படமும் பாடமும்
வாணியம்பாடி முஸ்லிம் கல்லூரி மாணவர் சங்கத் தலைவர் கூறிய ஒரு செய்தி
வேலூர் தியசாபிகல் சங்கத் தலைவர் திரு சி ராஜகோபாலாச்சாரியார் என்று
ஒரு வழக்கறிஞர் – குர் ஆன் ஹதீஸ் இன்னும் இசுலாமிய நூல்கள் அத்தனையும் நன்கு
கற்றவர் .இவரை ஒருமுறை கல்லூரி மீலாது விழாவில் சிறப்புரையாற்ற அழைத்தோம்
.
ஆழ்ந்த கருத்துக்களை அள்ளி அள்ளித்தந்தார் கேட்டோம் .முடிவில்
புகைப்படம் எடுக்க அழைத்தோம் அதற்கு அவர் கூறிய விடை எங்களைத் தூக்கிவாரிப்போட்டது
உயிர்ப் பிராணிகள் உருவத்தை வரைவதும் சிலை செய்வதும் இறைவனுக்கு இணை
வைப்பதற்கு அழுத்தம் திருத்தமாக கண்டித்துள்ள திரு நபி அவர்களின் நினைவு நாளில்
அதுவும் அவரைப்பற்றி பேசிய என்னையா புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைக்கிறீர்கள்
வள்ளுவர் கூற்றுப்படி அவ்வாறு புகைப்படத்துக்கு இசைந்தால் என்னிலும்
பேதையர் இல்லை
ஓதி உணர்ந்து பிறர்க் குரைத்தும் தாம் அடங்காப்
பேதையிற் பேதையர் இல் *
என்று நம்மில் சொல்லுக்கும் செயலுக்கும் பொருத்தமில்லா மாக்களை
கண்டித்துள்ளார் வள்ளுவர்
.
அவ்வாறிருக்க இனிப்பை அதிகம் சாப்பிட வேண்டாமென்று சிறு பையனுக்கு
புத்தி கூறுவதற்காக தானே பலநாள் இனிப்பு உண்பதை நிறுத்திக்கொண்ட மகானைப் பற்றி
பேசிவிட்டா நான் மனம் வேறு சொல் வேறு மன்னுத் தொழில் வேறு என்று நடந்து கொள்ள
வேண்டும் என்று எங்களுக்கெல்லாம் சூடு கொடுத்தார்
அப்புறம் ஏன் நங்கள் போட்டோ எடுக்கப்போகிறோம் !
எங்கே எப்பொழுது நம் படங்கள் பத்திரிகைகளில் வெளி வரும் என்று ஏங்கித்
திரிகிறோம்
எங்கெல்லாம் நம் படங்களைத் திறந்து வைப்பர்கள் என எண்ணமிட்டவாறு
இருக்கிறார்கள் நம் தலைவர்கள்
மௌத் ஆனபின் புதைக்கும் இடத்தையே உறுதியாகக்கட்டகூடாதென்று உபதேசித்த
நபி பிரானைப்பின்பற்ற்ய நாம் உயிருடன் இருக்கும்போதே ஞாபகச் சின்னங்கள் வைக்க
ஏற்பாடு செய்து கொள்கிறோம்
இன்னும் திருமனாத்தில் பிறந்த நாளில், அறுபதாவது ஆண்டு விழாவில்
மேளதாளங்கள், பாண்டு வாத்தியங்களுடன் பவனி வருகிறோம்
இது சரியா ?
திரு சி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சூடு நமக்கு ஒரு பாடமாக வேண்டாமோ
எழுத்தாக்கம்
ஹாஜி கா. பீர் முகமது
நகராட்சி ஆணையர் பணி ஓய்வு
(படம் என்றதும் படமெடுத்தாடினார் திரு. சி .ராஜகோபாலாச்சாரி என்ற
தலைப்பை படமும் பாடமும் என்று மாற்றியிருக்கிறேன்
*குறள் 834)
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
F B W த 03072019 wed
No comments:
Post a Comment