ரமளான் பதிவு 18
சூரா 15
19032025 புதன்
விடை
அல்ஹம்து சூரா பற்றி
சூரா 15 அல் ஹிஜர் வசனம் 87
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.(15:87 )
விடை சொல்ல முயற்சித்த சகோ
ஷர்மதா , சீராஜூதீ னுக்கு நன்றி
அல்ஹம்து சூ ரா பற்றி ரமளான் பதிவின் துவக்கப் பதிவில் எழுதியிருக்கிறேன்
அதிலேயே சூ ரா 15 இல் அல்ஹம்து சூ ரா பற்றி குறிப்பி ப் பட்டதையும் சொல்லி இருக்கிறேன்
இனி சூரா 15 அல் ஹிஜ்ர் பற்றி சில குறிப்புகள் மட்டும்
ஹிஜ் ர் என்ற சொல்லுக்கு கற்பாறைகள் என்று பொருள்
தமுத கூட்ட மக்கள் கற்பாறைகளைக் குடைந்து பாதுகாப்பான வீடுகள் கட்டி வாழ்ந்தனர்
பாதை தவறிய அவர்கள் எச்சரிக்கை செய்ய வந்த இறைதூதர்களை அவமான ப்படுத்தினா ர்கள்
அவர்களுக்கு கொடுக்கப் பட்டிருந்த காலக் கெடு வில் அவர்கள் திருந்தவில்லை
எனவே இறைவன் சாபம் இறங்கி அவர்களை அழித்து விட்டது
அவர்களின் செல்வங்களோ மாளிகைகளோ அவர்களைக் காப்பாற்ற வில்லை (15:80 -84)
மேலும் பல செய்திகள் சொல்ல ப்படுகின்றன
நபி இப்ராஹீம் வரலாறு அவர்களுக்கு மகன் பிறக்கப் போவது பற்றி வானவர்கள் அறிவித்தது
அதே வானவர்கள் லூத் கூட்டதை வேரோடு அழித்தது
முன்பே குறிப்பிட்டது போல அல்ஹம்து சூரா பற்றியும் வருகி றது
இன்றைய வினா
, கண்ணியம் ,மிக்க இறைவனின் முகம் மட்டுமே இவ்வுலகில்
நிலைத்திருக்கும்(
என்ற பொருள் கொண்ட வசனம் வரும் சூரா எது ?
இறைவன் நாடினால் விடை, விளக்கத்துடன் நாளை குரானில் சிந்திப்போம்
நாம் அனைவரும் புனித மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்று இறைவணக்கங்கள் ,தான தருமங்கள் எல்லாவற்றையும் முழுமையாக நிறைவேற்ற எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன்
18 ரமளான் (09) 1446
19 032025 புதன்
சரபுதீன் பீ
No comments:
Post a Comment