Saturday, 22 February 2025

தமிழ் (மொழி) அறிவோம் இளமைத் தமிழ் நிறைவுப் பகுதி 23022025 ஞாயிறு

 




தமிழ் (மொழி) அறிவோம்

இளமைத் தமிழ் நிறைவுப் பகுதி
23022025 ஞாயிறு
உகரம் குறில். ,(உ து ஙு மு)
இப்படி முடியும் 100 சொற்களை விரைவாக எதையும் பார்க்காமல் சொல்ல முடியுமா?
இது நேற்றைய பதிவின் நிறைவு வினா
விடை
ஒன்று முதல் 100 வரை
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
வேலவன் முதல் சரியான விடை
தல்லத்
சிவசுப்பிரமணியன் &
கத்தீபு மாமூனா லெப்பை
இன்னும் 1 முதல் 999 வரை எல்லா எண்களும் இப்படித் தான் இருக்கின்றன
இதற்கு இலக்கணம் சார்ந்த ஒரு காரணம் இருப்பதாக படித்திருக்கிறேன்
அது இப்போது நினைவில் இல்லை
தெரிந்தால் சொல்லுங்கள்
தமிழ் மொழி ஒரு இயல்பான இயற்கையான மொழி
ஆங்கில nation போல செயற்கை ஒலி எதுவும் தமிழில் இல்லை
ஒரே எழுத்து வேறுவேறு ஒலிகளில் இயல்பாக வரும்
காகம் என்று சொல்லிப் பாருங்கள்
கா போல் க ஒலிக்காது
காஹம் என்று இயல்பாக வரும்
ஒரே ஒரு நெருடல்
எண்களில்
80 அடுத்து ஒன்பதுதானே இயல்பு
அது ஏன் தொன்னூறு ஆனது?
இப்படியே 800 க்கு அடுத்து தொள்ளாயிரம் என்று தொடர்கிறது
தமிழ். மூன்றெழுத்து
இதில் ஒன்று வல்லினம்
அடுத்தது மெல்லினம்
மூன்றாவது இடையினம்
மழலையின் முதல் சொல்
அம்மா
அந்த மூன்றெழுத்தில் ஒன்று உயிர் அடுத்து மெய்
அதற்கடுத்து உயிர் மெய்
தமிழின் எண்ணற்ற சிறப்புகளில் மிக மிக
சில இவை கடல் நீரில் சில துளிகள் போல்
சென்ற வார வினாக்களுக்கு சகோ சோமசேகர் கவிதைகளில் அனுப்பிய விடைகள் :
உயிர்வாழத் தேவைமூச்சுக் காற்று
உச்சரிக்க வெளியேறும் பாற்று
அ முல் ஒள வரை உயிர் எழுத்து
அவைதானே தமிழின் முதல் ஊற்று
ஐந்து எழுத்து அவற்றினிலே
அடங்கி ஒலிக்கும் குறிலாய்
ஏழு எழுத்து ஓங்கி ஒலிக்கும்
இரண்டு மாத்திரை நெடிலாய்
அதில் அ இ உ எ ஒ
ஐந்து குறில் ஒடுக்கம்
ஆ ஈ ஊ ஏ ஐ ௐ ஒள
என்ற நெடிலும் அடக்கம்
உச்சரிக்கும் நேரம்
நீ.ண்டு ஒலிக்கும்
அச்சரத்தை தமிழ்
நெடிலாய்க் குறிக்கும்
******* விருப்பம்*******
மொழியைத் தன்
மூச்சென்று நினைத்தான் - தமிழன்
மூன்று பத்து எழுத்துகளை
உயிர் மெய்யாய்ப் பிரித்தான்
உயிரற்ற மெய் - மொழிக்கு
உதவாதென் றறிந்தான்
உயிரோடு மெய் கலந்து
அமுதமொழி பயின்றான்
அஃதென்று பகுப்பதற்கு
அழகுவேல் முகத்தான்
ஆயுதத் தமிழ் எழுத்தோடு
அகவரிசை முடித்தான்
ஈராறு எழுத்துகளில்
இனிய தமிழ் உயிர் தான்
மூவாறு எழுத்துருவில்
மூன்று வகை மெய் தான்
உச்சரிக்கும் சப்தம் வைத்து
உரிய பெயர் கொடுத்தான்
உலக முது தமிழ் மெய்க்கு
உள்ளது மூன் றினம்தான்
வலிய ஓசை அட்சரத்தை
வல்லினமாய் வகுத்தான்
இடைக்கழுத்து எழும் ஓசை
இடையினமாய்ப் பகுத்தான்
மெலிதான ஓசை நயம்
மேவிய நல் லாறு
ஒலிச் சுவையில் உயர்வாக
உள்ளது மெல்லினம்தான்
ஒரு சொல்லில் நூறு பொருள்
உள்ள மொழி தமிழ் தான்
உலகப்பொது மறைதந்த
ஒரே மொழி இதுதான்
இயல் இசை நாடகமாய்
இளமை மாறா வழி தான்
இன்றும் என்றும் இணை சொல்ல
இல்லை வேறு மொழி காண்
எழுத எழுதத் தீராது
எங்கள் மொழி விருத்தம்
இளையதலை முறைக் கிதனை
எடுத்துச் சொல்ல விருப்பம்
ந.சோமசேகர்
15/02/2025
சகோ சோமசேகருக்கு நன்றி
இளமை ஊஞ்சலில் நான்கு நாட்கள் ஆடிக் களித்தோம்
புனித ரமலான் மாதத்தின் பின் ஏப்ரல் மாதத்தில் தமிழ் பதிவுகள் தொடரும்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
உங0உஉ0உரு
23022025 ஞாயிறு

No comments:

Post a Comment