வடக்கு தெற்கு மேற்கு கிழக்கு என
நாட்டின் பல இடங்களிலும் பணியாற்றியதில் பல்வேறு விதமான மனிதர்களோடு பழகிப்
பேசும் வாய்ப்பு கிடைத்தது இறைவன் அருள்.
சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வங்கியில் கடை நிலை ஊழியர்கள்
அலுவலகத்தின் அச்சாணி போன்றவர்கள்.
அவர்களுக்கு பெரும்பாலும் இடமாறுதல் கிடையாது.
வங்கிப்பணிகள் எல்லாம் அவர்களுக்கு அத்துபடி .புதிதாக பணியில் சேருபவர்களுக்கு வேலை கற்றுக் கொடுப்பதும் அவர்கள்தான்.
அவர்களுக்கு பெரும்பாலும் இடமாறுதல் கிடையாது.
வங்கிப்பணிகள் எல்லாம் அவர்களுக்கு அத்துபடி .புதிதாக பணியில் சேருபவர்களுக்கு வேலை கற்றுக் கொடுப்பதும் அவர்கள்தான்.
மிக சாதுவான ஒரு கடை நிலை ஊழியர் பெரிய
நாலடுக்குப் பாத்திரத்தில் மதிய உணவு கொண்டு வருவார். அலுவலகப்பணியில் அவர்
வெளியே செல்கையில் சில குறும்புக்கார ஊழியர்கள் உணவை சுவைத்து
பாதிக்கு மேல் தீர்த்து விடுவார்கள்
காசாளர் ஒருவர் புதிதாகப் பணியில்
சேர்ந்தவர்களின் காசோலைக்குப் பணம் கொடுக்காமல் கடனாக. எடுத்துக்கொண்டு பிறகு
தருகிறேன் என்று அதிகாரமாகச்சொல்வார்
எழுத்தர் ஒஞவர் காலையில் வங்கிக்கு
வந்தும் குட் மார்னிங் ஜென்டில்மென் என்று பொதுவாகச் சொல்லிவிட்டு ஒருவரைத் குறிப்பிட்டு பெயர்சொல்லி குட்மார்னிங் சொல்வார். இது தினசரி
நிகழ்வு.
அலுவல் நேரத்தில் கதை படிக்கும் மேலாளர்களும்
உண்டு.
சொந்த வேலைகளைப் புறந்தள்ளி விட்டு வங்கிக்காக இரவு பகலாய் உழைப்பவர்களும் உண்டு.
சொந்த வேலைகளைப் புறந்தள்ளி விட்டு வங்கிக்காக இரவு பகலாய் உழைப்பவர்களும் உண்டு.
கையூட்டு எனும் நச்சுச்செடி மெதுவாக
வங்கியிலும் வேரூன்றி வருகிறது
கையூட்டு வாங்காதவர்கள் கையாலாதவர்கள் என ஏளனம் செய்பகிறார்கள் சிலர்
ஆனால் பெரும்பான்மையன வங்கி ஊழியர்கள் கையூட்டு வாங்குவதில்லை.
கையூட்டு வாங்காதவர்கள் கையாலாதவர்கள் என ஏளனம் செய்பகிறார்கள் சிலர்
ஆனால் பெரும்பான்மையன வங்கி ஊழியர்கள் கையூட்டு வாங்குவதில்லை.
கையூட்டும் ஊழலும் பல உருவங்களெடுக்கும்
உயரதிகாரி ஒருவர் நடந்து செல்கையில் சாலையோரக்கடையில் வேர்க்கடலை வாங்கினார்.
ஏதோ நெருடலாக உணர்ந்த அவர் கடலைப் பையைப்பார்க்க ஒரு அதிர்ச்சி.
வங்கிப்பெயர் அச்சிடப்பட்ட புத்தம்புது காகித உறை.
கடையை உற்று நோக்கினால் கட்டுக்கட்டாக புதிய வங்கி உறைகள்
இது பற்றி தீர விசாரித்ததில் மிகப்பெரிய அளவிலான ஊழல் வெளிச்கத்துக்கு வந்தது.
உயரதிகாரி ஒருவர் நடந்து செல்கையில் சாலையோரக்கடையில் வேர்க்கடலை வாங்கினார்.
ஏதோ நெருடலாக உணர்ந்த அவர் கடலைப் பையைப்பார்க்க ஒரு அதிர்ச்சி.
வங்கிப்பெயர் அச்சிடப்பட்ட புத்தம்புது காகித உறை.
கடையை உற்று நோக்கினால் கட்டுக்கட்டாக புதிய வங்கி உறைகள்
இது பற்றி தீர விசாரித்ததில் மிகப்பெரிய அளவிலான ஊழல் வெளிச்கத்துக்கு வந்தது.
வைப்பு ரசீதுகளை (deposit
receipt) வங்கிகளில்
பாதுகாப்பாக கட்டணம் ஏதும் இன்றி வைத்துக்கொள்ளலாம் . இது safe custody
என்று அழைக்கப்படும்/
பாதுகாப்புப்பெட்டகம் வேறு இது வேறு
வாடிக்கையாளர் ஒருவர் இவ்வாறு
பாதுகாப்பாக வைக்கப்பட்ட தன் ரசீதுகளை சரி பார்க்கும்போது அவற்றில் சில சொற்கள்,
குறியீடுகள் அதிகப்படியாக இருப்பதைக்கண்டு
வங்கி ஊழியரிடம் இது என்ன என்று கேட்டார்.
உங்கள் வைப்புத்தொகையை பிணையாக வைத்து
நீங்கள் வங்கியில் கடன் பெற்று பின் அந்தக்கடனை கட்டிவிட்டீர்கள் .அதுதான்
குறிக்கப்பட்டிருக்கிறது என்று வங்கி ஊழியர் சொன்னதைகேட்டு வாடிக்கையாளர்
அதிர்ச்சி அடைந்தார். ,
அவர் நினைவு தெரிந்து எந்தக்கடனும் வங்கியில் வாங்கவில்லை . இது போன்ற
குறியீடுகள் பல ரசீதுகளில் இருப்பதைக்கண்ட அவர் ஊடகத்தில் தெரிவிக்க மிக உயர்
அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது
ஒரு பெரிய கிளையில் மேலாளரின் அறையில்
போட்டிருந்த திரை மிகவும் பழையதாகி விட்டது . மேலிடத்தில் அனுமதி பெற்று அதை
மாற்றி புதிய திரை போட்டு அந்த செலவுக்கு ஒப்புதல் கேட்டு மேலாளர் எழுதினார்.
வங்கியில் திரைக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட ஒரு மீட்டருக்கு ஒரு ரூபாய் அதிகமாக
செலவு ஆகியிருக்கிறது எனவே இதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மேலிடம் தெரிவிக்க,
ஒரு நீண்ட கடிதப்போக்குவரத்துக்குப்பின் ஒப்புதல் வழங்கப்பட்டது.
கடிதப்போக்குவரத்துக்கான செலவு திரையின் விலையை விட அதிகமாகியிருக்கும்
வங்கி அதிகாரி ஒருவர் தனியாக நிதி
நிறுவனம் நடத்தினார். அந்தப் பகுதியில் கால்நடை வளர்ப்போர் நல்ல பொருள் வசதி
படைத்தவர்களாகவும் அறியாமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் இல்லத்
திருமணம் போன்ற விழாக்களில் பங்கு கொண்டு சிறிய பரிசுகள் கொடுத்து பெருந்தொகையை தன்
நிதி நிறுவனத்துக்கு வைப்புதொகையாக வாங்கி விடுவார், இது போக, அரசு ஊழியர்கள்,
வங்கி ஊழியர்களும் அவருடைய வாடிகையாளர்கள். வங்கியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற
ஊழியர்கள் பலரும் அவரிடம் நிறைய பணம் செலுத்தியிருந்தார்கள்
எல்லாம் நன்றாகத்தான்
போய்க்கொண்டிருந்தது .ஒரு நாள் இரவோடு இரவாக அந்த நிதி நிறுவனம் நடத்திய அதிகாரி
குடும்பத்துடன் தலை மறைவாகி விட்டார்..
வன்முறைக்குப் பெயர் பெற்ற அரசியல்வாதி
ஒருவர் அவருக்குப் பின்புலமாக இருந்ததால் அந்த அதிகாரி இருக்குமிடம் தெரிந்தும்
அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பேச்சு அடிபட்டது
மிகத்திறமையுடன் வேகமாக செயல்படும்
ஊழியர்கள் எல்லா நிலையிலும் உண்டு.
வட்டார அலுவலத்தில் கடன் பிரிவில்
இப்படி ஒரு அதிகாரி இருந்தார். கடன் கேட்பு ஆவணங்கள், அது தொடர்பான தகவல்கள்
அனைத்தையும் கிளையிலிருந்து முறையாக முழுமையாக அனுப்பி வைத்தால் அடுத்த நாளே அவர்
தொலைபேசியில் கிளையைத் தொடர்பு கொண்டு சிறிய ஐயங்களைத் தெளிவு படுத்திக்கொள்வார் .அதற்குமேல் விளக்கம்
தேவைபட்டால் அன்றே எழுதி கிளைக்கு அனுப்பி விடுவார். .பெரும்பாலும் ஒரு
வாரத்திற்குள் கடன் அனுமதி வந்து விடும்.
இது போன்றவர்களுடன் பணியாற்ற மிகவும்
உற்சாகமாக இருக்கும்.
இது போல் இன்னொரு நிகழ்வு.
.வாடிக்கையாளர் ஒருவர் ஒரு பெரிய தொகை வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பம் கொடுத்ததை
உயர் அலுவலகத்துக்கு அனுப்பி ஒரு வாரம் ஆகியும் எந்த கேள்வியும் கேட்கவில்லை..
என்ன ஆயிற்று என்று தொலைபேசியில் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அன்று வந்த
அஞ்சலில் கடன் அனுமதிக் கடிதம் பார்த்து வியப்பு கலந்த மகிழ்ச்சி ..வாடிக்கையாளருக்கு
இதை உண்மை என்று நம்பவே முடியவில்லை
அரசு உயர் அதிகாரி ஒருவர் வீட்டு மனை
வாங்க கடன் கிடைக்குமா என்று கேட்க, அதை நான் தொலைபேசியில் உயர் அலுவலகத்துக்கு
தெரிவிக்க, அதன் அடிப்படையில் உடனே கடன் அனுமதித்த நிகழ்வும் நடந்தது உண்டு.
மிக நல்ல வாடிக்கையாளர் ஒருவருக்கு,
தொலைபேசியில் பேசி வட்ட அலுவலகத்தில் இருந்து உடனடியாக ஒரு பெரிய கடன் தொகைக்கு
அனுமதி வாங்கியதும் உண்டு
வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தன்
வீட்டுக்கடனை வேறு வங்கியில் இருந்து எங்கள் வங்கிக்கு மாற்ற விண்ணப்பித்தார்.
தொகை சிறியதுதான் என்றாலும் வேறு வங்கியிலிருந்து கடனை மாற்ற உயர் அலுவலக அனுமதி
பெற்றே செய்ய முடியும்.அதன்படி அங்கு அனுப்பி பத்து நாளில் அனுமதியும் வந்து
விட்டது .
எனக்கு திடீரென ஒரு நெருடல் மனதில். பல
மாதங்களாக இவரை இங்கே பார்த்தது போல் இருக்கிறதே,. வெளி நாட்டு வேலையில் இவ்வளவு
நீண்ட விடுப்பு கிடைக்காதே என்று ஒரு ஐயம்.
அவருடைய ஊதியச் சான்றிதழில் அந்த
நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி இருந்ததைப்பார்த்து அவர் பற்றிய தகவல்களைக்
கேட்டேன். ஓரிரு நாளில் வந்த பதில் கண்டு எனக்கு அதிர்ச்சி. பணியிடத்தில் புரிந்த
குற்றத்திற்காக சிறை வாசம் அனுபவித்த அந்த வாடிக்கையாளர் இனி அந்த நாட்டில்
நுழைவதே தடை செய்யபட்டிருகிறது
உடனடியாக கடனை ரத்து செய்து விட்டு
மேலிடத்திற்கும் தெரிவித்தேன், இறைவன் அருளால் மயிரிழையில் தப்பித்தேன்,
மிகப்பெரிய படகு வாங்க கடன் கேட்டு ஒரு
வாடிக்கையாளர் அணுக , இது ஒரு புது வகையான கடனாக இருக்கிறதே என்று நானும்
முனைப்பாக செயலில் இறங்கினேன், அந்த சமயத்தில் கிளைக்கு வந்த வங்கி உயர்
அதிகாரியிடம் இது பற்றிப்பேச அவரும் இது ஒரு நல்ல கடனாகத் தெரிகிறது என்று
கருத்துத் தெரிவித்தார்.
கடனுக்கான ஆவணங்கள் பலவற்றையும்
சேகரித்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் அரசு அலுவலகம் ஒன்றில் நடந்த வங்கி
மேலாளர்கள் கூட்டத்தில் சந்தித்த வேறொரு வங்கி மேலாளர், உங்களிடம் படகுக்கடனுக்காக
அணுகியிருப்பவர்,எங்கள் வங்கியின் வேறு ஒரு கிளையில் கடன்
வாங்கியிருக்கிறார்..அந்தக் கிளையில் கேட்டுக்கொள்ளுங்கள் என்று எச்சரித்தார்
உடனே அந்த வங்கிக் கிளையை தொலைபேசியில்
தொடர்பு கொண்டு, அவர்கள் சொன்னபடி இந்தக் கடன் பற்றிய முழு விவரத்தை மின்னஞ்சலில்
அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.
எந்தப் படகு வாங்க எங்களிடம் கடன்
கேட்டாரோ அதே படகுக்கு ஏற்கனவே அவர்களிடம்
கடன் பெற்றிருக்கிறார் என்று தொலை பேசியில் தெரிவித்து அதை மின்னஞ்சல் மூலமாகவும்
உறுதி செய்தார்கள்
கடன் கிடையாது என்று சொன்னவுடன் வாடிக்கையாளர்
வாய்க்கு வந்தபடி பேசினார். நானும் என் குடும்பமும் சமுதாயத்தில் உயர் நிலையில்
இருப்பவர்கள். என்னை வீணாக அலைய விட்டீர்கள்.. பிணைய சொத்துகளுக்கு மதிப்புச்சான்று
,வழக்கறிஞர் சான்று இதெல்லாம் வாங்க நிறைய செலவு செய்திருக்கிறேன், உங்கள் மேல்
வழக்குத் தொடரப்போகிறேன் என்றார்.
மௌனம் ஒன்றுதான் இதற்கெல்லாம் சரியான
மறுமொழி
கிளை மேலாளரின் அனுமதி பெறாமல் வாடிக்கையாளருக்கு
கடன் அனுமதித்துவிட்டு மேலாளரின் அனுமதிக் கையொப்பம் வாங்க முயற்சிக்கும் சில
முந்திரிக்கொட்டை அதிகாரிகளும் வங்கியில் உண்டு.இதையெல்லாம் உறுதியாக மறுத்து
விடவேண்டும்
அதிகாரி மிகவும் நல்லவர் மேலாளர்
மோசமானவர் என்று வாடிக்கையாளர்கள் கத்துவார்கள்.இதற்கும் மௌனமே மறு மொழி
கடன் பிரிவு அதிகாரி மேல் முழு
நம்பிக்கை வைத்து , சிறிய கடன் பற்றிய முடிவுகளை எடுத்து, கடன் வழங்கும்
பொறுப்பையும் அவரிடமே ஒப்படைக்கும் மேலாளர்களும் உண்டு
முன்னால் படை வீரர் ஒருவர் எங்கள் வங்கிப்பணியில்
சேர்ந்தார். அவருக்கு ஊதியம் நிர்ணயம் செய்வதில் உயர் அலுவலகம் காலம்
கடத்திக்கொண்டே போனது. எழுத்து மூலம் பலமுறை தொடர்பு கொண்டு சலிப்படைந்த அந்த
ஊழியர் ஒரு நாள் நேரே உயர் அதிகாரியை சந்திதுத்பேசப் போனார்..
படை வீரர் குத்துச்சண்டை நிபுணரும் கூட.
ஒரு நாளைக்குப் பதினாறு முட்டை ராணுவத்தில் கொடுப்பார்களாம்
சற்று குள்ளமாக இருக்கும் அவர் மிக
வேகமாக் நடப்பார். உருண்டு திரண்ட தோள்கள் குலுங்க வேகமாக அவர் வருவதைக்கண்ட உயர் அதிகாரி, தன்னைத்
தாக்கத்தான் வருகிறார் என்று அஞ்சி தன் இருக்கையை விட்டு எழுந்து மேசையைத்தாண்டி
குதித்து ஓடி வீட்டார்.
ஓரிரு நாட்களில் ஊதியம் நிர்ணயித்து
அஞ்சல் வந்து விட்டது
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதை உறுதி
செய்யும் இன்னொரு நிகழ்வு :வங்கி அதிகாரி ஒருவர் தன் துணைவியை மருத்துவ மனையில்
சேர்த்து பெரும் பொருட்செலவில் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார். மருத்துவ மனை
இருந்த ஊரிலேயே ஊழியர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் மருத்துவ செலவை திரும்ப
அளிக்க அனுமதிக்கும் அலுவலகமும் இருந்தது
மருத்துவமனை செலவு மிகவும் அதிகமாக
இருந்ததால், ஒவ்வொரு வாரமும் அதற்குரிய சீட்டுகளைக் கொடுத்து வங்கியில்
விதிகளின்படி பணம் பெற்றுக்கொண்டிருந்தார் அந்த அதிகாரி.
இது ஒரு உயர் அதிகாரியின் கண்ணை
உறுத்தியது. எந்தக்காரணமும் இல்லாமல் பணம் கொடுப்பதை தாமதப்படுத்தினார். – ..
பாதிக்கப்பட்ட அதிகாரி தவித்துப்போய் விட்டார். பல முறை உயர் அதிகாரியை
சந்தித்துப்பேசியும் பயன் இல்லை.
ஒரு முறை மின் தூக்கியில் (லிப்ட்)
பாதிக்கப்பட்டவரும் வறட்டுப்பிடிவாத உயர் அதிகாரியும் மட்டும்
போய்க்கொண்டிருக்கும்போது மின் தூக்கியை நிறுத்திய அதிகாரி அடிக்காத குறையாக உயர்
அதிகாரியிடம் உடனடியாக
எனக்குப் பணம் தேவை.நாளைக்குள் கிடைக்காவிட்டால் நடப்பது வேறு என்று மிரட்டினார்
நாளைக்கு என்ன அன்றைக்கே பணம் கொடுக்கப்பட்டது
மேலாளர் ஒருவர் பணியில் நிகழ்ந்த
தவறுக்கு பொறுப்பென்று குற்றம் சுமத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்..
நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து
பனிரெண்டு ஆண்டு காலம் போரடி தான் குற்றமற்றவர் என்பதை மெய்ப்பித்தார் . வங்கியில்
நீதி மன்ற ஆணைப்படி அவரை பணியில் அமர்த்தி விட்டார்கள் .
ஆனால் பனிரெண்டு ஆண்டு கால ஊதியத்தை
அவருக்கு கொடுப்பதில்தான் எத்தனை தயக்கம், காலதாமதம் !! பணியே புரியாமல் இவ்வளவு
ஊதியம் கொடுக்க வேண்டுமா என்றொரு சிந்தனை .
அந்த பணி நீக்கம் செய்யப்பட்ட மேலாளரும்
அவரது குடும்பமும் பனிரெண்டு ஆண்டுகள் எத்தனை
இன்னல்களை சந்தித்திருப்பர், எவ்வளவு மன உளைச்சலுக்கு உட்பட்டிருப்பர் பணத்துக்கு
எவ்வளவு சிரமப்பட்டிருப்பர் என்பது பற்றியெல்லாம் அக்கறை
இல்லை
மேலே சொன்ன மூன்று நிகழ்வுகளுக்கும் அடிப்படைக்
காரணம் வங்கி வட்ட, வட்டார, தலைமை அலுவலத்தில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களின்
எண்ணப் பிறழ்வுதான் .
தாங்களும் வங்கி ஊழியர்கள்தான் என்பதை
நினைவில் கொள்ளாமல் I am the
boss. I am the paymaster என்ற
எண்ணத்துடன் செயலாற்றுவார்கள் , தன் கையிலிருந்து பணம் போவது போலும் தாங்கள்தான்
வங்கியின் நலனைக் காப்பாற்றுபவர்கள் என்றும் எண்ணிக் கொள்வார்கள் ,.நாளை நமக்கும் இது போன்ற
ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும் என்று சிறிதும் நினைப்பதில்லை
இவற்றிற்கு மாறாக இதயத்தாக்குதலுக்கு
ஆளான ஒரு மேலாளருக்காக அலுவலகத்தின் ஒரு பகுதியை மாடியிலிருந்து கீழ் தளத்துக்கு
மாற்றிக்கொடுத்த மனித நேயமும் வங்கியில் உண்டு
அதே போல் வட நாட்டில் பணியில் இருந்த
ஒரு அதிகாரியின் தாய் சென்னையில் மறைந்த செய்தி வர, வட்ட அலுவலகம், உடனடியாக
அவருக்கு விடுமுறை பயண சலுகை (Leave travel concession) அனுமதி கொடுத்து வானூர்தி பயண சீட்டும் வாங்கிக்கொடுத்து
சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள்
விடுமுறை பயண சலுகை பெற ஒரு மாதம்
முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்பது பொது விதி.. அதில் விலக்களிக்க உயர்
அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது
Power
vests with those who exercise it என்று
ஒரு சொல்லடைஆங்கிலத்தில் உண்டு .என் பதவிக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்துவதா வேண்டாமா
என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும். அதிகாரத்தை பயன்படுத்தி முடிந்த அளவுக்கு
பிறருக்கு நல்லது செய்வதா இல்லையா என்பதும் என் கையில்தான்
இத்துடன் தொடரின் இந்தப்பகுதியை நிறைவு
செய்கிறேன்
சென்ற பகுதி பற்றி கருத்துகளும் பாராட்டுகளும் தெரிவித்த பீர் முகமதுக்கு
நன்றி
ஆசை ஆசையாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்
உணவுத் தட்டை 'பட்'டென்று பிடுங்கியது போல 'சட்'டென்று நீங்கள் முடித்துவிட்டது சற்று
ஏமாற்றத்தை தந்தது.
பொதுவாக நீங்கள் அதிகம் பேசுபவரில்லை என கேள்விபட்டுள்ளேன்.உங்கள் எழுத்து
அழகு தமிழில் நிரம்பி வழிகின்றது.
மகிழ வைக்கும் பதிவி சச்சா.
இ(க)டைச்செருகல்
ஒரிகாமி என்ற ஜப்பான் நாட்டு கைவினக்கலை
பற்ற பலரும் அறிந்திருப்போம், செய்தும் பார்த்திருப்போம்..
இந்தக்கலைக்குப் பின்புலமாக ஒரு
நெஞ்சைப்பிழியும் நிகழ்வு இருக்கிறது அது பற்றி அடுத்த பகுதியில் பாப்போம் .
இறைவன் நாடினால்
.மீண்டும்
சந்திப்போம்
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
.
No comments:
Post a Comment