வாழ்க்கைப் பயணமும் வங்கி அனுபவங்களும்
2.
ஆம்பூருக்கும் சண்டிகருக்கும் முப்பது ஆண்டுகள்
இடைவெளி.
இப்போது நான் வங்கியில் மேலாளர் பீகாரில்
பணியாற்றிகொன்றிருந்த நான் அங்கே பள்ளிபடிப்புக்கான வசதி இல்லாததால் அங்கே
குடும்பத்தை அழைத்துச் செல்ல முடியவில்லை. அப்போது வங்கியில் ஊழியர் பயிற்சிக்
கூடங்களில் பணியாற்ற மேலாளர்களைத் தேர்ந்த்தெடுப்பதாக அறிவிப்பு வந்தது, அதற்கு விண்ணப்பித்த எனக்கு ஜலந்தர் மையத்திற்கு தேர்வாகி இருப்பதாகவும்
ஜலந்தர் மையம் திறப்பதில் சில நிர்வாகப் பிரச்சனைகள் இருப்பதால் சண்டிகர்
மையத்தில் பணியாற்றும்படியும் ஆணை வந்தது.
பெங்களூர் தலைமைப் பயிற்சி மையத்தில் இரு வாரம்
கடுமையான பயிற்சிக்குப்பின் சண்டிகர் பயணம்
டெல்லி வரை தொடர் வண்டியில் பயணித்து அங்கு
விமானப்படை உயர் அதிகாரியாக இருந்த என் சகோதரன் அஜ்மல் கான்வீட்டில் சிறிது ஓய்வு
எடுத்துக்கொண்டு பேருந்தில் சண்டிகர் பயணித்தேன். வசதியான இருக்கைகள் கொண்ட
குளிரூட்டப்பட்ட வண்டி என்பதால் பயண அலுப்புத் தெரியவில்லை. மேலும் உணவுக்காக
நிறுத்தும்போது ஆங்கிலத்தில் தெளிவான அறிவிப்பு-குரலிலும் எழுத்திலும், உணவகம்
அமைத்திருந்த இடம் ஒரு பெரிய பூங்கா போல் மனதுக்கு இதமாக இருந்தது. சுத்தமான கட்டணமில்லா
(விலையில்லா ?)க் கழிப்பறைகள். உணவும் சுவையாக இருந்தது
சண்டிகர் பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த என்
நண்பர் ராஜன்- என்னோடு துறையூரில் பணி புரிந்தவர்- அன்புடன் தன் இல்லத்திற்கு
அழைத்துச் சென்றார் . அங்கு ஓரிரு நாட்கள் தங்கினேன்.. பிறகு பயிற்சி கூடத்தில்
பணி புரிந்த இரண்டு தமிழர்களும் நானும் சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து
தங்கி உணவகங்களில் சாப்பாட்டைப்பார்த்துக்கொண்டோம்.
நேருவின் கனவு நகரம் சண்டிகர்
முழுக்க முழுக்க திட்டமிட்டு திட்டத்தை செயல் படுத்திக்
கட்டப்பட்ட ஒரு ஒழுங்கான நகரம். தரைத்தளம், முதல் தளம் இதற்கு மேல் கட்ட அனுமதி
கிடையாது. வீடுகள் ஒரு தெருவில் ஒரே மாதிரி இருக்கும்.பெரிய பெரிய சன்னல்கள்
கம்பியில்லாமல். .தங்கள் விருப்பத்திற்கு யாரும் பெட்டிக்கடை பீடாக்கதை டீக்கடை
போட முடியாது. சீராக அமைக்கப்பட்ட சாலைகள் .ஆங்கங்கே பூங்காக்கள் செயற்கை
நீருற்றுக்கள். ,,,கடைகளுக்கு ,அலுவலங்களுக்கு
தனித்தனி வளாகங்கள்.,நகருக்குப் பெருமை சேர்க்கும் கல் பூங்கா என்று சண்டிகரின்
பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்.
இதையெல்லாம் தாண்டி நான் அங்கே உணர்ந்தது ஒரு
வெறுமை,ஒரு உயிர் ஓட்டம் இல்லாமை. வீதிகளில் கூட்டம் பரபரப்பு எதுவும் இருக்காது..
இருட்டும்போது ஊர் அடங்கி விடும் கண சோர்வடையச்செய்யும் ஒரே மாதிரி வீடுகள், ஒரு
தீப்பெட்டி வாங்கக்கூட குறிப்பிட்ட இட்டதிற்குத்தான் போக வேண்டும் இதெல்லாம்
பார்க்க எனக்கு அலுப்புத்தட்டியது..
சண்டிகர் நகரம் பஞ்சாப் ஹரியாணா என்ற இரு
மாநிலங்களின் தலை நகர் என்பதும் அந்த நகரம் ஒரு தனி யூனியன் பிரதேசம் என்பது
எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
சண்டிகரில் எனக்கு மிகவும் பிடித்த்து அங்கு
கிடைக்கும் ஐஸ்க்ரீம்.நம் ஊர் ஆவின் போல் அங்குள்ள அரசு பால் நிறுவனம் விற்பனை
செய்யும் ஐஸ்க்ரீம் அளவிலும் சுவையிலும் நிறைவாகாவும் விலை மிக மலிவாகவும்
இருக்கும். அதற்கடுத்து கேக் வகைகள்.அங்குள்ள இந்தியா காபி ஹௌசில் சுவையான காபி ,
தோசை இட்லி கிடைக்கும்.
பயிற்சிக் கூடம் தொடங்கி வகுப்புக்கள்
ஆரம்பிப்பதில் சில பல நடைமுறைச் சிக்கல்கள், விடுதி வசதி வேண்டும் என்று வகுப்பைப் புறக்கணித்த ஊழியர்கள்
போன்ற பல புதிய அனுபவங்கள். இதெல்லாம் தமிழ் நாட்டில் கற்பனை கூட செய்ய முடியாதவை.
எங்கள் வங்கி ஊழியர் ஒருவர் தவறுதலாகா அதே
வளாகத்தில் அமைந்த வேறு வங்கி பயிற்சிக் கூடத்திற்குப் போய் சில மணி நேரம் கழித்து
தவறை உணர்ந்து வந்தது ஒரு வேடிக்கை.
முதன் முதலில் லேசான நில நடுக்கத்தை நான்
உணர்ந்தது சண்டிகரில்தான்..திடீரென்று மேசைகள மெதுவாக ஆடுவதையும் குவளையில் உள்ள
நீரில் அதிர்வலைகள் உண்டாவதையும் உணர்ந்திருக்கிரேன்..
குளிர்காலத்தில் மின் விசிறிகளின் இறக்கைகளை
கழற்றி வைத்து விடுவார்கள் . அப்படிச் செய்யா விட்டால் அவற்றில் ஈக்கள்
முட்டையிட்டு நீக்க முடியாத கறை படிந்து விடுமாம்.
சண்டிகரில் குறுகிய காலமே பணியாற்றியதால்
இந்தப்பகுதியும் விரைவில் நிறைவுருகிறது.
இ(க)டைச்செருகல் : இந்தப் பகுதியை நிறைவு செய்த பின் மனதில் ஒரு எண்ண
ஓட்டம், ஏன் சண்டிகர் அவ்வளவு ஒழுங்காய் வடிவமைக்கப்பட்ட ஒரு நகர் அலுப்பூட்டுவதாய்த்
தோன்றியது? ஒழுங்கு என்பதே நமக்குப் பிடிக்காத,ஒத்து வராத ஒன்றா? இது போல் பல
வினாக்கள
இது பற்றி ஒன்றிரண்டு செய்திகளைப் பார்ப்போம்.பொதுவாகத்
திருமணத்திற்கு பையனைத் தெரிவு செய்யும்போது அவன் தன மத ஒழுக்கப்படி குடுமியோ
தாடியோ வைத்திருந்தால் அதற்காகவே அவன் பெண்ணாலும் பெண்ணின் பெற்றோராலும்
நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்..
அதே போல் ஒருவர் தொழுகை வணக்கம் இவற்றை
ஒழுங்காகக் கடைப் பிடித்தால் அவர் ஒரு வித்தியாசமான பிறவியாகக் கருதபபடுவார்
ஒரு பெண் தன் கணவனிடம் புகைத்தல் போன்ற தேவையற்ற
பழக்கங்கள் இருந்தால் பெரிய எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்.. ஆனால் கணவன் யோகா
தியானம் போன்ற ஒழுங்குகளைக் கடைபபிடித்தால் பெண்களுக்குப் பெரும்பாலும்
பிடிக்காது..
இவ்வளவு ஏன் நாம் எல்லோரும் இறைவன் வகுத்த
ஒழங்கு முறையை மீறிய உலகின் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) அவர்களின்
மக்கள்தானே !.
ஆதம் (அலை) அவர்களின் வாரிசான மனித இனத்தின் மனம் ஒழுங்கை எதிர்த்து ஒழுங்கீனத்தை நாடுவதும்
இயற்கைதானோ !
பயணம் தொடரும்
.
No comments:
Post a Comment