Wednesday, 12 March 2025

ரமளான் பதிவு 12 ,சதக்கா 13032025 வியாழன்

 



ரமளான் பதிவு 12

,சதக்கா
13032025 வியாழன்
ஜக்காத் ,சதக்கா என்ன வேறுபாடு ?
விடை
ஜக்காத் கட்டாயக் கடமை
சதக்கா
இது ஒரு தன்னார்வ தருமம்
சரியான விடை எழுதி வாழ்த்து பெறுவோர்
சகோ சீராஜூதீன் முதல் சரியான விடை
மெ க ராஜ்
ஷி ரீன் பாரூக்%
கததீபு மாமூனா லெப்பை
முயற்சித்த சகோ ஷர்மதாவுக்கு நன்றி
குரானில் பல இடங்களில் ஜக்காத் ,சதக்கா என்று குறிப்பிடப்படுகிறது
இரண்டுமே தருமம்தான்
ஜக்காத் கட்டாயக் கடமை
யார், ,
யாருக்கு,
எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற பல விதி களுக்கு உட்பட்டது
ஜக்காத் கொடுக்க வேண்டியவர் கொடுக்காவிட்டால் கடும் தண்டனை உண்டு என எச்சரிக்கிறது குரான்
இந்தக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாதது சதக்கா
இது ஒரு தன்னார்வ தருமம்
தருமத்துக்கு உண்டான அனை தகு நன்மைகளும் கிடைக்கும்
வசதியான வாழ்க்கைக்கு எவ்வகவு உங்களுக்குத் தேவையோ அதை தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்
அதற்கு மேல் உள்ளதை வாரி வழங்குங்கள் –இதுதான் இஸ்லாம் காட்டும் சிறந்த வாழ்க்கை நெறி
நபி ஸல் அவர்கள் பணம் ,தங்கம் பொருள் என எவ்வளவு வந்தாலும் ஒரு துளியும் மிச்சம் வைக்காமல் கிடைத்த அன்றே பகிர்ந்து அளித்து விடுவார்கள்
நாம் அப்படி இருக்க முடியாது
“கைகளை மிக அகலமாக விரித்து விடாதீர்கள்
மிக இறுக்கமாக மூடிக்கொள்ளாதீர்கள் “
இது இஸ்லாம் காட்டும் வழி
நபி ஸல் அவர்களை ஒரு முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு தேவை உள்ளவர்களுக்கு முடிந்த அளவுக்கு வழங்குவோம்
“இந்த உலகில் உள்ள அ னைத்து செல்வங்களும் வளங்களும் இறைவனுக்கே சொந்தமானவை
நம்மிடம் இருக்கும் செல்வங்களுக்கு நாம் பாதுகாவலர்கள் (custodians ) மட்டுமே ,உரிமையாளர்கள் அல்ல” இது இறைவன் சொல்வது
உலகின் மிகப்பெரும் செல்வந்தனான காருனும் அவனுடைய செல்வமும் ஒரே இரவில் அழிந்தது பற்றி நாம் படித்திருக்கிறோம் ,
கேள்விப்பட்டி ருக்கிறோம்
இன்றைய வினா
எந்த சமுதாயத்துக்கு தருமம் செய்தாலும் இறைவன் அதை ஏற்றுக்கொண்டு அதற்குரிய
பலனை கொடுக்கத் தவற மாட்டன்
என கோடி காட்டும் இறைவசனம் எது
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
12 ரமளான் (09) 1446
13 032025 வியாழன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment