யா – புனித நூல்களை படித்து அறிந்து அதன் மூலம் தன்னைப்பற்றித் தெளிதல் 
இசுலாத்தின் புனித நூல் திருமறைக் குரான்.. இந்த நூலின் ஒவ்வொரு சொல்லும் இறைவனால் அருளப்பட்டது என்பது இசுலாமியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை..
நபிகள் பெருமான்(சல்) அவர்களுக்கு அரபு எழுதப்படிக்கத் தெரியாது. அவர்கள் ஒரு வித ஞான மயக்க நிலையில் இருக்கையில் இறைவன் அவர்கள் வாயிலாக வெளிப்படுத்தியதுதான் குரான், குரான் இறைவனின் நேரடிப்படைப்பு என்பதற்கு சில பல அசைக்க முடியாதா சான்றுகள் உள்ளன. அவற்றில் சில:
குரான் அரபு மொழியின் மிகச்சிறந்த இலக்கியப்படைப்பாகும். அதன் நடை படிப்பவர்களையும் கேட்பவர்களையும் பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது. இத்தகைய ஒரு இலக்கியத்தை  எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் படைத்திருக்க முடியாது,
திருக்குரானை ஆராய்ந்து பாருங்கள்;அது இறைவன் அல்லாத மற்றவர்களின் கூற்றாக இருந்தால் இதில் பல்வேறு முரண்பாடுகளைக் கண்டிருப்பீர்கள்” எனபது குரான் வசனம்.
ஆயிரத்து நாநூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு எழுத்தோ சொல்லோ குறியீடோ எதுவும் மாற்றப்படாமல் அசல் வடிவம் பாதுகாக்கப்படுகிறது.
மேலைநாட்டு கிறித்தவ அறிஞர் கேரி மிலலர் இசுலாத்தில் உள்ள குறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை கிறித்தவத்தின் பால் திருப்பலாம் என்ற எண்ணத்தில் திருக்குரானைப் படித்து ஆராய்ச்சி செய்தார்,.ஆனால் இறுதியில் அவரே இசுலாத்தில் இணைந்து விட்டார்..இது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியது பல. அவற்றில் சில :
---நபிகள் பெருமானாரின் தாயாரைப்பற்றி குர்ஆனில் ஒரு வரி கூட இல்லை. ஆனால் ஈசா நபி(இயேசு கிறித்து) பற்றியும் அவர்கள் தாயார் மரியம் (மேரி) அவர்கள் பற்றியும் உண்மைகள் மிகக் கண்ணியமான முறையில் விளக்கபடுவதோடு மரியம் என்ற பெயரில் ஒரு தனி அத்தியாயமே காணப்படுகிறது..
.அதற்கெல்லாம் மேல் நபிகள் பெருமானாரின் நெருங்கிய உறவினர் அபு லகப் என்பவரும் அவரது துணைவியாரும் இசுலாத்தின் மிகக் கடுமையான எதிரிகளாகி இசுலாமியர்களுக்கும் குறிப்பாக நாயகம் (சல்) அவர்களுக்கும் தாங்கஒன்னா இன்னல்கள் புரிந்து வந்தனர்.. இது பொறுக்க முடியாத ஒரு நிலையை அடைந்தபோது அவர்களுக்கு எதிராக இறைவனின் சாபம் இறங்குகிறது. நூற்றிப்பதினாலு அத்தியாயங்கள் கொண்ட குரானில் தனி மனிதர்கள் பெயர் குறிப்பிட்டு கடுமையாக சபிக்கப்படுவது அல்லகப் என்ற ஒரு அத்தியாயத்தில் மட்டுமே..
இந்த அத்தியாயம் இறக்கப்பட்டு பத்து ஆண்டுகள் சென்ற பின்புதான் அபுலகப்பின் உயிர் பிரிந்தது . இந்த இடைவெளியில் அபுலகப் மனம் மாறி இசுலாத்தில் இணைந்திருந்தால் குர்ஆனில் உள்ள சாபம் பொய் என்று ஆகி இருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் அவர்கள் இருவரும் மிக இழிவான மரணத்தை சந்தித்தனர். 
இது குரான் இறைவன் மொழி என்பதை ஐயமின்றி எடுத்துக்காட்டுகிறது அதனால்தான் சத்ய மார்க்கமான இசுலாத்தில் இணைந்தேன் என்கிறார் காரி மில்லர்.    :
,குரான் இம்மைக்கும் மறுமைக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.
இறைவன்  அவனது ஏகத்துவம்;; மறுமைக்கோட்பாடு சுவர்க்கம் நரகம் முகமது நபி (சல்)- அவர்தான் இறுதி இறைத்தூதர் ;இதற்கு முன் தோன்றிய நபிமார்கள் என்று மறுமை பற்றி விளக்கமாகக் கூறப்படுகிறது..
இம்மையில் சிறப்பான வாழ்வுதான் மறுமையின் நல்வாழ்வுக்கு அடித்தளம். இறை நம்பிக்கை, வழிபாடு தான தர்மங்கள் நோன்பு புனிதப்பயணம் போன்ற முக்கிய கட்டயக்கடமைகள் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன .
மேலும் அஈசியல் அமைப்பு, நல்லாட்சி, குற்றங்கள் தண்டனைகள் பெற்றோரைப்பேணுதல் , குழந்தை வளர்ப்பு, திருமணம், பெண்ணுரிமை சொத்துப்பங்கீடு, அண்டை அயலாரைபேணல், பிற மதத்தினரை மதித்தல் சுத்தம போன்ற அன்றாட வழ்வுக்குத்தேவையான அனைத்தும் அருளப்படுகிறது.
பிறர் வீட்டுக்குள் நுழைய அனுமதி கோறுதல், போன்ற மிக நுட்பமான செய்திகளும் காணக்கிடைக்கின்றன,.
அறிவியல் உண்மைகள் மருதுவக்குறிப்புகளின் களஞ்சியமாகவும் குரான் விளங்குகிறது.,
இவ்வளவு சிறப்புக்களைக்கொண்ட புனித நூல் இசுலாமியர்களின் வாழ்வில் பின்னிப்பினைதிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
எந்த ஒரு தொழுகையும்,பிரார்த்தனையும், மதச்சடங்கும் குரானின் முதல் அத்தியாயமான அல் பாத்திகா (தோற்றுவாய்() ஓதாமல் நிறைவுறாது. ஏழு வரிகள் அடங்கிய அதன் பொருள் கீழே தரப்படுகிறது.
இறைவனின் திருப்பெயரால்
எல்லாப்புகழும் அனைத்துலகுக்கும் உரிமயாளனாகிய அல்லாவுக்கே உரியதாகும்.
அவன் மாபெரும் கருணையாளன் ;தனிப்பெரும் கிருபையாளன்
அவனே தீர்ப்பு நாளின் அதிபதி.
உன்னையே நாங்கள் வழிபடுகிறோம்,; உன்னிடமே உதவி கோருகிறோம்.
எங்களுக்கு நேர்வழியைக் காண்பித்தருள்வாயாக.
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் வழி.
உன் கோபத்துக்கு ஆளானவர்களும் நெறி தவறியவர்களும் சென்ற வழியல்ல
(முன்பே குறிப்பிட்டது போல் குரான் முழுக்க முழுக்க இறைவனால் அருளப்பட்ட மறையாகும். இதை மிகச்சரியாக  மொழிபெயர்ப்பது  மனிதனால் முடியாத ஒன்று, எடுத்துக்காட்டாக அல்லா என்ற ஒரு சொல்லுக்கு இது வரை ஒரு மிகச்சரியான சொல் கிடைக்கவில்லை ).

தொடரும்
பின் குறிப்ப.: நான் முன்பே குறிப்பிட்டது போல் வாழ்க்கைப் பயணம் இறைவன் அருளால் ஜூன் மாதத்தில் தொடரும்
அதுவரை சற்று சிரமப்பட்டு இந்தத் தொடரைப்படித்து,குற்றங்குறைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்..
முதல் பகுதி பற்றி கருத்துத் தெரிவித்த  அக்காமார்களுக்கும் நெய்வேலி ராஜாவுக்கும் நன்றி
வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில் (Google search)
Sherfuddinp.blogspot.com