.,
சென்ற வாரத்தோடு வாழ்க்கைப்பயணம் தொடரை நிறைவு செய்து விட்டேன்.
நிறைவுப்பகுதி பற்றி வந்த கருத்துக்களையும் பாராட்டுகளையும்
தொகுத்துத் தருகிறேன். இதில் இரண்டு நோக்கங்கள் . முதலாவது கருத்துக்களில் வரும்
புதிய செய்திககளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதோடு வலை நூலிலும் கூகிள் +சிலும்
பதிவாகிறது .இரண்டாவது எனக்குக்கிடைத்த பாராட்டுகளையும் எல்லோரும் படிக்கட்டுமே
என்ற அற்ப ஆசை (இந்த ஆசை தற்பெருமையாக மாறாமல் ஏக இறைவன் காக்க வேண்டும்
19 11 16
மெஹராஜ்
ஷர்புதீன் அற்புதம். எல்லோரையும் கண்கலங்கி நெகிழ வைத்த பிரிவுரை.
தயவு செய்து நிறுத்தி விடாமல்
தொடர்ந்து சனிக்கிழமை தோறும் உன் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கும் உன்
சகோதரிகள். அல்ஹம்துலில்லாஹ்
25 11 16
அஸ்ஸலாமு அலைக்கும் ஷர்புதீன்.
விழுப்புரம் கட்டுரை மிக நன்றாக இருந்தது. இனிமேல் இந்த த் தொடர் வராதென
நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.
விழுப்புரவிழுப்புரத்தில் நான் எட்டவது
படித்தேன்(1959-1960)
நம் வீடு பற்றி சிறிது கூட
நினைவில்லை.நான் படித்த ஸ்கூல் , ரயிலவே கேட் நன்றாக ஞாபகத்தில்
உள்ளது.விலாசினி , ரத்னா என்கூடப் படித்தவர்கள்.
ஒருதரம் மழை பெய்ததால் அத்தா
ஸ்கூலுக்கு வந்து காரில் வீட்டுக்கு க்கூட்டி வந்தது.காரில் கரீம் அண்ணனும் கூட
வந்தது.கேட் ரொம்ப நேரம் மூடி விட்டார்கள்.கரீமண்ணன்"மண்ணுக்கு மரம்
பாரமா"என்ற கண்ணதாசன் பாடலை வரி வரியாக அத்தாவிடம் சொல்லி ரசித்தது.
ஹூலா ஹூப் காரைக்குடி யில் முத்தலிப்
அண்ணன் வாங்கி வந்திருந்தது.
நான் அதில் ரொம்ப நேரம் கீழே விழாமல்
சுற்றுவேன்.
பைசலுடைய திறமைகள் நீ எழுதியதால் நன்கு
தெரிந்து சந்தோஷப்பட்டோம்.
உன் திறமைகளும் உறவுகளிடம் கொண்ட
பாசமும் அக்கறையும் அத்தா அம்மா வின் மேல் நீ கொண்டுள்ள மரியாதை யும்
உன் ஆற்றல்களும்
நினைவுத்திறனும் எழுத்தாற்றலும்
உன் கட்டுரைகள் மூலம் தான்
எல்லோருக்கும் தெரிய வந்தது.
இந்த இனிய உறவுகளைக் கொடுத்த
அல்லாவுக்கு நன்றி.
அல்லாஹ்வின் அருளால் என்றும் நிலைக்கட்டும்
நஸ் ரீன்
Sooper Mama very nice to read👍🏻
சகா
எப்போதும் படித்து ரசிப்பது தான்.
கருத்து தெரிவிப்பது தான் எப்போதாவது .
kk
[08:23, 11/21/2016] +91 91762 61171: தங்கள் அனுபவங்கள் எங்களை மிகவும் பரவசமடைய செய்த து ஒவ்வொரு முறை யு
ம் மனதளவில் பாராட்டி கொண்டுதான் இருக்கிறேன் இந்த டைப் செய்ய வது மிகவும் கடினமாக
இருக்கிறது அதனால் என்னால் என் கருத்தை பல சந்தற்பங்களில் ஜமாத்தோடு
பகிறமுடியவில்லை
Thalath
[09:04, 11/21/2016] +91 81245 65555: இதே நிலைமை 'தான் எனக்கும்.தங்களின் வாழ்க்கைப்பயண
அனுபவங்கள் மிக அருமை
சுராஜ் 24 11 16.
அண்ணனுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
என்ன எழுதுவது,எதை எழுதுவது என்றே தெரியவில்லை.
முடிவுரையில் அனைவரையும் கொண்டு வந்து
அருவியாய்க் கொட்டிய நன்றியுரை கண்களை நனைத்து விட்டது.
எத்தனை சுவாரஸ்யங்கள்,
எத்தனை உறவுகளின் பெருமைகள்!
எத்தனை ஊர்களின் சிறப்புகள்!
ஒவ்வொரு தொடரிலும் அத்தா,அம்மாவின் அருமை, பெருமைகளை எழுதி எங்களை மகிழவும்,
கலங்கவும் வைத்தது.
இந்தமுடிவுரை தொடரில் கூட அத்தா தொப்பி
அணிந்து கம்பீரமாய் செல்லும் என்றும்,அன்னை,தந்தைக்கு நன்றி என்பதைப் படிக்கும் பொழுதும்,இப்பொழுது உங்களுக்கு எழுதும் பொழுது கூட ஏனென்று தெரியாமல் கண்ணீர்
வருகிறது.
அப்பப்பா! எத்தனை நிகழ்வுகள்! எழுதிக்
கொண்டே போகலாம்
ஓர் ஆண்டில் உலகைச்சுற்றி வந்தது போல்
இருக்கிறது.
நினைவாற்றலுக்கும்,எழுத்தாற்றலுக்தும் மறுபடியும்ஒரு சபாஷ்!!!
பைசல் பற்றிய தகவல் மிகவும் பெருமையாக
இருந்தது.
பைசலுக்கு எங்களது பாராட்டு!👏
[18:50, 11/25/2016] Jothy
Liakath:
தம்பி, அஸ்ஸலாமு அலைக்கும். வாவ்..
என் தம்பி இத்துனை எழத்தாற்றலும், நினைகளை ஒன்று சேர்த்து, இத்தனை
சுவையாக ,சுவாரஸ்யமாக எழுதும் ஆற்றல் கொண்டவரா, நம்பவே முடியவில்லை. ஆற்றல்
கொடுத்த அல்லாவிற்கு பெரிதும் நன்றி.
விழுப்புரம் வீட்டு கிணற்றில், மொட்டை
மாடியில் துளை, நிச்சியமாக எங்க ளுக்கெல்லாம் ஒரு துளி கூட நினைவில் இல்லை. பக்கத்து வீட்டு
ஆங் கிலோ,இன்டியன் பெண்னுடன் Cசர்ந்து கூலா கூப் ஆடியது நன்கு நினைலில் உள்ள துர்.
பக்கத்து கார்டு (இந்திரா என்ற பெயரெல்லாம் தெரியாது) விட்டம்மாவின் பெண் என்னோடு
படித்தது, .ெ மகராஜூம், நானும் நகராட்சி பெண்கள் பள்ளியில் படித்தோம், நான்
படிப்பில் ரொம்ப சுமார் .ஆனால் ஏதோ ஒர் கட்டுரை எழதி ரொம்ப பாராட்டுப் பெற்றேன். _ | முத்து
திருமணம் முடிந்து கரீம் அண்ணனோடு வரும் போது ரொம்ப சந்தோஷமாயிரக்கும். ஒரு டப்பா
நிறைய முறுக்கு சுட்டு உன்னையும், என்னையும் நூரைப் பார்த்து வரப் ப்யூனுடன்
அம்மா அனுப்பியது. ஐயா (அம்மாவின் அத்தா) ம குத்திற்கு போய் விட்டு அம்மா அங்கேயே
தங்கி விட்டது. மறு வாரமே சிட்டுப் பிள்ளைப் பெரியம்மா (ரஹ்மத் அலி அண்ணன் அம்மா)
மதத்தா கிவிட, அதுவும் முடிந்த பின் மாமா அம்மாவையும், ஷஷா வையும் (சின்னப் பையன் )
வையும் ரயிலில் ஏற்றி விட்டுத் தந்தி கொடுத்திருக்கிறது. தந்தி நேரத்திற்கு வந்து
சேராமல், அத்தாஸ் டேஷனுக்கு ஆள் அனுப்பாமல், அதிகாலையில் ரயில் ஊர் வந்து
சேர , அம்மா ரொம்ப சிரமப்பட்டு, கைரிக்ஷாவில் வீடு வந்து சேரந்தது' . (அம்மா
ரொம்ப கோபமாக இருந்தது.)
[18:51, 11/25/2016] Jothy
Liakath: அத்தாவிற்கு நெஞ்சுவலி வந்தது அங்தான். மாமா வந்து தான் சி.எம்.சி.க்கு
அழைத்துச் சென்றார்கள். ஊரிலிரந்து பெரியத்தா, பெ வெல்லாம் பார்க்க வந்திருந்தார்கள்.
வீடே என்னவோ போலிருக்கும். செஞ்சிக் கோட்டைக்குப் போன போது ஷஹா தனியாக மேலே Cயறி, சுற்றிலும்
குரங்குகள் சூழ்ந்து கொள்ள பயந்து கத்த ஆரம்பித்து விட்டான்'. எல்லோகையில்
உதவிக்கு (ை கடு) வந்த பையன் தான் லாவகமாக மலை Cயறி
குரங்குகளை விரட்டி ஷஹா வைத் தூக்கிக் கொண்டு வந்தான்.
அப்புறம் நன்றி நவிலலிலும், தொடரை
முடிப்பதிலும் பெரிய காவியமே படைத்து விட்டாய். பெரிய எழுத்தாளர்கள் அனைவருக்கு மே
முதல் விமர்சகர் மனைவி தான் என்பதை நீயும் நிரூபித்து Cஜாதிக்கு
நன்றி தெரிவித்த விதம் அருமை, இன்னமும் தொடருக்கு உதவிய, பைசல், இதயத்துல்லா
, விமர்சகர்
அனைவர்க்கம் நன்றி செலுத்திய விதமும் அருமை. மெகராஜ், சுராஜ், எனக்கு
தனித்தனியாக நன்றி கூறி விடைபெற்றது கண் கலங்க வைத்து விட்டது. தொடர் எழத என்
வார்த்தை ஊக்கம் கொடுத்தது நெகிழ வைத்துவிட்டது. எப்படி யோகிட்டத்தட்ட ஓராண்டாக
கூடு விட்டு கூடு பாய் iந்தது போல, வேறு வயது, வேறு
ஊர், வேறு சூழல் என்று உன்னுட ன் சேர்ந்து நாங்களும் பயணிக்க இனிய பாதை அமைத்துக்
கொடுத்தாய். நன்றி... நன்றி.... நன்றி.....
மிக நீளமாக அமைந்து விட்டது. மற்றவர்கள் படிக்காவிட்டாலும்
நிச்சியம் நீ படிப்பாய் என நம்புகிறேன். சிராஜுதீன் அம்மாவைப் பாட்டியதற்கு நன்றி
தெரிவித்தது, குப்பிக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். இன்னும் எவ்வளவோ எழுதிக் கொண்டே
போகலாம். உறவுகள், உணர்வுகள், எல்லாம்
கலந்த பழைய உலகத் தைப் புதுப்பித்து வாழ்ந்த து, ஏதோ ஒர்
யுகம் கண்டது போல கிவிட்டது. விடை பெறுகிறேன்.
தொலைபேசியில் பாராட்டியவர்கள் பாப்டி, பாடி பீர்
சச்சா , இதயத் ..
இதயத்
.தொடர்ந்து
எழுதுங்கள் மாமா உங்கள் எழுத்து நடை மிக நன்றாக , எளிதில் படிக்க ஏதுவாக
இருக்கிறது.
பாடி பீர் சச்சா
பாராட்டி
போனில் எழுதுவதெல்லாம் எனக்கு மிகவும் சிரமம் ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் உன்னைப்
பின்தொடர்ந்து நானும் பயணித்தேன் .
.கருத்துக்களும்,
பாராட்டுகளும் புதிய செய்திகளும் அளித்த
அனைவருக்கும்நன்றி..
திருப்பத்தூர்
ஜமாஅத் kk என்பது யாரென்று தெரியவில்லை
ஹூலா
ஹூப் விழுப்புரத்தில் பார்த்துதான் எனக்கு நினைவில் இருக்கிறது .காரைக்குடியில் ஹூலாஹூப் பற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை.
நம்
குடும்பத்திலும் குழுக்களிலும் எல்லோருக்கும் நல்ல எழுத்தாற்றல்,இருக்கிறது.
நினைவிலுள்ள சுவையான நிகழ்வுகளைத் தொகுத்து எல்லோரும் எழுதலாம். காலப்போக்கில் இந்த
நினைவுகள் கரைந்து மறையுமுன் இறைவனின் பெயரால் துவங்கி வைககலாம்
.அன்புடன் பீ.சர்புதீன் .
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
Well done.
இன்றைய தலைப்பில் 'நிறைவுப்பகுதி' என்று பார்த்தபோது சிறிதான ஒரு ஏமாற்றம்.
Looking forward to next series.