Saturday, 30 December 2023

தமிழ் (மொழி) அறிவோம் 31 12 23 ஞாயிறு சுனை





 தமிழ் (மொழி) அறிவோம்

31 12 23 ஞாயிறு
சுனை
(ஒரு இடைவேளைக்குப்பின் வழமையான பதிவுகள் மீண்டும் நேற்றில் இருந்து )
ஒரு சிறிய சொல் , இரண்டே எழுத்துக்கள்
முதல் எழுத்து வல்லின உகரம்
அடுத்தது மெல்லினத்தில் “ ஐ”
நீர் நிலையைக் குறிக்கும் அந்தச் சொல் என்ன ?
விடை
சுனை
மலைகளிலும், குன்றுகளிலும் சிறிய அளவில் தேங்கியிருக்கும் நீர் நிலையே சுனை எனப்படுகிறது. மழைப்பொழிவாலும், சுனையின் மேல் பகுதியில் இருந்து பாறைப் பிளவுகள் வழியே வடிந்து வருவதாலும் , நீர் சுனையில் சேரும்
• குளிர்ந்த குகை அருகே ஊற்று நீர் தேங்கும் இரு சுனைகள். (தஞ்சை தரிசனம் 1, ஜெயமோகன்)
• பசிக்கு உணவும், தாகத்துக்குச் சுனை நீரும், தங்கியிருக்க மலைக்குகையும் அவளுக்கு இருந்தன (பொன்னியின் செல்வன், கல்கி)
• குற்றாலம் மலையில் மரப் பாலத்துக்குச் சமீபத்தில், அருவி விழுந்து விழுந்து ஒரு சிறு சுனை ஏற்பட்டிருக்கிறது (சுசீலா எம்.ஏ, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
1.பூவமன் றன்று சுனையுமன்று (கலித்தொகை, 55)
2.வான்கண் அற்றஅவன் மலையே வானத்து மீன்கண் அற்றஅவன் சுனையே ஆங்கு (புறநானூறு, கபிலர், 109)
3.தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளை (புறநானூறு, கபிலர், 116
திருப்புதூருக்கு அருகில் இருக்கும் பிரான்மலை மேல் ஏறியவர்களுக்கு சுனை நீர் குடித்ததும் சுனையில் குளித்ததும் நினைவில் இருக்கும்
வாழைச சுனை - இங்குதான் காலை உணவு பரிமாறப்படும் .
பிரான் மலை என்றால் காலை உணவு பழைய சோறு (கஞ்சி) ,தொட்டுகொள்ள சுண்டவைத்த மொசசைக் குழம்புதான்
பகுதி தொலைவு கடந்து வந்து அந்த மலைச் சூழ்நிலையில் சாப்பிடுவது - எந்த உணவும் அதற்கு ஈடாகாது
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன்-- முதல் சரியான விடை
சிவசுப்ரமணியன்
வேலவன்
கதீப் மாமுனா லப்பை
பிரேமாவதி ராஜகுமார்
மெகராஜ்
ஷர்மதா
சகோ பாடி பீருக்கு ஓரளவு பாராட்டுகள்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
31 12 2023 ஞாயிறு
௩௧௧௨௨௦௨௩
சர் புதீன் பீ

No comments:

Post a Comment