வாலி வதம் 1
வாலி வதம் நியாயமா அல்லவா என்று ஆராய்வோம் நியாயமாயினும் அல்லவாயினும் ஆராய்ச்சியில்
ஏற்படும் கம்பனின் சுவையை நாம் அனுபவிக்கலாம்
பிராட்டியைப்பிரிந்து தவிக்கும் இராம லக்குவர்க்குக கவந்தன் தன் அரக்க
உருவம் நீங்கப்பெற்றதும் சீதையைத்தேடும் உபாயம் சொல்கிறான். அவன் கூறுகிறான்
:”நீங்கள் எத்தகைய வில் வீரராயினும் ,இணை யாரும் இல்லைஎன்றாலும் ,இணையற்ற சீதையைத்
தேடுவதற்கு அவசியம் துணை வேண்டும் .எத்துனை வீரராயினும் நீரைக் கடக்க ஓடம்
வேண்டுமல்லவா ? அதேபோலபகைவரை வெல்லத் துணை வேண்டும் .தனியாக நின்று பகை வெல்லுதல்
இயலாது
“கணை உலாம் சிலையினீரைக் காக்குனர் இன்மையேனும்
இணை இலான்தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்
புனை இலாதவாற்கு வேலை போக்கு அரிது அன்னதேபோல்
துணை இல்லாதவற்கு இன்னா பகைப்புலம் தொலைத்து நீக்கல்”
என்று கூறி , அவ்வாறு துணை கொள்ளத்தக்கவன் கதிரவன் சிறுவனான சுக்ரீவனே
! அவன் ருஷ்ய முகம் எனும் மலையில்
இருக்கிறான் .மதங்கா கிராமத்தில் உள்ள
சவரி அதற்கு வழி கூறுவான் என்று கூறிச் செல்கிறான் . அதை இராம இலக்குவரும்
ஒப்புக்கொண்டனர்
அதிர் கழல் வீரர் தாமும் அன்னதே அமைவதானர். இராமன் கணையால் வீழ்ந்த
வாலி கூறுவான: ஏ ராமா ! உனக்குத் துணை
வேண்டுமானால்
புயலைப் பற்றும் அப்பொங்கு அரி போக்கி ஓர்
முயலைப் பற்றுவது என்ன முயற்சியோ
என்று கேலி செய்கிறான்
ஏன் இந்தக்கவந்தன் வலியனாகிய வாலியை விட்டு விட்டு பயந்து ஒதுங்கி
உறையும் சுக்ரீவனைத் துணையாக்கிக்கொள்ளச் சொல்கிறான் ! வாலியும் இராமன்பால் அன்பு
பூண்டவன் என்பது அவனுக்குத் தெரியாமலா இருக்கும்!
இன்னும் பார்த்தால் சுக்ரீவனோ இராம
லக்குவவரைப்பார்த்து அஞ்சி மறைகிறான் ;வாலியோ இராமன் பேரைச் சொல்லக்கேட்டவுடன் குதிக்கிறான்
கூத்தாடுகிறான் .இதில்தான் வாலி வதத்தின் நியாயம் உருவாகிறது
“ நீ நல்லவனா கெட்டவனா என்பது உனக்குத் தெரியாது ; உன் பக்கத்தில்
உள்ளவர்கள் உன்னைபற்றி என்ன கருதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும் அவர்கள்
உன்னை நல்லவன் என்றல் நீ நல்லவன்தான். கெட்டவன் என்றால் நீ கெட்டவன்தான் .திருந்திக்கொள்
“ இது நபி நாயகம் அவர்களின் வாக்கு .
கவந்தன் வாலியை நல்லவன் என்று
கருதவில்லை அதனால் அவனைத் துணை கோடச் சொல்லவில்லை . வளமை மிகுந்தவனாகவும் இராமன்
பால் அன்பு பூண்டவனாகவும் இருந்தும் அந்த சிங்கத்தை விட்டு ,சுக்ரீவனாகிய முயலைத்
துணைக்கு அழைத்துக் கொள்ளச் சொன்னான் ..அடுத்துள்ள கவந்தன் வாலியை எவ்வளவு
கெட்டவனாகக் கருதினான் என்று அறிகிறோம்
ஒருவாறு ,கவந்தன் அரக்கனாக இருந்து மன்னுயிர் புடைத்துத் தின்றதால்
வாலியை இவனுக்குப் பிடிக்கவில்லையோ என்றும் கருதலாம் .ஆனால் தவபெண்ணான சவரியும்
வாலியைப் பற்றிக் கூறாமல் சுக்ரீவன்
இருப்பிடத்திற்கே வழி கூறுகிறாள்.
துணை பரித் தேரோன் மைந்தன் இருந்த அத்துலக்கு இல் குன்றம்
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னான்
இராமன் ,வரப்போவதை முன்னதாக அறிந்த சவரிக்கும் பக்கத்தில் வாழும் வாலி
சுக்க்ரீவனைப்பற்றி நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும் அவளும் துணை கொள்ள வாலியைப்பற்றிக்
கூறாததிலிருந்து வாலி அக்கம்பக்கத்தாரால் வெறுக்கப்படும் தீய செயல் உள்ளவன் என்று
அறிகிறோம்
வாலியைப்பற்றியும் அவன் செய்த பெரும் பிழையைப்பற்றியும் இராமன் அனுமன்
வாயிலாத்தான் அறிகிறான் . சுக்ரீவனுக்கு அபயம் அளிக்கும்போது கூட
மாற்று இனி உரைப்பது என்னோ? வானிடை மண்ணில் நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார், தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்
என்று வாக்குறுதி கூறும்போதும் அவனது துயரை இராமன் அறிந்து
கொள்ளவில்லை
வாக்குறுதி ஈந்த பின்னர் உன் மனைவி எங்கே , என்போல நீயும் மனைவியை
இழந்தவனா
பொருந்து நன் மனைக்குரிய
பூவையைப்
பிரிந்துளாய் கொலோ நீயும் பின் என்றான்
இப்பொழுதுதான் அனுமன் வாலியைப் பற்றியும் அவன் இழைத்த
தீங்கினைபற்றியும் கூறுகிறான்.
வாலியின் வலிமை அளவிடற்பாலதன்று. அவனைத் துந்துபி எனும் அரக்கன்
எதிர்த்தான் .இருவரும் பிலத்தினிற் சென்று இருபத்தியெட்டு மாதங்கள் வராதது கண்டு
சுக்ரீவன் அழுது கலங்குகிறான் ஐயோ அண்ணனை அரக்கன்
அழித்து விட்டானே
கொன்றுளான் தனைக் கொல ஒணாது எனின்
பொன்றுவேன்
என
சுக்ரீவனும் பிலத்துள் புகப்போனான் . அமைச்சர்கள் அவனைத் தடுத்து
அடுத்த அரசுரிமையைக் கொடுக்க இவன் வெறுப்புடன் ஏற்றுக்கொண்டான் .மாயாவி திரும்பி
வந்து மறுபடியும் எங்களைத் துன்புறுத்துவான் என்ற அச்சத்தில்
உன்னு குன்றெலாம் உடன் அடுக்கி அப்பிலத்தை அடைந்தோம்
ஆனால் உண்மையில் வாலி சாகவில்லை .மாயாவிதான் மடிந்திருக்கிறான் .அடைக்கப்பட்ட
மலைகளையெல்லாம் காலால் எற்றிவிட்டு நன்றாயிருக்கிறது தம்பி காவல் செய்த லட்சணம்
என்று கூறி கடுங்கோபத்துடன் வந்தான் வாலி. சுக்ரீவன் அவனை அடிபணிந்து நடந்தவற்றைக்
கூறினான் .தன் பிழையை மன்னிக்குமாறு வேண்டினான்
“ஆணை அஞ்சி இவ்வரசை எய்தி வாழ்
நாண் இலாத என்நவையை நல்குவாய் “
என்று இறைஞ்சினான் .மந்திரிகளும் எடுத்துச் சொன்னார்கள் அனால் வாலி
மன்னிக்கவில்லை . கடுங்கோபத்துடன் தாக்கப்போன சமயம் எப்படியோ தப்பித்து ஒடி வந்து
விட்டன சுக்ரீவன்
உருமை என்று இவற்கு உரிய
தரமாம்
அருமருந்தையும் வாலி விரும்பினான்
இரண்டையும் துறந்து மனைவியையும் நாட்டையும் துறந்து
சுக்ரீவன் இங்கிருந்தனன்
இதுதான் கருமம் கடவுளே என்று முடித்தான் அனுமன்
இக்குற்றச்சாடிலேயே வாலியின் அக்கிரமச் செயல் நன்கு புலனாகிறது
.அறியாமல் செய்த குற்றத்துக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டும் வாலி தம்பியை துரத்தி
விட்டான் .மேலும் அவனது அருமை மனைவி உருமை என்பவளைக் கைப்பற்றிக்கொண்டான்
.இப்புகாரை “அறம் தலை நிறுத்த வந்த அண்ணல்” என்ற முறையிலே ஒரு நீதிபதி ஸ்தானத்திலே
ஆராய்கிறான் இராமன்
புகாரைத் தாக்கல் செய்தவன் வாய்மை தவறாத அனுமன் .குற்றமோ கொடியது.
தம்பியை நாட்டை விட்டுத் துரத்தியதுமன்னியில் அவன் மனைவியையும் அபகரித்துக்கொண்டான்
.இக்குற்றத்துக்குத் தண்டனை வாலி கொல்லப்படுவதுதான் என்று தீர்ப்பும் கூறி
விட்டான்
“தீயோர் இறந்துநூறி தக்கோர் இடர் துடைப்பதல்லவோ “ இவன் கடமை
“உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவனுயிர்க்கு உதவி விலகும் என்னினும்
,வில்லிடை வாளியின் வீட்டி தலைமையொடு நின் தாரமும் உனக்கின்று தருவேன் “
என்று முடிவு கூறி விட்டான் .இது ஒருதலைப் பட்ச முடிவென்றாலும்
உண்மையை ஆய்ந்து செய்த முடிவுதான் .வாலி விசாரணைக்கு அழைத்தால் வரவா போகிறான் ,வந்தாலும்தான் வேறு முடிவு ஏது?. இந்த
முடிவு மனைவியை இழந்ததால் அறிவிழந்து செய்வதென்று வாலி வாதம் செய்கிறான்
“ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியை பிரிந்த
பின்னை திகைத்தனை போலும் செய்கை
இன்னும் வாதாடுகிறான்
ஒரு அரக்கன் உன் மனைவியை தூக்கிச் சென்ற ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ள
குரங்கு அரசனான நான்தானா அகப்பட்டேன்
“அரக்கன் ஒரு அழிவு செய்து வீழ்த்திட அதற்கு மற்றோர் குரங்கினத்து
அரசைக்கொல்ல மனு நெறி கூறிற்றுண்டோ”
“தாரமற்று ஒருவன் கொள தன்
கையிற்
பாரவெஞ்சிலை வீரம் பழுதுற
நேருமன்று மறைந்து நிராயுதன்
மார்பின் எய்யவோ ! வில் இகல்
வல்லதே ?
ஆத்திரம் அடைந்தது உண்மைதான் .அறம் அழிக்கப்பட்டது கண்டு யார்தான்
ஆத்திரம் கொள்ளாதிருக்க முடியும் . ஆனால் தனக்கு நேர்ந்த இழப்பின் அவன் ஆத்திரம்
கொண்டு நீதி தவறவில்லை
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்குதோள் தம்பிக்கு தன்னரசு உரிமைப்
பாரம் ஈந்தவன் பரிவிலன் ஒருவன் தன் இளையோன்
தாரம் வௌவினான் என்ற சொல் தரிக்குமாறு உளதோ
என்று கவி கூறுகிறான்
தன்னுடைய தம்பியின் தாரத்தைக கைப்பற்றிக்கொண்டானே !இந்த அநீதியை
எவ்வாறு சகிப்பது என்று தன நீதிக்காக
ஆத்திரம் கொண்டானே அன்றி தன சுயநலத்துக்காக அல்ல என்பது கவிக்கூற்று
வேண்டுமென்றே செய்யாத குற்றத்துக்கு மன்னிப்புக் கோரும் தம்பியை
,மந்திரி பிரதானிகள் எல்லாம் அவன் குற்றம் செய்யவில்லை நாங்கள்தான் அவனை அரசவையில்
அமர்த்தினோம் என்று கூறியும் ,துரத்தி விட்டுஅவன் மனைவியையும் பற்றியது
பெருங்குற்றம்
இதற்கு தண்டனை உயிர் போக்குதல்தான் என்று அறம் தலை நிறுத்த வந்த
நீதிபதி தீர்ப்புக் கூறி விட்டான்
இது ஒருதலைப்பட்சமான தீர்ப்பாகத் தோன்றினாலும் வாலிக்கு வாதம் செய்ய
பின்னர் வாய்ப்பு அளிக்கப படுகிறது
வாலி வதம் வாலி வாதமாக அடுத்த பகுதியில் தொடரும்
எழுத்தாக்கம்
எங்கள் தந்தை
ஹாஜி கா. பீர் முகமது பி .எஸ்ஸி
ஒய்வு பெற்ற நகராட்சி ஆணையர்
sherfuddinp
.blogspt.com
b f ft w
08112019 fri
இதுவும் முக நூலில் தடை செய்யப்பட்டது
வழக்கம் போல் காரணம் புரியவில்லை
No comments:
Post a Comment