Saturday, 29 October 2016

வாணியம்பாடி வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 34.

மாலை மங்கும் நேரம் .மசமசவென்ற இருள். மெல்லிய மழைத்தூறல்.கீழே இருந்து ஒரு குரல் செலவு வந்திருக்கு,செலவு வந்திருக்குஎன்று. .ஒரு வித திகில்உணர்வோடு மாடிவீட்டிலிருந்து எட்டிப்பார்த்தேன்.
கீழே மிதிவண்டியில் மூட்டை முடிச்சோடு ஒருவர் நிற்க சரி மளிகைப்பொருட்கள் வந்திருகிறது என்று புரிந்து கொண்டேன். இப்படி ஒவ்வொரு ஊரிலும் வட்டார வழக்கைத் தெரிந்து புரிந்து கொள்வதற்கே சில நாட்களாகி விடும்.
ஏறுவாடியிலிருந்து வாணியம்பாடிக்கு கிளை மேலாளராக  மாறுதல்.முதலில் நான் மட்டும் செல்ல நெல்லையிலிருந்து வேலூர் செல்லும்  அரசு துரிதப் பேருந்தில் முன்பதிவு செய்திருந்தேன். . அந்தப்பேருந்து அன்று வரவில்லையோ இல்லை நான் தவற விட்டேனா என்பது நினைவில்லை. இரவும் பகலுமாக பல பேருந்துகளில் பயணித்து கொளுத்தும் கோடை வெப்பத்தில் உச்சி வெய்யிலில் வாணியம்பாடி போய்ச் சேர்ந்தேன்..பேருந்து நிலையம் அருகில் ஒரு விடுதியில் தங்கி, குளித்துவிட்டு அருகில் விற்ற நுங்கு நிறைய வாங்கிச் சாப்பிட்டு வெப்பத்தைத் தணித்துக்கொண்டு வங்கி கிளைக்குப்போனேன்...
கிளை மேலாளர் அறையில் குளிர்பதன வசதி இருந்தும் அதைப்பயன் படுத்தாமல் ஒரே ஒரு தரை மின்விசிறி.ஓட வேர்த்து விறுவிறுத்து உட்கார்ந்திருந்தார், ஏன் ஏ சி .வேலை செய்யவில்லையா என்று கேட்டேன். ஒரு மீட்டிங்கில்  ஏ ஜி  எம் என்னைப்பாரத்து ஏ சி எல்லாம் கொடுத்திருக்கிறோம் ஆனால் டிப்பாசிட் ஏறவில்லையே- என்று பலர் முன்னிலையில் கேட்டார்.. அதிலிருந்து நான் ஏசி போடுவதில்லை
என்றார். 
இப்படியும் சில மாறுபட்ட மனிதர்கள் வங்கியில் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு எனக்கு ஏ சி தேவைப்படுகிறது போட்டு விடுங்கள்என்று சொன்ன பிறகு போட்டு விட்டார்.
இவரிடம் கண்ட இன்னும் சில மாறுபாடுகள் :
ஒரு பெரிய இழுப்பறை நிறைய வங்கி இரு சக்கர வாகனத்தின் பழைய உதிரிப் பாகங்கள் இருந்தன .
ஒரு பெரிய அறையின் கால்வாசி இடத்தை அடைத்துக்கொண்டு பழுதடைந்த குழல் விளக்குகள், தேய்ந்து போன விளக்குமாற்றின் அடிக்கட்டைகள், ஒட்டடைகுச்சிகள் என்று குவிந்து கிடந்தன.
இவற்றுக்கெல்லாம் அவர் கொடுத்த ஒரே  விளக்கம் : தணிக்கை அதிகாரிகள் கேட்டால் காண்பிக்க வேண்டும்  என்பதுதான்
என் முப்பது ஆண்டுக்கு மேற்பட்ட வங்கிப்பணியில் எந்தத் தணிக்கை அதிகாரியும் இப்படிக் கேட்டதில்லை. நானும் தணிக்கை மேலாளராகப் பணி புரிந்தபோது கேட்டதில்லை அவற்றை எல்லாம் அப்புறப்படுத்திக் குப்பையில் கொட்டச் சொன்னேன்.
கிளை மேலாளராகப் போகும் எல்லா இடங்களிலும் நான் செய்யும் முதல் வேலைகளில் ஓன்று மேலாளர் அறையில் இருக்கும் சாமி படங்களை அகற்றுவது. .இது ஒரு சிரமமான வேலை. . அதிக எண்ணிக்கையில் இருக்கும் பெரும்பான்மை  மதத்தினர் மனம் புண்படாமல் முதல்நாளே செய்து முடித்து விட வேண்டும்.
வங்கிக்கிளை நகருக்கு நடுவே  நல்ல விசாலமான கட்டிடத்தில் அமைந்திருந்து .உரிமையாளர் அறுபது வயதிருக்கும்- சவுதியில் பல் மருத்துவப் பேராசிரியர்- வங்கியில் எல்லோரிடமும்  மேலாளர் முதல் கடை நிலை ஊழியர் வரை இனிமையாகப் பேசிப் பழகுவார் .
விடுதியில் தங்கி வீடு பார்க்கத் துவங்கினேன். பல் இடங்களில் தண்ணீர் பற்றாகுறை இருந்தது. இதை மனதில் கொண்டு வீடு பார்த்தேன். மாடியில் ஒரு வீடு பிடித்தேன்.
வீடு சிறியதுதான் ஆனல் தண்ணீர்ப் பிரச்சனை இல்லை.வங்கிக்கும் ஓரளவு அருகில் இருந்தது..நல்ல காற்றோட்டமான பகுதி;. மிக அருகில் இரண்டு பள்ளிவாசல்கள் .
ஏறுவாடியிளிருந்து சுமையுந்துவில் வீட்டுப் பொருட்களை ஏற்றி அனுப்பினோம்..பைசல் சுமையுந்துவில் போக  ஜோதி, பாப்டி, ஆத்திக்காவுடன் நான் மதுரை வரை மகிழுந்தில் போய், அங்கிருந்து மாலை தொடர் வண்டியைப்பிடித்து வாணியம்பாடி அருகில் உள்ள திருப்பத்தூரில் இறங்கி அங்கிருந்து மகிழுந்து பிடித்து வாணியம்பாடி வந்து சேர்ந்தோம்.
தொடர் வண்டி அதிகாலை (கிட்டத்தட்ட நடு இரவில் ) திருப்பத்தூர் வரும். இந்த வழித்தடம் எனக்குப் பழக்கமில்லாத புதிய வழி. அதனால் அடிக்கடி திருப்பத்தூர் வந்து விட்டதா என்று தொடர் வண்டி ஊழியரை நச்சரித்துக்கொண்டே இருந்தேன். ஒரு அளவுக்குமேல் பொறுக்க முடியாமல் அவர் சார் தயவு செய்து போய் நிம்மதியாகத் தூங்குங்கள் .என்னையும் தூங்க விடுங்கள் .உங்களை இறக்கிவிடுவது என் பொறுப்பு என்றார்.
தமிழ் நாட்டிலேயே தமிழ் தெரியாத மக்கள் வாழும் இடத்துக்குப் போவது எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. மிக உரத்த குரலில் பேசும் அவர்கள் முரட்டுத்தன்மையுடன் இருப்பார்கள் என நினைத்தேன். அதற்கு நேர் மாறாக பெரும்பாலோனோர் மிகவும் மென்மையாகப் பழகினார்கள்..
வாணியம்பாடி என்ற பெயருக்கு இரு விளக்கங்கள் சொல்வார்கள் /ஓன்று வாணிபத்தில் சிறந்த இடம் மற்றொன்று நிறைய வானம்பாடிகள் இருந்ததனால் என்பார்கள்பல சிற்றூர்களுக்கு மையமாக இருப்பதால் காய்கறி கீரை பழங்கள் புதிதாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும்..எங்கள் வீட்டுக்கு மிக அருகில் முனவர் என்பவர் கறிக்கடை வைத்திருந்தார். அங்கு போல நல்ல கறி எங்கும் பார்த்ததில்லை
வாணியம்பாடி பிரியாணி எல்லோரும் அறிந்ததே. நல்ல சுவையோடு, விலையும் மலிவாக இருக்கும். பிரியாணி மட்டுமல்ல பரோட்டா, குருமா கோழி இட்லி தோசை சைவ உணவு எல்லாமே சற்று விலை மலிவாகவும் தரமாகவும் சுவையாகவும்  இருக்கும் .
சென்னையிலிருந்து மாறுதலில் வந்த ஒரு அதிகாரி சைவ உணவுவின் மலிவான விலையைப்பார்த்து சற்று ஐயமும் அச்சமும் கொண்டு சில நாட்கள் சரியாகச் சாப்பிடாமல் இருந்தார் .போகப்போக பழகிக் கொண்டார் ,
வாணியம்பாடியில்தான் இரண்டாவது பேத்தி ரிபாத் பிறந்தது. இருபது கி மி தொலைவில் உள்ள ஆம்பூரில்.பெதஸ்த்தா கிறித்தவ மருத்துவ மனை அந்தப் பகுதியில் புகழ் பெற்ற ஓன்று. பரிசோதனைக்காக பாப்டியை அங்கு அழைத்துச் சென்றோம். அங்கு பேறுகால மருத்துவர் சோவியத் செல்வியை சந்தித்தோம்.
அவர் தேவையில்லாமல் கடுகடுத்தார் பேங்க் மேனேஜர் என்றல் உடனே பார்க்க வேண்டுமா என்றார். .இன்று நான் லீவில்தான் வந்திருக்கிறேன் . எனக்கு எந்த அவசரமும் இல்லை உங்களை உடனே பார்க்கச்சொல்லி நான் சொல்லவில்லையே என்றேன் . நீங்கள் சொல்லவில்லை ஆனால் இதுவரை மூன்று மருத்துவ மனை ஊழியர்கள் வந்து மேனேஜர் வந்திருக்கிறார் உடனே பாருங்கள் என்று அவசரப்படுத்தி என் வேலையைக் கெடுத்து விட்டார்கள் என்றார். அப்படி என்றால் அவர்களைக் கேளுங்கள் . இப்போது பார்க்க முடிந்தால் பாருங்கள் , நான் இன்று முழுக்கக் காத்திருப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்கனை இல்லை என்றேன். உடனே சினம் தணிந்து தன தவறை உணர்ந்து  மிக நன்றாகப் பார்த்ததுடன் பிறகு மிகவும் நட்பாகப் பேசத் துவங்கி விட்டார்..
ரிபாத் பிறந்தது டிசம்பர் இருபத்தி மூன்றாம் நாள். .கிருஸ்துமஸ் பேபி என்று செவிலியர்களும் மற்ற ஊழியர்களும் மிகச் சிறப்பாகவும் அன்பாகவும் கவனித்தார்கள் .
நல்ல குளிர் காலம் அது.. ஆம்பூர் வாணியம்பாடி பகுதியில் குளிர் சற்று அதிகமாகவே இருக்கும். அதுவும் மருத்துவமனை வளாகம் சுற்றி அடர்த்தியாக மரங்கள் இருப்பதால் இன்னும் கூடுதலாக சில் என்ற குளிர். ஒரு சிறிய வீடு அளவுக்குப் பெரிய அறை கொடுத்திருந்தார்கள்  (suit).பெரிதாகக் கட்டணம் ஒன்றும் இல்லை.
நான் தினமும் ஒரு முறையாவது இரு சக்கர வண்டியில் வாணியம்பாடி போய் வருவேன்.. புனித ரமலான் மாதம் அது. சில நோன்புகளை விட வேண்டிய சூழ்நிலை
பிள்ளையைப் பார்க்க முத்தக்காவும் சேக்கும் வந்தார்கள். எந்த சூழ்நிலையிலும் நோன்பை விடமாட்டேன் என்று அக்கா தொடர்ந்து நோன்பு நோற்றது. அதற்கு வேண்டிய வசதியை செய்து கொடுத்தேன்.
ஆத்திக்கா என்னோடு நன்றாக ஒட்டிக்கொண்டது..இரண்டு வயது இருக்கும் அப்போது.அவர்கள் அத்தம்மா (முத்தக்கா) ஊருக்குக்கிளம்பும்போது வாசல் கதவை அடைத்து போக வேண்டாம் என்று தடுத்து தன் பாசத்தை வெளிப்படுத்தியது
அதேபோல் வீட்டுப்பணிபெண்ணின் மகள் பதினாறு வயதிருக்கும்  அந்தப் பெண்ணை  ராதிக்கா ராதிக்கா என்று திரும்பத் திரும்ப அழைத்துக் கடுப்பேற்றும்.. அக்கா என்று கூப்பிடு என்று சொன்னால் காதில் வாங்காது.. ஒரு நாள் சாப்பாட்டு மேசை மேல் ஆத்திக்கா ஏறி விட்டது. இறங்கத்தெரியவில்லை. அருகில் இருந்த ராதிகாவை  அன்பொழுக அக்கா என்று உதவிக்கு அழைத்தது
ரிபாத் துருதுருவென்று இருக்கும். அடம் பிடித்து அழுகையில் வானில் வெண்ணிலா என்ற திரைப்பாடலை ஒலிக்கச்செய்தால் தன்னை மறந்து பாட்டில் லயித்து அழுகையை மறந்து விடும்.. அந்தப்பாட்டு வரும் வானத்தைப்போலே படம் பார்க்கப்போனோம். குழந்தை ரிபா தூங்காமல் படம் முழுக்க கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு  பார்த்தது.
துணிக்கடைக்கு ரிபாவைத் தூக்கிக்கொண்டு போயிருந்தோம்.. மொட்டைத்தலையுடன் பேன் பேன் (Fan Fanஎன்று சின்ன உருவம் கத்தியதில் எல்லோரும் சிரித்து விட்டாரகள்.
துணிக் கடைகளில் கீழே பாயில் அமரும்படி அமைப்பு இருந்தது பார்க்க சற்றுப் புதுமையாக (பழைமையாக ) இருந்தது
பொதுவாக வாணியம்பாடி மக்கள் வினயாமாக இல்லாமல் சற்று வெகுளித்தனமாக இருப்பார்கள்..
அரசு அலுவலரகளை ஒரு வித அச்சம் கலந்த மரியாதயுடன் பார்ப்பார்கள். அதே போல் வங்கி மேலாளரையும் அலுவலர்களையும் பார்ப்பது எனக்கு ஒரு மாறுபட்ட நிகழ்வாகத்தெரிந்தது .
வாணியம்பாடி என்றால் முதலில் பிரியாணி அடுத்தது தோல் தொழிற்சாலைகள் .சிறிய அளவில் இருந்து மிகப்பெரும் அளவு வரை தோல் தொழில் உரிமையாளர்களும் வணிகர்களும் இருக்கிறார்கள். . அச்சம் ,கூச்சம் தயக்கத்தினால் உரிமையாளர்கள் கூடிய வரை வங்கிக்கு வருவதைத் தவிர்த்து விடுவார்கள்.
ஒரு மிகப்பெரும் தொழிலதிபரைச் சந்திக்கப் போயிருந்தேன். மேலாண்மையில் முதுநிலைப்பட்டம் பெற்ற இளைஞர் . மாதத்தில் பத்துப்பதினைந்து நாள் வெளி நாடுகளுக்குப் பறந்து கொண்டிருப்பவர்.. அவரிடம் நீங்கள் ஏன் வங்கிக்கு வருவதில்லை என்று கேட்டேன். எல்லோரும் சொல்லுவது போல்தான் அந்தப் படித்த இளைஞரும் சொன்னார். எனக்கு வங்கிக்கு வரத் தயககமாக இருக்கிறது
இது போல் வங்கிக்கு மிக அருகில் ஒரு .பல் மருத்துவர் அவர் துணைவி மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார் . அவரும் தான் வங்கிக்கே போனதில்லை இதுவரை யாரும் உங்களைப்போல் வந்து கேட்டதும் இல்லை என்றார். அவருக்கு ஒரு கணக்குத் திறந்து அதில் விரைவில் பெரும் பணம் சேர்ந்தது கண்டு மகிழ்ந்தார். வங்கியில் ஒரு கூட்டத்திற்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து பல் பாதுகாப்புப் பற்றி ஒரு உரையாற்றவும் செய்தேன். வங்கிப்பணியாளர்கள் இவ்வளவு நன்றாக, எளிமையாகப் பழகுவார்களா என்று மகிழ்வும் வியப்பும் அடைந்தார்.
இதை எல்லாம் பார்க்கும்போது பெண்களைப்போல் ஆண்களும் மனதளவில் ஒரு புர்க்காவுக்குள் ஒளிந்திருக்கறார்களோ என எண்ணம் தோன்றியது
பெரும்பாலும் பெண்கள் புர்க்கா அணிந்து முகத்தையும் மூடி கண்களுக்கு மட்டும் ஒரு வலைப்பகுதி இருக்குமாறு திரையிட்டிருப்பார்கள் . திருமணச்சீர் வரிசையில்  புடவை வைப்பது போல் தரத்துக்குத்தக்க நூற்றுக்கணக்கில் புர்க்காவும் வைக்க வேண்டுமாம் . புர்க்காக்கள் மிகுந்த வேலைப்பாட்டுடன் மிகக் கவர்ச்சியாக கருப்பு நிறத்தில் இருக்கும்.
 (கருப்புத்தான் மிகவும் எளிதில் கவனத்தை ஈர்க்கும் நிறம் என்பது மனோதத்துவ அறிஞர்கள் கூற்று பிறகு எதற்கு புர்கா ?)
தொடர் வண்டியில் பயனிக்கும்போது வண்டி ஆம்புரைத் தாண்டியதும் புர்காக்கள் விலகி விடும்
தில்லித் துருக்கர் வழக்கமடி முகத்தைத் திரையிட்டு மறைத்தல் என்ற பாதியார்  பாடல் வரி நினைவுக்கு வரும்..
இசுலாமியா கல்லூரி வாணியம்பாடியின் பெருமைகளில் ஓன்று .அந்தப்பகுதி இசுலாமியர்களின் கல்வி அறிவை உயர்த்தி அதன் மூலம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் துவங்கப்பட்டது . ஆனால் இசுலாமிய மக்கள் தொகைக்கு ஏற்ப  மாணவர்கள் எண்ணிக்கை இல்லை என்பது வருத்ததுக்குரியது .படிக்கும் சில இசுலாமிய மாணவர்களும் தங்களை ஒரு குழுவாக அமைத்துக்கொண்டு பிறருடன் கலக்காமல் ஒரு தீவு போல் இயங்குவதாய் அறிந்தேன்.
கல்லூரி ஆசிரியர்கள் பலருக்கு வங்கிக்கடன் கொடுத்ததால் முதல்வர் பேராசிரியர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் இந்தக்கல்லூரியில் முன்பு தமிழ்த்துறையில் பணியாற்றியவர் .அகட விகடம் புகழ் அப்துல் காதர் ஐயா  தமிழ்த்துறை தலைவர். இன்னும் நிறைய தமிழ் அறிஞர்கள் குடத்தில் இட்ட விளக்காய் இருந்தார்கள் .ஜனாப் இக்பால் நல்ல புலமை வாய்ந்த கவிஞர் ,மிக அடக்கமாக அமைதியாக இருப்பார். அதனாலேயே வெளிச்சத்திற்கு வரவில்லை என எண்ணுகிறேன் .
பொருளாதாரத் துறையில் ரீடராகப் பணியாற்றிய முனைவர் பாஷா மிக நெருங்கிய நண்பர். இசுலாம் , பொருளாதாரம் என்று பல செய்திகளைப் பற்றி கலந்துரையாடுவோம். கல்லூரியில் நடந்த அகில இந்திய பொருளாதார மாநாட்டுக்கு என்னை ஒரு தலைப்பு கொடுத்து ஆங்கிலத்தில்  எழுதச்சொன்னார். எனக்குத் தெரிந்ததை நான் எழுதிகொடுத்தேன்..மிக நன்றாக தெளிவான நடையில் இருந்ததாய்ப் பாராட்டினார். இன்னும் அவரோடு தொலைபேசி,கட்செவி தொடர்பில் இருக்கிறேன்.
இறைவன் அருளால் என் பணிக்காலத்தில் இசுலாமியா கல்லூரி வளாகத்தில் வங்கியின் விரிவுக்கிளை துவங்கப்பட்டது.திறப்பு விழாவில் வங்கி வட்ட அலுவலகம் , கோட்ட அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் (GM., Dy.G.M., A.G.M. D.M ) பங்கெடுத்துச் சிறப்பித்தனர் .வாணியம்பாடியின் பெரும்புள்ளிகள் அனைவரும் வந்திருந்தனர் . தற்போது அமைச்சராக இருக்கும் மருத்துவர் நிலோபர் கபில் (அப்போது நகராட்சித் தலைவி ) விழாவில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார் . விழாவையொட்டி கல்லூரி நிர்வாகம் ஒரு சிறப்பான பிரியாணி விருந்து வைத்தார்கள் பொது மேலாளர் திரு ஜார்ஜ் மிகவும் விரும்பிச் சுவைத்தார்.
விழாவின் ஒவ்வொரு நிமிடமும் திட்டமிடப்பட்டு நேரந்தவறாமல் நிறைவேற்றப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜனாப் மேஜர் சையத் சகாபுதீன் இப்படியொரு ஒழுங்கை நான் ராணுவத்தில்தான் கண்டிருக்கிறேன் என்று பாராட்டினார். கல்லூரி வளாகத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில்  முதல் முறையாகப் பெண்கள்  கலந்து கொண்டது ஒரு சிறப்பு..
வாணியம்பாடியில் ஐம்பது அறுபது வயதுக்காரர்களில் பலர் பட்டம் அல்லது அதற்கு மேல் படித்திருப்பார்கள் ஆனால் அதற்கு அடுத்த தலைமுறையில் கல்வி பயின்றவர்கள் எண்ணிக்கை உயர்ந்ததாய்த் தெரியவில்லை
இந்நாள் அமைச்சர் முன்னாள் நகர்மன்றத் தலைவி மரு. நிலோபர் கபீலின் துணைவர் ஜனாப் கபீலும் ஒரு மருத்துவர் . மிகவும் கைராசிக்காரர் .ஒரு பெரிய அறையின் நடுவில் அமர்ந்திருப்பார். சுற்றி நிறைய நோயாளிகள் காத்திருப்பார்கள். முகத்தில் புன்னகை மாறாமல், அமைதியாய் எல்லோரையும் பார்த்து மருத்துவம் செய்வார். மருந்து சீட்டு எழுத ஒரு உதவியாளரை வைத்திருக்கும் ஒரே மருத்துவர் நான் அறிந்த மட்டில் இவர்தான். அந்த அளவுக்குக் கூட்டம். அந்தக் கூட்டத்திலும் நான் போனால் உடனே கவனித்து அனுப்பி விடுவார்,.
பொதுவாக வங்கி கிளை ஊழியர்கள் நல்ல முறையில் பணியாற்றி ஒத்துழைப்புக் கொடுத்தார்கள் .என் நேர்மையும் வாடிக்கயாளர்களின் நலன் கருதும் பாங்கும் எனக்கு ஊரில் ஒரு நல்ல பேரைக் கொடுத்தன. அரசு அலுவலகம், வாடிக்கையாளரின் இடங்கள் எங்கு சென்றாலும் காத்திருக்க வேண்டியதில்லை .
தினசரி வைப்புத்தொகை கணக்கு முகவராகப் பணியாற்றிய சீனு என்பவர் எனக்கு வாணியம்பாடி போனதில் இருந்து அங்கு வாழ்ந்த மூன்றாண்டுகளும் வங்கிப் பணிகளிலும் வீட்டுப் பணிகளிலும் உறுதுணையாக இருந்தார். சிரித்த முகம், மறுக்காமல் எந்தப்பணியும் செய்யும் பழக்கம், எளிமை இவை சீனுவின் சிறப்பு குணங்கள்.
ஊரில் உள்ள எல்லோரையும் செல்வந்தர்கள் ஏழைகள் என்று பாகுபாடில்லாமல் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பார். . யாரவது கடன் கேட்டு வந்தால் அவர்கள் எங்கெங்கு ஏற்கனவே கடன் வாங்கியுள்ளார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்வார்.
ஒரு முறை பாப்டியை மருத்துவ சோதனைக்கு ஆம்பூர் அழைத்துச்செல்ல மகிழுந்து கொண்டு வாச் சொன்னேன் எதற்கு சார் கார் ? எப்படியம் முன்னூறு ரூபாய் ஆகும், வீட்டு வாசலில்ஆட்டோவில் ஏறி பஸ் ஸ்டாண்டுக்குப் போய் அங்கிருந்து பஸ்ஸில் ஏறி மருத்துவ மனை அருகில் இறங்கி அங்கிருந்து தேவைப்பட்டால் ஆட்டோ பிடித்துப் போய் வந்தால் நூறு ரூபாய் கூட மொத்தம் ஆகாது என்று சொல்லி ஆட்டோ பிடித்து வந்து  விட்டார் . இது ஒரு எடுத்துக்காட்டுதான் இது போல் பல நிகழ்வுகள்
வீடு பார்ப்பது , பணிப்பெண் அமர்த்துவது போன்ற பலவற்றை மிக எளிதாக முடித்துக் கொடுத்தார். மீண்டும் பாரதியார் பாடல் வரிகள் நினைவு .நண்பனாய் மந்திரியாய் நல்ல மனிதனாய்  பார்வையிலே சேவகனாய்
வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் ஆண்டுகொரு முறை நடத்தும் முத்தமிழ் விழாவில் நல்ல இலக்கியச் சொற்பொழிவுகள் கேட்கலாம் .ஒரு அரசியல் வாதியாக மட்டும் நான் அறிந்திருந்த முன்னாள் அமைச்சர் திரு காளிமுத்துவின் மறு பக்கத்தை நான் கண்டு வியந்தது முத்தமிழ் விழாவில்தான். அழகு தமிழ், தெளிவான நீரோட்டம் போன்ற நடை  எண்ணிலடங்கா  திருக்குறள் மேற்கோள்கள் என்று தன் உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாது மணிக்கணக்கில் நின்று கொண்டே உரையாடி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தி அசர வைத்தார்...(அவருக்கு இதய அறுவை வைத்தியம் செய்து சில வாரங்களே ஆகியிருந்தன ) 
வாணியம்பாடி ஜனாப் அக்பர் கவுசர் பற்றி பலரும் அறிந்திருக்கலாம் தொலைக்காட்சிகளில் மன்னர் போல் உடை அணிந்து தோன்றுவார். .எனக்கு ஒரு நல்ல நண்பர், அண்டை வீட்டுக்கார் வங்கியின் நல்ல வாடிக்கையாளர் .எங்கள் வீட்டுக்கு எதிரில் அவருடைய மருத்துவமனை . மிகப்பெரிய கட்டடம். சுவர் முழுக்க டைல்ஸ் ..பைத்துல் முகத்தஸ் போன்ற அமைப்பில் ஒரு பெரிய கோபுரம். பல விசாலமான அறைகள் கூடங்கள்.தொழுக தனி இடம்  ஒரு அறை பண்டைய கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டு மின் விசிறி இல்லாமலே எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
உழைப்பால் முன்னேறிய அவருக்கு எங்கள் வங்கி மேல் மிகவும் பற்றுதலும் பாசமும் உண்டு. ஓன்று அவரின் ஆரம்ப காலத்தில் வங்கி கடன் கொடுத்து உதவியது. அடுத்து வாழ்க்கையில் முன்னேறிய நிலையில் அவர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டபோது வங்கி விடுமுறை நாளில் அந்நியச் செலாவணி வாங்கிகொடுத்தது.. இவை இரண்டையும் மறக்காமல் எப்போதும் குறிப்பிடுவார்.
இப்தார் விருந்து பெரிய அளவில் சிறப்பாக நடத்துவார். ஒரு முறை (குர்பானி) .,ஒட்டகக்கறி கொடுத்து விட்டார். மிகவும் உப்பாவாகவும் கடினமாகவும் இருந்தது..முடிந்த அளவுக்கு சாப்பிட்டோம்.
வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அக்பர் கவுசரின் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வேன், சிற்றுண்டி, காப்பி கொடுத்து உபசரிப்பார்.
தன் இரு மகள்களுக்கு ஒரே நாளில் அக்பர் கவுசர் திருமணம் நடத்தினர். பொதுவாக  திருமண அழைப்பிதழில் நேரம் குறிப்பிட மாட்டார்கள்.. லொகருக்கு முன் திருமணம் நடக்கும் ,வசதி படைத்தவர்கள் ,இல்லாதவர்கள் எல்லோரும் திருமணம் நடத்துவது பள்ளிவாசளில்தான்.. திருமணத்தன்று விருந்தில் பிரியாணியும் வெங்காயமும் மட்டுமே பரிமாற வேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு .
ஆம்பூரில் நடந்த இரு மிகப்பெரிய தொழில் அதிபர்கள்  இணைந்த மண விழாவில் மிக ஆடம்பரமான உணவு பரிமாறப்பாட்டதாம். ஊர்க்கட்டுப்பாட்டை மீறி. லாட்டரி சீட்டு வாங்கியதற்காக ஒரு எளியவர் பள்ளிவாசலால் கடுமையாகத் தண்டிக்கப்படதும் ஆம்பூரில் நடந்தது,
பெங்களூருக்கும்  சென்னைக்கும் இடையில் வாணியம்பாடி அமைந்துள்ளதால் நிறைய தொடர் வண்டிகள் வாணியம்பாடியைக்கடந்து செல்லும். . சில வண்டிகள் வாணியம்பாடியிலும் பல ஆம்புரிலும் எல்லா வண்டிகளும் ஜோலார்பேட்டை சந்திப்பிலும் நிற்கும்.. வாணியம்பாடியில் வர வேண்டிய சந்திப்பு சிலரின் தன் நல மனப்பாங்கால்  அருகில் உள்ள சிறிய ஊரான ஜோலர்பெட்டைக்கு போய் விட்டது. ஜோலார்பேட்டையின் சிறப்பு உணவு சமோசா .
வங்கியின் கோட்டஅலுவலகம் சேலத்தில் இருந்ததால் அடிக்கடி அங்கு போக வேண்டி இருக்கும். ஒரு முறை பகலில் குளிர் பதனப் பெட்டியில் சேலம் சென்றேன், கழிவறை அருகே ஒரு ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாக யாரையும் சட்டை செய்யாமல்  இருந்தார்கள்
சென்னை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் எங்கள் கிளையின் வழக்கு ஓன்று இருந்ததால் மாதம் ஒருமுறை அங்கே போக வேண்டி இருக்கும் ,சென்னயில்ருந்து வழக்கறிஞர் தொலைபேசியில் நாளை கண்டிப்பாக வந்து விட வேண்டும் என்று பயமுறுத்துவது போல் சொல்வார். காலை ஆறுமணி தொடரியைப் பிடித்து பத்து மணிக்கு தீர்ப்பாயம் போய்ச் சேருவேன், வழக்கு  தள்ளி வைக்கப்பட்டது என்ற அறிவிப்பைப்படித்து விட்டு திரும்பி விடுவேன்..பெரும்பாலூம் ஒவ்வொரு மாதமும் இது போல் நடக்கும். ஒரே முறை வழக்கு நடந்தது, தீர்ப்பாயத் தலைவர் ஏன்ன சொன்னார் என்று விளங்கவில்லை. எனக்குத்தான் விளங்கவில்லை என்றால் அருகில் இருந்த வழக்கறிஞர் இவர் என்ன சொல்கிறார் என்று என்னிடம் கேட்டார் 
வாணியம்பாடியில் உணவு வாரத்தில் ஏழு நாளும் மூன்று வேளையும் அசைவம்தான். அதிலும் மீன் மிகக்குறைவு . ஆடு மாடு கோழிதான் அதிகம்.சாம்பார் ரசம் மோர் அவர்கள் அறியாதா ஒன்று; அதனால் பெரிய உடல் நல பாதிப்பு வந்ததாய் எனக்குத் தெரியவில்லை .. வாணியம்பாடி பீப் பிரியாணியை சுவைக்க அருகில் உள்ள ஊர் மக்கள் வருவார்கள்
உருது தாய் மொழி என்றாலும் அதில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
ஒரு இளம்பெண்ணுடன் முதியவர் ஒருவர் வங்கிக்கு வந்தார் .உங்கள் பேத்தியா என்று கேட்டேன். ஒரு அசட்டுச் சிரிப்புடன் என் துணைவி என்றார் .அதோடு இந்த மாதிரி அசட்டுக் கேள்வி கேட்பதை நான் நிறுத்தி விட்டேன்..
ஒருமுறை  மைத்துனர் பீர் வாணியம்பாடி வந்திருந்தவர் தினத்தந்தி செய்தித்தாள் வாங்கி வந்தார். அதில் வந்திருந்த ஆயுள் காப்பீட்டு அறிவிப்பைப் பார்த்து  பைசல் வளர்ச்சி அதிகாரி பதவிக்கு விண்ணப்பம் அனுப்பினார்,
கவிக்கோவின் மருமகன் ஜனாப் அயாஸ் பாஷா  வாணியம்பாடி ஆயுள் காப்பிட்டு அலுவலகத்தில் வளர்ச்சி அதிகாரியாக இருக்கிறார். அவரை அணுகி விபரம் கேட்டேன்.  படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும்- விண்ணப்பம் அனுப்புவது எழுத்துத் தேர்வு, நேர்முகம், மருத்துவப் பரிசோதனை எல்லாவற்றிலும் வழி காட்டி, வழி நடத்தி உதவினார்.,.இன்றும் அவருடன் நட்பு தொடர்கிறது , நாங்கள் ஹஜ் பயணம் போன அல்சபா வில் அவர் தன் துணைவியாருடன் ஹஜ் பயணம் மேற்கொண்டார். அவர் போன குழுவில் முத்தக்காவும் ஹஜ் பயணம் போனது,.
வாணியம்பாடியில் நிறைய பள்ளிவாசல்கள் உள்ளன. பெருநாள் தொழுகை ஏழு எட்டு இடங்களில் நடக்கும். எல்லோரும் கலந்து கொள்ள ஏதுவாக நேர இடைவெளி இருக்கும். திடல்களில் தொழ வருபவர்கள் செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டு வந்து தங்கள் முன்னால் வைத்துக்கொள்வார்கள் பேஷ் இமாம் உட்பட . ஒரு பெருநாள் தொழுகை நேரத்தில் சுமை தொடர்வண்டி ஓன்று  வழி மறிப்பது போல் வெகு நேரம்  இருப்புப்பாதை கேட்டில் நிறுத்தி வைக்கப்பட்டது 
நூரக்கா மகனுக்குப் பெண் பார்க்க பீருடன் வாணியம்பாடி வந்தது. எங்கள் வீட்டுக்கு மிக அருகில் பெண் வீடு. பெண்ணின் அப்பா இசுலாமியா  கல்லூரி ஆசிரியர். அவர் திருநெல்வேலி பேட்டை  ஜனாப் தானா மூனா அஜீசின் மருமகன். அந்தப்பெண் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தது
லியாகத் அலி அண்ணன் ஒரு முறை வந்து சில நாட்கள் தங்கிப் போனது
பைசலுக்குப் பெண் பார்க்கத் துவங்கியதும் வாணியம்பாடியில்தான் . இந்துவில் வரும் விளம்பரங்களைப் பார்த்து , பொள்ளாச்சி ,உடுமலைப்பேட்டை போன்ற பல இடங்களுக்குப் போய் வந்தது ஒரு இனிய அனுபவமாய் இருந்தது
ஆந்திர மாநில எல்லையிலும் கர்நாடகாவுக்கு அருகிலும் இருப்பதால் தெலுங்கு, கன்னடம் உருது மொழிகள் எல்லோருக்கும் தெரியும்
ஏலகிரி, மலை வாணியம்பாடியின் அருகில் உள்ள ஒரு நல்ல சுற்றுலாத்தலம் 
அரசு சந்தன எண்ணெய் ஆலை எங்கள் வங்கி வாடிக்கையாளர் ஒரு கிலோ எண்ணெய் பதினாறு ஆயிரம் ரூபாய். .ஆலையில் ஒரு முறை நிறைய எண்ணெய் களவு போய் விட்டது . திருடனுக்கு அதை விற்க முடியவில்லை. எனவே திரும்பக்கொண்டு வந்து ஆலைக்கு அருகில் போட்டு விட்டு போய் விட்டதாய்ச் சொன்னார்கள்
மிக நீளமாகப் போய்க்கொண்டிருகிறது . ஒரு சில செய்திகளைச சொல்லி நிறைவு செய்கிறேன்..
வாணியம்பாடியின் தோல் தொழில் அதிபர்கள், வணிகர்கள் பலரிடையே ஒரு வித  அறியாமை நிலவுகிறது  .. அரசுக்கு வரி செலுத்துவது இசுலாத்திற்கு மாறானது என்பது போல் பேசுவார்கள். வரியைத் .தவிர்க்க அவர்கள் கணக்காயருக்குக் கொடுக்கும் ஊதியம் வரி அளவுக்கு இருக்கும்.
இன்னொன்று பந்தா பண்ணுவது,.ஒரு வணிகர் நடப்புக் கணக்கு திறக்க வங்கிக்கு வரும்போது அவருடன் அவருடைய மேலாளர் எழுத்தர் பணியாளர் எல்லோரும் வருவார்கள். சிறிய அளவில் ஒரு தோல் கடை திறக்க தேவைக்கு மேல் ஊழியர்களை அமர்த்துவார்கள். கடனில் மகிழுந்து வாங்குவார்கள்  
இதற்கெலாம் முற்றிலும் மாறானவர் எங்கள்கிளையின் மிகப் பெரிய வாடிக்கையாளரான வீ கே எம் என்பவர் . மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் அவர் தொழிலாளர்களோடு சேர்ந்து வேலை செய்வார். சென்னைக்குப் பேருந்து, தொடரியிலேயே போய் வருவார்.. தப்லீக் ஜமாத்தில் மாதம் ஒரு முறை போய் வருவார், வங்கி ஊழியர்களுக்கு  அவர் அவ்வப்போது பிரியாணி விருந்து வைக்கும் பழக்கத்தை நான் நிறுத்தி விட்டேன்..
வங்கி மேலாளர் என்ற முறையில் சுழல் கழகத்தில் (ரோட்டரி கிளப்) உறுப்பினராய் இருந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டில் ஜோதியுடன் கலந்து கொண்டேன்.பாப்டி ஷேக் பிள்ளைகள் விருந்தினராயக் கலந்து கொண்டார்கள் பன்னாட்டு அமைப்பான சுழல் கழகத்திலும் சாதி, மதப் பிரச்சனை கண்டு வருந்தினேன் 
பீ மூ மாமா மறைத்தது வாணியம்பாடி வாழ்கையில் ஒரு சோக நிகழ்வு. தஞ்சை அரசு மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து அங்கேயே காலமானது
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கடலூர் கிளையில் பைசல் பணியாற்றி வந்தார். .ஜோதியும் நானும் கடலூர் போய் பைசலுடன் சில நாட்கள் தங்கி வந்தோம் .நகரின் மையப்பகுதியில் இருந்த பைசலின் அறை நல்ல தண்ணீர் வசதியுடன் விசாலமாக இருந்தது .
சென்னைக்கு மாறுதல் கேட்டு எங்கள் வங்கியில் பலர் ஆண்டுக்கணக்காகக காததிருக்கையில் எனக்கு நான் கேட்காமலே வாணியம்பாடியிலிருந்து சென்னை பெரம்பூர் கிளைக்கு மாறுதல் வந்தது ..வழியனுப்பு விழாவுக்கு வந்த ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் ஒரு சிறந்த வங்கியாளரை வாணியம்பாடி இழக்கிறது என்று குறிப்பிட்டார்.
இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்.
சென்ற பகுதி பற்றிக் கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்த பாப்டி , சகோதரிகள் ஜோதி, மெஹராஜ் வங்கி முன்னால் மு. நி.மேலாளர் திரு ராஜா சுப்ரமணியன் அனைவருக்கும் நன்றி 
பாப்டி பைசல் எழுதிய துணுக்கு கோகுலத்தில் எருமை மாடு தண்டவாளத்தில் படுத்திருக்கும் படத்துடன் வெளியானதை நினவு கூர்ந்தது .
ஜோதி அந்த ஊருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் உடனே குடி என்ற பெயர் மட்டும் வேண்டாம்.
மெஹராஜ்  மிக அருமை. உடன்குடியில் நீ வேலை பார்த்ததே எனக்கு இப்போதுதான் தெரிகிறது .பொருத்தமான பெயர்தான் பக்கத்து ஊர் உபசரிப்பால்  
Raja S Manian  நன்றாக உள்ளது.வாழ்த்துகள்.
இ(க)டைச் செருகல்கள்
பகுதி பெரியது என்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட செருகல்கள்
1.வாணியம்பாடி முத்தமிழ் விழாவில் கவிக்கோ கலந்து கொள்வதை அறிந்த கலைஞர் தானும் அதில் கலந்து கொள்ள விரும்பினார். முதல்வராயிருந்த அவரின் பாதுகாப்புக் கருதி பயண ஏற்பாடுகள் பண்ணாமல் விட்டு விட்டார்கள் உதவியாளர்கள் . இதனால் சினமுற்ற கலைஞர் தமிழ் ஆர்வத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புறந்தள்ளி விட்டு தான் மட்டும் வாணியம்பாடி வந்து விழாவில் கலந்து சிறப்பித்ததாய்ச் சொல்வார்கள்.
2,சென்னையிலிருந்து என் இனிய நண்பர் வழக்கறிஞர் ஹாஜி ஜனாப் ஹனீப் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அக்பர் கவுசரைப் பார்க்க வேண்டும் என்றார் . அவரின் சக வழக்கறிஞரின் துணைவிக்கு சிறுநீர் குருதியாகவே போகிறது . பல ஆண்டுகள் பல லட்சங்கள் செலவழித்து சென்னையில் உள்ள பெரிய மருத்துவ மனைகளில் காண்பித்தும் சரியாகவில்லை .அக்பர் கவுசரிடம் காண்பிக்க வேண்டும் என்றார்.
அக்பரை ஒரு  நல்ல நண்பராக  அண்டை வீட்டுக்காரராக  வங்கியில் நல்ல வாடிக்கையாளராக நன்றாகத் தெரியும். நீங்கள் வந்தால் நான் நேரில் அழைத்துச் செல்கிறேன் என்றேன்..
அடுத்த ஓரிரு நாட்களில் தன் நண்பருடன் ஹனீப் வந்தார். நோயாளியை அழைத்து வர வேண்டாம் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் மட்டும் என்று அக்பர் சொல்லி விட்டார். அவரை சந்தித்து அவர் கொடுத்த ஒரு மாத மருந்து (மூவாயிரம் ரூபாய் என நினைவ) வாங்கிக்கொண்டு சென்னை சென்றார்கள். அதோடு நான் இதை மறந்து விட்டேன்.
சில நாட்களுக்குப்பின் ஹனீப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த நோயாளி முழுமையாக குணம் அடைந்து விட்டார் என்று சொன்னார் . எல்லாம் அவன் செயல்
3.வங்கி கட்டிட உரிமையாளர் சவுதியில் பல் மருத்துவப் பேராசிரியர். அவர் சொன்ன ஒரு செய்தி .
அவர் தன் அமெரிக்க நண்பருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கையில் அந்த அமெரிக்கர் நான் இன்று மிக மகிழ்ச்சியாய் உணர்கிறேன் என்றாராம். ஏன் என்று கேட்டதற்கு, “  என் மகள் திருமணம் இன்று என்றார். யார் மணமகன் , நீங்கள் திருமணத்திற்கு போகவில்லையா என்று இவர் கேட்க யார் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது . இன்று திருமணம் என்று என் மகள் அனுப்பிய மின்னஞ்சலைப் பார்த்து விட்டு நான் வாழ்த்து அனுப்பி விட்டேன் . அவ்வளவுதான் என்றாராம்
இறைவன் அருளால்     
                                                    இன்னும் இரண்டு மூன்று வாரங்கள்                                
                                                                                                                                               பயணம் தொடரும்  
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com

 .