Tuesday, 4 February 2025

கிறுகக்கல்கள் 05 02 2025 புதன்




 கிறுகக்கல்கள்

05 02 2025 புதன்
அத்துறா யின்
இது என்ன சொல்?
நிறைவுப் பகுதியில் சொல்கிறேன்
மணிப்பிரவாள நடை---
வடமொழியும் தமிழும் கலந்து எழுதுவது
திருமண அழைபபுகள் மரபு மாறாமல் ஒருவித மஞ்சளும் வெளிர் சிவப்பும் கலந்த நிறத்தில் அச்சிடுவார்கள் அதில் இந்த நடையைப் பார்திருக்கிறேன்
மணிப்பிரவாளம் இப்போது பயன்பாட்டில் இருப்பது போல தெரியவில்லை
ஆனால் படித்தால் புரியாத அளவுக்கு எழுதுவது கொஞ்சம் அதிகமாகி வருவது போல தெரிகிறது
தமிழோடு ஆங்கிலம் , தங்லீஷ் அரபு உருது சொற்கள் கலந்து வருகின்றன
அதோடு வட்டார வழக்கிலேயே எழுதுவது
எளிய சொல் இருக்க தேடிப்பிடித்தூ சற்று கடினமான சொற்களை பயன் படுத்துவது—இதுதான் கனியிருப்ப காய் கவர்தல் போலும்
கர்மா , ஆத்மா , ஆத்ம திருப்தி போன்ற பொருள் விளங்காத சொற்களை பயன் படுத்துதல்
(ஆத்துமாவுக்கு ஏது திருப்தி என்பார் ஒருவர் )
இப்படி பல உருவங்களில் மணிப்பிரவாளம் வலம் வருகிறது
எனக்கு நன்றாகத் தெரிந்ததை ,புரிந்ததை எளிய மொழியில் எளிய நடையில் எழுதுவது என் வழக்கம்
இன்று (மட்டும்) ஒரு மாற்றமாக புரியாமல் எழுதினால் என்ன ?
அதன் விளைவுதான் இந்த தத்துவ முத்துக்கள் என்ற கிறுக்கல்
அதிகம் இல்லை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு ஒரு சில
விரல் விட்டு ஏன் எண்ண வேண்டும் ?
விரல் விட்டு நீட்டிய நிலையில்தானே இயல்பாக இருக்கிறது
எனவே விரலை மடக்கி எண்ணுவது என்பதுதான் சரி
சிந்திப்பீ ர் செயல் படுவீர் !
(நான் எப்போதும் விரலை மடக்கித்தான் எண்ணுகிறேன் என மற்றவர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் )
U turn traffic signal எல்லோரும் பார்த்திருக்கிறோம்
இது தலைகீழ் u தானே பிறகு ஏன் U turn என்று சொல்கிறோம் ?
யோசித்து மாத்துவோம் !!
பலரின் வழக்கையை தலகீழாகப் புரட்டிப்போடும் u ட்யூப்புக்கு பெயர் வரக்காரணம் U turn ஆக இருக்குமோ
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம் !!!
பூட்டு சாவி ரகசியம்
பூட்டைபூட்டி சாவியை எடுத்து விடுகிறோம்
பூட்டில் உள்ள சாவித்துளை நேராக இருந்தால்தான் சாவியை எடுக்க முடியும்
ஆனால் மீண்டும் திறக்கும்போது துளை கொஞ்சம் திரும்பி இருக்கிறதே
இது எப்படி?
இதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் சூரியாயன் ஆராய்ச்சி தேவையா !!!!
இவ்வளவு தத்துவ முத்துக்களா !
எனக்கே தலை கிறுகிறுக்கிறது, போதும் என்று நிக்கையில் இன்னொரு முத்து மின்னல் போல ஒளி வீசியது
பிரச்சினை என்ன என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அதற்கு தீர்வு தேடுகிறோம்
அதனால் சரியான தீர்வு கண்ணில் பட்டாலும் அதை கண்டு கொள்ள மறுக்கிறோம்
என்னுடைய எளிய கேள்வி ஒன்றுக்கு பல தவறான விடைகள் வந்தன
காரணம் கேள்வியை சரியாகப் புரிந்து கொள்ளாததுதான்
அவர்கள் தேடிய கூகிள் பக்கத்தில் சரியான விடை இருந்தும் கேள்வியை சரியாகப் புரிந்து கொள்ளாததால் சரியான விடை கண்ணில் பட்டும் மனதில் பதியவில்லை
போதிய அளவுக்கு கிறுக்கி தள்ளி விட்டேன்
நிறைவு செய்யுமுன்
அத்துறா யின்அடிக்கடி முகநூல் நண்பர் ஒருவர் பயன்படுத்தும் சொல்
பல முறை படிதத பிறகு நான் புரிந்தது கொண்டது
அது அப்துர் ரஹீம் என்பதன் பேச்சு வடிவம் –(சரிதான் என்று நினைக்கிறேன்)
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
05 02 2025 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment