Thursday, 6 February 2025

திரு மறை குரான் ஹவ்வா 0702 2025 வெள்ளி

 




திரு மறை குரான்

 ஹவ்வா

0702 2025 வெள்ளி 

ஆதம் அலை அவர்களின் துணைவி ஹவ்வா வின் பிறப்பு /படைப்பு பற்றி குரான் எங்கு என்ன சொல்கிறது ?

இந்த  வினா 0202305 அன்று ஒரு சிலருக்கு ஆங்கிலத்தில் வேறு மாதிரி  அனுப்பபட்டது

அதற்கு சகோ சீராஜூதீன் ஆங்கிலத்தில் மிகத் தெளிவான விளக்கம் அனுப்பி இருந்தார்

சகோ நெய்வேலி ராஜா தமிழில் எழுதியிருந்தார்

இப்போது எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி குழுவில் பதிவு செய்கிறேன்

 

விடை . விளக்கம்

" ஹவ்வா (அலை) , ஆதம் (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார் " 

குர்ஆன் , ஹதீஸில் இக்கூற்றிற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா ?

இந்த வினா 0202305

அன்று ஒரு சிலருக்கு ஆங்கிலத்தில் அனுப்பப் பட்டது

இதைப் பார்த்ததும்.. இதில் என்ன சந்தேகம் ? இப்படித்தானே நினைவு  தெரிந்த நாள் முதல் கேள்விப் பட்டிருக்கிறோம் ! என்ற எண்ணம் தோன்றலாம்

. சற்று ஆழமாக தேடிப் பார்க்கும் போதுதான் இக்கேள்வியின் பொருள்  புரிந்தது.

 

முதலில் குர்ஆன் :

 

குர்ஆனில் ஆதம் (அலை) அவர்களின் படைப்பு பற்றியே ஒன்றுக்கு மேற்பட்ட ஆயத்துகளில் விரிவாக கூறப்பட்டிருக்கிறது.

ஏவாளின் ( ஹவ்வா ) படைப்பு பற்றி நேரிடையாக எங்குமே குறிப்பிடப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

 

சற்று நெருங்கி வரும் ஆயத்து

 

"   மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்...." 

(அல்குர்ஆன் : 4:1)

 

ஹதீஸ் :

 அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார் .

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) கூறினார்கள்.

" பெண் விலா எலும்பைப் போன்றவள் (வளைந்திருப்பமவள் ).

அவளை நேராக்க முயற்சித்தால் உடைந்து போவாள் ..."

புகாரி: 5184

 

" பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். (அவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.) ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அதை நீ உடைத்தே விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால், கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே,பெண்களுக்கு நன்மையே நாடுங்கள்."

என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம்: 2914 .

 

எனவே , 'ஆதமின் விலா எலும்பிலிருந்து ..'என்று நேரிடையாக குர்ஆன் , ஹதீஸில் காணப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது.

 

  பைபிளில் வசனம் 21-23 ஜெநிசிஸ் அத்தியாயம் 2 இதில் ஹவ்வாவின்

 

 

படைப்பு பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது  விலா எலும்பு என பொருள் படும் . "tzela,"என்ற சொல் வருகிறது

 

                                                                                                          

குரானில் ஹவ்வா  ஆதமின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார்

என்று வருகிறது என்ற எண்ணம்  பலரிடத்தில் இருக்கிறது

ஒரு சிலர் இன்னும்  ஒரு படி மேலே போய் ஆணின் விலா எலும்புகளின் எண்ணிக்கை பெண்ணை  விட ஒன்று குறைவாக இருப்பதே குரான் வசனத்துக்கு சான்று என்று அறுதியிட்டுச் சொல்வாரகள்

இதைத் தெளிவு படுத்தவே இந்தப்பதிப்பு

 

மற்றபடி ஹவ்வா  ஆதமின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார்என்பதே தவறு என்று சொல்வதற்கு இல்லை .

ஹவ்வா என்ற சொல்லே குரானில் இடம் பெற்றது போல தெரியவில்லை

 

தெளிவுவாக விடை அனுப்பிய சகோ

சீராஜூதினுக்கும்

நெய்வேலி ராஜாவுக்கும்

வாழ்ததுக்கள் பாராட்டுக்கள் 

 

இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்

 

08 ஷாபான்  (8) 1446

0702025 வெள்ளி

சர்புதீன் பீ

No comments:

Post a Comment