22. மாயவரம்
மாயவரம் , மேட்டுப்பாளையம் ,பெரியகுளம் இவை என் பள்ளிப்பருவத்துக்கு
முந்திய ஊர்கள்.
நான் சொல்லும் செய்திகள் நினைவா, கனவா அல்லது என் கற்பனையா என்ற ஐயம்
எனக்கு உண்டாகிறது/ எனது மூத்த உடன்பிறப்புகள்தான் இது பற்றி தெளிவாக்க வேண்டும்.
மாயவரத்தில் எனக்கு நினைவிருப்பது ஒரு பெரிய கதவுடன்(கேட்) கூடிய
மகிழுந்து நிறுத்துமிடம். அதில் ஒரு பெரிய வேப்ப மரம் இருக்கும். நிறைய
வேப்பம்பூக்கள் தரையில் கொட்டிக்கிடக்கும். அங்கே மாக்கல் சட்டிகள்
இருக்கும். நானும் அக்கா ஜோதீயும் அந்தச்
சட்டிகளை வைத்து விளையாடுவோம்/
மகிழுந்து இருந்ததா இல்லையா என்பது நினைவில்லை
அத்தாவைப் பார்க்க நண்பர் ஒருவர் வருவார். கேட்கும் திறன் குறைந்தவர் என நினைவு.
பேசுவதற்கு ஒன்றும் கேட்பதற்கு ஒன்றுமாக பெரிய குழல்கள் கொண்டு வருவார்.
அத்தாவின் இன்னொரு நண்பர் பட்டு ஜிப்பாவும் கறுப்புக் கண்ணாடியும்
அணிந்திருப்பார். அவர் வீட்டில் iஇசைத்தட்டுப் பெட்டி (கிராம போன்) இருக்கும். அதில் டி கே
பட்டம்மாளின் பாடல்களைக் கேட்டு ரசிப்பார்கள்
இதற்கு மேல் மாயவரம் பற்றி நினைவு ஏதும் இல்லை .
அடுத்து
மேட்டுப்பாளையம்
பற்றி மிகக்குறைந்த நினைவே இருக்கிறது
வீட்டின் முன்னாள் ஒரு திண்ணை. திண்ணைக்கு அருகில் ஒரு தார் ட்ரம். அது நிறைய தண்ணீர்.. விளையாட்டாக எட்டிப்
பார்த்த நான் அதற்குள் விழுந்து விடுகிறேன். ட்ரம்மின் விளிம்பு என் உடலில் ஒரு
நீண்ட காயத்தை உண்டாக்கி விடுகிறது.
தங்கை சுராஜ் அங்கே பிறந்ததாய் பின்னாளில் கேள்விப்பட்டிருக்கிறேன்..
அம்மா சுராஜுக்கு நிறைய உருளைக்கிழங்கு அவித்துக் கொடுக்கும் என்று கேள்வி.
நடிகை விஜய குமாரி அக்காமார்களின் பள்ளித்தோழி என்று நினைவு
நமது உறவினர்கள் பலர் உதகமண்டலம் (ஊட்டி) பார்த்தது அத்தா மேட்டுப்பாளையத்தில்
பணியாற்றும் போதுதான்.
நகராட்சி துப்புரவு வண்டிகள் ஒரு வழிப்பாதையில் செல்ல பொது அனுமதி
கிடைத்தது அத்தா மேட்டுப்பாளையத்தில் எடுத்த முயற்சியால்தான்.
அத்தாவைப்ப்பற்றி அரசுக்கு
சிலர் புகார் எழுதினார்கள். இதை நேரடியாக விசாரித்த முதலமைச்சர் திரு ராஜாஜி ஆணையர் மேல் எந்தத் தவறும் இல்லை என்று முடிவு தெரிவித்து கோப்பை முடித்து
விட்டாராம் .இது திரு ராஜாஜியின் தீர்க்கமான செயல்பாட்டுக்கும் அத்தாவின்
நேர்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டு.. எப்படி இருந்தா நாம் இப்படி ஆகிவிட்டோமே
திரு ராஜாஜி தனக்கு வரும்
அனைதுக்கடிதங்களுககும் தானே அஞ்சலட்டையில் உடனே பதில் எழுதி அனுப்பிவிடும் பழக்கம்
உடையவர்
பல ஆண்டுகளுக்குப்பின் அத்தா கோவையில் பணியாற்றுகையில் மேட்டுப்பாளையம்
போய் பழைய நண்பர் ஒருவரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது .இசுலாமியரான அவர் மிக
அன்பாக வரவேற்று உபசரித்தார்.
அடுத்து
பெரியகுளம்
நான் பிறந்த ஊர்.
நினைவில் நிற்பது (கற்பனையா?)
ஒரு விசாலமான ஆற்றங்கரை . பரந்து விரிந்த மணற்பரப்பு,. அதில்
ஊஞ்சல்கள் ,ஊஞ்சல்களுக்குக் கீழே பள்ளங்கள்
இவ்வளவுதான்
கேள்விப்பட்டவை
ஏழு பெண்களுக்குப்பின் எட்டாவதாகப் பிறந்த நான் மிகச் செல்லமாக
போற்றப்பட்டேன். (ஒரு வேளை இதுவே என் குணங்களுக்கு அடித்தளமா அமைந்ததோ)
வழக்கமாக அம்மாவுக்கு உதவிக்கு வரும் ஜமிலா குப்பி ஆண் குழந்தை
பிறந்தால் சொல்லி அனுப்புங்கள் வருகிறேன் என்று சொல்லி ஊருக்குப் போய் விட்டதாம்
ஒருமுறை எனக்குத் தொடரந்து வயிற்றுப் போக்கு. எதனால் என்று
புரியவில்லை. வீட்டுக்கு வந்த மருத்துவர் கை கழுவ சோப் கொடுக்கும்போது அதில் என்
பல் தடம் தெரிந்தது., கேக் என்று நினைத்து சோப்பைக் கடித்து விட்டேன்,
அத்தா நகராட்சி ஆணையராகப் பதவியேற்ற முதல் ஊர் பெரியகுளம்.
கால் பந்து விளையாட்டை பொழுது
போக்காகக் கொண்டிருந்த அத்தா பயன்படுத்தியது இரு சக்கர வண்டி.
ரஹீம் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் அத்தாவுக்கு நெருங்கிய நண்பர்.
பெரியகுளத்திற்கு அருகில் உள்ள கும்பக்கரை அருவிக்கு வீட்டிற்கு வரும்
விருந்தினரை அழைத்துச் செல்வது வழக்கம்
அத்தம்மாவுக்கு ஒரு தையல்காரர் குப்பாயம் ( டிசைனர் ப்ளௌஸ் என்று
வைத்துக்கொள்ளலாம்) தைத்துக் கொடுத்ததை அத்தம்மா பலமுறை குறை சொல்லித் திருப்பிவிட அவர் இந்த
அம்மாவுக்கு நான் தைக்க முடியாது என்று ஒடி விட்டாராம்.
அத்தா அம்மாவிடம் முட்டையை அடுப்பில் போட்டுப் பொறிக்கச் சொல்ல, அம்மா
அதெல்லாம் முடியாது என்று மறுக்க அண்ணனின் ஆசையை நிறைவேற்ற ஜமிலாகுப்பி பச்சை
முட்டையை விறகு அடுப்பில் போட அது ஏவுகணை
போல் பறந்து வெடித்துச் சிதறியதாம்
அத்தாவுக்கு பெரியகுளத்தில் பழக்கமான ஒரு குடும்பத்தில் , பின்னாளில்
நாங்கள் பொள்ளாச்சியில் இருக்கும்போது பக்கத்து வீட்டில் இருந்த காவல் துறை
அதிகாரி சம்பந்தம் செய்தார்.
சிறிய வயது பற்றிய பகுதி என்பதால் சிறிதாக நிறைவு செய்கிறேன்.
சென்ற பகுதியை வழக்கம் போல் ஜோதியிடம் படிதுக்காண்பித்தபோது “நன்றாக
இருக்கிறது ஆனால் மற்றவர்களுக்குப் பிடிக்குமா என்று தெரியவில்லை, என்று சொன்னது..
எதிர் பாராமல் நிறையா கருத்துக்கள் பாராட்டுக்கள். சாஜித், அஜ்மீர்,
சகோதரிகள் மெஹராஜ்,ஜோதி, கிரசன்ட் ஷேக் ஷாகுல் ,ராஜா
,நெய்வேலி ராஜா அனைவருக்கும் நன்றி
இறைவனுக்கு நன்றி
கிரசன்ட் ஷேக் கதை படிப்பது
திரைப்படம் பார்ப்பது போல் இருக்கிறது என எழுதியிருந்தார்.
நெய்வேலி ராஜா என் எழுத்துக்கள் முதல் தரம் என்று தெரித்தார்
மங்கலபட்டிக்கு வந்து சின்னத்தம்பி படம் பார்த்ததை நினைவுகூர்ந்த
சாஜித் மங்கலப்பட்டி பற்றி திரைப்படம் எடுக்கலாம் என்று ஒரு கருத்து தெரிவித்தார். உண்மையிலேயே அந்த அளவுக்கு காதல்,
வன்முறை , பணம் சொத்துக்காக சிலர் கூச்சமே இல்லாமல்பெருமையாகப் பேசி செய்யும் இழி செயல்கள் என பலவும் உண்டு .
நாகரீகம் கருதி நான் எழுதவில்லை.
படம் யார் எடுத்தாலும் மூலக்கதை என்னுடையது என்பதை நினைவில்
வைத்துக்கொள்ளுங்கள் ..
முத்தூரின் வித்தியாசமான நடைமுறைகள் இரண்டை சென்ற பகுதியில் குறிபிட்ட
மறந்து விட்டேன்.
பாய் ( mat) எப்போதும் பிரம் பாய்தான் விரிப்பார்கள்.
பெரிய மனிதர்களைப்பார்த்தால் சற்றுத் தாழ்ந்தவர்கள் வேட்டியை
மடித்துக் கட்டிக்கொள்ளவேண்டும் .
இ(க)டைச்செருகல்
சிறு வயது பற்றிய சிறிய பகுதிக்கு இ(க)டைச்செருகல் ஒரு சிறிய
கவிதை (?)
(மூங்கில் செடி போல் திடீரென்று தோன்றியது )
ஆடிக்காற்று
அம்மியைக் காணாத சோகத்தில்
காற்றும் அடிக்க மறந்ததோ !
இறைவன் அருளால் பயணம் தொடரும்
வலை நூல் முகவரி
கூகிள் தேடுதலில்
sherfuddinp.blogspot.com
,
No comments:
Post a Comment