Wednesday, 27 June 2018

தமிழ் மொழியறிவோம் 2




உறவு முறைகள் பற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் . சென்ற பகுதியில் உங்கள் பெற்றோர் –parents – Father, mother –அம்மா அப்பா பற்றியும் பெற்றோரின் பெற்றோராகிய தாத்தா ,பாட்டி –grand parents பற்றியும் பார்த்தோம்

இனி உங்கள் உடன் பிறப்புகள் பற்றிப்பார்ப்போம் .

உங்கள் பெற்றோருக்கு – தாய் தந்தைக்குப் பிறந்த மற்ற குழந்தைகள் –உங்கள் உடன் பிறப்புகள்
அவர்களில் ஆண்களை (Male) சகோதரர்கள் – brothers என்றும் பெண்களை(female) சகோதரிகள் sisters  என்றும் சொல்வதுண்டு
இதிலும் உங்களை விட வயதில் மூத்தவர்களை
அண்ணன் (elder brother)  என்றும் அக்கா (elder sister) என்றும் சொல்வார்கள்
உங்களை விட வயது குறைந்தவர்களை
தம்பி (younger brother ) தங்கை (younger sister)
என்றும் சொல்வார்கள்
அக்காவை ராத்தா என்றும் அண்ணனை காக்கா என்றும் பேச்சு வழக்கில் சில இடங்களில் அழைக்கிறார்கள் .
இதற்கு அடுத்து நாம் பார்க்கப்போவது உங்கள் பெற்றோரின் உடன் பிறப்புகள் –உங்கள் அம்மாவின் , அப்பாவின் உடன் பிறப்புக்கள் .ஆங்கிலத்தில் இந்த உறவுகளில் ஆண்களை uncle என்றும் பெண்களை  aunty என்றும் எளிதாக சொல்லலாம்
ஆனால் தமிழில் இவர்கள் பெரியப்பா, சித்தப்பா , பெரியம்மா , சின்னம்மா  மாமா, அத்தை என ஆறு  உறவுகளில் அறியப்படுவார்கள்
இதில் கொஞ்சம் குழப்பம் வரும் .
குழப்பத்தைத் தவிர்த்து தெளிவு பெற ஒரு வேடிக்கையான பழமொழி இருக்கிறது
இவை பற்றி அடுத்த வாரம் அடுத்த பகுதியில் இறைவன் நாடினால்


No comments:

Post a Comment