பயண இடைவேளை போல் வேலூரில் சிறிது காலம் அத்தா பணியாற்றியது
.நெல்லையிலிருந்து பொள்ளாச்சி –வேலூர் மீண்டும் திருநெல்வேலி
மிகக்குறுகிய காலமே அத்தா வேலூரில் பணியாற்றியதால் சென்ற பகுதியைப்
போலல்லாமல் சுருக்கமாக முடியம் என நினைக்கிறன்
பொள்ளாச்சியில் நான் வேதியியல் இளநிலை முதலாம் ஆண்டு
படித்துக்கொண்டிருந்தேன். வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியில் வேதியியல் படிப்பு
இல்லாததால் பொள்ளாச்சியில் ஒரு அறையில் தங்கி படிப்பைத் தொடர்ந்தேன்.
பொள்ளாச்சியில் இருந்து வீட்டுச் சாமான்களை ஏற்றிச்சென்ற சுமையுந்தில்
நானும் வேலூர் போனேன்.
நல்ல முறையில் நகராட்சிக் குடியிருப்பு இருந்த ஊர்களில் வேலூரும்
ஓன்று .அந்தப்பகுதிக்குப் பேரே ஆபிசர்ஸ் லைன் என்பதுதான். (நிறைய விளம்பரங்களில்
ஆபீசர்ஸ் லேன் என்று தவறாகக் குறிப்பிடுவார்கள்.)
விசாலமான வீடு சுற்றி பெரிய தோட்டம்..ஒரு நல்ல தோட்டக்காரர் இருந்தார்
.அவர் உழைப்பில் நிறைய கத்திரி வெண்டைச் செடிகள் முளைத்து நன்றாகக் காய்த்தன
.ஏற்கனவே இருந்த அவரைப் பந்தலும் காய்த்துக் குலுங்கியது . ஒரு தொட்டியில் மீன்
கூட வளர்த்த நினைவு. (அலங்கார மீன் அல்ல) குறுகிய காலமே வேலூரில் இருந்ததால் மாடு
வாங்கவில்லை என நினைவு
வரலாற்றுச்சிறப்பும் தொன்மையும் வாய்ந்த வேலூர் பெரிய வணிக மையமும்
கூட் தோல், தோல் பொருட்கள் , வெல்லம்,
காய்கறி , அரிசி , தானிய வகைகளுக்கு மிகப்
பெரிய சந்தை . நீளங்காடி எனப்படும் லாங்கு பசார் பெயருக்கேற்ப மிக நீண்டு
இருக்கும் ஒரு உயிரோட்டமுள்ள வணிக வீதி
முள்ளுக் கத்தரிக்காய் அந்த வட்டாரத்தில் மட்டும் கிடைக்கும் ஒரு சிறப்பான
காய். பொதுவாக காய் கறிகள் புதிதாக, விலை மலிவாகக் கிடைக்கும்
,சகாவைப் பள்ளியில் சேர்க்க நகராட்சிப் பணியாளருடன் நானும்
போயிருந்தேன், அந்த வெங்கடேஸ்வரா உயர்நிலைப்பள்ளி – (திருப்பதி கோவில்
நிர்வாகத்தின் கீழ் இயங்குவது)) யில் முன்னாள்
குடியரசுத்தலைவர் திரு ராதாக்கிருட்டிணன்
படித்ததாய் கேள்விபட்டிருக்கிறேன்..
பள்ளிகட்டணம் செலுத்தப்போகையில் நூறு ரூபாய்க்கு சில்லறை இல்லை ,
மாற்றிக்கொண்டு வாருங்கள் என்று சொல்லி விட்டர்கள் . பல இடங்களில் அலைந்து சில்லறை
கிடைக்கவில்லை. ஒரு கடையில் இதுதான் சாக்கு என்று தன்னிடமிருந்த நாணயங்கள்
அனைத்தையும் எங்கள் தலையில் கட்டி விட்டர.. அதை தூக்கிக்கொண்டு
பள்ளிக்குப்போனோம்..
“ஒரு உணவு விடுதியில் காப்பி சாப்பிட்டு எளிதாக சில்லரை
வங்கியிருகக்கலாமே “ என்றார் பள்ளி ஊழியர். இப்படி ஒரு நினைப்பெல்லாம் எங்கள்
சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஓன்று. வீடு வீட்டை விட்டால் பள்ளி, கல்லூரி இந்தக்
கட்டுக்கோப்பில்தான் வளர்ந்தோம்,.அதனால் எந்தக்குறையும் ஏற்படவில்லை . இன்னும்
சொல்லப்போனால் அந்த ஒழுங்கு ,கட்டுப்பாடுதான் இன்றும் வாழ்க்கைச்சக்கரத்தை சீராகச
சுழலச்செய்கிறது
காட்பாடி சந்திப்பு வேலுரின் பெரிய தொடரி நிலையம். இது போக வேலூர்
நகரிலும், கண்டோன்மென்டிலும் நிலையங்கள் உண்டு.
மய்முரா(முழுப்பெயர் கண்டு பிடிக்க முடியவில்லை – முகமது மீரா ??
அறிந்தவர்கள் தெரிவிக்கலாம் ) பெரியத்தா மகன் ஔரங்கம் (அவுரங்கம் – ஒ ள ரங்கம்
அல்ல) அண்ணன்படித்து முடித்து விட்டு பணி
தேடி வேலூர் வந்ததார். .அத்தாவின் செல்வாக்கை சற்று அளவுக்கு அதிகமாகவே
பயன்படுத்தி சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் பணியில் சேர்ந்தார் .அங்கிருந்து நிறைய காய்கறிச செடிகள் விதைகள் கொண்டு வருவார் ..
லியாகத்அலி அண்ணனை வேலூருக்குக் கொண்டு வந்த சேர்த்ததும் ஔரங்கம்
அண்ணன்தான் ( பாவம் அது பாட்டுக்கு கோட்டையிருப்பு ,திருப்பத்தூரில்
பொழுதைக்கழித்துக் கொண்டிருந்தது எங்கள் வீட்டில் அடைத்துபோட்டது போல் உனார்ந்தது))
)
இறைவன் அருளால் அத்தாவின் முயற்சியால் மின் வாரியத்தில் லியாகத்அலி
அண்ணனுக்கு பணி கிடைத்தது .அப்போது வேலூர் மாவட்டத்தில் பணியாற்றிய தொண்டி ஜனாப்
ஹனிபா தன் அலுவலகத்தில் பணியில் அமர்த்தி உதவினார். அதோடு தன் அலுவலக அறையிலேயே
தங்கிக் கொள்ளவும் அனுமதித்தார் (எந்த ஊர் என்பது நினைவில்லை ).
பொள்ளாச்சி கல்லூரியில் முதல் ஆண்டு படிப்பை நிறைவு செய்து விட்டு
விடுமுறையில் வேலூர் வந்தேன்/ சகோதரிகள் முத்து ஜென்னத் மும்தாஜ் குடும்பங்கள்
விடுமுறைக்கு வந்து போனதால் பொழுது மிக இனிமையாகக் கழிந்தது .
கரீம் அண்ணன் முத்தலிப் அண்ணனுடன் தெருவில் நடந்து
போய்க்கொண்டிருந்தேன். வழியில் ஒரு அழகிய மரத்தைக் கண்ட ஒரு அண்ணன் இந்த மர
நிழலில் உட்கார்ந்து கவிதை எழுத வேண்டும் போல் தோன்றுகிறது என்று தன் அழகுணர்ச்சியை
வெளிப்படுத்த இன்னொரு அண்ணன் தன் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வேறு
“ஓன்று “ எனக்கு தோன்றுகிறது எனச் சொன்னது.
நிறைய கை ரிக்சா வண்டிகளை
வேலூரில் பார்த்தேன். மக்களின் பேச்சுத்தமிழ் சென்னைத் தமிழ் போல் வா சார் போ சார்
என்று இருக்கும்...பொள்ளாச்சி . கொங்கு நாட்டுத்தமிழில் பழகிய எங்களுக்கு இது
சற்று வித்தியாசமாகப் பட்டது
வேலூரில் அத்தா பணியாற்றிய குறுகிய காலத்தில் வேலூர் நகராட்சியின்
நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது .பள்ளி ஆசிரியர் ஒருவர்
வேலூரின் வரலாற்றை வில்லுப்பாட்டாக எழுதி அரங்கேற்றினர்..
ஈ.வே.ரா பெரியார், திருக்குறள் முனுசாமி என்று இன்னும் பல சிறப்புப்
பேச்சாளர்கள் உரையாற்றினார்கள் .
விழா மலருக்காக அத்தா வேலூர் பற்றி எழுதிய கவிதையின் சில வரிகள் மட்டும் அரை குறையாக நினைவில் உள்ளன
“வேலூர் இன்ற இந்த ஊரை வெல்லூர்
என்று பின் மொழிந்தார்
வேலாலே வென்ற கதை சொல்லுகிறேன் கேளீர். “
வேலூர் கோட்டையும் சி எம் சி மருத்துவ மனையும் எல்லோரும் அறிந்ததே
.கோட்டையின் கம்பீரம் பார்ப்பவர் நெஞ்சை நிமிர வைக்கும் .அகழியைப் பார்த்தால்
அச்சம் வரும். கோட்டைக்குள் இருக்கும் சலகண்டேசுவரர் கோயில் சாமி இல்லாத ஒரே கோயிலாக இருந்தது .பின் திருமுருக கிருபானந்த வாரியார்
முயற்சியால் சிலை நிறுவப்பட்டது
சீ எம் சீ மருத்துவ மனை இந்தியாவில் உள்ள பெரிய மனைகளில் ஒன்றாக்
கருதப்பட்டது.. புதிதாக scanner
கருவி வாங்கி இருந்ததால் மருத்துவ மனைக்கு வரும் எல்லோருக்கும்.
ஸ்கானிங் கட்டாயமாக்கப்பட்டதாய் ஒரு புகார் உலவியது ( இந்த மருத்துவ மனை உருவான
வரலாறு – காண்க பைசல் கட்செவி )
நூற்றாண்டு கண்ட பாக்கியாசலிஹத் என்ற பெரிய அரபுக்கல்லூரி
வேலூரில்தான் இருக்கிறது
அரசுப்பணியில் இருந்த அத்தாவின் நண்பர் ஒருவர் எறால் பொரியல் வேண்டும்
என்று அடிககடி கேட்பார். கேட்டது கிடைத்ததா என்பது நினவில்லை .அத்தாவுக்கு நெல்லை
மாறுதல் வந்த பின் அவர்தான் வேலூர் நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றார்
வேலூருக்கு அருகில்
மரமில்லாமல் வெறுமையாக இருக்கும் ஒரு மலைக்குன்று இருக்கிறது . அதனால்
வெயில் குளிரின் தாக்கம் மிக அதிகமாக் இருக்கும். மதியம் வரை வெயிலின் வெப்பத்தை
உள்வாங்கி மாலையில் வெளியிடும் அந்த மலை
பெருநாள் தொழுகைக்காக திடலுக்குப் போனோம். எல்லோரும் கையில் பாயுடன்
வந்தார்கள். திடலில் பாய் விரிப்பு ஏதும் இல்லை. செருப்பை முன்னால் வைத்துக்கொண்டே
தொழுக வேண்டியிருந்தது
வேலூரின் பழைய வீடுகளில் கழிவறை வீட்டின் முன் பகுதியில்
அமைந்திருக்கும்
அடுத்த கல்வி ஆண்டுக்குள் அத்தாவுக்கு நெல்லைக்கு மாறுதல் வந்து
விட்டது. எனவே கோடை விடுமுறையைக் கழிக்க வேலூர் போனது போல் உணர்வு
இத்துடன் இப்பகுதியை நிறைவ செய்கிறேன்
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும்
பாராட்டுக்களும் தெரிவித்த பாப்டி, முனைவர் பாசா, சகோதரி மெஹராஜ் ஜோதி
சுராஜ் சாகுல் அனைவருக்கும் நன்றி
பாப்டி – மிக நன்றாக
இருந்தது
மெஹராஜ்-
அஸ்ஸலாமு அலைக்கும் ஷர்புதீன்.
வாணியம்பாடி கட்டுரை படித்தேன்.
மிக நன்றாக இருந்தது.
உன்னுடைய நேர்மைக்கும் , எளிமைக்கும், சுய நலமில்லாத உழைப்புக்கும் உனக்கு
சென்ற விடமெல்லாம் கிடைத்த சிறப்புகளும், மரியாதைகளும்
மிகவும் மகிழ்ச்சி யைக்கொடுக்யைக்கொடுக்கிறது.
பைசல் கோகுலத்தில் போட்ட கார்ட்டூன், மற்றும் ஆத்திகா ரிப்பத் பற்றி
எழுதியவையும் மிக நன்றாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
சச்சா அடிக்கடி ,"தம்பி வீட்டுக்குப் பக்கத்தில் தான் டாக்டர் அக்பர் கௌஸர் வீடு
."என்று மிகப் பெருமையாகச் சொல்லியிருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ்
சுராஜ் ,.
வாணியம்பாடி பயணக்கட்டுரை மிக ,மிக சுவாரசுயமாக
இருந்தது.
அலுவலகப் பணிகளில் அத்தாவின்
நேர்மையும்,துணிச்சலும் உங்களிடம் பிரதிபலிக்கிறது.
இன்றைய பிரபலங்கள் பலரையும் அன்றே
சந்தித்துள்ளது (குறிப்பாக காளிமுத்துவின் தமிழ்ப்பற்று) எல்லாம் மகிழ்ச்சியாக
இருக்கிறது.
பயணத்தொடர் முடிவுறும் தருவாயில்
உள்ளது சற்று வருத்தமாக இருக்கிறது.
வேறு ஏதாவது எழிதலாம்.
அடுத்த பயணம் ஆவலுடன்.☪
ஜோதி
வழக்கம் போல் வாணியம்பாடி அனுபமும் மிகவும் , சிறப்பாகவும், இனிமையாகவுமிருந்தது.
பேத்திகள், ஆத்திகா , ரிபத்தின் மழழைக் குறும்புகள் ரசிக்க வைத்தது.. இன்ஷா அல்லா அடுத்த
அனுபவத்தில் சந்திப்போம்.
முனைவர் பாஷா .(முனவர் அல்ல முனைவர் ) .வாணியம்பாடியின் சரித்திரத்தை
சுருக்கமாகப் படித்தது போல் இருந்ததது
சாகுல்
மாமாவின் கட்டுரையில் மேலாளர் அறையில்
உள்ள உருவப்படங்களை பணி மாறுதல் பெற்று Join பண்ணிய முதல் நாளே அகற்றி விடுவேன் என்ற வாசகம். உண்மையிலே இதைச்
செய்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.
இ(க)டைச்செருகல்
வேலூர் நகரத்தின் சிறப்புகள் பலவற்றை தமிழறிஞர் பாஸ்கரத் தொண்டைமான்
தன் பயண நூலில் குறிப்பிட்டுள்ளார் .எப்போதோ படித்தது ஓரளவு நினையில் நிற்பதை
எழுதுகிறேன்
நீரில்லா ஆறு ( அப்போது பாலற்றைப்பற்றிக் குறிப்பிட்டார். இப்போது பல
ஆறுகளுக்கு அந்த நிலை)
மரமில்லாத மலை
அதிகாரம் இல்லாத போலிஸ் ( காவலர் பயிற்சிக் கல்லூரி அப்போது
குறிப்பிட்டது இப்போது ?)
அரசனில்லாத கோட்டை
அழகில்லாத பெண்கள் (இது தொண்டைமானின் சொற்கள் என நினைவு
பணம் இல்லாத கஜானா
இவற்றையெல்லாம் தூக்கியடிக்கும் இன்னொரு அதிசயம் சாமி இல்லாத கோயில்
(இப்போது கோட்டையில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிலை வைக்கப்பட்டு விட்டது
)
நிறைவாக ஒரு சிறிய வினா
“செருப்பு பிய்ந்து விட்டது “ இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது ? (தமிழ்
இந்துவில் இருந்து)
இறைவன் அருளால்
ஓரிரு
வாரங்கள் பயணம்தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment