சென்ற பகுதியில்
யோகா, இசுலாம் பற்றிய தவறான புரிதல்கள்,அவற்றின் தெளிவுகள், யோகாவின் பெரிய,சிறிய
பிரிவுகள்,இசுலாத்தின் அடிப்படை இவை பற்றிப் பார்த்தோம்/...
இனி
யோகாவும் இசுலாமும் –
ஒரு ஒப்பிடுகை
யோகக்கலையின் பிரிவுகளான
யமம் நியமம் அவற்றின் உட்பிரிவுகள் இவற்றிற்கும் இசுலாமிய நெறிகளுக்கும் உள்ள சில
ஒற்றுமைகளைப் பார்ப்போம்
மிகத்தெளிவாக ஒன்றை
நான் வலியுறுத்திச்சொல்கிறேன் ஒன்றை உயர்த்தி மற்றதை தாழ்த்துவது என் நோக்கம்
அல்ல.
பிறப்பாலும்
வளர்ப்பாலும் வாழ்க்கை நெறியாலும் நான் ஒரு இசுலாமியன். எனக்குத்தெரிந்த மட்டில்
இசுலாமியக் கோட்பாடுகள் அனைத்தையும் தவறாமல் கடைப்பிடித்து வருபவன்.
பணிமூப்பிற்குப்
பிறகு யோகாவில் முதுநிலைபட்டம் பெற்றவன்.. அதற்கான ஆய்வுக்கட்டுரைக்கு நான் எடுத்த
தலைப்பு இசுலாமும் யோகக்கலையும். அதற்காக வலை தளங்களிலும் நூல்களிலும் தகவல்களைத்
தேடியபோது நான் கற்ற சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
முன்பே குறிப்பிட்டது போல் சமூக ஒழுக்கங்கள்
பற்றி பேசும் யமம் ஐந்து பிரிவுகளைக்கொண்டது.
அவை அகிம்சை சத்யம் அட்டயா பிரமசசாரியம் அபாரிக்ரகம்
இவற்றிற்கும் இசுலாமுக்கும் உள்ள சில
ஒருமைப்படுகளை சுருக்கமாகப் பார்ப்போம்.
அகிம்சை
அமாவாசைக்கும்
அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றும் . உண்மையில்
அமாவாசைக்கும் இசுலாதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு . இசுலாமிய நாள் மாதம்
எல்லாம் நிலவின் தோற்றம் மறைவு வளர்பிறை தேய் பிறை இவற்றின் அடிப்படையில்தான்
கணக்கிடப்படுகின்றன. இப்படி அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் நெருங்கிய தொடர்பு
இருப்பது போல் இசுலாத்துக்கும் அகிம்சைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
நீதியின்
அடிப்படையில் அன்றி உயிர்களைக் கொல்வதை இசுலாம் அனுமதிக்கவில்லை. தவறாக ஒருவர்
கொல்லப்பட்டால் அவரின் வாரிசுகளுக்கு தவறு இழைத்தவரைக் கொல்லவோ அல்லது தகுந்த இழப்பீடு
பெறவோ சட்டம் அனுமதிக்கிறது..
ஒரு பூனையை உணவின்றி
சில நாட்கள் அடைத்து வைத்திருந்த பெண்ணுக்கு நரகம் கிடைக்கும் என்று நபிகள்(சல்)
சபித்திருக்கிறார்கள்..
இசுலாமிய பயங்கரவாதம்
என்பதே ஒரு முரண்தொகையாகும். உண்மையான இசுலாமுக்கும் பயங்கர வாதத்திற்கும் எந்த வித
தொடர்பும் இல்லை. பயங்கரவாதியாக இருப்பவர் உண்மையான முசுலிம் அல்ல,
சத்தியம் (வாய்மை)
வேடிக்கையாகவோ நகைச்சுவைக்காகவோ
பொய் சொல்வதைக்கூட இசுலாம் அனுமதிக்கவில்லை.
“வாய்மையளார்களுக்கு
வாய்மைகுறிய பரிசை ஏக இறைவன் வழங்குவான்” என்கிறது புனித குரான்
வணிகப்போருட்களில்
உள்ள குறைகளை மறைக்காமல் தெளிவு படுத்தி
விற்பவரை இறைவன் ஆசிர்வதிக்கிறான் ;குறைகளை மறைத்து பொய் சொல்லி விற்பவரை இறைவன்
சபிக்கிறான் என்பது நபி மொழி.
அட்டாயா (களவு
தவிர்த்தல் ) .
களவு
என்பதை ஒரு சமுதாயச சீர்கேடாக இசுலாம்
பாவிக்கிறது.. .தண்டிக்காமல் விட்டால் பரவி சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு தீய சக்தி
களவு. அதனால்தான் களவுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்கள் தவறு செய்யப் பயப்படும்
அளவுக்கு கடும் தண்டனையாக ஒரு அளவுக்கு கையை வெட்டுதல் என்று விதிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏழை, பணம் படைத்தவர், வேண்டியவர்
வேண்டாதவர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது.
களவில் ஈடுபட்டது என் அருமை மகள் என்றால் கூட
அதே தண்டனைதான் என்று நபிகள் நாயகம் (சல்)
சொல்லியிருக்கிறார்கள்
பிரமசசாரியா-
பால் உணர்சிகளை முறைப்படுத்துதல்
இல்லறத்தின் மாண்பு இசுலாத்தில் மிகவும் வலியுறுத்தப்படுகிறது.
துறவறம் எனபது தவிர்க்கப்பட வேண்டிய
ஒன்று.. இல்லறம்தான் பால் உணர்வுகளுக்கு ஒரு முறையான வடிகாலாகாவும் வழி
காட்டியாகவும் அமையும்.
“கற்பு நெறியில் வாழும் ஆண்களுக்கும்
பெண்களுக்கும் ஏக இறைவன் பாவ மன்னிப்பையும் மகத்தான வெகுமதிகளையும் வழங்குவான் “
என்கிறது புனித குரான் .
சோரம் போகும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகக்
கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
இயற்கைக்கு மாறான இன்பம் நாடிய ஒரு சமுதாயமே
அழிக்கப்பட்டதக் குரான் எச்சரிக்கை விடுக்கிறது.
அபாரிக்ரகம்- தான்,, தனது என்ற எண்ணங்களைத் தவிர்த்தல் ; பிறர் பொருளை
விரும்பாமை..
சிலருக்கு செல்வம் அதிகமாக வழங்கப்ட்டிருப்பது
அவர்கள் வறியவர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை இசுலாம்
வலியுறுத்துகிறது.இதன்அடிப்படையில்தான் சக்காத்து என்ற கடமையாக்கப்பட்ட தருமம்
விதிக்கப்பட்டுள்ளது ,
தேவைக்கு மேல் ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய்
மதிப்புள்ள செல்வம் இருந்தால் சக்காத்து
கொடுத்தே நாற்பது ஆண்டுகளுக்குள்ளாக அந்த
செல்வம் முழுமையாகக் கரைந்து விடும்..
நல்வழியில் தாரளமாக செலவு செய்பவர்களுக்கு
இறைவன் நல்ல வெகுமதியை வழங்குவன் என்கிறது குரான்.
மேலும் இறைவனை நேசிக்கிறவர்கள் தங்கள்
சுற்றத்தார்க்கும் அனாதைகளுக்கும் தேவை உள்ளவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும்
கேட்பவர்களுக்கும் நல்ல முறையில் கொடுப்பார்கள் என்கிறது குரான்,.
மேலும் வட்டியைத் தடை செய்வதன் மூலம்
அபாரிகிரகாவை இசுலாம் வலியுறுத்துகிறது
தனி மனிதன் ஒழுக்கம் பற்றிப்பேசும்
நியமாவின் ஐந்து உட்பிரிவுகள்:
சௌச்சா சந்தோசா
தபசு சுவாத்யா
ஈசுவர பிரநிதகன்
சௌச்சா தனி மனித சுத்தம்
சுகாதாரம் பற்றிச் சொல்கிறது
இசுலாம் பற்றிய தவறான புரிதல்களில் ஒன்று
இசுலாமியர்கள் தினமும் குளிக்க மாட்டார்கள். அவர்களுக்கு சுத்தம் பற்றிய
விழிப்புணர்வு குறைவு என்பது.
ஆனால் இதற்கு முற்றிலும் எதிர்மறையாக இசுலாம்
என்றால் பரிசுத்தம். பரிசுத்தம் இல்லாத ஒருவன் முசுலீமாக இருக்க முடியாது.
இன்று உலகெங்கும் கைகழுவும் தினம் என்று
பெரிதாகக் கொண்டாடப் படுகிறது.. சாப்பிடும் முன்பும் சாப்பிட்ட பின்பும் கை கழுவதை
வலியுறுத்துகிறது இசுலாம்..
சிறுநீர் கழித்தால் உறுப்பை நன்றாக சுத்தம்
செய்ய வேண்டும்; பல்விலக்க வேண்டும்;உடலுறவு கொண்டால், பெண்களுக்கு விலக்கு
வந்தால் குளிப்பது கட்டாயம்;அரை மயிரை அகற்றவேண்டும்; நகம் வெட்ட வேண்டும் என்று
பல பல செய்திகளை வலியுறுத்திச் சொல்கிறது இசுலாம், .
சுத்தம் இல்லாதவர்களை இறைவன் சபிக்கிறான் என்று
சொல்லி சுத்தத்தின் மேன்மை வலியுறுத்தப்படுகிறது..
இறைவணக்கம் செய்யுமுன் உளு என்னும் அங்கசுத்தி
செய்யப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு குளியல் போலிருக்கும்.இது பற்றி சிறிது
விரிவாகப் பின்னால் பார்ப்போம்
சந்தோசா- இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ்வது – போதும் என்ற மனம்.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்த
பெருமான். ஆனால் ஆசைக்கு அளவே இல்லை; ஆசைகளைக் கட்டுபடுத்துவதும் எளிதல்ல.
முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு
ஆசைகளைக் கட்டுப்படுத்துவது எளிதாகி விடும்..அவர்களுக்கு மறுமையின் நல வாழ்வே
நோக்கமாகிவிடும். அந்த நிலையில் இம்மையின் இல்லாமையோ வறுமையோ வசதிகுறைவுகளோ
அவர்களைப் பெரிதாக பாதிக்காது.. இருப்பது போதும் என்ற மனப்பாங்கு வந்து விடும்.
இந்த நிலை வந்து விட்டால் அளப்பறிய நிம்மதி
வந்து விடும்.. இது மென் மேலும் ஆன்மீக வெற்றிக்கு வழி கோலும்.. மன அழுத்தம் போன்ற
நோய்கள் அண்டாது.
இப்படிப் பட்டவர்கள்தான் உண்மையான
வெற்றியாளர்கள். இவர்களுக்கு மிகச்சிறப்பான மறுமை வாழ்வை இறைவன் அளிப்பான்
என்கிறது குரான்.
தபசு பகட்டு, ஆடம்பரம்
தவிர்த்த எளிய வாழ்க்கை முறை
வீண் செலவு செய்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்
என்கிறது குரான்.தவ வாழ்க்கையின் முதல் படி ஆடம்பரம் , வீண் செலவு பகட்டு
இவற்றைத்தவிர்ப்பது..
எளிய வாழ்க்கை முறைக்கு மிகக் சிறந்த உதாரணமாகத்
திகழ்ந்தவர்கள் இறை தூதர் கண்மணி நபி பெருமான் (சல்). . இசுலாமியப் பேரரசு உலகின்
பல பகுதிகளிலும் பரவி அதன் மாமன்னராய் விளங்கிய அவர்கள் வீட்டில் ஒரு நாள்
தேவைக்கு மேல் உணவுப் பொருட்கள் கூட இருந்தது கிடையாது.. தொடர்ந்து பல நாட்கள்
உணவின்றியும் இருந்திருக்கிறார்கள். அம்மாமன்னர், மாமனிதர் உயிர் பிரிந்தபோது
அவர்கள் வீட்டில் இருந்தது சிறிதளவு கோதுமை ஓரிரண்டு ஆடைகள், ஒரு எளிய ஒலைபடுக்கை
மட்டுமே. அவர்களுடைய இரும்பு கவச உடைஉணவு தானியம் வாங்கிய கடனுக்காக அடகு
வைக்கப்பட்டிருந்தது.
அவர்களின் மிகப்பிரியமாண அன்பு மகள் பாத்திமா
அவர்களுக்கு ஒரு சொந்த வீடு கூட இல்லை..
இவையெல்லாம் கடல்நீர்துளி போன்ற எடுதுக்காட்டுகள்தாம்.
நாயகங்கள், சகாபாக்கள் எனப்படும் நபித்தோழர்கள், நாயகங்களுக்குப் பின் இசுலாமியப்
பேரரசை ஆண்ட கலிபாக்கள் இவர்களின் எளிய வாழ்க்கை முறை பற்றி தனி நூலே
எழுதலாம்.
சுவாத்யா – புனித நூல்களை படித்து அறிந்து அதன் மூலம்
தன்னைப்பற்றித் தெளிதல்
இசுலாத்தின் புனித நூல் திருமறைக் குரான்.. இந்த
நூலின் ஒவ்வொரு சொல்லும் இறைவனால் அருளப்பட்டது என்பது இசுலாமியர்களின் அசைக்க
முடியாத நம்பிக்கை..
நபிகள் பெருமான்(சல்) அவர்களுக்கு அரபு
எழுதப்படிக்கத் தெரியாது. அவர்கள் ஒரு வித ஞான மயக்க நிலையில் இருக்கையில் இறைவன்
அவர்கள் வாயிலாக வெளிப்படுத்தியதுதான் குரான், குரான் இறைவனின் நேரடிப்படைப்பு
என்பதற்கு சில பல அசைக்க முடியாதா சான்றுகள் உள்ளன. அவற்றில் சில:
குரான் அரபு மொழியின் மிகச்சிறந்த
இலக்கியப்படைப்பாகும். அதன் நடை படிப்பவர்களையும் கேட்பவர்களையும் பிரமிப்புக்கு உள்ளாக்குகிறது.
இத்தகைய ஒரு இலக்கியத்தை எழுதப் படிக்கத்
தெரியாத ஒருவர் படைத்திருக்க முடியாது,
“திருக்குரானை ஆராய்ந்து பாருங்கள்;அது இறைவன் அல்லாத
மற்றவர்களின் கூற்றாக இருந்தால் இதில் பல்வேறு முரண்பாடுகளைக் கண்டிருப்பீர்கள்”
எனபது குரான் வசனம்.
ஆயிரத்து நாநூறு ஆண்டுகள் கடந்தும் ஒரு எழுத்தோ
சொல்லோ குறியீடோ எதுவும் மாற்றப்படாமல் அசல் வடிவம் பாதுகாக்கப்படுகிறது.
மேலைநாட்டு கிறித்தவ அறிஞர் கேரி மிலலர்
இசுலாத்தில் உள்ள குறைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை கிறித்தவத்தின்
பால் திருப்பலாம் என்ற எண்ணத்தில் திருக்குரானைப் படித்து ஆராய்ச்சி
செய்தார்,.ஆனால் இறுதியில் அவரே இசுலாத்தில் இணைந்து விட்டார்..இது பற்றி அவரிடம்
கேட்டபோது அவர் கூறியது பல. அவற்றில் சில :
---நபிகள் பெருமானாரின் தாயாரைப்பற்றி குர்ஆனில்
ஒரு வரி கூட இல்லை. ஆனால் ஈசா நபி(இயேசு கிறித்து) பற்றியும் அவர்கள் தாயார்
மரியம் (மேரி) அவர்கள் பற்றியும் உண்மைகள் மிகக் கண்ணியமான முறையில்
விளக்கபடுவதோடு மரியம் என்ற பெயரில் ஒரு தனி அத்தியாயமே காணப்படுகிறது..
.அதற்கெல்லாம் மேல் நபிகள் பெருமானாரின்
நெருங்கிய உறவினர் அபு லகப் என்பவரும் அவரது துணைவியாரும் இசுலாத்தின் மிகக்
கடுமையான எதிரிகளாகி இசுலாமியர்களுக்கும் குறிப்பாக நாயகம் (சல்) அவர்களுக்கும்
தாங்கஒன்னா இன்னல்கள் புரிந்து வந்தனர்.. இது பொறுக்க முடியாத ஒரு நிலையை
அடைந்தபோது அவர்களுக்கு எதிராக இறைவனின் சாபம் இறங்குகிறது. நூற்றிப்பதினாலு
அத்தியாயங்கள் கொண்ட குரானில் தனி மனிதர்கள் பெயர் குறிப்பிட்டு கடுமையாக
சபிக்கப்படுவது அல்லகப் என்ற ஒரு அத்தியாயத்தில் மட்டுமே..
இந்த அத்தியாயம் இறக்கப்பட்டு பத்து ஆண்டுகள்
சென்ற பின்புதான் அபுலகப்பின் உயிர் பிரிந்தது . இந்த இடைவெளியில் அபுலகப் மனம்
மாறி இசுலாத்தில் இணைந்திருந்தால் குர்ஆனில் உள்ள சாபம் பொய் என்று ஆகி இருக்கும்.
ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் அவர்கள் இருவரும் மிக இழிவான மரணத்தை
சந்தித்தனர்.
இது குரான் இறைவன் மொழி என்பதை ஐயமின்றி
எடுத்துக்காட்டுகிறது அதனால்தான் சத்ய மார்க்கமான இசுலாத்தில் இணைந்தேன் என்கிறார்
காரி மில்லர். :
,குரான் இம்மைக்கும் மறுமைக்கும் ஒரு சிறந்த
வழிகாட்டியாகத் திகழ்கிறது.
இறைவன்
அவனது ஏகத்துவம்;; மறுமைக்கோட்பாடு சுவர்க்கம் நரகம் முகமது நபி (சல்)-
அவர்தான் இறுதி இறைத்தூதர் ;இதற்கு முன் தோன்றிய நபிமார்கள் என்று மறுமை பற்றி
விளக்கமாகக் கூறப்படுகிறது..
இம்மையில் சிறப்பான வாழ்வுதான் மறுமையின்
நல்வாழ்வுக்கு அடித்தளம். இறை நம்பிக்கை, வழிபாடு தான தர்மங்கள் நோன்பு
புனிதப்பயணம் போன்ற முக்கிய கட்டயக்கடமைகள் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன .
மேலும் அஈசியல் அமைப்பு, நல்லாட்சி, குற்றங்கள்
தண்டனைகள் பெற்றோரைப்பேணுதல் , குழந்தை வளர்ப்பு, திருமணம், பெண்ணுரிமை
சொத்துப்பங்கீடு, அண்டை அயலாரைபேணல், பிற மதத்தினரை மதித்தல் சுத்தம போன்ற அன்றாட
வழ்வுக்குத்தேவையான அனைத்தும் அருளப்படுகிறது.
பிறர் வீட்டுக்குள் நுழைய அனுமதி கோறுதல், போன்ற
மிக நுட்பமான செய்திகளும் காணக்கிடைக்கின்றன,.
அறிவியல் உண்மைகள் மருதுவக்குறிப்புகளின்
களஞ்சியமாகவும் குரான் விளங்குகிறது.,
இவ்வளவு சிறப்புக்களைக்கொண்ட புனித நூல்
இசுலாமியர்களின் வாழ்வில் பின்னிப்பினைதிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
எந்த ஒரு தொழுகையும்,பிரார்த்தனையும்,
மதச்சடங்கும் குரானின் முதல் அத்தியாயமான அல் பாத்திகா (தோற்றுவாய்()
ஓதாமல் நிறைவுறாது. ஏழு வரிகள் அடங்கிய அதன் பொருள் கீழே தரப்படுகிறது.
இறைவனின் திருப்பெயரால்
எல்லாப்புகழும் அனைத்துலகுக்கும் உரிமயாளனாகிய
அல்லாவுக்கே உரியதாகும்.
அவன் மாபெரும் கருணையாளன் ;தனிப்பெரும்
கிருபையாளன்
அவனே தீர்ப்பு நாளின் அதிபதி.
உன்னையே நாங்கள் வழிபடுகிறோம்,; உன்னிடமே உதவி
கோருகிறோம்.
எங்களுக்கு நேர்வழியைக் காண்பித்தருள்வாயாக.
எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் வழி.
உன் கோபத்துக்கு ஆளானவர்களும் நெறி
தவறியவர்களும் சென்ற வழியல்ல
(முன்பே குறிப்பிட்டது போல் குரான் முழுக்க
முழுக்க இறைவனால் அருளப்பட்ட மறையாகும். இதை மிகச்சரியாக மொழிபெயர்ப்பது மனிதனால் முடியாத ஒன்று, எடுத்துக்காட்டாக
அல்லா என்ற ஒரு சொல்லுக்கு இது வரை ஒரு மிகச்சரியான சொல் கிடைக்கவில்லை ).
தொடரும்
பின் குறிப்ப.: நான் முன்பே குறிப்பிட்டது போல்
வாழ்க்கைப் பயணம் இறைவன் அருளால் ஜூன் மாதத்தில் தொடரும்
அதுவரை சற்று சிரமப்பட்டு இந்தத்
தொடரைப்படித்து,குற்றங்குறைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்..
முதல் பகுதி பற்றி கருத்துத் தெரிவித்த அக்காமார்களுக்கும் நெய்வேலி ராஜாவுக்கும்
நன்றி
வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில் (Google search)
Sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment