Tuesday, 26 September 2017

கதைப்பயணம் 8(பயண இடைவேளை- சற்று நீளமான) உப்பும் சால்ட்டும்






(பயண இடைவேளை- சற்று நீளமான)

உப்பும் சால்ட்டும்


இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா ? நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் ஒரு புதிய தெளிவு கிடைக்கும் வரை .இது பற்றி பின்னால் சொல்கிறேன்
காட்சி ஊடகங்களின் தாக்கத்தால் வாசிக்கும் பழக்கம் தமிழ் நாட்டில் மிகவும் குறைந்து விட்டதாய்ச் சொல்வார்கள் . புத்தகக்கண்காட்சிகளில் அலை மோதும் கூட்டமும் அங்கு விற்பனையாகும் நூல்களின் எண்ணிக்கையும் இதை பொய்யாக்குகின்றன   
முகநூலிலும் கட்செவியிலும் வரும் வாசகர் வட்டம், கவிஞர் குழு தனித்தமிழ் இயக்கம் போன்றவை மொழி வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன.
 எவ்வளவு நன்றாக எழுதினாலும் புதிய எழுத்தாளர்களை அச்சு ஊடகங்களும் பதிப்பாளர்களும் கண்டு கொள்வதில்லை
 வலைப்பதிவு , முகநூல் , கட்செவி இவை புதிய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புத்திறனை வெளிப்படுத்த ஒரு நல்ல களமாக இருக்கின்றன, (என்னையும் சேர்த்துத்தான் )
காட்சி ஊடகங்களும் தங்கள் பங்குக்கு பட்டி மன்றம், தமிழ் பேச்சு போட்டிகள், சொல் விளையாட்டுக்கள் என்று வரிந்துகட்டிக்கொண்டு மொழி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன
ஆனால் மொழியை சிதைப்பதில் ஊடகங்களின் பங்கு மிகப்பெரிதாக இருக்கிறது. .சந்திப்பிழை, வல்லின மெல்லின இடையின உச்சரிப்பில் தடுமாற்றம் ,தங்லீஷ் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்
கொத்த மல்லி கொத்த மள்ளி ஆகும்போது காது கூசுகிறது .ல ள ழ என்று மூன்று எழுத்துக்கள் இருப்பதே பலருக்கும் நினைவில்லை. தெரிந்தாலும் உச்சரிக்க முடியவில்லை
தொடர்ந்து சந்திப்பிழைகளை ஊடகங்களில் பார்க்கையில் நாம்தான் தவறாக எழுதுகிறோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது . தமிழ் அறிஞர்கள் பேரிலுள்ள ஊடகங்களும் இதற்கு விலக்கல்ல 
செய்வினை வரவேண்டிய இடத்தில் செயப்பாட்டு வினை போடுவது இன்னொரு சகிக்க முடியாத சிதைவு. இந்தச் சிதைவுகள் காதையும் மனதையும் துளைப்பது போல் இருக்கும். ஆனால் அறிவிப்பாளருக்கோ பேசுபவருக்கோ இது தவறு என்பதே புலப்படாது
தொலைக்கட்சியில் ஒளிபரப்பான தமிழ்  பற்றிய நிகழ்ச்சியில் தோன்றியவர் பெயருக்கு முன்னால் முனைவர் என்று போட்டு ஒரு புள்ளி வைத்து அவர் பெயரை போட்டார்கள் . அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகையில் இது தவறுதான் தான் இதை கவனிக்கவில்லை என்று சொன்னார். ஆனால் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் இந்தப்பிழை தொடர்ந்தது
அண்மையில் அச்சு ஊடகத்தில் வந்த ஒரு செய்தி
போலிச் சாமியாராக நடித்தவர் கைது
சில பல புதிய சொற்களையும் சொற்றொடர்களையும்  உருவாக்கிய பெருமையும் ஊடகங்களுக்கு உண்டு.
தயங்கித்தயங்கி சொல்லிக்கொண்டிருந்த “கெட்ட” சொற்களை இயல்பான பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததும் ஊடகங்கள்தான் 
மதுவை உற்சாக பானம் ௨. பானம் என்று தொடர்ந்து எழுதுகிறது ஒரு செய்தித்தாள்
, சின்ன வீட்டை வாழ்கையின் தேவை போல் ஆக்கியது ஒரு ( பாரம்பரியம் மிக்க ) வார இதழ்
வரைமுறையில்லாமல் முகம் சுளிக்க வைக்கும் விளம்பரங்கள்- கழிவறை, பற்பசை இதற்குமேல் எழுதவே கூச்சமாக இருக்கிறது அகம் புறம் என்று இரண்டு இருப்பதே மறந்து விட்டது
 வச்சு செய்வது, ,அவனைத் தூக்கிர வேண்டியதுதான், மிச்சர் சாப்பிடுவது , சான்சே இல்லை  இவையெல்லாம் பரவலாகப் பயன் பட்டாலும் எனக்கு இன்னும் சரியான பொருள் பிடிபடவில்லை (முதுமையின் அடையாளம் ?)
வடமொழி எழுத்துக்களை தேவையில்லாமல் பயன்படுத்துவதும் ஸ வுக்குப்பதில் ஷ போடுவதும் இன்னுமொரு புதுப்பழக்கம்
வேட்டி தமிழன் உடைதானே அது ஏன் வேஷ்டியானது ?
மத்திய கைலாஸ் கைலாஷ் ஆகிறது ஈஸ்வர் ஈஷ்வர் ஆகிறார்
குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர் வைக்கும் பழக்கம் மாறி( சில வாயில் நுழையாத ) வடமொழிப் பெயர்கள் வைப்பதும் ஊடகங்களின் தாக்கத்தினால்தான்
ஒரு மொழி பரவலாக தொடர்ந்து சிதைக்கப்படும்போது அது மொழிக்கொலைக்கு வழி வகுத்து  பண்பாடு கலாச்சாரம் எல்லாம் அழிந்து இனமே அழியும் நிலை வரும்
பண்பாட்டுச் சீரழிவில் ஊடகங்களின் பங்கு பற்றி விரிவாகத் தனித் தொடரே எழுதலாம் இங்கு சுருக்கமாக ஒரு சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.
எதுவுமே தப்பில்லை, தவறில்லை இதுதான்- இதுதான் ஊடகங்கள் மனதில் ஏற்படுத்தும் மிகப்பெரிய மிகக்கொடிய தாக்கம். கொலை கொள்ளை, சோரம் ,மது ஏமாற்றுதல் பழிவாங்குதல் பெண்கள் மிகக் கடுமையான சொற்களை விரலை ஆட்டி ஆட்டிப் பேசுதல் முதியவர்களை – குறிப்பாக மாமனார் மாமியார், கணவரை  துச்சமாக எண்ணி தூக்கியெறிந்து பேசுதல், பில்லி, சூனியம்  இவையெல்லாம் இல்லாத  வாழ்க்கையே வீண் என்பது போல் எண்ணத்தோன்றும்  ஊடகத்தொடர்களைப் பார்க்கும்போது .
இதில் அச்சு ஊடகங்களும் போட்டி போடுகின்றன .பெற்றோர், குழந்தைகள் முன்பு துணைவியை கட்டிப்பிடிப்பது அன்பின் வெளிப்பாடு இதில் தவறொன்றும் இல்லை என்கிறார் ஒரு மருத்துவர், .. பெண் தன் நண்பருடன்   நெருக்கத்தை படம் பிடிப்பது பெண் உரிமை என்கிறார் இன்னொருவர்,.
இதற்கெல்லாம் மேல் திருமணம் செய்யாமல் பெண்களுடன் சேர்ந்து வாழ்வதை தன் தனி உரிமை என்று பெருமை பேசும் ஒருவர் தமிழ் நாட்டின் தலைமைப்பதவியை சுமக்கத் தயக்கமில்லை என்கிறார் பூனை சூடு போட்டுக்கொண்டால் புண்தான் மிஞ்சும்
தொடரின் இந்தப் பகுதியையும் (தொடரையும்) நிறைவு செய்யுமுன் ஒரு சில வரிகள் ஆங்கிலச் சிதைவு பற்றி
 பெருந்தொகை செலுத்தி உயர்வான ஆங்கில வழி கல்வி பெறும், பெற்ற மாணவர்கள் கூட auntyயை   anti என்றும்   rocketடை  racket என்றும் சொல்கிறார்கள் .எங்கே தவறு என்று தெரியவில்லை   
ஒரு படத்தில் (பெயர் நினைவில்லை) நடிகர் விஜய் fast is fast என்பார் .நன்கு ஆங்கிலம் தெரிந்த அவர் வேகமாகப் பேசியதால் past fast ஆகி விட்டது
நிறைவாக
உப்பும் சால்ட்டும் ஒன்றுதான் என்ற என் எண்ணத்தை மாற்றி ஒரு தெளிவை உண்டாக்கியவர் பெருங்கடை பணியாளர் ஒருவர்.
ஒரு கிலோ உப்பு கொடுங்கள் என்று நான் கேட்க அவர் கொடுத்தது  கல்லுப்பு வடிவத்தில் இருந்தது .
நான் கேட்டது இதுவல்ல . தூளாக உள்ளது வேண்டும் என்றேன். . சால்ட் என்று கேட்கவேண்டும். உப்பு என்றால் இதுதான் என்று விளக்கினார்.. இது கூட உங்களுக்குத் தெரியவில்லையே என்ற முக பாவம்
இது எதன் தாக்கம் என்று தெரியவில்லை
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்த நூர்கான் ,,கீதா, ஹிதயத் , சர்மாதா,,ஜகன், ரவிராஜ் பீயன்னா , அஜ்மல், கலிபுல்லா ,ராஜா சுப்பிரமணியன் , ஜோதி அக்கா பாப்டி  அனைவருக்கும் நன்றி

முக நூலில் விருப்பம் தெரிவித்தவர்கள். ( விரும்பியவர்கள் பகிரவும் செய்யலாமே)

Ayub Sharmatha 18 09 17
It is very interesting to read about various people in the world,... we are expecting to be read another episode.🌹🌹🌹🌹
Jegan CB Rtd Trichy 17 09 17
Good
CB Rtd Raviraj 160917
Nice golden memories... Really anxious to know the next chapter of your long 40 yrs of journey in our bank🙏😀
Peer Peeyannna 17 09 17
மதிப்பிற்குரிய சச்சா அவர்களுக்கு
இந்த கதை பயணத்தில் நான் கற்று கொண்டது மற்றும் தங்களின் பணி ஆளுமையை பார்த்து வியந்த விஷயம் என்னவென்றால்தங்களுடய முன் ஜாக்கிரதை-முன் யோசனை மற்றும் சமயோசிதம்.உங்களுக்கு பணிநிமித்தமாக மேலிடத்திலிருந்தோ முக்கிய பிரமுகரிடமிருத்தோ தங்களுக்கு வாய்மொழியாக#உத்தரவு#சிபாரிசு#கோரிக்கை வைக்கும்போது அதற்கு தாங்கள் எழுத்துபூர்வமாக தந்தால் பரிசீலிப்பதாக நீங்கள் பதிலளிக்கும்போது பலர் பின்வாங்கிவிடுவது இந்த பதிவில் மாத்திரமல்ல இதற்கு முந்தைய பதிவுகளிலும் இதுமாதிரியான நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளீர்கள்.
எழுத்துப்பூர்வமாக கேட்டுப்  பெறுவது என்பதை எல்லோரும் கற்று கொள்ள வேண்டிய விஷயம்.ஆளுமை திறனில் நமது குடும்பத்தார் தலைசிறந்தவர்கள் என்று எனது அத்தா சொல்லி கேட்டிருக்கின்றேன்.
உங்களை போன்றவர்களால் அது நிரூபணமாகியுள்ளது.
  சொல்லுகின்ற விஷயத்தில் சிறிது கற்பனை சம்பவங்களை இடைசெருகினால் வறட்சி குறைந்து சுவாரஸ்யம் கிட்டலாம்.ஆனால் நீங்கள் உள்ளதை உள்ளபடியே நேர்மையாகவே தந்துள்ளீர்கள்.
கவிஞர் வாலியின் நினைவு நாடாக்கள் வாசித்திருப்பீர்களென நினைக்கிறேன்.அதில் அவர் வாழ்வில் நடந்தவற்றை அப்பட்டமாக சொல்லியிருப்பார்.
உங்கள் பயணம் எனக்கு அதை நினைவூட்டுகிறது.
Ajmal 160917
Delicate instances very interestingly narrated.
It's not easy to get a senior person with good maturity for the youngsters in the workplace. Your staff must have been fortunate to have you for their guidance.
Diamond Kalifullah voice mail 16 09 17
நன்றி மிக மிக அருமை .பல விசயங்களை தெரிந்து கொண்டேன் .பழைய கட்டுரைகளை அனுப்பி வைக்கவும்
CB Rtd Raja subramaniyan 160917
ஒரு நாவல் படிப்பது போல் சுவையாக இருக்கிறது.கவனக்குறைவாக இருந்திருந்தால் சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பீர்கள். எழுத்து வடிவில் ஆணை கேட்டது சூப்பர்.அது போல் ஒரு நிகழ்ச்சி நான் அம்பையில் இருந்தபோது. கோட்ட அலுவலகம் சொன்ன விருப்பங்களை எழுத்து வடிவில் கேட்டு வரவில்லையென்றதும் மறுத்துவிட்டேன். மூளையுடன் முதுகெலும்பும் தேவைப்படுகிறது!
பாப்டி தொலைபேசியில் (25 09 17)
மிக நன்றாக இருந்தது
[12:04, 9/22/2017] Jothy Liakath:
 தம்பிக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். "வல்லினம்,மெல்லிமை" ... தலைப்புக் கேற்றபடி, பெண் களுக்கு மட்டுமல்லாது, ஆண்க ளுக்கும், ஏற்படும் மனம் சார்ந்த பிரச்சனை களை எழுதியிருந்த விதம் அருமை. பிரசவம் பெண்ங்க ளுக் கென்று ஏற்பட்ட இயற்கை அமைப்பு .அது ஒன்றாலேயே பெண்ங்கள் வல்லமை படைத்தவர்கள் என்று கூற முடியாது. எத்தனை படிப்பு, மனப்பக்குவம் பெற்றவர்களா யிருந்தாலும், ஆண்கள். வலையில் ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு விழுந்து விடும் விட்டால் பூச்சி கத் தான் இக்கிறார்கள் என்பதற்கு உன் அலுவலக வளாகத்தி லேயே நிறைய உதாரணங்கள் காட்டியிருந்தாய். சொல்லப்படும் அறிவுரைகளை ஏற்றுக் கொண்டு மனம் தெளி வு பெற்றால் பிழைத்துக் கொள்வார்கள். ஏற்க மறுத்தால் கஷ்டம் தான்.                        
[12:04, 9/22/2017] Jothy Liakath: ஹிரோஷிமா அனு குண்டு வீச்சு பாதிப்பால் புற்று நோய் கண்டு , இறப்பைத் தடுப்பதற்கு நம்பிக்கையோடு ஆயிரம் காகிதக் கொக்குகள் செய்ய முயற்சித்த பத்து வயது சிறுமியின் கதை சோகப்பட வைத்தது. பேரனின் பாடப்புத்தகத்தி லிரந்து விஷயத்தை எடுத்ததில்தான் உன் தனித்திறமை வெளிப்படுகிறது. இன்ஷா அல்லா மீண்டும் சந்திப்போம்.
நிறைவுரை
கதைப்பயணம் தொடரை இத்துடன் நிறைவு செய்கிறேன் இது முற்றுப்புள்ளியா முக்கால் புள்ளியா என்று தெரியவில்லை.  சில நேரங்களில் வங்கியைப்பற்றி அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தி விட்டோமோ என்ற எண்ணம்.
அதற்கு நேர் மாறக இன்னும் எழுத வேண்டியது நிறைய இருக்கிறதே என்றும் தோன்றுகிறது
எப்படியும் எனக்கு ஒரு மூன்று மாத இடைவெளி தேவைப்படுகிறது . அதன் பிறகு இறைவன் நாடினால் கதைப்பயணம் தொடரலாம் அல்லது வேறு புதிய தொடர் துவங்கலாம்
இ(க)டைச்செருகல்
இசுலாமும் யோகக்கலையும்
எளிதில் படிக்கும்படி சிறு சிறு பகுதிகளாக தமிழில் முக நூலில் செவ்வாய்க்கிழமையும் ஆங்கிலத்தில் முக நூலிலும் வலை நூலிலும் வெள்ளிக்கிழமையும்  வெளியிடுகிறேன் .அது தொடர்ந்து வரும்
 .முடிந்தால் படியுங்கள் குறை நிறைகளைத் தெரிவியுங்கள்
முகநூலில் படித்த ஒரு நல்ல செய்தி
When the world said “ you can’t do anything”
Bolla said “ I look up at the world and say
“I can do anything.”
யார் இந்த போல்லா.?
எளிய குடும்பத்தில் அந்தகராய்ப் பிறந்து உழைப்பு, தன்னம்பிக்கை , படிப்பால் தடைகளை இடித்து உடைத்து முன்னேறி இருபத்துநான்கு வயதில் ஐமபது கோடி பெறுமான நிறுவனத்துக்கு உரிமையாளரானவர் .
பத்தாம் வகுப்பில் மிக நல்ல மதிப்பெண் எடுத்தும் பார்வையில்லாதவர்  என்பதால் அறிவியல் படிப்பு மறுக்கப்பட்டதை நீதிமன்றம் போய் வென்று வந்தார் .
மீண்டும் பனிரெண்டாம் வகுப்பில் மிக நல்ல மதிப்பெண்.    இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தில் அனுமதிஇல்லை  ஆனால் உலகில் உள்ள மிகச்சிறந்த நான்கு தொழில்நுட்பக்கழகங்களில் அனுமதி கிடைத்து அதில் சிறந்ததை அவர் தேர்ந்தெடுத்துப் படித்தார்.
எதற்காக நம் நாட்டில் படிப்பு மறுக்கப்பட்டதோ அதற்காகவே அமெரிக்காவில் கல்வி உதவித்தொகை .
கானொளியில் முழுமையாகப் பார்க்கலாம்

புத்தாண்டிலோ ,அதற்கு முன்போ
 இறைவன் நாடினால்
மீண்டும் சந்திப்போம்
வலை நூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com




No comments:

Post a Comment