Friday, 19 August 2016

24. பள்ளிவாசல்கள் (பயண இடைவேளை)வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும்



திண்டுக்கல் லியோனி ஒருமுறை குறிப்பிட்டார் :” நகைச்சுவையைத் தேடி நாம் எங்கும் போக வேண்டாம் .நம்மைச்சுற்றியுள்ள மனிதர்கள், நிகழ்வுகளை சற்று உற்று நோக்கினால் ஏராளாமான நகைச்சுவை நிகழ்ச்சிகள் கிடைக்கும்”
 நகைச்சுவை மட்டுமல்ல எல்லாச் சுவைகளும் எல்லா இடங்களிலும் காணக்கிடைக்கும். இதற்கு பள்ளிவாசல்கள் மட்டும் விலக்கல்ல .+
பள்ளிவாசல்களில் நான் கண்டு உணர்ந்தவை, கேள்விப்பட்ட உண்மை நிகழ்வுகள் ,கேட்ட கதைகள் சிலவற்றை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
ஆன்மீகம் , மதம் இதெல்லாம் இதில் கிடையாது. எனவே தொடர்ந்து படிக்கலாம். (யாரும் சினம் கொள்ள வேண்டாம் )
கேள்விப்பட்டது
சற்று அதிக உயரமான ஒருவர் (ஆறு அடிக்குமேல்) வெள்ளிகிழமை கூட்டுத் தொழுகைக்காக பள்ளிக்கு வந்தார். இவர் நின்ற வரிசைக்கு முன் வரிசையில் மிகவும் பருமனான ஒருவர் நின்றார்  கூட்டுத்தொழுகைக்கு முன்பான (சுன்னத்) தொழுகை இருவரும் தொழுதார்கள்
ஒரே சமயத்தில் இருவரும் (ருக்குவுக்கு ) குனிந்தார்கள் . உயரமானவரின் தலை குண்டானவரின் பின் புறத்தில் இடிக்க, அவர் நிலை குலைந்து உயரமானவர் மேல் சாய்ந்து விட்டார்.
உயரமானவரின் கழுத்துப் பகுதி நசுங்கி,மூச்சுத்திணறி உயிர் பிழைத்தது மறு பிழைப்பாகி விட்டது.
குண்டானவர் சுதாரித்து எழுந்து உயரமானவரை ஆசுவாசப்பத்டுதினார்.
பள்ளிவாசலிலும் விபத்துக்கள் நடக்கும் .
@@ பள்ளியில் தொழுது கொண்டிருக்கும்போது தெரிந்தவர்கள் யாரும் வந்தால் தொழுகையின் ஊடே அவர்களை வாங்க வாங்க என்று சொல்வதை வழக்காமக் கொண்டிருந்தார் ஒருவர்
@@@ தொழுகை பற்றி அதிகம் தெரியாத ஒருவர் முதல் முறையாக வெள்ளிக்கிழமை கூட்டுத்தொழுகை(ஜும்மா) தொழுக பள்ளிக்குப்போனார் . கூட்டுதொழுகைக்கு முன்பு சிலர் தொழுதுகொண்டிருந்ததைப்பார்த்த இவர் ஒருவரைப்பின்பற்றித் தொழுகத் துவங்கினார். அவர் தொழுதார், தொழுதார் தொழுது கொண்டே இருந்தார் .இவரும் அவரைப்பார்த்து அதே போல் கால் வலிக்கத் தொழுதார். பிறகு தெரியவந்தது  அவர் சில தினங்களாக விட்டுப்போன தொழுகைகளை எல்லாம் அன்று சேர்த்து வைத்துத் தொழுதார்
.@@@@ முதியவர் ஒருவர் இருந்தார். அவரைப்பார்த்து யாராவது தொழுகத் துவங்கினால் கடும் சினம் கொண்டு திட்டி விரட்டி விடுவார்
@@@@@ கழிப்பறை வசதிக்காகவே பள்ளி வரும் சிலரும் உண்டு.  
பார்த்தவை
காலைத் தொழுகைக்கு தொழ வைக்கும் அசரத் வரவில்லை. தொழ வந்தவர்களில் ஒருவர் தொழுகை வைக்க ஒப்புக்கொண்டார். .
முதல் ரக்கத்தில் அல்கம்து சூரா ஓதியவுடன் யாசீன் என்ற பெரிய சூராவை ஓதத்துவங்கினார். ஏன் இப்படி மாட்டிகொள்கிறார் என்று தோன்றியது. யாசீன் சூரா எனக்கு மனப்பாடமாகத் தெரியாது. இருந்தாலும் அவர் ஓதுவதில் பிழைகள் பல இருப்பது தெளிவாகத் தெரிந்தது ..அடுத்த ரக்கத்திலும் ஒரு பெரிய சூராவை பிழையுடன் ஓதினார்.
தொழுகை முடிந்ததும் ஒரு முதியவர் மிகவும் சினமுற்று இது என்ன தொழுகை இது என்ன சூரா என்று உரத்த குரலில் பேசினார்.
பொதுவாக தொழுகை வைப்பதோ, பாங்கு சொல்வதோ எளிதான பணி அல்ல. குரானை நன்கு ஓதியவர்கள் கூட பழக்கமில்லாவிட்டால் தொழுகை வைக்கத் தயங்குவார்கள் பாங்கும் சொல்ல மாட்டார்கள்  
@@ இன்னொரு பள்ளியில் அசரத் ருக்குவில் குனியும்போது ஒவ்வொரு முறையும் கைகளால் கைலியின் நுனியைபிடித்து தூக்கி விடுவார். அவர் செய்வதைப்பார்க்கும்போது இதுவும் தொழுகையில் ஒரு அங்கமோ என எண்ணம் வரும்
@@@ பெரும்பாலான பள்ளிகளில் அசரத்துக்கும் மோதினாருக்கும் ஒரு பனிப்போர் எப்போதும் நடக்கும். சில நேரங்களில் இது வெளிப்படையாகத் தெரியும்..ஒரு பள்ளிக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் போயிருந்தேன். அசரத் உரையை முடிக்குமுன்பே மோதினார் இரண்டாவது பாங்கு சொல்ல ஆயத்தமாகி விட்டார். அசரத் சற்று அதட்டலாகப் பேசியவுடன் மோதினார் அமைதியாகி விட்டார்.
@@@@ நோன்பு திறந்து விட்டு மகரீப் தொழுகைக்குப் பள்ளிக்குப் போனேன். இருவர் எதோ ஆட்டைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தது சண்டையாக மாறி கைகலப்பில் முடிந்தது. விடாமல் தொழுகும் அந்த  இருவரும் அன்றைய மகரீப் தொழுகை பற்றிக் கவலைப்படவில்லை 
@@@@@ தக்பீர் கட்டுவதில் பல வேடிக்கைகளைக் காணலாம். சிலர் தக்பீர் கட்டுவதைப் பார்த்தால் எதோ விமானம் தரையில் இருந்து எழும்புவது போல் இருக்கும், இன்னும் சிலர் அல்லாவின் அருளைக் கையில் பிடித்தது போல் கட்டுவார்கள்.
@@@@@@ ஒரு வெள்ளிக்கிழமை தொழுகையில் அல்ஹம்து சூரா ஓதியவுடன் ஒருவர் மிக உரத்த குரலில் ஆமீன் என்று கூறி அனைவரையும் திடுக்கிட வைத்தார். தொழுகை முடிந்தவுடன் அசரத் இவ்வளவு உரத்த குரல் கூடாது என்று கண்டித்தார் .
@@@@@@@ ஒரு பள்ளியில் தொழுகை முடிந்து துவா ஓதுவார்கள் என்று காத்திருந்தேன். அது மர்கஸ் பள்ளி, துவா ஓத மாட்டார்கள் என்று யாரோ உருதில் சொன்னது அரைகுறையாய்ப் புரிந்தது
@@@@@@@@ ரம்ஜான் மாத இரவுத் தொழுகை (தராவீஹ்) முடிந்த பின் வழங்கப்படும் தேநீர், பழம், சிற்றுண்டிகளுக்காகவே கடைசி நேரத்தில் பள்ளிக்கு ஒரு கூட்டம் வரும்
@@@@@@@@@ தியாகத் திருநாள் (பக்ரீத்) தொழுகைக்குப் போயிருந்தேன்..தொழுகை நல்லவிதமாக முடிந்து, குத்பா ஓதியபின் அசரத் உரையாற்றினார். ஒரு சிறிய நகைச்சுவை செய்திக்கு எல்லோரும் நகைத்தார்கள் உடனே அசரத் சிரிக்காதிங்க இன்று அழவேண்டிய நாள் என்று சொன்னார். சொன்னதோடு விடவில்லை . அழுதே ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார். இதற்காகவே காத்திருந்தது போல் சிலர் கண்ணீர் விட்டு அழுது உருக்கமாக துவா கேட்டார்கள். எனக்கு அழுகையே வரவில்லை. சிரிப்பு வந்ததை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்
@@@@@@@@@@ ஊரில் பெரிய மனிதர் ஒருவர் . எப்போதும் வெள்ளிகிழமை கூட்டுத் தொழுகைக்கு வெகு நேரம் கழித்து வருவார். ஆனால் எல்லோரையும் தாண்டிக்கொண்டு போய் முதல் வரிசையில் அமர்ந்து விடுவார்.
@@@@@@@@@@@ கூர்க் பகுதியில் சில பள்ளிகளில் உடல் சுத்தி (ஒலு) செய்ய வெந்நீர் வைத்திருப்பதைப் பார்த்து வியந்தேன்
@@@@@@@@@@@@ சென்ற வாரம் மாலை (மகரீப்) தொழுகைக்கு ஒரு பள்ளிக்குச்சென்றேன். இகாமத் சொல்லத் துவங்கியவுடன் வழக்கம் போல் எழுந்து நின்றேன். மோதினார் அமரும்படி கையைக் காண்பித்தார் .எல்லோரும் இகாமத் சொல்லி முடித்தவுடன்தான் எழுந்தார்கள். இது ஏன் என்று தெரியவில்லை 
 நொந்தது
புனித இரவுத் தொழுகைக்கு ஒரு பள்ளிக்குப் போயிருந்தோம். தொழுகை நடக்கும்போதே அடுத்த அறையில் பள்ளி நிர்வாகிகள் பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அதைவிடக் கொடுமை தொழுகை முடிந்து அடுத்த நிகழ்ச்சிக்கு உள்ள இடைவெளியில் நடந்தது,.நிறைய இளைஞர்கள் பள்ளிக்கு வெளியே குழுமி நின்றனர். அசரத் அசரத் என்ற ஒலி நிறையக்கேட்டது. அப்படி என்ன அசரத் மேல் அதிகப்பாசம் அதுவும் அசரத் உள்ளே இருக்கையில்  பள்ளிக்கு வெளியே  
வெளியே போய்ப்பார்த்தால் மேல் மாடத்தில் தொழுக வந்த இளைஞிகள் நிற்க அண்ணல்களும்  நோக்க அவர்(ள்)களும் நோக்க காதலர் தினம் அரங்கேறிக்கொண்டிருந்தது   அசரத் என்பது ஒரு சங்கேதச்சொல்.
@@ ஒரு நாள் காலை வழக்கம்போல் குளித்துவிட்டு காலைத் தொழுகைக்கு (பஜர்) பள்ளி சென்று தொழுதேன். குனிந்த நிலையில் (சஜ்தா) இருக்கையில் முகத்தில் ஒரு கைக்குட்டை வந்து அடித்தது.. அத்தர் ,வியர்வை, ஈரப்பிசுபிசுப்பு எல்லாம் கலந்து மூக்கில் ஏறியது. குளித்துத் தொழுத புத்துணர்வே மாறியது போல் ஒரு குமட்டல்
தொழுக வரும் பலர் ஈரக் கைக்குட்டையை தமக்கு முன்பு விரித்துப் போடுவதை ஒரு சடங்காகவே கடைப்பிடிக்கிறார்கள்
@@@ பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தேன். அங்கே ஒரு பள்ளிக்கு வெள்ளிக்கிழமைத் தொழுகைக்காகப்( ஜும்மா)போனேன். .ஏன் போனோம் என்று ஆகி விட்டது. அப்படி ஒரு அழுக்கான பாய். அதுபோக மூக்கைத் துளைக்கும் நாற்றம்
 கேட்ட கதைகள்
வெள்ளிக்கிழமைத் (ஜும்மா) தொழுகை நடக்கிறது..நல்ல கூட்டம் .அல்கம்து சூரா ஓதி, துணை சூரா ஒதி, ருக்கூவில் குனிந்து நிமிர்ந்து  சஜ்தாவில் குனிந்த நிலையில்  அசரத்தின் அல்லாஹு அக்பர் ஒலியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் நீண்ட நேரமாகியும் ஒலி வராததால் வேறு வழியின்றி பொறுக்கமுடியாமல் நிமிர்ந்து பார்த்தால் அசரத்தைக் காணோம் .
வெளியே நின்ற அசரத்தைக் கேட்டால், எனக்கு உரிய மதிப்போ. நான் கேட்ட ஊதியமோ இங்கு கிடைக்கவில்லை..எனவே உங்களைப் பழி வாங்க நான் குனிந்த நிலையில் அப்படியே தவழ்ந்து வெளியே வந்து விட்டேன் என்றார்
@@ ஊரில் செல்வாக்கும் செல்வமும் நிறைந்த ஒருவர். பள்ளிக்கு நிறைய நன்கொடை கொடுத்தவர். அவர் அசரத்திடம் கேட்கிறார் “ தொழுகையில் யார் யாரோ பேரெல்லாம் சொல்கிறீர்கள் ஆனால் இவ்வளவு பணம் கொடுத்த என் பேர் சொல்வதில்லையே .இனிமேல் என் பேரை மறக்காமல் சொல்லுங்கள்”
அசரத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. துவா ஒதும்போது குஞ்ஞாலிக்குட்டியும் கூடக்கூட  என்று அவர் பேரை சேர்த்து ஓதினார்.
இதற்கு மேலும் சொல்லிக்கொண்டே போனால் கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிவது போலாகிவிடும். எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்.
சென்ற பகுதி பற்றி கருத்துக்கள், பாராட்டுக்கள் தெரிவித்த,அஜ்மல், அயுப்,சர்மாதா , சகோதரிகள் மெஹராஜ்! ஜோதி அனைவருக்கும் நன்றி
மெஹராஜ் “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே .அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை .கோழிகளுக்குத் நான் தீனி வைப்பதைப்பார்த்த சிஸ்டர் ஜேனட் மேரி எனக்குக் கோழிக்காரி என்று பட்டம் சூட்டினார்கள். பள்ளிக் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் பேசாமல் அமைதி காத்ததால் பேசா மடந்தை என்ற பெயர்.
சுதந்திர தினத்தன்று அத்தா கொண்டு வரும் ஆரஞ்சு மிட்டாய்க்கு இணையான ருசி எதுவும் இல்லை.அம்மா வைக்கும் இட்லி பாசிப்பருப்பு சாம்பார்  ருசி இன்னும் நினைவில் நிற்கிறது
 .சின்ன வயதில் நீ (அதாவது நான்) கோழிக்குஞ்சை நசுக்க அத்தா அதட்ட வரும்போது நீ பியா பியா என்று கத்த அத்தா சிரித்து விட்டார்கள் .(பஞ்சில் நூல் நூற்றதெல்லாம் ஆம்பூரில் என்று மெஹராஜ் குறிப்பிட்டிருந்தது ஆனால் எனக்கு மேட்டூர் என்றுதான் நினைவு – ஆம்பூரில் நான் முதல் வகுப்புத்தான் படித்தேன் )
ஜோதி  “ பூர்வ ஜன்ம ஞாபகம் வந்தது போல் ஒரு உணர்வு
அஜ்மல் amazing memory interesting recollection enjoyed reading

Ayub khan & Sarmatha Begam 
 We appreciate your writing which remembered (kuppayam etc etc)& our childhood life. Pls continue. 


இ(க)டைச்செருகல்
பள்ளிவாசல் பற்றிய பகுதி. அதனால் இ(க)டைச்செருகலால சில ஆன்மீகத் துளிகள்
முஸ்லிம்கள ,யூதர்கள், ஸாபிகள்(விண்மீனை வணங்குபவர்கள்) மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரில் யார் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்  
                           திருகுர்ஆன் 5;69
இதன் கருத்து:
மனிதனின் குண நலன்களைப் பொறுத்தே இறை தீர்ப்பு அமையும். இனங்களைப் பொருத்தல்ல .
(இதில் முசுலீம்கள், யூதர்கள் என்று   யாருக்கும் ஏகபோக உரிமை கிடையாது )
அடுத்து ஒரு சிறிய வினா :
இஸ்லாம் மார்க்கத்தில் முதன் முதலில் பிறந்த குழந்தை பெயர் என்ன ?
விடை அடுத்த பகுதியில்
இறைவன் அருளால்                                                                                                                                                                                                                                                                                        பயணம் தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில்
sherfuddinp.blogspot.com





  

No comments:

Post a Comment