சித்திக் பாய்
அஸ்ஸலாமு அலைக்கும்
சில நாட்கள் முன்பு உங்கள் பதிவுக்கு மறுமொழியாக
என் கருத்தை தனிப் பதிவாக போடுவதாய் சொல்லியிருந்தேன்
அதன்படி வரும் இந்தப் பதிவு உங்கள் பதிவை ஒட்டியோ வெட்டியோ
இல்லாமல் என் தனிக்கருத்தாக வருகிறது
முதலில் வட்டி
உலகையேஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி ,
பூதாகரமான சக்தி
சாலையோரக் கடை நடத்துபவர் முதல் மில்லியன், ட்ரில்லியன் டாலரில்
வணிகம் செய்யும் பெரு நிறுவனங்கள் வரை வட்டியின்
கோரப்பிடியில் சிக்காமல் தப்பித்தவர் வெகு சிலர்
அதுவம் மிகச் சிறு வணிகர்கள் சொல்லும் வட்டிகணக்கை
பார்த்தால் தலை சுற்றும்
மாதம் 2, 3 , 5 % எல்லாம் தாண்டி
10000 கடன் ,வட்டி ஆயிரம் பிடித்துக் கொண்டு
9000 கொடுத்தார்கள்
தினமும் 110 கட்டி 90 நாடளுக்குள் 10 000/ கடனைத் தீர்க்க வேண்டும்
ஒருநாள் தவறினாலும் வட்டிக்கு வட்டி சேர்ந்து
விடும்
மூன்று நாட்கள் தவறி விட்டால் வன்முறை
குருட்டுக் கணக்காக தினமும் செலுத்தும் தொகையைக்
கணக்கிடாமல் பார்த்தாலே மாதம் 4%அதாவது ஆண்டுக்கு 48 %
இதற்கும் மேலாக ஆண்டுக்கு 4000 % ( நூறு ரூபாய்க்கு
ஆண்டுக்கு வட்டி நாலாயிரம் ) வாங்கும் மீட்டர் வட்டியும் உண்டு
ஆனால் கடன் வாங்குபவர்களுக்கு இது மிகவும் எளிய முறையாகத் தோன்றுகிறாது
சரி வட்டி எனும் அரக்கனை ஒழிக்க முடியாதா ?
முடியுமா முடியாதா என்பதை விட
முயற்சி செய்தோமா வட்டியை ஒழிக்க என்ற வினா
முந்தி வருகிறது
பெரிய அளவில் முயற்சி எதுவம் இல்லை என்பதே உண்மை
ஆங்காங்கே சிலர் செய்கின்றார்கள்
சொந்தப்பணம் இரண்டு லட்சம் ரூபாயில் ஒரு அறக்கட்டளை
நிறுவி
வட்டி , கட்டணம் எதுவும் இல்லாமல் ஒருவருக்கு
25 ஆயிரம் வரை கொடுக்கும் ஒருவரை எனக்குத் தெரியும்
ஆனால் இதெல்லாம் போதாது
பெரிய அளவில் மிகப்பெரும் செல்வந்தர்கள் பலர்
ஒன்று கூடி தகுந்த பிணையம், ஈடு வாங்கிக் கொண்டு
முதலில் ஒரு லட்சம் வரை கொடுக்கலாம்
இது படிப்படியாக உயர்ந்து கோடிகள் வரை போக
வேண்டும்
இதெல்லாம் நடக்குமா என்று கேள்வி கேட்டுக்
கொண்டே இருக்காமல் ஒரு மன உறுதியோடு ,முழு ஈடுபாட்டோடு இறங்கினால் இறைவன் அருளால் வெற்றி
கிடைக்கும்
சில பல ஆண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் உள்ள
மிகப் பெரிய நிறுவனம் ஓன்று இஸ்லாமிய
வங்கி நிறுவ எண்ணியதாகஒரு தகவல் காதில் விழுந்தது
இந்திய ரிசர்வ் வங்கியிலும் இது போல் இஸ்லாமிய
வங்கி நிறுவுவது பற்றி சிந்தனை இருந்தது
அவையெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தப்படவில்லை
இப்ப்போது உள்ள அரசின் மன நிலையில் இது பற்றி எல்லாம் பேசவே
முடியாது
கணக்கெடுத்துப் பார்த்தால் பல வங்கிகளில் பல
இஸ்லாமிய செல்வந்தர்களின் பணம் பெரிய அளவில் , மிகப்பெரிய அளவில் நடப்புக் கணக்குகளில்
வட்டி இல்லாமல் ஆண்டுக் கணக்காக இருக்கும்
அதில் ஓரளவு எடுத்து உதவினாலே ஓரளவுக்கு வட்டியின் கொடுமை குறையும்
இதற்கு முன்னோடியாக ஒவ்வொரு ஜமாத்திலும் அறக்
கட்டளைகள் நிறுவி முடிந்த அளவுக்கு வட்டி, கட்டணமில்லாமல் கடன் வழங்க முயற்சிக்கலாம்
முதலில் கந்து வட்டி, மீட்டர் வட்டியில் சிக்கிச்
சீரழி பவர்களை மீட்க முயற்சிக்கலாம்
முழு மனதோடு விடா முயற்சி செய்தால் குதிரைகளைக்
கூட பறக்க வைக்கலாம் இறைவன் நாடினால்
முயற்சிப்போமா ?!
எனக்குத் தெரிந்த தோன்றிய கருத்துகளை பதிவு
செய்கிருக்கிறேன்
சரியா இல்லையா என்பதை படிக்கும் நீங்கள்தான் சொல்லவேண்டும்
இறைவன் நாடியால் கருத்துகள் அடுத்த பகுதியில் தொடரும்
30122023
kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
சித்திக் பாய் 2
திருமணம்
06012024 சனிக்கிழமை
அஸ்ஸலாமு அலைக்கும்
சென்ற 30122023முதல் பதிவில்
வட்டி பற்றி என் கருத்துக்களை எழுதினேன்
எங்கள் குடும்பத்தில் பல திருமணங்கள் – எதற்கும் மண்டபம், தங்க விடுதி அறைகள் பிடித்த்தில்லை ,
திருமணத்துக்கு ஒரீரு மணிகள் முன்பு நிச்சயார்த்தம் அதற்கு தனி விருந்து, மண்டபம் , எதுவும் இல்லை
அரசு உயர் அதிகாரி எங்கள் அத்தா
சொன்னவர்கள் யாரும் வராமல் இருந்தது இல்லை ,குறைகளும் சொன்னதில்ளை
இருபது ஆண்டுகள் முன்பு வாணியம்பாடியில் பணி புரிந்தேன்
அங்கும் ஆம்பூரிலும் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள்
திருமணம் பள்ளிவாசலில்தான் நடக்கும்
திருமண நேரம் எனபது மதிய (லொகர்) தொழுகைக்கு முன்பு
எனவே திருமண அழைப்பிதழில் நேரம் குரிப்பிட மாட்டார்கள்
மணநாள் விருந்தில் பிரியாணி, கத்தரிக்காய் மட்டுமே கொடுக்க வேண்டும்
இதனால் மண்டபம் , மண மேடை அலங்காரம் போன்ற செலவுகள் பெருமளவில் தவிர்க்ககப்படன
கேரளா மலப்புரம் பகுதியில் திருமண அழைப்பிதல் அடிக்கும் பழக்கம் பெரும்பாலும் இல்லை
முடிந்தவரை நேரில் சொல்லுவதோடு சரி
இன்று நம் நிலை தலை கீழாகி விட்டது
நிச்ச்யதார்த் தம் ஒரு தனி விழா , அழைப்பிதல் ,மண்டபம் , etc etc மண்டப வாடகை லட்சங்கள், பாத்து , இருபது முப்பது லட்சம் வரை போகிறதாம்
ஒரு பவுன் நகை ½ லட்சம் எனவே 10 பவுன் என்றால் கூட 5 லட்சம்
காணொளி, புகைப்படம் , ஆல்பம் , நேரடி ஒளி பரப்பு இந்த வகையில் சில லட்சங்கள்
படித்து விட்டு தூக்கிப் போடும் அழைப்பிதழ்கள் ஒன்றுக்கு நூற்றுகணக்கில் செலவு
அதை பல ஊர்களுக்கு நேரில் சென்று கொடுக்கும் பயணம்
கையில் காசு இல்லாவிட்டால் கடன் வாங்கியாவது செலவழித்து கௌரவத்தைக் காப்பாற்றும் முயற்சி
விருந்தில் வீணாகும் உணவு, தண்ணீர்
இதைப்பற்றி எல்லாம் தவறு ,சரி என்று சொல்லும் தகுதி எனக்கு இல்லை
நானும் இதே தவறை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு செய்தவன்தான்
சமுதாய அழுத்தம் , தகுதி, பதவி இவை சார்ந்த எதிர்பார்ப்புகள்
அதற்கெல்லாம் மேல் வாழ்வில் ஒரு முறை வரும் நிகழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற பாச உணர்வு
இதை எல்லாம் மீறி யாரவது இஸ்லாமிய முறையில் எளிமையாக திருமணம் நடத்தினால் கஞ்சன் , கருமி, பணத்தை என்ன கொண்டா போகப்போகிறான் என்ற ஏசசும் பேசசும்
உன்னிடமே தவறு இருக்கும்போது எதற்கு இப்படி வரிந்து வரிந்து எழுதுகிறாய் என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது
நான் சொல்ல வந்தது வேறொரு பரிமானம் ,பார்வை
சில பள்ளிவாசல் ,,ஜமாத்துக்களில் திருமண உதவி, கொமாரு (குமரு) காரியம் என்று ஒரு நல்ல தொகை கொடுத்து உதவுகிறார்கள்
7, 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருமணத்துக்கு 30 ஆயிரம் வரை கொடுத்தார்கள் ஆண்டுக்கு குறைந்தது 10 பேருக்கு என்று இலக்கு
இப்போது உள்ளவிலை வாசியில் அது 50 ஆகியிருக்கலாம்
எனக்கு விளங்கவில்லை இது எந்த வகையில் இஸ்லாம் சார்ந்தது என்று தெரியவில்லை
கேட்டால் இல்லாதவர்களுக்குக் கொடுத்தால் என்ன தப்பு என்கிறார்கள்
ஜமாத் செய்யும் செயல் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் , முன்னோடியாகவும் இருக்க வேண்டும்
அது, குரான், ஹதீஸ் படி இருக்க வேண்டும்
அதை தாண்டி செய்வது ஒரு தவறான முன் உதாரணமாகி விடலாம்
ஜமாத்தில் நிதிநிலை நன்றாக இருந்தால் மாணவர்கள் படிப்புக்கு உதவி
செய்யலாம் . உதவி சிறு குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கலாம்
ஒரு சிறு நிகழ்வு எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம்
“தோழரே உங்களில் ஒரு மாறுதலை ,ஒரு புது மணத்தை உணர்கிறேன் “
என்று நபி ஸல் அவர்கள் ஒரு நபி தோழரிடம் கேட்க அ அதற்கு அவர்
“ஆம் நபி பெருமானே எனக்கு நேற்று திருமணம் ஆகி விட்டது “ என்கிறார்
“அப்படியா ,மகிழ்ச்சி ! ஒரு ஆட்டை அறுத்து தோழர்களுக்கு விருந்து கொடுத்து விடுங்கள் “
என்பது நபி ஸல் அவர்களின் மறு மொழி
அவ்வளவுதான்
“எனக்கு ஏன் சொல்லவில்லை, அழைக்கவில்லை “ என்ற கேள்வி, சினம் எதுவும் இல்லை
ஆம் இஸ்லாத்தில் திருமணம் என்பது அவ்வளவு எளிதான , எளிமையான ஒரு சட்டம் சார்ந்த ஒப்பந்தம்
எனக்குத் தெரிந்ததை எழுதி விட்டேன்
என் வரம்பை மீறி இருந்தால் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் மன்னிப்பானாக
இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் சிந்திப்போம்
06012024 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment