தலைமுறை இடைவெளி பகுதி 2
பிறப்பிலேயே மரணத்தை எட்டிப்பார்த்த குழந்தை இப்ராகிம் நபி பற்றி
சென்ற பகுதியில் பார்த்தோம்
எப்படி அதில் இருந்து தப்பித்தார் ?
தொடரந்து பார்ப்போம்
அரசவை ஆருடக்காரர்கள் குழந்தை இப்ராகிம் உயிரோடு இருந்தால் கொடுங்கோல்
மன்னன் நிம்ரோதின் ஆட்சிக்கு ஆபத்து என்று சொல்ல
அரண்மனையில் உயர்பதவியில் இருந்த இப்ராஹிமின் தந்தையிடம் குழந்தயை
கொண்டு வர ஆணையிடுகிறான் மன்னன்
ஆனால் இப்ராஹிமின் தந்தை தெராஹ் தன் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக
அன்று அவன் பணிப்பெண்ணுக்குப் பிறந்த குழந்தையை மன்னனிடம் ஒப்படைக்க, மன்னன் தன்
கையால் அந்தக் குழந்தையைக் கொன்று விட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான்
குழந்தை இப்ராகிம் , அவர் தாயார், ஒரு பணிப்பெண் மூவரும் ஒரு குகையில்
பாதுகாப்பாக ஒளித்து வைக்கப்பட்டு
ஒன்றல்ல இரண்டல்ல பத்து ஆண்டுகள் அந்தக் குகையில் வசிக்கிறார்கள்
தனது மூன்றாம் வயதிலேயே இப்ராஹிமுக்கு இறைஞானம் உண்டாகிறது .ஒளிவீசும்
ஞாயிறோ , திங்களோ , விண்மீன்களோ ஆட்சி செலுத்தும் மன்னரோ வணக்கத்துக்குரியவை அல்ல .
இவற்றையெல்லாம் படைத்த ஏக இறைவன் மட்டுமே
வணக்கத்துக்குரியவன் என்ற தெளிவை அந்த இளம் வயதிலேயே அடைகிறார்
பத்து வயதில் குகையை விட்டு வெளியேறுகிறார். மேலும் தெளிவான கல்வி
ஞானம் அடைய எண்ணி ஒரு நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டு உயர்ந்த மலைப்பகுதியில்
வாழும் நுஹ் நபியைத் தேடிப் போகிறார்
நுஹ் நபியும் அவர் மகன் செ(ஷ)ம் (Shem)மும் இப்ராகிம் நபிக்கு ஞானத்தைத் கற்றுக்க்கொடுத்தார்கள்
( நுஹ் நபியின் மகன் செம் வழியில் வந்த மக்கள்தான் செமெடிக்
பரம்பரையினர் என்று அழைக்கப்படுகிறார்கள்))
இறைவனின் சாபமாக வந்த அழிவு மழை வெள்ளத்திலிருந்து தாம் உருவாக்கிய
கப்பல் மூலம் பலரைகாப்பற்றி தானும் உயிர் தப்பி வந்தவர் நுஹ் நபி
எனவே அந்த மழை வெள்ளம் பற்றியும் தாம் கட்டிய கப்பல் (Noah’s Ark)
பற்றியும் தாம் நேரடியாக அறிந்த தகவல்களை இப்ராகிம் நபிக்குக் கற்றுக்கொடுக்கிறார்
நுஹ் நபி
மேலும் முதல் மனிதன், முதல் நபி ஆதம் அவர்களின் பலநூற்றாண்டு தோழர்
மெதுசெலாஹ் (Methuselah)
என்பவர் நபி நுஹ்
அவர்களுக்கும் பல நூற்றாண்டு தோழர்
எனவே இப்ராகிம் நபிக்கு, உலகின் முதல் மனிதன் படைக்கப்பட்டதில்
இருந்து உள்ள அனைத்து செய்திகளையும் நுஹ் நபியிடமிருந்தும் அவர் மகனிடமிருந்தும் கற்றுக்கொள்ளும் அரிய
வாய்ப்புக் கிடைத்தது
இந்த இடத்தில் நபி இப்ராஹிமிக்கும் நுஹ் நபிக்கும் இடையில் உள்ள
தலைமுறை இடைவெளி பற்றியும் வயது வித்தியாசம் பற்றியும் சற்று தெளிவாகப் புரிந்து
கொள்ளுதல் அவசியம்
இப்ராகிம் நபி நுஹ் நபியின் மகன் செம் வழியில் வந்தவர் .
நுஹ் நபிக்கும் இப்ராகிம் நபிக்கும் பத்து தலை முறை இடைவெளி
900 ஆண்டு
வயது வித்தியாசம் .
இது எப்படி நடக்கும் என்ற
ஐயம் எழும்
இப்ராகிம் நபி பிறக்கும்போது நுஹ் நபியின் வயது 892
நுஹ் நபி 950 வயதில்
காலமானார் . அப்போது
இப்ராகிம் நபிக்கு வயது 58.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் இப்ராகிம் நபி நுஹ் நபியிடமும் , அவரது
மகனிடமும் கல்வி கற்றார்
இதற்காகவேதான் இறைவன் நுஹ் நபிக்கு நீண்ட ஆயுளை அருளினான் போலும்
மேலும்; திடனாக
நாம் நூஹை
அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்;
ஆக, அவர்கள்
மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; -------
(1000-50 =950)
.(
குரான் 29:14)
இத்துடன் இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் இப்ராகிம் நபியின் வரலாற்றில் சில முக்கிய குறிப்புகள்
நிகழ்வுகள், அற்புதங்கள், பற்றி அடுத்த பகுதியில் மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்
sherfuddinp.blogspot.com
B w (F) 22112019 Fri
No comments:
Post a Comment