Monday, 25 November 2019

எண்ணும் எண்ணமும் தமிழ்( மொழி )அறிவோம் ௨௪

 




தமிழ்( மொழி )அறிவோம்  ௨௪


எண்ணும் எண்ணமும் 


புலவர் ஒருவர் ஒரு செல்வந்தரைப்பார்க்கப் போகிறார் .
எதற்கு, எல்லாம் பணத்துக்காகத்தான்
செல்வந்தரிடம் சிறிது நேரம் உரையாடி விட்டு மெதுவாக தொண்டையைக் கனைத்தபடி கொஞ்சம் பணம் தேவை என்கிறார் புலவர் .
எவ்வளவு வேண்டும் என்று செல்வந்தர் கேட்க
ஒரு நூறு ரூபாய் என்று புலவர் சொல்லி முடிப்பதற்குள்
ஒரு நூறு  தருகிறேன் என்று செல்வந்தர் சொல்ல புலவருக்கு ஒரே வியப்பும் மகிழ்ச்சியும்
ஆகா செல்வத்தர் நல்ல மன நிலையில் இருக்கிறார் போலும். இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கலாமோ என்ற நினைப்பு அவரையும் அறியாமல்
இருநூறு ரூபாய் தந்தால் நல்லது என தயக்கத்துடன் சொல்ல
இருநூறு தருகிறேன் என்று ஒத்துக்கொள்கிறார் செல்வந்தர்
புலவருக்கு தான் காண்பது கனவா என்றொரு ஐயம்
ஒரு முன்னூறு என்று இழுத்தார்
முன்னூறு தருகிறேன் என்றார் செல்வந்தர்
அப்படியே
நானூறு தருகிறேன்
ஐநூறு தருகிறேன்
அறுநூறு தருகிறேன்
எழுநூறு தருகிறேன்
என்று புலவர கேட்ட தொகைக்கெல்லாம் செல்வந்தர் ஒத்துக்கொண்டு வந்தார்
உச்ச கட்டமாக
எண்ணூறுரூபாய் புலவர் கேட்க
எண்ணூறு என்ன தொண்ணூறே தருகிறேன் என்று சொல்லி உள்ளே போய்
தொண்ணூறு ரூபாயை புலவரிடம் கொடுக்கிறார்
புலவர் முகம் வாடி குரல் மங்கி
ஐயா நான் கேட்க கேட்க நூறிலிருந்து எண்ணூறு வரை ஒத்துக்கொண்டீர்கள்
இப்போது தொண்ணூறு ஆகக் குறைத்து விட்டீர்களே என்று பரிதாபமாக் கேட்டார்
செல்வந்தர் அவரும் ஒரு தமிழ் ஆர்வலர்தான்
ஐயா புலவரே நான் சொன்னதன் பொருள் இதுதான்
இருநூறு – இரு – பொறு நூறு தருகிறேன்
முன்னூறு – முன் -முதலில் – நூறு .தருகிர்றேன்
நானூறு – நான் நூறு தருகிறேன்
ஐநூறு – ஐ !! நூறு தருகிறேன்
அறுநூறு – அறு- பேச்சை நிறுத்து நூறு தருகிறேன்
எழுநூறு – எழு – எழுந்திரு  நூறு தருகிறேன்
எண்ணூறு – எண்- எண்ணிப்பார் நூறு
இதுதான் பழைய கதை
எண்ணூறு தொண்ணூறு ஆனது என் சொந்தக் கற்பனை
வண்டு குடைவது போல் மனதில் ஒரு எண்ணம் வெகுநாளாக
எழுபது எண்பது ஒன்பது என்றுதானே வரவேண்டும் +
அதே போல் எழுநூறு எண்ணூறு தொண்ணூறு
ஏழாயிரம் எண்ணாயிரம் தொள்ளாயிரம்
எழுபதாயிரம் எண்பதாயிரம் ஒன்பதாயிரம்
இதுதானே இயல்பாக இருக்கிறது
எட்டுக்குப் பிறகு ஒட்டு என்று எதாவது இருக்க வேண்டும்
இது பற்றி தமிழ் அறிஞர்கள் கருத்துப்பரிமாற்றம் செய்யலாம்

எழுத்தால் எண்களை எழுதவது என்பது வழக்கொழிந்துபோன ஒன்றாகி விட்டது
198765432
இந்த எண்ணை எழுத்தால் எழுத ,படிக்க எத்தனை பட்டதாரிகளுக்கு எத்தனை ஆசிரியர்களுக்கு  தெரியும் ?
காசோலையில் தொகையை எழுத்தாலும் எண்ணாலும் எழுத வேண்டும்
ஆனால்  போகிற போக்கில் காசோலை என்பதே காணாமல் போய்விடும் போல் இருக்கிறது
நாம் பயன்படுத்தும் 1 2 3  போன்ற எண்கள் அராபிய எண்ணுருக்கள் என்று சொல்லப்படுகின்றன

1 / ١  2 / ٢  3 / ٣  4 / ٤  5 / ٥
6 / ٦  7 / ٧  8 / ٨  9 / ٩  10 / ١٠

இதில் 0 (சுழியம் ) நம் நாட்டில் கண்டுபிடிக்கபட்டது
தமிழ் எண்கள் என்று ஓன்று இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?
1    2 3 4  5 6 7  8 9          ௧௦ 10
இது பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லாமல் போய் விட்டது
சென்னை தாம்பரம் கிருத்துவக் கல்லூரி நுழைவாயிலில் எதோ ஒரு ஆண்டு விழாவைக்குறிக்க தமிழ் எண்களில் நாள் குறிப்பிடபட்டிருந்தது . பார்க்க மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது
எட்டேகால் லட்சணமே என்று ஒரு பாட்டு இருக்கிறது
எட்டுக்குத் தமிழ் எண் ௮ . கால் (1/4)  வ என்றுஎழுதப்படும்
அவலட்சணமே என்பதை எட்டேகால் லட்சணமே என்று குறிப்பிடுகிறார் புலவர்
தமிழ் எண்களை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது

டுகு     ளுந்து   னைச்சு
மைச்சு  சிச்சு    ப்பிட்டேன்
       வன்    றினான்
  எதற்காக இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரு கேள்வி எழும்
அரபு நாட்டில் இன்னும் அந்தப் பழைய அரபு எண்களையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்
தேவநாகரி எண்கள் என்று ஓன்று இருக்கிறது. பிகார் போன்ற வட மாநிலங்களில்
வங்கிகளில் கூட இது பயன்பாட்டில் உள்ளது
Devanagari numerals
0
1
2
3
4
5
6
7
8
9

தென்னாட்டில் இருந்து வட மாநிலங்களில் வங்கிப் பணிகளுக்குப் போகிறவர்களுக்கு இது சற்று குழப்பத்தை உண்டாக்கும் .குறிப்பாக 1, 5 7 போன்ற எண்கள்
ரோமானிய எண்கள்
I II III IV V VI VII VIII IX X
இதில் 0 கிடையாது . எனவே 10- X         20XX  30 XXX         40XL                           50 L   60LX            70LXX            80LXXX       90 XC             100 C

1I         5V       10X     50L     100C
என்று வரும்
௦ இல்லாததால் எண்கள் சற்று நீளமாக வரும்
48    XLVIII என்று வரும்
எனவே இந்த எண்கள்  பெரும்பாலும் குறைந்த அளவில் உள்ள பக்க எண்களைக் குறிக்கப் பயன் படுகின்றன . மற்றபடி இவை பயன்பாட்டில் இல்லை
எண்கள் பற்றி ஒரு சுவையான தகவல்
கோழி (சிக்கன்) 65
உணவுலகில் மிகப் பரவலாக பயன்பாட்டில் உள்ள பக்க உணவு
இதில் 65 என்பது எதைக்குறிக்கிறது ?
இது பற்றி பல கருத்துக்கள் உலவுகின்றன
சென்னை புகாரி உணவு விடுதி இந்த உணவை 1965 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது அதனால் இந்தப்பெயர் என்று ஒரு கருத்து
மற்றொன்று ஒரு கிலோ கோழிக்கறிக்கு 65  மிளகாய் சேர்த்து இந்த உணவு சமைக்கப்படுகிறது என்பது
மூன்றாவது கருத்து 65 பொருட்கள் சேர்த்து இது சமைக்கப்படுகிறது என்று
எது எப்படியோ  கோழி 65  என்ற உணவின் பெயர்  கத்தரிக்காய் 65       காலிப்பூ   65 என்று அழைக்கும் அளவுக்கு புகழ் பெற்று விட்டது
DIGITAL INDIA தமிழில் எண்முறை இந்தியா அல்லது இலக்க முறை இந்தியா என்று சொல்லப்படுகிறது
எல்லாமே எண்முறைப்படுத்தபபட்டு விட்டால் வங்கி மோசடிகளை முழுதுமாகத் தவிர்த்து விடலாம் என்று சொல்லப்படுகிறது 
ஆனால் நாட்டையே உலுக்கிய , இப்போது மறந்து போன
பதினோராயிரம் கோடி
1,1o,00,00,00,000
ஊழல் முழுக்க முழுக்க எண் முறையிலேயே செயல் படுத்தப்பட்டது என்பது ஒரு சிறப்பான செய்தி
அதைவிட இன்னொரு சிறப்பான செய்தி மோசடி செய்தவர் மிக எளிதாக வெளிநாடு போய் அங்கிருந்து
 நான் செய்த மோசடியைஅம்பலப்படுத்தி என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள் .இதனால் இந்தப்பணத்தை வசூல் செய்யும் வாய்ப்பை முழுவதுமாக இழந்துவிட்டீர்கள்
என்று கெக்கலிக்கிறார்
உயிர்போகும் அளவுக்கு பாதிக்கபட்ட வங்கியோ
இந்த்த தொகையை வசூல் செய்வது மிக சிரமம் என்று முதல் அறிக்கையிலேயே தெரிவிக்கிறது
நம்மால் என்ன செய்ய முடியும் ? அமைதியாக வேடிக்கை பார்ப்போம் இதை விட பெரிதாக வேறு  எதாவது வரும்
பிகில் ,கைதி
தல , தளபதி
இவற்றை  ஒப்பிட்டு ஆய்வு செய்வது போன்ற முக்கியப் பணிகள் நமக்கு எப்போதும் இருக்கும்
எழுத்து தடம் மாறிப்போகிறது
எண்ண ஓட்டத்தை நிறுத்த முடியவில்லை
எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம் 

sherfuddinp.blogspot.com

  











No comments:

Post a Comment