Friday, 21 February 2025

தமிழ் (மொழி (அறிவோம் இளமைப் பதிவு 22022025 சனிக் கிழமை





 தமிழ் (மொழி (அறிவோம்

இளமைப் பதிவு
22022025 சனிக் கிழமை
சென்ற பகுதியின் நிறைவில் ஒரு வினா
உயிரெழுத்துக்கள் 12 இல் குறில் எத்தனை நெடில் எத்தனை?
எதையும் பார்க்காமல் உயனே விடை சொல்லுங்கள்
என்று கேட்டிருந்தேன்
சரியான விடை சொன்னவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
பங்கேற்றவர்களுக்கு நன்றி
அ இ உ எ ஒ
குறைவான ஒலி உள்ள இவைகுறில்
ஆ ஈ ஊ ஏ ஓ
சற்று நீண்ட நெடிய ஓசை உள்ள
இவை நெடில்
இதில் எல்லோருமே தெளிவாக இருப்போம்
ஐ ஔ
இவை பற்றி பலருக்கும் சிறு குழப்பம் வரும்
எனக்கும்தான்
இரண்டுமே நெடில் தான்
இதை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு எளிய வழி
குருட்டுப் பாடமாக நெடிலுக்கு ஏழு
குறிலுக்கு ஐந்து ‌
என்று மனதில் வைத்துக் கொள்வதுதான்
இனி
மெய்யெழுத்துக்கள்
மெய்யெழுத்துக்கள் 18
மெய் என்றால் உடல்
க்ச்ட்த்ப்ற்
ய்ர்ல்வ்ழ்ள்
ஞ்ங்ன்ந்ம்ண்
மேலே புள்ளி இருக்கும்
இவை ஒற்றெழுத்துக்கள் எனப்படும்
மெய்யெழுத்துக்கள் சொல்லில் தனியாகவும் வரும்
உயிரெழுத்தோடு சேர்ந்து
உயிர் மெய் எழுத்தாகவும் வரும்
க்ச்ட்த்ப்ற் இவை ஒலியின் அடிப்படையில்
வல்லினம் எனப்படும்
சற்று கரடு முரடான ஓலியுடைய இவற்றை
கசடதபற என்று நினைவில் கொள்ளலாம்
ய்ர்ல்வ்ழ்ள்
அடுத்து
ஞ்ங்ன்ந்ம்ண்
இவை மெல்லினம்
ஞ ங
இவை மூக்கின் வழியாக ஒலிப்பது (மலையாளம்) போல் ஓசை இருக்கும்
ந ன ண
என மூன்றும்
ம வும் சேர்த்து ஆறு மெல்லினம்
ஞ ங ன ந ம ண
என நினைவில் கொள்ளலாம்
மிச்சமுள்ள ஆறும் இடையினம்
ய ர ள வ ழ ல
ள ழ ல என மூன்றும் இதோடு ய ர வ சேர்த்து ஆறு
உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் இணைந்தால் வருவது
உயிர் மெய் எழுத்து
க் + அ= க
இப்படி 12 உயிரெழுத்துக்கள்
18 மெய்யெழுத்துக்களோடு
சேர்ந்து
12X18=216
உயிர் மெய் எழுத்துக்கள்
உயிர் 12
மெய் 18
உயிர் மெய் 216
246
மிச்சமுள்ள ஒன்று
ஃ. ஆயுத எழுத்து
என்பது தமிழில் உள்ள ஆய்த எழுத்து. இது மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும்
உண்டு
இந்த ஆயுத எழுத்து பற்றி மிக விரிவான இலக்கிய இலக்கணக் குறிப்புகள் இருக்கின்றன
பல குறள்களில இதைக் காணலாம்
எடுத்துக்காட்டாக ஒன்று
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
,f என்ற ஆங்கில எழுத்து தமிழில் ஃப என்று எழுதப் படுகிறது
மற்றபடி இந்த எழுத்து பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லை
அதனால் நானும் விரிவாக எழுதவில்லை
தமிழ் எழுத்துக்கள் பற்றி இன்னும் விரிவாக எழுத நிறைய செய்திகள் இருக்கின்றன
நான் சொல்லியிருப்பது அரிச்சுவடியிலும் சிறிய எளிய பகுதிதான்
இன்னும் சில செய்திகளோடு
நாளை
இளமைத் தமிழை நிறைவு செய்கிறேன்
அதற்கு முன் ஒரு சிறிய வினா
உகரம் குறில். ,(உ து ஙு மு)
இப்படி முடியும் 100 சொற்களை விரைவாக எதையும் பார்க்காமல் சொல்ல முடியுமா?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
உஉ0உஉ02ரு
22022025 சனிக்கிழமை
சர்புதீன் பீ




No comments:

Post a Comment