தமிழ் (மொழி (அறிவோம்
இளமைப் பதிவு
16022025 ஞாயிறு
"தமிழ் எழுத்துக்கள்
மொத்தம் எத்தனை?
அவை எத்தனை வகைப்படும்?
என்னென்ன வகைகள்?"
விடைக்கு முன்
தமிழறிஞர்கள் நிறைந்த
குழுக்கள்
முது நிலைப் பட்டம்
பெற்றோரும் முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு ஆழ்ந்த பரந்த தமிழறிவு உள்ளவர்கள்
பலப்பல
இருந்தாலும் இந்த
அடிப்படை வினாவிற்கு சிலர் விடை சொல்லியிருப்பது அவர்கள் மொழிப்பற்று, ஆர்வத்தினால் தான்
முதல் சரியான விடை
அனுப்பிய சகோ
குமாரசாமி
அடுத்து
வெங்கடேசன்
கவிதையில் எழுத்து
இலக்கணத்தைச் சொல்லிய சோமசேகர்
வேலவன்
அனைவருக்கும் வாழ்த்துகள்
பாராட்டுகள் நன்றி
இவர்கள் அனைவரும் எங்கள்
வங்கி ஓய்வூதியர்கள் என்பதில் எனக்கு ஓரு பெருமிதம்
இனி விடை
தமிழ் எழுத்துக்கள்
மொத்தம் 247
உயிர் 12
மெய் 18
உயிர்மெய் 12x18=216
ஆயுத எழுத்து 1
உயிர் எழுத்துக்கள்
மொழியின் உயிர் மூச்சு எனலாம்
இவை நேரடியாகவோ உயிர்மெய்
எழுத்துக்களாகவோ இல்லாமல் சொல் கிடையாது
அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ ஐ ஒ ஓ ஔ
என 12 உயிரெழுத்துகள்
ஒலி வேறுபாட்டின்
அடிப்படையில் இவை
குறில்
நெடில்
என பிரிக்கப்பட்டுகின்றன
இடையில் உங்களுக்கு ஒரு
வினா
12 இல் குறிள் எத்தனை
நெடில் எத்தனை?
எதையும் பார்க்காமல் உயனே
விடை சொல்லுங்கள்
இறைவன் நாடினால் விடை
விளக்கத்துடன் வரும் சனிக்கிழமை தொடர்ந்து இளமைத் தமிழில் ஊஞ்சல் ஆடுவோம்;
நாளை ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
1602025 ஞாயிறு
க௬ 0உஉ0உரு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment