Sunday, 16 March 2025

ரமளான் பதிவு 16 ஹஜ் 2 தவாப்f .சயி 17 032025 திங்கள்

 




ரமளான் பதிவு 16

ஹஜ் 2 தவாப்f .சயி
17 032025 திங்கள்
புனித இடங்களைச் சுற்றி வலம் வரும் முறை நாம் ஊர் கோவில்களில்
இருக்கிறது
புனித காபாவில் தவாஃப் சுற்றம் செய் முறையில் அதிலிருந்து ஒரு மாறுதல் இருக்கிறது
அது என்ன ?
விடை
காபாவில் எதிர் கடிகாரச் சுற்று *anti clockwise
மாற்று மத ஆலயங்களில் கடிகாரச் சுற்று clockwise
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்..சகோ
மெஹராஜ் முதல் சரியான விடை
சீராஜூதீன் &
தல்லத்
தவாப் (Arabic: طواف, Ṭawāf; literally சுற்றி வருதல்) என்பது ஹஜ்,,உமராவில் அமல்களில் ஒன்றாகும்
, காபாவை ஏழு முறை இடஞ்சுழியாகanti anti clocjwise சுற்றி வருவthu [1] காபாவை சுற்றி வருவது தவாப்
தவாப் செய்யும் . முறை ]
தவாப் எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்வார்கள். தவாஃபின் பொழுது சாப்பிடக் கூடாது அனால் தாகத்தை தவிர்க்கத் தண்ணீர் குடிக்கலாம். ஆண்கள் முதல் மூன்று சுற்றுகளையும் ஓடிச் செய்ய வேண்டும், மீதம் உள்ள நான்கை நடந்து செய்யலாம்.[2]
தொழுகை
[தொகு]
தவாஃப் செய்து முடித்தவுடன் ஹாஜிகள் மகாமு இப்ராஹீம் எனப்படும் இப்ராஹீமின் இடத்தில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இந்தப் இடம் கஃபாவின் அருகில் இருக்கிறது. எனவே கூட்ட நெரிசலை தடுக்க பள்ளியில் உட்கட்டினுள்ளாக எங்கு வேண்டுமானாலும் இவ்வாறு தொழலாம்.
முக்தாஃப்
[தொகு]
கஃபாவை சுற்றி ஹாஜிகள் நடக்கும் இந்த பாதையை முக்தாஃப் என்று அழைப்பர். கூட்ட நெரிசலின் காரணமாக இப்பொழுது பள்ளிவாயிலின் மேல்தளத்திலும் தவாஃப் செய்யப்படுகிறது.
பல்வேறு தவாப் நிலைகள்
தவாப் அஸ்-சியாராஹ் தவாபுல் விதாஃ
தவாப் அல் உம்றா தவாப் அல் தஹியா
தவாப் அல் குதூம்
இது உம்றா செய்யும் ஹாஜிகள் தனியாக செய்யும் தவாப் ஆகும்.இது உம்றா தவாப் எனப்படுகிறது.
22:29. பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தைத் தவாஃபும் செய்யவேண்டும்.
சாயி ( அரபு : سَعِي , அதாவது 'தேடுதல்
சஃபா மர்வா ( அரபு : ٱلصَّفَا وَٱلْمَرْوَة ‎, ரோமானியமயமாக்கல் : Aṣ-Ṣafā wal-Marwah ) இரண்டு சிறிய மலைகளுக்கு இடையெ
ஏழு முறை ஓடுவது /நடப்பது ,
சாயி ( அரபு : سَعِي , அதாவது 'தேடுதல்/தேடுதல் அல்லது நடைபயிற்சி') [ 2 ] என்று அழைக்கப்படுகிறது . ஹஜ் உம்ராவின் அமல்களில் இது ஒன்று .
நபி , இப்ராஹிம் அவர்கள்
) தனது மகன் இஸ்மாயில் (
மனைவி ஹஜர் (
இருவரையும் இறைவன் கட்டளைபபடி பள்ளத்தாக்கில் விட்டுச் சென்ற பிறகு, [ 5 ] [ 6 ] அவர்களின் உணவு தண்ணீர் தீர்ந்து இஸ்மாயிலுக்கு பாலூட்ட முடியவில்லை. [ 3 ] இதனால் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சஃபாவிற்கும் மர்வாவிற்கும் இடையில் ஏழு முறை முன்னும் பின்னுமாக ஓடினார் . [ 3 ]
வேகமாக ஓட ஏதுவாக
குழந்தையை தரையில் விட்டுவிட்டு தனியாகச் சென்றார் .
முதலில் அருகிலுள்ள மலையான சஃபாவில் ஏறினார் எதையும் காணாதபோது, அவர்
மற்றொரு மலையான மர்வாவுக்குச் சென்றாள். ஹாகர் இரண்டு மலைகளின் பக்கங்களிலும் இருந்தபோது, இஸ்மாயிலைப் பார்க்க முடிந்தது, அவர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும், அவர் மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்தபோது,
மகனைப் பார்க்க முடியவில்லை, இதனால் பள்ளத்தாக்கில்வேகமாகவும்
மலைச்சரிவுகளில் இருக்கும்போது
மெதுவாகவும் நடந்தார்
ஹாகர் தனது மகனிடம் திரும்புவதற்கு முன்பு, கடுமையான வெப்பத்தில் ஏழு முறை மலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக ஓடினார் .
பின்னர்
இறைவன் அருளால் , தரையில் இருந்து ஒரு நீரூற்று தோன்றியது. கிணற்றுக்கு ஜம்ஸம் என்று பெயரிடப்பட்டது , மேலும் ஹஜ் மற்றும் உம்ராவின் போது சஃபா மற்றும் மர்வா பயணம் ஒரு அமலானா து
நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல. இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (2:158)
இன்றைய வினா:
கொய்னாபு என்றால் என்ன? ஹஜ்ஜுக்குப் போனவர்கள் இந்த சொல்லைக் கேட்டிருக்கலாம் .
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளையும் ஹஜ்ஜில் சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
16 ரமளான் (09) 1446
17 032025 திங்கள்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment