உப்பில்லா பண்டம் ------
12022025 புதன்
உடல் நலத்தில் கவனம் Health
consciousness
இது சற்று அளவுக்கு மீறி;
இயல்பு வாழ்க்கைக்கு
இடையூறு செய்யும் அளவுக்கு பூதாகரமாக வளர்ந்து விட்டதோ!
தொலைக்காட்சி பேச்சு
நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் பேசுகிறார்:
"நாங்கள் இருவரும் உடல்
நலத்தில் கவனம் செலுத்தி வருகிறோம்
எனவே பிள்ளை பெறும்
எண்ணம் இல்லை "
பிறகு ஏன் திருமணம்? இதுவும் உடல் நலத்துக்கான
ஒரு வழியா?
உணவுப் பழக்கம் குறித்து
மூத்த மருத்துவர் ஒருவர் நல்ல நகைச்சுவையோடு அங்கதமாக பேசியது:
"பணியாரம். அப்பம்.வடை என
வகை வகையாக வாய்க்கு ருசியாக சாப்பிடும் எனக்கு இளைய தலைமுறையின் உணவுப் பழக்கம்
வியப்பைத் தருகிறது
உடல் நல மயக்கத்தில்
சுவைகளை மறந்து கொஞ்சம் பச்சை காய்கறிகளை வெண்ணெய் எடுத்த பால்
அதுவும் தண்ணீர் கலந்தது பால் குவளையை கழுவிய
தண்ணீர் போல் இருக்கும் --அதை ஊற்றி சாப்பிடுகிறார்
தண்ணீர் குப்பியை
சுற்றிச்சுற்றி பார்க்கிறார் --
தண்ணீரில்கொழுப்புச்
சத்து ஏதும் இல்லை என்று உறுதி செய்ய"
மருத்துவர் பேச்சு வெறும்
நகைச்சுவை இல்லை
பல இளைஞர்களின் உணவு
இப்படித்தான் இருக்கிறது __குறிப்பாக இளைஞிகள்
சில நாட்கள் முன்பு ஒரு
உறவினர் சொன்னது:
"குழந்தைகள் திட உணவுக்கு
மாறும்போது அவர்கள் உப்பு.இனிப்பு சுவைகளை அறியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்*
என மருத்துவர்கள்
வற்புறுத்திச் சொல்கிறார்களாம்
மருத்துவர் வாக்கு மகேசன்
வாக்கு என்று பலரும் இதைப் பின்பற்றி வருகிறார்களாம்
எனக்கு உணவு பற்றிய
அறிவியல் தெரியாது
ஆனால்
உப்பில்லா பண்டம்
குப்பையிலே என்ற பழமொழி தெரியும்
பழைய சோறில்
உப்புப்போட்டு உப்பு ஊறுகாய்.உப்புக்கருவாடு வைத்து நிறைவாகச் சாப்பிட்ட நம்
முன்னோர்கள் நல்ல உடல் நலத்துடன்தான் வாழ்ந்தார்கள்
மாட்டுக்கு அறிவு 5 தான்
ஆனால் உப்பு இல்லை
என்றால் மாட்டுத்தண்ணி குடிக்காது
மாட்டுத் தண்ணி=ஊற வைத்து
அரைத்த பருத்திக் கொட்டை+தவிடு+ புண்ணாக்கு + சோறு வடித்த கழனித் தண்ணி+உப்பு
(மொத்தத்தில் மிகச் சத்தான
சுவையான உணவு)
என் பேரன் முதல் திட.
உணவு சாப்பிட்ட காட்சி இன்றும் நினைவில் இருக்கிறது
நெய்யும் பருப்பும் கலந்த
குழைய வடித்த சோறு
அவன் அந்தம்மா அவனைத்
தூக்கி வைத்துக் கொண்டு நிற்க
அவன் அம்மா ஊட்டி விட
துப் துப் என்று துப்பி
விட்டான்
என்ன என்று பார்த்தால்
சோறிவ் உப்பு இல்லை
உப்பு போட்டு ஊட்டியதும்
சுவைத்து சாப்பிட்டான்
சில மாதங்களுக்கு முன்பு
எனக்கு நிறைய மருத்துவ பரிசோதனைகள்
அறிக்கையைப் படித்து விட்டு
மருத்துவர்கள் சொன்னது
"சோடியம் சத்து சற்று
குறைவாக இருக்கிறது
எனவே உணவில் உப்பின்
அளவைக் கூட்டிக் கொள்ளுங்கள்*
சென்ற வாரம் என் உறவினர்
ஒருவர் உடல் நலம் குன்றி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்
"அம்மோனியா சத்து மிகவும்
குறைந்துவிட்டது
இதை சரி செய்ய ஒரு
நாளைக்கு ஒரு கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் "
இதுவும் மருத்துவர்கள்
சொன்னது
உப்பும் இனிப்பும்
சேர்க்காமல் சாப்பிட்டால் உடல் பெருக்காது எடை கூடாது
ஆனால் இது மட்டுமே உடல்
நலத்தின் அறிகுறி ஆகுமா?
வாழ்க்கையே உப்பு
இல்லாமல். கப்பென்று இருக்க வேண்டுமா!
மருத்துவர்களும் உணவியல்
அறிஞர்களும் தான் சொல்ல வேண்டும்
இறைவன் நாடினால் நாளை
குரானில் சிந்திப்போம்
12022025 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment