ஆவியும் அலெக்ஸாவும்
25 022025 புதன்
நினைவிருக்கிறதா !
ஓயிஜா பலகை !!
வைத்திருந்த ஒரு (விளையாட்டுப்) பலகை
விளையாட்டா இல்லை வேறா என்று சொல்ல முடியாது
விளையாட்டு என்று சொல்லும் அளவுக்கு மிக எளிதானது
ஆனால் அதன் மூலம் ஆவிகளோடு தொடர்பு கொள்ளலாம் எனும் போது அப்படி நினைக்க முடியவில்லை
உண்மையா பொய்யா , அறிவியலா உளவியலா என்று தெரியாது
ஆனால் விரலில் ஒரு துடிப்பும் அது தன்னால் நகர்வது போன்ற உணர்வும் உண்டானது உணர்ந்த உண்மை
ஒரு அட்டையில் நடுவில் ஒரு நாணயம் வைக்கும் அளவுக்கு வட்டம்
அதன் ஒருபுறம் y e s மறுபுறம் n o
அதைச் சுற்றி ஒரு வட்டத்தில் 0 முதல் 9 வரை
இன்னும் ஒரு வெளி வட்டத்தில் a முதல் z வரை
அவ்ளவுதான் ஓயிஜா பலகை
நடு வட்டத்தில் ஒரு நாணயம் அதன் மேல் பட்டும் படாமல் ஒருவர் அல்லது இருவர் விரலை வைக்க வேண்டும்
ஏதாவது ஒரு ஆவியை மெதுவான குரலில் அழைக்க வேண்டும்
ஆவி வருவது போலும் நாணயம் தன்னால் மெதுவாக நகர்வது போலும்
எண் எழுதுக்களுக்குப் போய் நம் வினாக்களுக்கு விடை சொல்வது போலும் தோன்றும்
உண்மையோ இல்லையோ ஆவிகளை அழைப்பது வேண்டாத ஒன்று என்பது என் கருத்து
மறக்கப்பட வேண்டியதை , மறக்கப் பட்டதைப் பற்றி இப்போது என்ன பேச்சு ?
நல்ல கேள்வி
காரணம் இருக்கிறது
அண்மையில் ஹிந்து நாளிதழில் வந்த ஒரு செய்தி
AI could let people converse with their departed loved ones: Google X founder
செயற்கை நுண்ணறிவால் மறைந்தவர்களுடன் பேச முடியும்
சொல்வது யாரோ எவரோ இல்லை
Sebastian Thrun, founder of Google X (ஹிந்து 10 பிப்ரவரி 2025 )
இந்த செய்தியை ,முழு தாகப் படிக்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை
இருந்தாலும் என்ன ஏது என்று அறியும் ஆர்வத்தில் செயற்கை அறிவியல் அறிஞர் (இரட்டை) முனைவர்
ஷாஜித்தை தொலை பேசியில் அழைத்தேன்
அவருடன் செய்தி உரையாடல்
From Shajith to me
Mama, I just looked at that news. He is talking about digital twins.. i.e., Alexa like virtual version that would first learn from our data on how to talk and behave like us.. and then start to imitate us in it's interaction with everyone.
Me to Shajith
That means
If I train Alexa while alive
Survivors can have the crude satisfaction of taking to me ?
The very Idea is not at all digestable to me
If my understanding is not correct please correct me
Thanks for your instant response
From Shajith
Alexa is a virtual person.. and currently it has some fixed speaking style and how it responds to different things it faces.. If that speaking style and response style are changed it will start to appear like a different person. For example, currently it has female voice .. if that voice is changed to male voice.. whoever interacts with it will imagine it like a male. Similarly if it is given comedian Vadivelu's voice and speaking style.. people will start to imagine Alexa as Vadivelu.. Likewise if it is made to respond like some specific person people iIt need not be after one's life.. can be while one is living as well.. Like I wrote in the previous message.. if it is given Vadivelu's speaking style people interacting will imagine it as Vadivelu himself in the back (who is alive).. it it is given Vivek's voice and speaking style people will imagine it as Vivek in the back (who is no more).nteracting with it will imagine it as that person.
Me to Shajith
Thanks for clarifying
Still it doesn't appeal to me
(என்) தமிழில்
From Shajith to me
செய்தி. இலக்க முறை இரட்டையர் பற்றியது
அலெக்ஸா போன்ற மெய்நிகர் பதிப்புகள் நாம் கொடுக்கும் தகவல்களில் இருந்து கற்றுக்கொண்டு நம்மைப் போல பேசவும் நடந்து கொள்ளவும் செய்யும்
Me to Shajith
அதாவது நான் உயிருடன் இருக்கும்போது அலெக்ஸா வுக்கு என்னைப் போல பேசக்கற்றுக் கொடுத்து விட்டால் எனக்குப் பின்னால் இருப்பவர்கள் என்னிடம் பேசுவது போன்று உணரலாம்
அப்படித் தானே !
என் புரிதல் சரிதானே
இந்த எண்ணமே எனக்குப் பிடிக்கவில்லை
நன்றி –உடன் பதிலுக்கு
From Shajith
அலெக்ஸா ஒரு மெய்நிகர் நபர்
இப்போதைக்கு அது ஒரு குறிப்பிட்ட முறையில் பேசவும் நடந்து கொள்ளவும் செய்கிறது
அதை ,மாற்றினால் வேறு நபர் போல செயல்படும்
இப்போது பெண் குரலில் பேசும் அலெக்ஸாவை மாற்றி ஆண் குரலில் பேசும்படி செய்தால் அதோடு பேசுபவர்கள் ஆணோடு பேசுவது போல உணர்வார்கள்
வடிவேலு போல பேச,நடந்து கொள்ள கற்றுக் கொடுத்தால் அலெக்ஸாவை வடிவேலு என்றே எண்ணத் தோன்றும்
அதே போல ஒரு குறிப்பிட்ட நபரின் பேச்சு ,நடவடிக்கைகளை அலெக்ஸாவுக்கு கற்றுக் கொடுத்து விட்டால் அது அந்த நபர் போலவே அவர் இருந்தாலும் மறைந்தாலும் மற்றவர்களுக்குத் தோன்றும்
Me to Shajith
விளக்கத்துக்கு நன்றி ஷாஜித்
இன்னுமே இந்த எண்ணம் எனக்குப் பிடிக்கவில்லை
எனது குறிப்பு
அலெக்ஸா என்பது செயற்கை நுண்ணறிவில் ஒரு சிறிய கருவி -விலை சில ஆயிரங்கள் முதல் -வீட்டுப் பணிகளுக்கும் பயன்படும் (படம்)
புரிவதற்காக அலெக்ஸா ஒரு ரோபோ ,எந்திர மனிதன் என்று வைத்துக்கொள்ளலாம்
மறைந்தவர்களோடு பேசுவது நடைமுறைக்கு வந்தால் ------
விரைவில் வந்து விடும் ------
இதை வைத்து என்ன என்ன மாய்மாலங்கள் ,குற்றங்கள் நடக்குமோ !!
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
26 022025 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment