Sunday, 16 February 2025

தமிழ் (மொழி (அறிவோம் இளமைப் பதிவுதமிழ் எழுத்துக்கள் 16022025 ஞாயிறு

 







தமிழ் (மொழி (அறிவோம்

இளமைப் பதிவுதமிழ் எழுத்துக்கள்

16022025 ஞாயிறு

"தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அவை எத்தனை வகைப்படும்?

என்னென்ன வகைகள்?"

விடைக்கு முன்

தமிழறிஞர்கள் நிறைந்த குழுக்கள்

முது நிலைப் பட்டம் பெற்றோரும் முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு ஆழ்ந்த பரந்த தமிழறிவு உள்ளவர்கள் பலப்பல

இருந்தாலும் இந்த அடிப்படை வினாவிற்கு சிலர் விடை சொல்லியிருப்பது அவர்கள் மொழிப்பற்று, ஆர்வத்தினால் தான்

முதல் சரியான விடை அனுப்பிய சகோ

குமாரசாமி

அடுத்து

வெங்கடேசன்

கவிதையில் எழுத்து இலக்கணத்தைச் சொல்லிய சோமசேகர்

வேலவன்

அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றி

இவர்கள் அனைவரும் எங்கள் வங்கி ஓய்வூதியர்கள் என்பதில் எனக்கு ஓரு பெருமிதம்

இனி விடை

தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247

உயிர் 12

மெய் 18

உயிர்மெய் 12x18=216

ஆயுத எழுத்து 1

உயிர் எழுத்துக்கள் மொழியின் உயிர் மூச்சு எனலாம்

இவை நேரடியாகவோ உயிர்மெய் எழுத்துக்களாகவோ இல்லாமல் சொல் கிடையாது

அ ஆ இ ஈ உ ஊ

எ ஏ ஐ ஒ ஓ ஔ

என 12 உயிரெழுத்துகள்

ஒலி வேறுபாட்டின் அடிப்படையில் இவை

குறில்

நெடில்

என பிரிக்கப்பட்டுகின்றன

இடையில் உங்களுக்கு ஒரு வினா

12 இல் குறிள் எத்தனை

நெடில் எத்தனை?

எதையும் பார்க்காமல் உயனே விடை சொல்லுங்கள்

இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் வரும் சனிக்கிழமை தொடர்ந்து இளமைத் தமிழில் ஊஞ்சல் ஆடுவோம்;

நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்

1602025 ஞாயிறு

க௬ 0உஉ0உரு

சர்புதீன் பீ

தமிழ் (மொழி) அறிவோம் பாங்கு 09022025 ஞாயிறு

 





தமிழ் (மொழி) அறிவோம்

பாங்கு

09022025 ஞாயிறு

மூன்றே எழுத்தில் ஒரு சொல்

பொருளோ பல

ஒரு சில

இடம் ஒப்பு அழகு

இரு வவ்லினங்களுக்கு இடையில் ஒரு மெல்வின ஒற்று உள்ள சிறுபான்மையினருக்கு நெருக்கமான

அந்தச் சொல். என்ன?

விடை

பாங்கு

சரியான விடை அனுப்பிய

ஒரே சகோ

ஹசன் அலிக்கு

வாழ்த்துகள் பாராட்டுகள்

பாங்கு=

1)பக்கம். காடுகொண்டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட்.

2). ; இடம். பட்டிமண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் (மணி. 1, 61).

3. ஒப்பு

.பாங்கருஞ் சிறப்பின் (தொல். பொ. 78). 4.நன்மை.

பாங்கலாநெறி (வாயுசங். இருடி.பிரம. 11).

5. அழகு.பாங்குறக் கூடும் பதி (பு. வெ. 9, 51, கொளு). 6. தகுதி. பாங்குற வுணர்தல் (தொல். சொல்.396).

இன்னும் பல

இஸ்லாமிய இறைவணக்கமாகிய தொழுகைக்கான அழைப்பு(அதான்)

பாங்கு என்று சொல்லப்படுகிறது

இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்

0௯0உஉ0உரு

09022025 , ஞாயிறு

சர்புதீன் பீ

Thursday, 6 February 2025

திரு மறை குரான் ஹவ்வா 0702 2025 வெள்ளி

 




திரு மறை குரான்

 ஹவ்வா

0702 2025 வெள்ளி 

ஆதம் அலை அவர்களின் துணைவி ஹவ்வா வின் பிறப்பு /படைப்பு பற்றி குரான் எங்கு என்ன சொல்கிறது ?

இந்த  வினா 0202305 அன்று ஒரு சிலருக்கு ஆங்கிலத்தில் வேறு மாதிரி  அனுப்பபட்டது

அதற்கு சகோ சீராஜூதீன் ஆங்கிலத்தில் மிகத் தெளிவான விளக்கம் அனுப்பி இருந்தார்

சகோ நெய்வேலி ராஜா தமிழில் எழுதியிருந்தார்

இப்போது எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி குழுவில் பதிவு செய்கிறேன்

 

விடை . விளக்கம்

" ஹவ்வா (அலை) , ஆதம் (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார் " 

குர்ஆன் , ஹதீஸில் இக்கூற்றிற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா ?

இந்த வினா 0202305

அன்று ஒரு சிலருக்கு ஆங்கிலத்தில் அனுப்பப் பட்டது

இதைப் பார்த்ததும்.. இதில் என்ன சந்தேகம் ? இப்படித்தானே நினைவு  தெரிந்த நாள் முதல் கேள்விப் பட்டிருக்கிறோம் ! என்ற எண்ணம் தோன்றலாம்

. சற்று ஆழமாக தேடிப் பார்க்கும் போதுதான் இக்கேள்வியின் பொருள்  புரிந்தது.

 

முதலில் குர்ஆன் :

 

குர்ஆனில் ஆதம் (அலை) அவர்களின் படைப்பு பற்றியே ஒன்றுக்கு மேற்பட்ட ஆயத்துகளில் விரிவாக கூறப்பட்டிருக்கிறது.

ஏவாளின் ( ஹவ்வா ) படைப்பு பற்றி நேரிடையாக எங்குமே குறிப்பிடப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

 

சற்று நெருங்கி வரும் ஆயத்து

 

"   மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்...." 

(அல்குர்ஆன் : 4:1)

 

ஹதீஸ் :

 அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார் .

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) கூறினார்கள்.

" பெண் விலா எலும்பைப் போன்றவள் (வளைந்திருப்பமவள் ).

அவளை நேராக்க முயற்சித்தால் உடைந்து போவாள் ..."

புகாரி: 5184

 

" பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். (அவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.) ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அதை நீ உடைத்தே விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால், கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே,பெண்களுக்கு நன்மையே நாடுங்கள்."

என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம்: 2914 .

 

எனவே , 'ஆதமின் விலா எலும்பிலிருந்து ..'என்று நேரிடையாக குர்ஆன் , ஹதீஸில் காணப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.

 

  பைபிளில் வசனம் 21-23 ஜெநிசிஸ் அத்தியாயம் 2 இதில் ஹவ்வாவின்

 

 

படைப்பு பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது  விலா எலும்பு என பொருள் படும் . "tzela,"என்ற சொல் வருகிறது

 

                                                                                                          

குரானில் ஹவ்வா  ஆதமின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார்

என்று வருகிறது என்ற எண்ணம்  பலரிடத்தில் இருக்கிறது

ஒரு சிலர் இன்னும்  ஒரு படி மேலே போய் ஆணின் விலா எலும்புகளின் எண்ணிக்கை பெண்ணை  விட ஒன்று குறைவாக இருப்பதே குரான் வசனத்துக்கு சான்று என்று அறுதியிட்டுச் சொல்வாரகள்

இதைத் தெளிவு படுத்தவே இந்தப்பதிப்பு

 

மற்றபடி ஹவ்வா  ஆதமின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார்என்பதே தவறு என்று சொல்வதற்கு இல்லை .

ஹவ்வா என்ற சொல்லே குரானில் இடம் பெற்றது போல தெரியவில்லை

 

தெளிவுவாக விடை அனுப்பிய சகோ

சீராஜூதினுக்கும்

நெய்வேலி ராஜாவுக்கும்

வாழ்ததுக்கள் பாராட்டுக்கள் 

 

இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்

 

08 ஷாபான்  (8) 1446

0702025 வெள்ளி

சர்புதீன் பீ

Tuesday, 4 February 2025

கிறுகக்கல்கள் 05 02 2025 புதன்




 கிறுகக்கல்கள்

05 02 2025 புதன்
அத்துறா யின்
இது என்ன சொல்?
நிறைவுப் பகுதியில் சொல்கிறேன்
மணிப்பிரவாள நடை---
வடமொழியும் தமிழும் கலந்து எழுதுவது
திருமண அழைபபுகள் மரபு மாறாமல் ஒருவித மஞ்சளும் வெளிர் சிவப்பும் கலந்த நிறத்தில் அச்சிடுவார்கள் அதில் இந்த நடையைப் பார்திருக்கிறேன்
மணிப்பிரவாளம் இப்போது பயன்பாட்டில் இருப்பது போல தெரியவில்லை
ஆனால் படித்தால் புரியாத அளவுக்கு எழுதுவது கொஞ்சம் அதிகமாகி வருவது போல தெரிகிறது
தமிழோடு ஆங்கிலம் , தங்லீஷ் அரபு உருது சொற்கள் கலந்து வருகின்றன
அதோடு வட்டார வழக்கிலேயே எழுதுவது
எளிய சொல் இருக்க தேடிப்பிடித்தூ சற்று கடினமான சொற்களை பயன் படுத்துவது—இதுதான் கனியிருப்ப காய் கவர்தல் போலும்
கர்மா , ஆத்மா , ஆத்ம திருப்தி போன்ற பொருள் விளங்காத சொற்களை பயன் படுத்துதல்
(ஆத்துமாவுக்கு ஏது திருப்தி என்பார் ஒருவர் )
இப்படி பல உருவங்களில் மணிப்பிரவாளம் வலம் வருகிறது
எனக்கு நன்றாகத் தெரிந்ததை ,புரிந்ததை எளிய மொழியில் எளிய நடையில் எழுதுவது என் வழக்கம்
இன்று (மட்டும்) ஒரு மாற்றமாக புரியாமல் எழுதினால் என்ன ?
அதன் விளைவுதான் இந்த தத்துவ முத்துக்கள் என்ற கிறுக்கல்
அதிகம் இல்லை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு ஒரு சில
விரல் விட்டு ஏன் எண்ண வேண்டும் ?
விரல் விட்டு நீட்டிய நிலையில்தானே இயல்பாக இருக்கிறது
எனவே விரலை மடக்கி எண்ணுவது என்பதுதான் சரி
சிந்திப்பீ ர் செயல் படுவீர் !
(நான் எப்போதும் விரலை மடக்கித்தான் எண்ணுகிறேன் என மற்றவர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் )
U turn traffic signal எல்லோரும் பார்த்திருக்கிறோம்
இது தலைகீழ் u தானே பிறகு ஏன் U turn என்று சொல்கிறோம் ?
யோசித்து மாத்துவோம் !!
பலரின் வழக்கையை தலகீழாகப் புரட்டிப்போடும் u ட்யூப்புக்கு பெயர் வரக்காரணம் U turn ஆக இருக்குமோ
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் !!!
பூட்டு சாவி ரகசியம்
பூட்டைபூட்டி சாவியை எடுத்து விடுகிறோம்
பூட்டில் உள்ள சாவித்துளை நேராக இருந்தால்தான் சாவியை எடுக்க முடியும்
ஆனால் மீண்டும் திறக்கும்போது துளை கொஞ்சம் திரும்பி இருக்கிறதே
இது எப்படி?
இதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் சூரியாயன் ஆராய்ச்சி தேவையா !!!!
இவ்வளவு தத்துவ முத்துக்களா !
எனக்கே தலை கிறுகிறுக்கிறது, போதும் என்று நிக்கையில் இன்னொரு முத்து மின்னல் போல ஒளி வீசியது
பிரச்சினை என்ன என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதற்கு தீர்வு தேடுகிறோம்
அதனால் சரியான தீர்வு கண்ணில் பட்டாலும் அதை கண்டு கொள்ள மறுக்கிறோம்
என்னுடைய எளிய கேள்வி ஒன்றுக்கு பல தவறான விடைகள் வந்தன
காரணம் கேள்வியை சரியாகப் புரிந்து கொள்ளாததுதான்
அவர்கள் தேடிய கூகிள் பக்கத்தில் சரியான விடை இருந்தும் கேள்வியை சரியாகப் புரிந்து கொள்ளாததால் சரியான விடை கண்ணில் பட்டும் மனதில் பதியவில்லை
போதிய அளவுக்கு கிறுக்கி தள்ளி விட்டேன்
நிறைவு செய்யுமுன்
அத்துறா யின்அடிக்கடி முகநூல் நண்பர் ஒருவர் பயன்படுத்தும் சொல்
பல முறை படிதத பிறகு நான் புரிந்தது கொண்டது
அது அப்துர் ரஹீம் என்பதன் பேச்சு வடிவம் –(சரிதான் என்று நினைக்கிறேன்)
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
05 02 2025 புதன்
சர்புதீன் பீ

Monday, 3 February 2025

English QUIZ "Quiet quitting" 0402 2025 Tue





 English QUIZ

"Quiet quitting"
0402 2025 Tue
• Quit: "
• Quite: "
• Quiet:
What is the difference in meaning for these words
we know very well
The question is
There is a term using two of these, describing employees
What is that ?
Answer
Quiet quitting
Greetings and Congratulations to those who sent correct amswers:
M/S
Hasan Ali
First Correct amswer
Raviraj
A R Viswanaathan
Sirajuddin
Velavan& S
harmatha
Explanation
"Quiet quitting" is a term that describes employees who do the minimum amount of work required for their job. It can also refer to employees who disengage from their roles for a period of time before leaving.
Let us meet tomorrow by HIS Grace
04022025 Tue
SherfuddinP

Sunday, 2 February 2025

2025 பிப் கவி 02// 09//16// 23//வாவி 0602//1202 -28/48 ..=//1902//2702 26 46




02022025



 

திசை மாறும் பறவைகள் (8 0 ) 


09022025 மொழியால் பேசாதே விழியால் பேசு 80



16022025 நெஞ்சமேல்லாம் நீயே 80 




230225 தாய் மொ ழி   (80)













Saturday, 1 February 2025

தமிழ் [மொழி]அறிவோம் உப்பரிகை 0 2 02 2025 ஞாயிறு




 தமிழ் [மொழி]அறிவோம்

உப்பரிகை
0 2 02 2025 ஞாயிறு
5 எழுத்து கொண்ட சொல்
முதல் எழுத்து உயிரெழுத்தில் மூன்றாவது குறில்
இரண்டும் மூன்றும் வல்லினம்
நான்கு இடை இனம்
ஐந்தாவது வல்லின ஐகாரம்
வழக்கொழிந்து போன இந்த உயர்ந்த சொல் இப்போது மீண்டும் புதுமைச் சொல்லாக படன்பாட்டில் இருக்கிறதாம்
என்ன அந்தச் சொல் ?
விடை
உப்பரிகை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ தல்லத்
முதல் சரியான விடை
ஹசன் அலி &
சோமசேகர்
முயற்சித்த சகோ ஷிரீன் பாரூக்குக்கு நன்றி
விளக்கம்
உப்பரிகை என்பது, ஒரு கட்டடத்தின் மேல் மாடம், மாடி, தளம் ஆகியவற்றைக் குறிக்கும். இலக்கியங்களில், குன்றநேர் பளிக்குபரிகை போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உப்பரிகைக்கு ஆங்கிலத்தில் balcony, terrace, upper storey, an upper floor of a house போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
•
மேல் தளத்தில் கீழ் தளத்தை விட சற்றே வெளியே நீட்டியுள்ள மேல் தொங்கு தளம் ஆகும். 'உப்புதல்' என்றால் மேலே சற்றே வீங்கி வெளியாதல். இதனை வேராகக் கொண்டு பிறந்ததே 'உப்பரிகை'.4 Apr 2024
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
௦ ௨ ௦௨ ௨௦௨௫
0 2022025 ஞாயிறு
சரபுதீன் பீ