Friday, 28 February 2025

/ரமளான் சிறப்புப் பதிவுகள் முன்னோடி அல் பாத்திஹா 01032025 சனிக்கிழமை

 



/ரமளான் சிறப்புப் பதிவுகள்

01032025 சனிக்கிழமை
இறைவன் அருளால் (இன்று இரவு /நாளை துவங்கும்
புனித ரமளான் மாதததிற்கான சிறப்பு வினா விடையின் முன்னோடியாயக
ஸுரத்துல் பாத்திகா
பிஸ்மில்லாகிறரஹ்மானிரரஹீம்
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்
அ ர்ரஹ்மானிரரஹீம்
மாலிக்கி யவ் மைதீன்
இயயாக்க நவபுது வ இயயாகக நஸ்தகீன்
இஹ்தி நஸ்ஸீ ராத்தல் முஸதக்கீம்
சிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம்
கய்ரில் மக்லூபி அலைஹிம்
வலல்லாளீன் [ஆமீன் ]
தோற்றுவாய் سورة الفاتحة Al-Fatiha
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்
, உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் சூரத்துல் பாத்திஹா அத்தியாயம் தனிச்சிறப்புகள் பல கொண்டது.
இந்த அத்தியாயம் குர்ஆனின் ஒரு அத்தியாமாக இருந்தாலும் இந்த அத்தியாத்தின் சிறப்பைப்பற்றி குர்ஆனின் ஒரு வசனமே எடுத்துரைக்கிறது. இது வேறு எந்த அத்தியாயத்திற்கும் இல்லாத தனிப் பெரும் சிறப்பாகும்.[]
• அந்த வசனம்*وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعاً مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ) الحجر87
நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம். குர்ஆன் 15:87.
• இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.[
அல்-ஃபாத்திஹா வேறு பல பெயர்களாலும் அறியப்படுகிறது, அல்-ஹம்த் (புகழ்)
, அஸ்-ஸலா (பிரார்த்தனை),
உம்முல்-கிதாப் (புத்தகத்தின் தாய்),
உம்முல்-குரான்(குர்ஆனின் தாய்),
சபா மின் அல்-மதானி (குர்ஆன் 15:87
ஏழு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவை),
அஷ்-ஷிஃபா' (குணப்படுத்துதல்).
எந்த ஒரு இறைவணக்கமும் , இறைஞ்சுதலும் [து ஆவும்]
மதச் சடங்கும் இதை முழுமையாக ஓதினால்தான் நிறைவு பெறும்
இனி ‘இன்றைய வினா
“இறைவன் “ என்பதற்கு திருமறை கூறும் இலக்கணம் என்ன ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவற்ற எல்லாம் வல்ல
ஏக இறைவனை வேண்டுகிறேன்
30 ஷபான் (😎 1445
01032025 சனிக்கிழமை
சர்புதீன் பீ
(பின்குறிப்பு : மடிக் கணனியில் புதிதாக ஏற்றிய தமிழ் எழுத்துருவில் சில பிரச்சினைகள் உள்ளன . குறிப்பாக ஒற்றெழுத்துக்கள் ஞ் ங் இவையெல்லாம் அதிக நேரத்தை எடுதுக் கொள்கின்றன
முடிந்த வரை கவனித்து எழுதுகிறேன்
அப்படியும் சில பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்
இந்த ரமளான் மாத சிறப்புப் பதிவுகளை சென்ற ஆண்டுகள் போல முழுமையாக நிறைவு செய்ய இறைவன் அருள் புரிய வேண்டும்

No comments:

Post a Comment