Friday, 20 May 2016

இசுலாமும் யோகக்கலையும்
இசுலாமிய இறைவணக்கம் –         யோகாசனங்கள் ஒரு ஒப்பு நோக்கு

பகுதி 3(நிறைவுப் பகுதி)

சென்ற பகுதியில் யோகாவின் பெரிய சிறிய பிரிவுகளுக்கும் இசுலாமிய நெறிகளுக்கும் உள்ள ஒப்பிடுகை பற்றிப் பார்த்தோம்..இந்தப்பகுத்யில் அதன் தொடர்ச்சியும், பின் யோகாசனங்களுக்கும் இசுலாமிய இறைவணக்கத்திற்கும் உள்ள ஒற்றுமை பற்றியும் பார்ப்போம்

ஈசுவர பிரநிதகன் –எப்போதும் இறை நினைப்பில் இருத்தல்.
இறைவனின் நினைப்பில் வாழாதவர்கள் இறந்தவர்களுக்கு சமம் என்பது நபி மொழி/
“என்னை நினைப்பவர்களை நான் நினைக்கிறேன் “ என்று இறைவன் திருமறையில் கூறுகிறான் .மேலும்”காலையிலும் மாலையிலும் இறைவனை நினைவு கூர்வீராக! உம மனதிற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மேலும் மெதுவான குரலிலும் “ என்று இறைவன் சொல்கிறான்,
ஒரு நல்ல முசுலிம் வாழ்வின் எந்தத் தருணத்திலும் இறைவன் நினைப்பை விட்டு அகல்வதில்லை காலை எழுந்தவுடன்,, காலைகட்ன்களை முடிக்கு முன் உடல் சுத்தி செய்யும்போது . உண்ணும்போது பருகும்போது எந்த ஒரு செயலையும் தொடங்குமுன் ,அந்த செயல் முடிந்தவுடன் பயணிக்கும்போது பயணம் முடிந்தவுடன் வீட்டுக்குள் நுழையும்போது வெளியே செல்லும்போது இல்லறத்தில் ஈடு படுமுன் முடிந்தவுடன் அமரும்போது எழும்போது என்று ஒவ்வொரு வினாடியும் மனதாலும் நாவாலும் இறைவனைத் துதி செய்து நன்றி செலுத்தவேண்டும்.
திக்ரு எனப்படும் இறைதியானத்தில் ஈடுபடுபவர்கள் மணிக்கணக்கில் இறைவனை நாவாலும் மனதாலும் நினைவு கூர்ந்து அமர்ந்திருப்பார்..
இசுலாமிய இறைவணக்கம் படைத்தவனாகிய ஏக இறைவனுக்கும் படைப்பாகிய மனிதனுக்கும் இடையில் ஒரு நேரடி உரையாடலாக அமைகிறது..இறைவன் தன்னைப் பார்ப்பதாகவும் தான் இறைவனைப் பார்ப்பதாகவும் உணர்ந்த நிலையில்தான் இறைவணக்கம் முழுமை பெறுகிறது,
ஆசனங்கள். பிரணாயாமம் தாரணா  தியானம் இவை  ஒன்று சேர்ந்ததுதான் இசுலாமிய இறைவணக்கம்,.iஇதன் இறுதி நோக்கம் சமாதி  இது பற்றி   விரிவாகப்பார்ப்பதற்கு முன்
புலன்களைக்கட்டுப்படுதும் பயிற்சியான   பிரத்தியாகாரா பற்றி இசுலாத்தின் விளக்கத்தைப் பார்ப்போம்,.
இசுலாத்தின் கட்டாயக்கடமைகளாகிய தொழுகை. நோன்பு ,,சக்காத்து எனப்படும் கட்டாய தர்மம், புனித ஹஜ்ஜுப்பயணம் போன்றவை மிகச்சிறந்த புலனடக்கப்பயிற்சியாக அமைகின்றன.
தொழுகையில் கண்கள் காதுகள்  திறந்திருக்கும்.ஆனால் எதையும் பார்க்காமல் கேட்காமல் உருவமற்ற ஏக இறைவனை மட்டும் நினைந்து அவனைப் பார்ப்பதாகவும் அவனோடு உரையாடுவதாகவும் உணரும்போது தான் தொழுகை முழுமை அடைகிறது.
நோன்பு:- பசியிருக்கும், தாகமிருக்கும்; சுவையான உணவும் வகைவகையான பானங்களும் இருக்கும் ஆனால் நோன்புக்காலத்தில் சாப்பிடக்கூடாது, பானங்கள் என்ன தண்ணீர் கூடப் பருகக்கூடது.,வாய்ப்பிருந்தும் இல்லறத்தை அனுபவிக்க முடியாது..அதற்கெல்லாம் மேல் எண்ணங்களும் பேச்சுக்களும் தூய்மையாகவும் பொய்க் கலப்பில்லாமலும் இருக்க வேண்டும்.
சக்காத்து என்பது செலவுகள், கடன்கள் போக மிச்சமிருக்கும் செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை கட்டாயமாக தருமம் செய்தல். சொல்ல மிக எளிது. ஆனால் செயல்படுத்த அவ்வளவு எளிதல்ல. நான் உழைத்து சம்பாதித்ததை பிறருக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து இறையச்சத்துடன் சக்காத்துக்குள்ள முழுத்தொகையை தருமம் செய்ய மிக உறுதியான புலனடக்கம் தேவை/
புனித ஹஜ்ஜுப்பயணத்தின் பொது ஆண்கள் இஹ்ராம் எனும் ஒரு சிறப்பு உடை அணிகிறார்கள். கிட்டத்தட்ட சவத்திற்கு போடும் உடை போல் உள்ள; இந்த உடையை அணிந்தவுடன் ஆணவம், அகந்தை எல்லாம் அழிந்து மரணத்தை எதிர் நோக்கும ஒரு மன நிலை வந்து விடும் . இந்த உடையுடன் காலில் ரப்பர் செருப்பு அணிந்து ஒரு இறை அன்பைத்தேடி அலையும் யாசகன் தோற்றத்தில் பன்னாட்டு விமான சேவையில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.    II
     
இசுலாமிய இறைவணக்கம் –         யோகாசனங்கள் ஒரு ஒப்பு நோக்கு
இப்போது இந்த நூலின் தலைமைக் கருத்துக்கு வருவோம் . இசுலாத்தின் ஐந்து கடமைகளில் மற்ற நான்கிற்கும் இல்லாத சிறப்புகள் தொழுகை எனப்படும் இறை வணக்கத்திற்கு உண்டு
ஈமான் எனப்ப்படும் உறுதி வாழ்வில் ஒரு முறை மேற்கொண்டால் போதும்.
நோன்பு ஆண்டிற்கு ஒரு முறை முப்பது நாட்கள் மேற்கொள்ளப்படுவது.
சக்காத்து வசதி படைத்தவர்கள் நோன்பு மாதத்தில் கொடுப்பது.
புனித ஹஜ் பயணம் வசதி படைத்தவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மேற்கொண்டால் நிறைவு பெற்று விடுகிறது.
ஆனால் தொழுகை மட்டும் ஏழு வயது முதல் ஆயுள் உள்ளவறை தினமும் ஐந்து வேளை ஏழை பணக்காரர் ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் கட்டாயக்கடமையாக்கப்பட்டுள்ளது..
தொழுகையின் சிறப்புக் கருதி ஏக இறைவன் முகமது நபி(சல) அவர்களை நேரில் அழைத்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது.
யோகாசனம, பிரணாயமம் தாரணா தியானம், சமாதி இவற்றை உள்ளடக்கியது தொழுகை என்று ஏற்கனவே பார்த்தோம்.
தனிமையில் கண்களை மூடி அமர்ந்து மூச்சைக் கட்டுப்படுத்தி மனதாலும் நாவாலும் இறைவன் பெயரைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கும் திக்ரு எனப்படும் இசுலாமிய தியானம் பிராணயாம தாரண தியான நிலைகளை உள்ளடக்கி தன்னை அறிந்து இறைவனை அறியும் சமாதி நிலைக்கு மிகச் சிறப்பாக வழி வகுக்கிறது.. இதன் வழி வகைகள் பற்றியும் நெறி முறைகள் பற்றியும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மேலும் இந்த முறைக்கு கடும் பயிற்சி தேவை.. எனவே அது பற்றி இத்துடன் நிறுத்தி விட்டு எல்லோரும் எளிதில் கடைபிடிக்கக்கூடிய தொழுகை முறை பற்றிப் பார்ப்போம்,
தொழுவதற்கு உடல் சுத்தம் உடை சுத்தம் இடம் சுத்தம் அவசியம்.. உடலுறவு கொண்டவர்களும் மாத விலக்கனவர்களும் குளித்து சுத்தம் ஆன பிறகே தொழ முடியும்.
இது போக ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் உளு எனப்படும் உடல் சுத்தி செய்வது அவசியம்.. இந்த உளு உடல் நலத்திற்கு ஒரு அடிப்படைப் பயிற்சியாய் அமைகிறது..எனவே இது பற்றி சிறிது விரிவாகப் பார்ப்போம். இசுலாத்தில் பரிசுத்தம் எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.. மலசலம், சிறுநீர் கழித்தவர்கள் அந்த உறுப்புகளை முழுமையாக சுத்தம் செய்யாமல் தொழுக முடியாது..கழிவுகள ஏதேனும் உடலிலோ ஆடையிலோ சிறிதளவு பட்டிருந்தாலும் சுத்தம் செய்வது அவசியம்.,.
உளு செய்யும் முறை
இறைவனின் திருப்பெயரை நினைந்து ஆரம்பம் செய்து.முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் மணிக்கட்டு வரை விரல்களுக்கிடையில் தண்ணீர் படும்படி கழுவவேண்டும்(மூன்று முறை)
அடுத்து வலது கை நிறைய தண்ணீர் எடுத்து வாயில்விட்டு நன்றாகக் கொப்பளிக்க வேண்டும் (மூன்று முறை)
அடுத்து நாசிகளின் உள்ளே நீர் செலுத்தி, மூக்கு நுனியைக் கழுவ வேண்டும் (மூன்று. முறை)
முகத்தை வலது காது முதல் இடது காது வரை, நெற்றியிலிருந்து தொண்டை வரை நன்றாக  தாடியின்  முடியும் நனையுமாறு) மூன்று முறைகழுவவேண்டும்
முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரை நன்றாக மூண்று முறை கழுவ வேண்டும்.
கைகளை நனைத்து நெற்றியில் தொடங்கி பிடரி வரை தடவ வேண்டும்..
இரு காதுகளின் உள்புறமும் வெளிப்புறமும் காதுகளின் பின்புறமும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
இறுதியாக இரண்டு பாதங்களையும் கணுக்கால் வரை ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு விரல் இடை வெளியும் நனையுமாறு கழுவ வேண்டும்.
உளுவின் பயன்கள்:
ஒரு சிறிய குளியல் போலிருக்கும் உளு பல நோய்களைத்தடுத்து உடல் நலத்தை காக்கிறது.
பொதுவாக காதின் பின்புறம் யாரும் சுத்தம் செய்வதில்லை. உளுவில் அது வலியுறுத்தப்படுகிறது.
கை கழுவது, வாய் கொப்பளிப்பது முகம் கழுவது போன்றவை ஒரு நாளில் ஐந்து முறை செய்யும்போது சர்க்கரை நோய் கூடக் கட்டுப்படுவதாகச சொல்லப்படுகிறது.
மூக்கு நுனியையும் நாசித் துவாரங்களையும் கழுவது பறவைக் காய்ச்சல் போன்ற கடும் தொற்று நோய்களைத் தடுக்கிறது..
கை கால் விரல்கள், காதுகள் தேய்த்துக்  கழுவப்பபடும்ப்போது நிறைய அகுபஞ்சர் புள்ளிகள் அழுத்தப்பட்டு நலம்காக்கிறது.
யோகாசனம் பிரணாயாமம் தாரணா, தியானம், சமாதி நிலைகளை உள்ளடக்கிய இசுலாமியத் தொழுகை பற்றி இனி சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒரு நாளைக்கு ஐந்து வேலை தொழுகை நிறைவேற்றப்படுகிறது.. அவை பஜ்ர் (விடியல்), லொகர் (மதியம்), அசர் (மாலை) ,மக்ரிப் (அந்தி),இஷா (இரவு) என சூரிய உதயம் மறையும் நேரங்களுக்கேற்ப அமைகிறது. இது போக நிறைய சிறப்புத்தொழுகைகள் உண்டு
உலகெங்கும் தொழுகை அரபு மொழியில் மட்டுமே நடத்தப்படுகிறது. உலக முசுலிம்கள் அனைவரும் புனித நகரான மக்காவில் அமைந்துள்ள காபா எனும் ஏக இறைவனுக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயத்தின் திசையில் நின்று ஏக இறைவனை வழிபடுகிறார்கள் (இந்தியாவில் இது மேற்கு நோக்கி அமைந்துள்ளது)  இவை இரண்டும் நாடு என்ற நிலை கடந்து  உலகளாவிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும்(universal Brotherhood) பறை சாற்றுகின்றன,.
சலாத் என்பது தொழுகையைக்குறிக்கும் அரபுச் சொல்லாகும்.. இந்தச்சொல்லுக்கு மூலப்பொருள் முதுகை வளைத்தல் என்பது.,இதுவே பாரசீக மொழியில் குனிவது என்ற பொருள்படும் நமாசு என்ற . தொழுகையைக்குறிக்கும் சொல்லாக உருமாறி வடமொழியில் நமசுதே  (நமஸ்தே) என்று மாறியதாகக் குறிப்பிடுகிறார் இந்திய இசுலாமிய அறிஞரான அசுரப் ப நிசாமி –நூல் இசுலாத்தின் யோகா()
யோகாசனத்தின் பல நிலைகளை நிற்கும் நிலை , தலைகீழ் நிலை , இருக்கும் நிலை, முதுகுத்தண்டை இழுத்தல்,, முதுகுத்தண்டை முறுக்குதல் என்ற அடிப்படையில் பகுக்கலாம்..
இந்த நிலைகளை எல்லாம் அடிப்படை நிலையில் எளிய சுருக்கமான முறையில் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் தொழுகை தன்னுள் கொண்டுள்ளது.
நிற்கும் நிலைதான் ஆசனங்களின் ஆரம்ப நிலையாகும். .தடாசனா எனப்படும் மலை ஆசனம் தொழுகையின் முதல் நிலையான நிற்கும் நிலையை ஒத்திருக்கிறது பாதங்கள் பூமியில் உறுதியாகப் பதிந்த நிலையில் தலை வானத்தை நோக்கிய நிலையில் அசையாமல் நிற்பது உடல் ,கால்கள் பாதம் முதுகுத்தண்டு அனைவற்றிற்கும் ஒரு நல்ல பயிற்சியாக அமைகிறது.
முதுகுத்தண்டை இழுத்தல்:.முதுகுத் தண்டு இளக்கமாக இருத்தல் உடல் நலத்துக்கும் இளமைக்கும் இன்றியமையாதது என்பது யோகிகளின் கருத்து// எனவே யோகாசனக்கலையில் முதுகை நன்றாக வளைத்து தலையை முட்டிகளுக்கு இடையில் கொண்டு வருவது ஒரு முக்கியப் பயிற்சியாக இருக்கிறது.. உடலின் எல்லா நரம்புகளும் முதுகுத்தண்டு வழியாகவே செல்கின்றன,
தொழுகையின் ஒரு நிலையான ருகுவில் இந்த நிலை மிக எளிதாக அடையப்பெருகிறது.. ருக்கு நிலையில் முதுகை வளைத்து கைகள் விரல்களை விரித்த நிலையில்  முழங்காலகளை இறுகப்பற்றி நிற்க வேண்டும்.. கைகள் கால்கள் வளையாமல் , முதுகு தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இது போல் ஒரு நாளை குறைந்தது பதினேழு முறை வளைக்கப்படுகிறது.. எனவே இது முதுகுத்தண்டுக்கு மிகச்சிறந்த எளிதான பயிற்சி ஆகிறது.
தலைகீழ் நிலைகள்  உடலெங்கும குருதியைப் பாய்ச்சும் வேலையை இதயம் மிக நளினமாகச் செய்கிறது. ஆனால் புவிஈர்-ப்பு விசையை எதிர்த்து தலைக்கு- மூளைக்கு – குருதி பாய்வதும் கால்களில் இருந்து இதயத்திற்கு குருதி பாய்வதும் இதயத்தின் வேலைப்பளுவை அதிகரிப்பதாக உள்ளது..இந்த வேலைப்பளுவைக் குறைக்க தலை கீழ் ஆசனங்கள் பெரிதும் உதவுகின்றன..
இதன் காரணமாகவே தலைகீழ் ஆசனங்களான சிரசாசனமும் சர்வாங்க ஆசனமும் ஆசனங்களின் தலைமை ஆசனங்களாகப் போற்றப்படுகின்றன.. இந்த இரு ஆசனங்களிலும் தலை இதயத்திற்கு கீழே கொண்டு செல்லப்படுகிறது..
 தொழுகையின் சுஜுத் என்னும் நிலையில்  இது மிக எளிதான முறையில் எல்லோரும் செய்யும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இது பற்றி இசுலமியாய அறிஞர் அசுரபு நிசாமி “ அர்த்த சிரசாசனத்தை ஒத்திருக்கும் இந்த (சுஜுத்) நிலையில் மூளைக்கும் உடலின் மேல் பகுதிக்கும் கண் காது மூக்கு நுரையீரலுக்கும் முழு அளவில் குருதி பாய்கிறது “ என்று குறிப்பிடுகிறார்,
சுஜுத் நிலையில் உள்ளனங்கைகள் தரையில் காதுகளுக்கு கீழ் அமைகின்றன...நெற்றி.,இரு உள்ளங்கைகள் ((விரிக்காத நிலையில் விரல்கள் நீட்டப்பட்டு) இரு முழங்கால்கள் ,இரு கால்களின் விரல்களின் அடிப்பகுதி ஆகியவை தரையைததொட வேண்டும். இது பாலாசனத்தை நினைவு படுத்துகிறது  ஒரு நாளில் குறைத்து முப்பத்தி நான்கு முறை சுஜுத் செய்யப்படுகிறது/
ருக்கு பதினேழு சுஜுத் முப்பத்திநான்கு என்பது ஒரு நாள் தொழுகையில் செய்யவேண்டிய மிகக் குறைந்த அளவாகும்.. வழக்கமாகத் தொழுபவர்கள் சாதாரணமாக ருக்கு நாற்பது முறையும் சுஜுத் எண்பது முறையும் செய்வார்கள் .இன்னும் சற்று அதிகமாகத் தொழுகையில் ஈடு படுபவர்கள் ஒரு நாளில் எழுபது முறைக்குமேல் ருக்குவும் அதற்கு இரட்டிப்பாக சுஜுதும் செய்வர். 
(சிரசாசனத்திலும் சர்வாங்க ஆசனத்திலும் வழக்கத்தை  ஏழு பங்கு குருதி அதிகமாக மூளைக்குப் பாய்கிறது; எனவே இவ்விரு ஆசனம்களும் எந்த வயதினருக்கும் ஏற்றது அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதாக அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள புகழ் பெற்ற இதய நோய் நிபுணர் சொன்னார். சுஜுது நிலையில் இவ்வளவு அதிகமான குருதி பாயாமல், தேவையான அளவே பாய்கிறது)
இருப்பு நிலை ஆசனங்கள்  யோகாசனத்தின் இறுதி இலக்கு எளிதாக அமர்ந்து தியானத்தில் ஈடு படுவதாகும். ஸ்திரம் சுகம் ஆசனம் என்கிறது பதஞ்சலி யோக சூத்திரம்..எனவே தியானத்தில் அமரும் இருப்பு நிலை ஆசனங்கள் மிக முக்கியமானவையாகும்.. தியான நிலை ஆசனமான வச்சிராசனம் தொழுகையின் இருப்பு நிலையை மிகவும் ஒத்திருக்கிறது என்று சித்தானந்த சுவாமிகள் யோகா ஆசனா என்ற நூலில் கருது தெரிவித்து இருக்கிறார்கள். இதே கருத்தை நிசாமியும் தெரிவித்துள்ளார்., மேலும் கால்களை மடக்கி தரையில் நீண்ட நேரம் அமர்வதால் தொழுபவர்களுக்கு பத்மாசனம் மிக எளிதாக வரும்..
தொழுகையின் இருப்பு நிலையில் ஆட்காட்டி விரலை நீட்டுவது யோகா முத்திரையை ஒத்திருக்கிறது
முதுகுத்தண்டை முறுக்கும் ஆசனங்கள் யோகாசனங்கள் முடிந்து ஓய்வு நிலைக்குப்போகுமுன் முதுகுத்தண்டை இரு பக்கமும் வளைத்து சமநிலைப்படுத்தும் அர்த்த மட்சியேந்திர ஆசனம் செய்வது உண்டு. இதர் போல் தொழுகையின் இறுதியில் கழுத்தை இரு பக்கமும் திருப்பப்ட்டு சலாம் கொடுக்கப்படுகிறது. . அர்த்த மட்சியேந்திர ஆசனம் அளவுக்கு இல்லாவிட்டாலும் மிக எளிதான இந்த சலாம் கழுத்து இறுக்கத்தைப் போக்க பெரிதும் உதவுகிறது
இப்படி படிப்படியாக விவரிக்கப்பட்ட தொழுகை தொடர்ந்து ஒவ்வொரு நிலையாக மாறிச் செய்யும்போது அங்க அவயங்கள் அனைத்துக்கும் ஒரு நல்ல உடல் பயிற்சியாய் அமைகிறது.
முன்பே குறிப்பிட்டது போல் தொழுகையில் ஒரு மன உறுதிப்பாடோடு கடைபிடிக்க வேண்டும். தொடர்ந்து இப்படி செய்யும்போது தொழுகை ஒரு நல்ல மனப்பயிற்சி ஆகிறது.
தொழுகையில் ஓதப்படும் வேத வசனங்கள், ஏக இறைவனைப் பார்ப்பது போல் உணர்தல் இவை ஒரு சிறந்த ஆன்மீகப் பயிற்சியைக் கொடுக்கிறது .
பள்ளிவாசலில் போய்த் தொழுவது வலியுறுத்திதிச் சொல்லப்படுகிறது..பள்ளி வாசலில் தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கை கொடுத்து நலம் விசாரிப்பதுண்டு . இது மனித நேயச் செயலாகவும் நல்ல சமூக நலம்  பயப்பதாகவும் அமைந்துள்ளது.
தொழுகையில் ஓதப்படும் வேத வசனங்கள், ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும்போது ஏற்படும் இயல்பான சுவாச மாற்றங்கள் எல்லாம் சேர்ந்து தொழுகையை தியானத்துடனும் மூச்சுப்பயிற்சியிடனும் ஒப்பிட வைக்கிறது. .
மொத்தத்தில், தொழுகை முறை   முழுமையான ஒரு நலன்காக்கும் பயிற்சியாய் அமைகின்றனது  இதை முறைப்படி  கடைப்பிடித்தால் மனித வாழ்வில் நிம்மதியும் உடல் நலமும் மன நலமும் ஆன்மீக நலமும் சமூக நலமும் பெற்று இன்ப வாழ்வு வாழலாம்.
 
ஐ.நா. சபையின் அங்கமான உலக சுகாதார நிறுவனம் நல வாழ்வு பற்றித் தரும் வறையரை:” சுகவீனமோ ஊனமோஇல்லாமல் இருப்பது மட்டும் நல வாழ்வு அல்ல;முழுமையான உடல் நலம், மன நலம் , சமூக நலம் ,ஆன்மீக நலம் ஒருங்கினைந்ததே முழுமை பெற்ற நல வாழ்வு “                
 .    .   ,
ஆசனங்களுக்கு ஒப்பான தொழுகை நிலைகள்
   http://www.alsunna.org/salat/PrayerBook01p25.gif1http://www.alsunna.org/salat/PrayerBook02p25.gif2http://www.alsunna.org/salat/PrayerBook03ap28.gif3          http://www.alsunna.org/salat/PrayerBook05ap29.gif  4                      5http://www.alsunna.org/salat/PrayerBook05bp30.gif
6http://www.alsunna.org/salat/PrayerBook05bp30.gif        7http://www.alsunna.org/salat/PrayerBook06p31.gif 8http://www.alsunna.org/salat/PrayerBook06ap31.gifhttp://www.alsunna.org/salat/PrayerBook07.gifhttp://www.alsunna.org/salat/PrayerBook08ap33.gifhttp://www.alsunna.org/salat/PrayerBook10ap35.gifhttp://www.alsunna.org/salat/PrayerBook10bp35.gif
                  9                                            10                                            11                                            12
முதல் இரண்டு படங்களும் தொழுகையின் ஆரம்ப நிலையாகும்.இவை ஆசனத்தின் நிற்கும் நிலையான தடாசனாவை ஒத்திருக்கின்றன                                                                                                     மூன்றாம் படம் ருக்கு நிலை முதுகுத்தண்டை இழுக்கும் ஆசனங்களை போலிருக்கிறது நான்கு ஐந்து ஆறாம் படங்கள் சஜ்தா நிலை அர்த்த சிரசானம் பாலாசனம் போல் அமைந்துள்ளது                                                                                                                                                                                         ஏழு எட்டு ஒன்பதாம் படங்கள் இருப்பு நிலை- வச்சிராசனம் போல் தோன்றுகிறது                       பத்தாம் படம் ஆள் காட்டி விரலை நீட்டுதல்-யோக முத்திரையை நினைவூட்டுகிறது
கடைசி இரண்டு படங்களும் தலையை வலது பக்கமும் பின் இடது பக்கமும் திருப்பி சலாம் கொடுக்கும் நிலை –முதுகுத் தண்டைமுறுக்கும் ஆசனங்களை (அர்த்த மட்சியேந்திர ஆசனம்) ஒத்து அமைந்துள்ளது

1தொழுகை நிலைகளுக்கு ஒப்பான யோகாசனங்கள்    
12                  345                                     6
7                                                                                                              8
1.தடாசனா ௨அர்த்த சிரசாசனா
3..பத்மாசனா 4.வச்சிராசனா
5..சிரசாசனா 6.சர்வாங்காசனா
7.பாலாசனா 8. அர்த்த மட்சியேந்திர ஆசனம்
தொழுகை நிலைகளும் யோகாசனங்களும்                          http://www.alsunna.org/salat/PrayerBook02p25.gif      நிற்கும் நிலை -தடாசனா                          http://www.alsunna.org/salat/PrayerBook05ap29.gif சுஜுது நிலை =அர்த்த சிரசாசனா ,பாலாசனhttp://www.alsunna.org/salat/PrayerBook06p31.gifஇருப்பு நிலை –வச்சிராசனா , பத்மாசனா





http://www.alsunna.org/salat/PrayerBook08ap33.gif   விரலை நீட்டுதல்\யோக முத்திரை


 http://www.alsunna.org/salat/PrayerBook10ap35.gifhttp://www.alsunna.org/salat/PrayerBook10bp35.gif             V     கழுத்தைத் திருப்புதல் அர்த்த மட்சியேந்திர ஆசனம்)
                                                        நிறைவுற்றது

பின் குறிப்பு
எல்லோரும் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மிகச் சுருக்கமாக எழுதி முடித்தேன், இன்னும் மிக விரிவாக எழுதலாம். ஆனால் யாரும் படிப்பார்களா என்பது பெரிய வினாவாக இருக்கிறது.
இறையருளால் விரைவில் வாழ்க்கைப்பயணத்தில் சந்திப்போம்

வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில் போய் (Google search)
Sherfuddinp.blogspot.com
என்று தட்டச்சுச் செய்யவும்

               


No comments:

Post a Comment