சென்னை To சென்னை
( வழி தேனி சின்னமனூர்
கம்பம். போடி )
19022025 புதன்
சென்னை மைய தொடரி நிலையத்துக்கு அதில் பயணம்
இரவு 1030 தொடரியில் குளுகுளு படுக்கை முன் பதிவு செய்திருந்தார்கள்
பெட்டி முழுதும் உடன் பிறப்புகள் உற்றார் உறவினர்
உரையாடல் இடையே நொறுக்குத்தீனி என இனிய துவக்கம்
கண் அயர நடு இரவு தாண்டி விட்டது
காலை 9 மணி அளவில் தேனியில் இறங்கினோம் அங்கேயே , அதற்கு முன்பே கம்பம் பள்ளத்தாக்கின் இனிமையை உணர முடிந்தது
தேனியிலிருந்து மீண்டும் மூடுந்து பயணம் சின்னமனூருக்கு
அங்கு வசதியான தங்கும் விடுதி
விசாலமான அறைகள் நயமான அறைக்கலன்கள்
புதுமையான மின் தூக்கி
நான்காவது மாடியில் உணவுக் கூடம்
அதன் அருகில் அழகான நீலநிற நீருடன் நீச்சல் குளம்
அதை விட அழகாகத் தெரியும் மலை மலைமுகட்டில் மேகக் கூட்டம்
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி என்று பாடத் தோண்றியது
பிறகு எதற்காக மேகமலை க்கு போக வேண்டும் எனத் தோன்றியது
இருந்தாலும் பயணக் காதலர் சாகுல் தலைமையில் ஒரு குழு சென்று வந்தது
மதிய உணவு பெண் வீட்டார் கம்பத்தில் திருமண கூடத்துக்கு
மூடுந்துப் பயணம்
வழியில் கண்ணில் பட்டவை மிகப் பெரிய ஒரு பன்னாட்டு பள்ளி
பெரிய பள்ளி வாசல் ஒன்று
மிக விசாலமான திருமணக்
கூடம
உணவுக் கூடம் வரை ஒரு பேருந்து செல்லும் அளவுக்கு பாதை இருந்தது
சுற்றிலும் மரம் செடி கொடிகள் என பசுமை
குழந்தைகள் விளையாட
ஊஞ்சல் சறுக்கு ஏற்றப் பலகை
சிறிய சற்று பெரிய குழந்தைகள் ஆடி மகிழ்ந்தனர்
சுவையான மதிய உணவு
வாழை இலை கூட பச்சைப் பசேல் என அழகாக ஒரே அளவாக
நெகிழியோ என நினைக்க வைத்தது
பெண் வீட்டாரே கவனித்துப் பரிமாறியது மேலும் சிறப்பாக இருந்தது
மதிய உணவுக்குப்பின் சின்னமனூர் வந்து விடுதியில் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் கம்பம்
மண்டபம் முழுதும் சிறப்பான மின் விளக்கு அலங்காரம்
விண் மீன்கள் கூட்டமாய் ஒளி வீசியது போல் இருந்தது
திருமண முன் நிகழ்வுகள் சில
பிறகு இரவு சிற்றுண்டிக்கு முன் சூடான சுவையான பாதாம் பால்
மதியம் போல்
அதே அழகில் வாழை இலை
அதே சிறப்பான பெண் வீட்டார் உபசரிப்பு
மன நிறைவோடு மீண்டும் சின்னமனூர் விடுதி வந்து தூங்கி எழுந்தோம்
அடுத்த காலை விடுதியில் சிற்றுண்டி
சிறிது நேரத்தில் மீண்டும் கம்பம் பயணம்
அதற்கிடையில் ஒரு சிறிய குழு அருகில் உள்ள ஆற்றில் குளித்து வந்தது
நல்ல கூட்டம் அவ்வளவு
பெரிய மண்டபம் நிறைந்து விட்டது.
உள் நுழையும் முன் வரவேற்க புதினா சாறு பப்பாளிசச் சாறு தர்பூசணி சாறு என சுவையான பானங்கள்
மேடை அலங்காரம் சிறப்பாக அழகாக இருந்தது
உள்ளூர் அசரத்துகளோடு சென்னையிலிருந்து வந்த சிலர்
அரசியல் வாதிகள் பலர் என எல்லோரும் உட்கார நாற்காலி போடப்பட்டிருந்தது
மேடையில் எல்லோருமே காலணிகளுடன் இருந்தார்கள்
மணமகன் குடும்பத்தின் தருமச் செயல்கள் பற்றி சற்று விரிவாக பேசப்பட்டது
ஒரு சில அசரத்துகள் சென்னையிலிருந்து தங்கள் சொந்த செலவில் கம்பம் வந்து திருமணத்தில் கலந்து கொண்டது ஒரு சிறப்பு
திருமண நிகழ்வுக்குப்பின் மதிய உணவு சைவம் அசைவம் இரண்டும் இருந்தது
மிகவும் சிறப்பான தனி கவனத்துடன் உபசரிப்பு
குறிப்பாக யுனிவர்சல் ஷாஜகானின் உபசரிப்பு போதும் போதும் என்ற அளவுக்கு
சுவையான பனிக்கூழுக்குப் பின்னர் மீண்டும் சின்னமனூர் விடுதி
மாலை ஆறரை மணியளவில் போடி பயணிக்க வேண்டும்
அங்கிருந்து இரவு எட்டரை மணிக்கு சென்னை தொடரி
இரவு சிற்றுண்டி தங்கிய விடுதியில் ஏற்பாடு செய்யப் பட்டு தொடரியில் வழங்கப் பட்டது
மீண்டும் குளுகுளு படுக்கை
பெட்டி முழுதும் பெரும்பாலும் உறவினர்கள்
குழுக்களாகக் கூடி பல முக்கிய செய்திகள் பற்றி கருத்துப் பகிர்வு
குறிப்பாக அடுத்து இது போல் திருமண பயணம்
சைவம் யார் அசைவம் யார்
போன்ற தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடும் அளவுக்கு கருத்துக்கள்
மூன்று நாளும் சரியான அலைச்சல்
சுகமான அசதி
குறிப்பாக ஏழெட்டு முறை மூடுந்தில் ஏறி இறங்கியது ஒரு நல்ல உடற்பயிற்சி
அடுத்த நாள் காலையில் சென்னை அடைந்து அவரவர் இடங்களுக்கு பயணம்
பெரம்பூரில் பலரும் இறங்கினார்கள்
ஒருவர் தன் வீட்டுக்கு அருகே தொடரியின் வேகம் குறைந்த போது கீழே பாதுகாப்பாக குதித்து விட்டார்
கல்யாண சந்தடியில தாலி கட்ட மறந்து போனது போல
இவ்வளவு விரிவாக சொன்ன நீங்கள் யாருக்குத் திருமணம் என்று சொல்லவில்லையே என்கிறீர்களா
இதோ வருகிறேன்
அப்படியே சற்று பின்னோக்கிப் போவோம்
சில மாதங்களுக்கு முன்பு
சென்னையில்
முத்தக்கா மகள் பானு சாலிகான் மகன்
ஜாஸிம் fபர்ஹானுக்கும்
கம்பத்தைச் சேர்ந்த
முனிரா , fபாத்திமாவுக்கும்
திருமண உறுதி செய்யும் நிச்சயதார்த்த விழா மிகச்சிறப்பாக நடை பெற்றது
பெண்ணின் தந்தை
வெளிநாட்டில் பணிபுரிபவர் வரவில்லை என்பது தவிர
ஓரு திருமண விழா போலவே இருந்தது அது
அதன் தொடர்ச்சியாக பானு சாலிகான் பல ஊர்களுக்கு சென்று நேரில் திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தார்கள்
அதன் அடுத்த கட்ட நிகழ்வு கம்பம் திருமணம்
அடுத்து மணமகன் வீட்டு வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக் கிழமை இரவு
இறைவன் அருளால் அதுவும் வரவேற்பு பழச்சாறு தொடங்கி மிகச்சிறப்பாக நிறைவேறியது
ஆயிரம் பேருக்கு அசைவம்
இருநூறு பேருக்கு சைவம்
சரியாக நிறைவாக இருந்தது
ஒரு மாறுதலாக நான் சைவம் சாப்பிட்டேன்
எல்லாம் நல்ல சுவை
குறிப்பாக இளநீர் பாயசம்
பிறகு பனிக்கூழ்
கம்பத்தில் விட்டுப் போன பீடா இங்கு கிடைத்தது
பணம் இருக்குமிடத்தில் மனம் இருப்பதில்லை
மனம் இருக்குமிடத்தில் பணம் இருப்பதில்லை
என்று கவிதை
இங்கோ பணம் மனம்
பன்பான குணமும் இருந்து
இறைவன் அருளான பரக்கத்தும் இறங்கி ஒவ்வொரு நிகழ்வும் மிகச்சிறப்பாக நடந்தேறியது
பேசப்படும் விழாவாக எல்லோர் மனதிலும் நிறைந்து நிற்கிறது
இதுவே மணமகன் மணமகள்
பெற்றோர் உற்றார் உறவினர் அனைவருக்கும் மிகச்சிறந்த பாராட்டு வாழ்த்து
நல்லவர்கள் கூடும் இடத்தில் இறையருள் வந்து இறங்கும்
வாழ்க வளத்துடன் .
பின் குறிப்பு
இறைவன் அருளால்
உடன் பிறப்புகள் அனைவரையும் சந்திக்க ஒரு நல்வாய்ப்பு அமைந்தது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி
திருமண நிகழ்வுளில் கலந்து கொள்ளாத இருவரை நேரில் சென்று பார்த்து வந்தேன்
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
19022025 புதன்
சர்புதீன் பீ
சாலிகான்
.
இதை விட சிறப்பாக இவ்வளவு அருமையாக எழுத யாராலும் முடியாது.
அல்லாஹ் போதுமானவன்.
Jazakallah Khairan
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த வாழ்த்து மடலை Cumbum Marrige Group பிலும் பகிர்வு செய்ய கேட்டுக் கொள்கிறேன்
No comments:
Post a Comment