ரமலான் பதிவு 1
அல்லாஹ்
02032025 ஞாயிறு
மிகச் சுருக்கமாகத்
தெளிவாக்குகிறது திருமறை நாலே வரிகளில்
112. ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)
மக்கீ, வசனங்கள்: 4
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
குல்குவல்லாஹு அகது
அல்லாஹு சமது
லம்யலிது வலம் யூளது
வலம் ய குல் அவு குபுவன் அகது
112:1. (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக: அல்லாஹ் - அவன் ஒருவனே!
112:2. அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்.
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4. அன்றியும் அவனுக்கு நிகராக எவருமில்லை.
இந்த இலக்கணம் பொருந்தி வந்தால் இறைவன்
இல்லை என்றால் இல்லை
சரியான விடை எழுதிய சகோ
சீராஜூதீனுக்கும் ---முதல் சரியான விடை
கத்தீபு மாமூனா லெப்பைக்கும்
வாழ் த் துக் கள் பாராட்டுக்கள்
ரக இறைவனாகிய அல்லாஹ்வின் மாட்சிமை பற்றியும் ஆட்சி அதிகாரம் பற்றியும் நிறைய வசனங்கள் குரானில் வருகின்றன
இறைவனுக்கு அழகான திருப் பெயர்கள்
99 இருக்கினற்றன
அவற்றைப்படித்தால் இறைவனின் தன்மைகள் பலவற்றை தெளிவாக சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்
1. அர் ரஹ்மான் - الرَّحْمٰنُ - அளவற்ற அருளாளன்
2. அர் ரஹீம் - الرَّحِيمُ - நிகரற்ற அன்புடையோன்.
3. அல் மலிக் - المَلِكُ - பேரரசன்
4. அல் குத்தூஸ் - القُدُّوسُ - மிகப் பரிசுத்தமானவன்
5. அஸ்ஸலாம் - السَّلامُ - சாந்தி மயமானவன்
6. அல் முஃமின் - المُؤْمِنُ - அபயமளிக்கிறவன்
7. அல் முஹைமின் - المُهَيْمِنُ - கண்காணிப்பவன்
8. அல் அஜீஜ் - العَزِيزُ - மிகைத்தவன்
9. அல் ஜப்பார் - الجَبَّارُ - அடக்கியாள்கிறவன்
10. அல் முதகப்பிர் - المُتَكَبِّرُ - பெருமைக்குரியவன்
11. அல் காலிக் - الخَالِقُ - படைப்பவன்
12. அல் பாரிஉ - البَارِئُ - படைப்பை ஒழுங்கு படுத்துபவன்
13. அல் முஸவ்விர் - المُصَوِّرُ - உருவமளிப்பவன்
14. அல் கஃப்ஃபார் - الْغَفَّارُ - மிக்க மன்னிப்பவன்.
15. அல் கஹ்ஹார் - الْقَهَّارُ - அடக்கி ஆள்பவன்
16. அல் வஹ்ஹாப் - الْوَهَّابُ - கொடையாளன்
17. அர் ரஜ்ஜாக் - الرَّزَّاقُ - உணவளிப்பவன்
18. அல்ஃபத்தாஹ் - الْفَتَّاحُ - தீர்ப்பு வழங்குகிறவன்
19. அல் அலீம் - اَلْعَلِيْمُ - மிக அறிபவன்
20. அல் காபிள் - الْقَابِضُ - கைப்பற்றுவோன்
21. அல் பாஸித் - الْبَاسِطُ - விரிவாக்குபவன்
22. அல் காஃபிள் - الْخَافِضُ தாழ்த்துவோன்
23. அர் ராஃபிஃ - الرَّافِعُ - உயர்த்துவோன்
24. அல் முஇஜ்ஜு - الْمُعِزُّ - கண்ணியப்படுத்துவோன்
25. அல் முதில்லு - المُذِلُّ - இழிவடையச்செய்பவன்
26. அஸ்ஸமீஉ - السَّمِيعُ - செவியேற்பவன்
27. அல் பஸீர் - الْبَصِيرُ - பார்ப்பவன்
28. அல் ஹகம் - الْحَكَمُ - தீர்ப்பளிப்பவன்
29. அல் அத்லு - الْعَدْلُ - நீதியுள்ளவன்
30. அல் லதீஃப் - اللَّطِيفُ - நுட்பமாகச் செய்கிறவன்
31. அல் ஃகபீர் - الْخَبِيرُ - நன்கறிகிறவன்
32. அல் ஹலீம் - الْحَلِيمُ - சகிப்புத் தன்மையுடையவன்
33. அல் அழீம் - الْعَظِيمُ - மகத்துவமிக்கவன்
34. அல் கஃபூர் - الْغَفُورُ - மிகவும் மன்னிப்பவன்
35. அஷ் ஷகூர் - الشَّكُورُ - நன்றி பாராட்டுபவன்
36. அல் அலிய்யு - الْعَلِيُّ - மிக உயர்ந்தவன்
37. அல் கபீர் - الْكَبِيرُ - மிகப்பெரியவன்
38. அல் ஹஃபீழ் - الْحَفِيظُ - பாதுகாவலன்
39. அல் முகீத் - المُقيِت - ஆற்றல் உள்ளவன்
40. அல் ஹஸீப் - الْحسِيبُ - கணக்கெடுப்பவன்
41. அல் ஜலீல் - الْجَلِيلُ - கண்ணியமானவன்
42. அல் கரீம் - الْكَرِيمُ - தயாளன்
43. அர் ரகீப் - الرَّقِيبُ - கண்காணிப்பவன்
44. அல் முஜீப் - الْمُجِيبُ - பதிலளிப்பவன்
45. அல் வாஸிஃ - الْوَاسِعُ - விசாலமானவன்
46. அல் ஹகீம் - الْحَكِيمُ - ஞானமுடையோன்
47. அல் வதூத் - الْوَدُودُ - பிரியமுடையவன்
48. அல் மஜீத் - الْمَجِيدُ - மகிமை வாய்ந்தவன்
49. அல் பாஇத் - الْبَاعِثُ - உயிர்த்தெழச் செய்பவன்
50. அஷ் ஷஹீத் - الشَّهِيدُ - சாட்சியாளன்
51. அல் ஹக் - الْحَقُّ - உண்மையானவன்
52. அல் வகீல் - الْوَكِيلُ - பொறுப்பேற்பவன்
53. அல் கவிய்யு - الْقَوِيُّ - வலிமை மிக்கவன்
54. அல் ம(த்)தீன் - الْمَتِينُ - உறுதியானவன்
55. அல் வலிய்யு - الْوَلِيُّ - பாதுகாவலன்
56. அல் ஹமீத் - الْحَمِيدُ - புகழுக்குரியவன்
57. அல் முஹ்ஸி - الْمُحْصِي - கணக்கிட்டு வைப்பவன்
58. அல் முப்திஉ - الْمُبْدِئُ - துவங்குவோன்
59. அல் மூஈத் - الْمُعِيدُ - மீளச்செய்பவன்
60. அல் முஹ்யீ - الْمُحْيِي - உயிர்ப்பிக்கிறவன்
61. அல் முமீத் - اَلْمُمِيتُ - மரணிக்கச் செய்பவன்
62. அல் ஹய்யு - الْحَيُّ - நித்திய ஜீவன்
63. அல் கய்யூம் - الْقَيُّومُ - நிலைத்திருப்பவன்
64. அல் வாஜித் - الْوَاجِدُ - என்றும் இருப்பவன்
65. அல் மாஜித் - الْمَاجِدُ - மகிமை வாய்ந்தவன்
66. அல் வாஹித் - الْواحِدُ - ஏகன்
67. அல் அஹத் - اَلاَحَدُ - ஒருவன்
68. அஸ் ஸமத் - الصَّمَدُ - தேவையற்றவன்
69. அல் காதிர் - الْقَادِرُ - சக்தியுள்ளவன்
70. அல் முக்ததிர் - الْمُقْتَدِرُ - ஆற்றலுடையவன்
71. அல் முகத்திம் - الْمُقَدِّمُ - முற்படுத்துவோன்
72. அல் முஅக்ஃகிர் - الْمُؤَخِّرُ - பிற்படுத்துவோன்
73. அல் அவ்வல் - الأوَّلُ - முதலாமவன்
74.அல் ஆகிர் - الآخِرُ - கடைசியானவன்
75. அழ் ழாஹிர் - الظَّاهِرُ - மேலானவன்
76. அல் பா(த்)தின் - الْبَاطِنُ - அந்தரங்கமானவன்
77. அவ்வாலீ - الْوَالِي - உதவியாளன்
78. அல் முதஆலீ - الْمُتَعَالِي - மிக உயர்ந்தவன்
79. அல் பர்ரு - الْبَرُّ - நன்மை செய்கிறவன்
80. அத் தவ்வாப் - التَّوَابُ - பாவ மன்னிப்பை ஏற்பவன்
81. அல் முன்தகிம் - الْمُنْتَقِمُ - தண்டிப்பவன்
82. அல் அஃபுவ்வு - العَفُوُّ - மன்னிப்பவன்
83. அர் ரஊஃப் - الرَّؤُوفُ - இரக்கமுடையவன்
84. மாலிகுல் முல்க் - مَالِكُ الْمُلْكِ - ஆட்சிக்கு அதிபதி
85. துல்ஜலாலிவல் இக்ராம் -
ذُوالْجَلاَلِ وَالإكْرَامِ - கண்ணியமும் சங்கையும் உள்ளவன்
86. அல் முக்ஸித் - الْمُقْسِطُ - நீதியானவன்
87. அல் ஜாமிஃ - الْجَامِعُ - ஒன்று சேர்ப்பவன்
88. அல் கனிய்யு - الْغَنِيُّ - தேவையற்றவன்
89. அல் முக்னீ - الْمُغْنِي - தேவையற்றவனாக்குவோன்
90. அல் மானிஃ - اَلْمَانِعُ - தடுப்பவன்
91. அள் ளார்ரு - الضَّارَّ - இடரளிப்பவன்
92. அன் நாஃபிஃ - النَّافِعُ - நற் பயனளிப்பவன்
93. அன் நூர் - النُّورُ - ஒளியானவன்
94. அல் ஹாதி - الْهَادِي - நேர்வழி காட்டுபவன்
95. அல் பதீஉ - الْبَدِيعُ - முன்மாதிரியின்றி படைப்பவன்
96. அல் பாகீ - اَلْبَاقِي - நிலையானவன்
97. அல் வாரித் - الْوَارِثُ - அனந்தரம் பெறுவோன்
98. அர் ரஷீத் - الرَّشِيدُ - நேர்வழி காட்டுவோன்
99. அஸ் ஸபூர் - الصَّبُورُ - பொறுமையுள்ளவன்
55:26. (பூமியாகிய) இதன் மீது உள்ள யாவரும் அழிந்து போகக் கூடியவரே.
55:27. மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்(
இதோடு இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்
இனி ‘இன்றைய வினா
ஏக இறைவன் நபி ஒருவருக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் அவற்றின் தன்மைகளையும் கற்றுக்கொடுக்கிறான்
அந்த சிறப்புப் பெற்ற நபி யார் ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறை வணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
01 ரமளான் (09) 1446
02032025 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment